Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையிலே கோழைத்தனமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமன்மலி குணசிங்க-

(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் கூட்டம் – P.D. சிறிசேன மைதானம், மாளிகாவத்தை. – 25-08-2024)

Samanmalee Gunasinghe At Stage

தோழர் அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி ஆக்குகின்ற, அந்த வெற்றியை பெரு வெற்றியாக மாற்றுகின்ற பெண்களின் பலமே இது. “பெண்களின் சக்தி ஒரே மூச்சுடன் – நாளைய தினத்திற்காக நாடு அநுரவோடு” அதுவே எங்களுடைய தொனிப்பொருள். தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டை புதிய மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்கின்ற பாதையை அந்த வெற்றியை குறிக்கும் முகமாக இந்த இடத்தில் ஒன்றிணைந்துள்ளோம்.

நாங்கள் கடந்த பல வருடங்களாக வறட்சிக்கு தாக்குப்பிடித்துக் கொண்டு இருந்தவர்களாவோம். வறட்சிக்கு முகம் கொடுத்து அன்பான குடும்பத்தை பாதுகாத்துக் கொண்ட துணிச்சல் மிக்க பெண்களே நீங்கள். பெண்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையிலே கோழைத்தனமாகும். எமது நாட்டின் அரசியல்வாதிகள் பல்வேறு துறைகளில் பெண்களை சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள். பெண்கள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே விளங்காது, பெண்களுக்கு அரசியல் தேவையில்லை, பெண்கள் மரக்கட்டைகளாக வாழ்ந்து மடிந்து போகவேண்டுமென நினைத்தார்கள். உங்களை செல்லாக்காசாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் சுற்றுமுற்றும் பார்த்தீர்கள். அந்த நேரத்தில் தான் பெண்களாகிய நாங்கள் ஊருக்குள் வந்து உங்கள் வீட்டுக் கதவுகளை தட்டினோம்.

அவர்கள் தேசிய மக்கள் சக்தியை சுற்றி குழுமினார்கள். திடசங்கற்பம் கொண்டார்கள். இந்த அரசியலை மாற்ற முடியாது, சதாகாலமும் அவர்கள் தான் மன்னர்கள் என நினைத்தார்கள். சதாகாலமும் பாதிக்கப்பட்ட நசுக்கப்பட்ட அழுது புலம்பிய பெண்கள் தான் நாங்கள். நாங்கள் அவர்களை சந்தித்து அவர்களின் பெறுமதியை எடுத்துரைத்தோம். அவர்களின் சாத்திய வளங்களை, வலிமைகளை உணர்ந்து இன்று முழு நாட்டிலுமுள்ள பெண்கள் இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென ஒரே மூச்சுடன் முன்வந்தார்கள். அவர்கள் மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு வலிமைசோ்க்கவே முன்வந்திருக்கிறார்கள். எமது கைகளில் ஒரு பாரிய பணி சுமத்தப்பட்டிருக்கிறது. அது தான் தேசிய மக்கள் சக்தியின் தோழர் அநுர குமார திசாநாயக்கவை வெற்றியீட்ட செய்விப்பது. அந்த வெற்றியின் பங்களாளிகளாக நீங்கள் மாறவேண்டும். இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கான திடசங்கற்பம் கொண்ட பெண்களாக மாறவேண்டும். அதற்காக உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

Wasantha Subhasinghe Speeking At NPP Womens Rally

“பெண்கள் அரசியலில் பிரவேசித்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பேராசிரியர் வசந்தா சுபசிங்க-

பெண்கள் அரசியலில் பிரவேசித்தது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும். தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றியை முழு உலகுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. செப்டெம்பர் 21 ஆம் திகதி என்பது அரசியல்வாதிகளால் வீழ்த்தப்பட்ட நாட்டை நிமிர்த்தி வைக்கின்ற தினமாகும். அந்த வெற்றிக்கான உங்களின் அர்ப்பணிப்பே இது. எமது நாட்டின் வரலாற்றினை பொன்னெழுத்துக்களால் குறிக்கின்ற யுகத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். இயற்கையாகவே இருக்கின்ற பால் நிலை வித்தியாசத்தை தவிர்த்த வேறு எந்த விதமான வித்தியாசமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் கிடையாது. பெண்கள் என்பதனால் மாத்திரமே நாங்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகிறோம். வறுமையை அதிகமாக அனுபவிப்பவர்கள் பெண்களே.

இலங்கை பெண்களை எடுத்துக் கொண்டால் வீட்டில், களத்தில், களத்துமேட்டில், ஆலையில், வேலைத்தளத்தில் அவளுக்கு பெரும் பங்கினை ஆற்றவேண்டியுள்ளது. இந்த எல்லா இடத்திலும் பெண்களுக்கு பாரிய செயற்பொறுப்பு நிலவுகின்றது. அந்த பெண்களின் பிரதிநிதித்துவம் தான் இது. இலங்கையின் குடும்பங்கள் பற்றிய கணக்கெடுப்பினை செய்தால் 25 சதவீதமான குடும்பங்கள் பெண்களை தலைமையாகக் கொண்டதாகவே இருக்கின்றன. அந்த தாய்மார்களும் சகோதரிகளும் தான் குடும்பங்களையும் கவனத்திற்கொண்டு பொருளாதார செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அதற்காக தேசிய மக்கள் சக்தி பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது.

Womens Crowd At NPP Womens Rally

எமது பாடசாலைகளில், வைத்தியசாலைகளில், பல்கலைக்கழகங்களில் அதைபோலவே வெளிநாட்டு சேவைகளில், பெண்களே அதிகமாக பொருளாதார பங்கினை ஆற்றி வருகிறார்கள். எனவே அவர்களின் பாதுகாப்பிற்கான கொள்கையை நாங்கள் வகுத்திருக்கிறோம். வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற எமது அன்புக்குரிய சகோதரிகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் முறையாக அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்கள் அடிமை சேவகம் புரிந்து வருகிறார்கள். வேலைக்கேற்ற சம்பளம் அவர்களுக்கு கிடைப்பதில்லை. பாதுகாப்பு கிடையாது. இந்த பிரச்சினைகள் பற்றி தேசிய மக்கள் சக்தி அதிக கவனம் செலுத்தியுள்ளது. எனவே பெண்களுக்கு சிறந்த பயிற்சியளிக்கப்பட்டு சிறந்த சம்பளத்துடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்கக்கூடிய வகையில் எங்களுடைய அரசாங்கத்தினூடாக அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எனவே வெளிநாடு சென்றுள்ள பெண்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியமொன்றை நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் நடந்து கொள்கின்ற விதம் பற்றி நாங்கள் அறிவோம். எனவே வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் மீது கரிசனைகொண்ட வெளிநாட்டு தூதரக சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். ஆகவே நாங்கள் இந்த தூதரக சேவையை வசதி நிறைந்த சேவையாக மாற்றுவோம். பெண்கள் அடிமைத்தனமான பாலியல்சேவைக்காக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எனவே வெளிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர் நிலையங்களும் அரசாங்கமும் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கவேண்டும். எனவே செப்டெம்பர் 21 ஆம் திகதி தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வெற்றி பெண்கள் சமத்துவம் அனுபவிக்கின்ற சமூகத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த செய்தியை உங்கள் ஊருக்கும் உறவினருக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Pushpamali Ramanayake At NPP Womens Rally

“இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்கள் பெண்கள்”
-பொதுநலவாய அமைப்பு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றெடுத்த விளையாட்டு வீராங்கனை புஷ்பமாலி ராமநாயக்க-

நான் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளமையையிட்டு பெருமிதமடைகிறேன். இவ்வளவு பிரமாண்டமான ஒரு மேடையில் ஏறி எமது நாடு வீழ்ந்துள்ள படுகுழியிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஒரு சில வார்த்தைகளையேனும் கூற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எமது நாடு 76 வருடங்களாக சாபக்கேட்டுக்கு இலக்காகியிருக்கிறது. இந்த ஊழல்மிக்க அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் இப்பொழுது பிறந்திருக்கிறது. அதற்காக கைகோர்த்து செயற்படுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம். அதற்காக நாங்கள் தோழர் அநுர குமார திசாநாயக்கவை தோ்ந்தெடுத்திருக்கிறோம்.

இவ்வளவு காலமும் எமது நாட்டுக்கு மன்னர்களே தலைவர்களாக வந்தார்கள். இப்பொழுது முதல் தடவையாக மண்ணில் கால் பதித்த மக்களின் இதயத்துடிப்பினை உணர்ந்த மண்ணின் மைந்தனொருவர் தலைவராகப் போகிறார். செப்டெம்பர் 21 ஆம் திகதி அதற்காக நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இலங்கையில் வாக்காளர்களில் அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பெண்களே. குடும்பத்திலும் தீர்மானமெடுக்கின்ற செயற்பாட்டில் பெண்களே அதிக பங்களிப்பினை கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாக்குகள் மூலமாக மாத்திரம் தேசிய மக்கள் சக்திக்கு பெரு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை மனதிற்கொள்ளுங்கள். இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்களாக உங்களால் மாற முடியும். நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம். அதனை பெருவெற்றியாக மாற்றுகின்ற பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கின்றது. அதற்காக உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன்.

Haiman Suleyiman At NPP Womens Rally

“தோழர் விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார்”
-தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆசிரியை ஹய்மன் சுலைமான்-

இன, மத, சாதிபேதமின்றி நாட்டின் எதிர்காலத்திற்காக தூரநோக்குடைய மூன்றாவது மில்லேனியத்தின் சவால்களுக்கான தீர்வினைகொண்டுள்ள சகோரத்துவத்துடன் அனைவரையும் சமமாக மதிக்கின்ற மனிதத்துவம் நிறைந்த ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரே கட்சியாக அமைவது தேசிய மக்கள் சக்தியாகும். நாட்டை வெற்றியீட்டச் செய்விக்க அர்ப்பணிக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் ஒன்று சேரவேண்டிய இடம் இந்த தேசிய மக்கள் சக்தியாகும்.

இதுவரையும் வேறெந்த கட்சியின் மேடையிலும் ஏறியிராத எனக்கு மறுமலர்ச்சிக்காக தமிழில் உரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமையை நான் பெற்ற பேறாக கருதுகிறேன். எங்களுடைய தமிழ் பேசும் சகோதர சகோதரிகளை தட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பினை ஈடேற்ற இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன்.

நான் உரையாற்றும்போது அதனை இனவாதம் அல்லது மதவாதம் என நினைத்துவிட வேண்டாம். எம்மை பாதுகாக்கவென எம்மால் நியமிக்கப்பட்ட தலைவர்கள் எங்களை ஏமாற்றுவதால் நாங்கள் உங்களிடம் ஏமாறாப்போவதில்லை என்ற செய்தியை இந்த மேடையிலிருந்து கொடுக்க நான் விரும்புகிறேன். ஒரு பிரபலப் பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாகிய நான் இந்த இடத்தில் இந்த நேரத்தில் உங்கள் முன் ஏன் தமிழில் உரையாற்ற வந்திருக்கிறேன் என்றால் 76 வருடங்களாக இந்த நாட்டையும் எம்மையும் ஏமாற்றி இந்த நாட்டை பிளவுப்படுத்திருக்கும் இந்த குப்பை அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதே அதன் நோக்கமாகும்.

Womens At NPP Womens Rally

இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. ஆனால் நிறம் மாத்திரம் வித்தியாசமானவை. என்னுடைய இரத்தத்திலும் பச்சை நிறம் தான் ஊறியிருந்தது. பச்சை நிறத்திற்காக புள்ளடியிடுவதே எனது வேலையாக இருந்தது. யானை அல்லது டெலிபோன் என்றால் புள்ளடியிடுவேன். முஸ்லிம் அரசியல்வாதிகளாக இருக்கலாம் ஏனைய அரசியல்வாதிகளாக இருக்கலாம். தோ்தல் காலத்தில் மாத்திரம் எம்மீது கரிசனைக காட்டுவார்கள். ஆடு நனையுதென்று ஓநாய் அழுகிறதாம். அதுபோல எமது துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்கள் எல்லாம் அவர்களுக்கு ஞாபகம் வந்துவிடும். ஓடோடி வருவார்கள். எங்களுடைய கஷ்டங்களை போக்குவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் இதுவரை எந்த பிரச்சினையையும் தீர்க்கவில்லை.

ரவூப் ஹக்கீம் அவர்களே இந்த பேச்சு உங்களுக்காகத்தான். நீங்கள் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறீர்கள். தேசிய மக்கள் சக்தியின் உண்மைத்தன்மை மக்களை சென்றடையாமல் எவ்வாறு பிரபல மீடியாக்கள் தடுக்கின்றனவோ அதைப்போலத்தான் இன்டனெஷனல் மீடியாக்களும் முஸ்லிம்களின் உண்மை நிலையை மக்களுக்கு சென்றடைவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன. அது தான் உண்மை. நீங்கள் அதை செய்வதை தவறவிட்டு அரசியல் வங்குரோத்து நிலைக்கு வந்த பின்னர் அந்த விடயத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு முஸ்லிம்களின் கவனத்தை திசைதிருப்புகிறீர்கள். கடந்த 30 வருடங்களாக தோல்வியடைகின்ற கட்சிகளின்பால் முஸ்லிம்களை வழிநடத்தி முஸ்லிம் மக்களை கேவலமான நிலையில் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு திடீரென என்ன கவலை வந்திருக்கிறது.

Womens Crowd At NPP Womens Rally

முஸ்லிம் பெண்களுக்காக என்ன செய்தீர்கள்? முஸ்லிம் பெண் மாணவிகளுக்கான காற்சட்டை துணிகளை இதுவரை பெற்றுக்கொடுத்தீர்களா? தோழர் விஜித ஹேரத் தான் 2003 ஆம் ஆண்டில் எங்கள் மாணவிகளுக்கு பர்தா துணியை பெற்றுக்கொடுத்தார். நீங்கள் உண்மையை மறைத்து எங்களை ஏமாற்றி வாக்குகளை பறித்து சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்றுடன் உங்களுடைய ஏமாற்று வித்தையை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் மும்மொழித் திறமை இருப்பது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அல்ல. முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே. இதுவரை ஒன்றுமே செய்யாமல் இருந்துகொண்டு அநுர திசாநாயக்கவின் குறைகளை சொல்லிக் கொண்டு சஜித்தை வெல்லவைக்கப் போகிறீர்களா? ஒன்றுமே விளங்காத புத்தித்தெளிவில்லாத ஒருவரை இந்த நாட்டின் தலைவனாக்கப் போகிறீர்களா? அதற்கு எந்த மதம் இடம் தந்தது என்று சிந்தியுங்கள்.

எதிர்வரும் பாராளுமன்ற தோ்தலில் குளிர்காய்வதற்காகவே நீங்கள் இதனை செய்து வருகிறீர்கள். இனவாதத்தைத் தூண்டி சகோதரத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்ற மோசமான வேலையில் ஈடுபடவேண்டாம். இந்த கிழட்டு முஸ்லிம் தலைமைகளைக் கண்டு ஏமாந்து விடவேண்டாம். புதிய சிந்தனைகொண்ட இளைய தலைமைகளை தேடியெடுங்கள். உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம்கள் என்ற பெருமையோடு இந்த நாட்டில் நிம்மதியாக கௌரவத்துடன் சரிசமமாக வாழவேண்டுமா? அப்படியானால் திசைகாட்டியை வெற்றியீட்டச் செய்வித்து தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை தோ்தெடுங்கள். அது தான் உங்களுடைய வெற்றிக்கும் விடுதலைக்குமான ஒரே வழி என்று கூறி விடைபெறுகிறேன்.

Nilanthi Kottahachchi At NPP Womens Rally

“பெண்களுக்கும் சிறார்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கின்ற யுகத்தை உருவாக்குவோம்”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-

பெண்கள் மலர்களைப் போன்றவர்கள். ஆனால் தேவையேற்பட்டால் கூர்மையுள்ள வாளாக, கத்தரிக்கோலாக, ஒரு விறகுக்கட்டாக இணையக்கூடியவர்கள் என்பதை வெளிக்காட்டிய திசைகாட்டியின் அன்புக்குரிய சகோதரிகளே உங்களை நான் மதிக்கிறேன், நேசிக்கிறேன். பெண்கள் இனிமேலும் அரசியல் ரீதியாக உறங்கிக்கொண்டிருப்பவர்களல்ல என்பது இன்று இங்கே திரண்டிருக்கின்ற பெண்களைப் பார்க்கும்போது நிரூபணமாகின்றது. இரண்டாவது விடயம் 76 வருடகாலமாக ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வந்த அயோக்கியத்தனமான, காடைத்தனமான அரசியல் பேச்சுகள் செப்டெம்பர் 21 இல் முடிவடைந்துவிடும் என்பதாகும்.

மூன்றாவது செய்தி இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 வது ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்க என்பதை நீங்கள் எடுத்துக்காட்டுகிறீர்கள். பெண்களாகிய எங்களின் வாக்குகளால் தான் அவர் ஜனாதிபதி தோழராக மாறுகிறார் என்பதை ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுகின்ற அத்தனை வேட்பாளர்களுக்கும் நாங்கள் கூறிவைக்கிறோம். நாங்கள் பாடசாலைக்கு, தொழிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு, பொது போக்குவரத்துச் சேவை மூலமாகவே போகிறோம். இந்த நாட்டின் பொதுபோக்குவரத்தை பாவிக்கின்ற பெண்களின் 90 சதவீதமானவர்கள் பாலியல் தொல்லைகளுக்கு இலக்காகிறார்கள். அதிலும் பொலிசில் முறைப்பாடு செய்து நூற்றுக்கு நான்கு வீதம் எனப்படுகின்ற சிறிய அளவிலேயே சட்டநடவடிக்கையை எடுக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நாங்கள் பதில் தேடவேண்டாமா? இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் பெண்களே. அப்படியானால் இதுவரைகாலமும் ஆட்சியாளர்கள் கடுமையான உறக்கத்திலா இருந்தார்கள். செப்டெம்பர் 22 ஆம் திகதிக்குப் பின்னர் பெண்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கப் போகிறோம். தனக்கு அநீதி ஏற்பட்ட வேளையில் சட்டத்தின் முன் செல்ல பெண்கள் தயக்கம் காட்டுகிறார்களென்றால் மனதில் சந்தேகமும் ஐயமும் இருக்குமென்றால் சட்டத்தில் ஒரு பிரச்சினை இல்லையா? சட்டம் மீதான நம்பிக்கை பற்றிய பிரச்சினை இல்லையா? உங்கள் இதயத்தை தட்டிக் கேட்டுப்பாருங்கள் அப்படியொரு பிரச்சினை இல்லையா? சட்டத்தை அறிந்திராமை தண்டனையிலிருந்து விடுபட ஒரு காரணமாக அமையமாட்டாது என எங்களுக்கு கற்பித்திருந்தாலும் இந்த நாட்டின் பிரஜைகளில் பெரும்பான்மையினருக்கு சட்டம் பற்றிய குறைந்தபட்ச புரிந்துணர்வுகூட கிடையாது. எனவே பாடசாலைக் கல்விப் பாடவிதானத்தில் சட்டத்தை உள்ளடக்கி பாடசாலை சிறார்களுக்கு சட்டம் பற்றிய குறைந்தபட்ச அறிவினை பெற்றுக்கொடுக்க வேண்டும். சட்டத்தின் முன் கேள்விக்குட்படுத்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

Womens Crowd At NPP Womens Rally

குற்றச்செயல் இடம்பெற்றதும் பெண் அச்சமடைந்தால் முறைப்பாடு செய்த பின்னர் வழக்கு விசாரணை தொடங்கினால் பிணையில் செல்கின்ற சந்தேக நபர் மூலமாக தொடர்ந்தும் தனக்கோ தனது குடும்ப அங்கத்தவருக்கோ உறவினர்களுக்கோ அழுத்தம் ஏற்படும் என்ற காரணத்தினால் பெண்கள் சட்டத்தின் முன் செல்லமாட்டார்கள். உலகில் முன்னேற்றமடைந்த சட்டங்கள் நிலவுகின்ற நாடுகளில் பிணையில் செல்கின்ற சந்தேக நபர்களை அவதானிப்பதற்கான தொழில்நுட்ப முறையியல்கள் மூலமாக அவர்களின் நடத்தைகளை அவதானித்து வருகின்றனர். எங்களுடைய நாட்டில் அப்படி இடம்பெறுகிறதா? அந்த பிரச்சினைக்கு நாங்கள் பதில் கொடுப்போம். எங்களுடைய நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்களை நாங்கள் ஒழுங்குபடுத்துவோம். அதற்கு பொறுத்தமான உத்தியோகத்தர்களை நியமிப்போம். அவர்கள் சட்டத்தை மீறினால் அனைவருக்கும் முன்னால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுலாக்குவோம். சட்டம் தாமதமாவது என்பது சட்டம் நிராகரிக்கப்படுவதாகும்.

எங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சிக்கல் ஏற்பட்டால் நாங்கள் பெண்கள் அது எங்களுடைய தலைவிதியென பெண்கள் நினைத்தால் அந்த மனோபாவத்திலிருந்து இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டுமென்ற செய்தியை இதுவரை எமது நாட்டை ஆட்சி செய்தவர்கள் உங்களுக்கு கொடுத்தார்களா? இருக்கின்ற சட்டங்கள் போதும். ஆனால் அவை முறையாக அமுலாக்கப்படுவதில்லை. அது மண்ணில் யதார்த்தமாக மாறவேண்டும். இறுதியாக ஒரு செய்தியைக்கூற விரும்புகிறேன். 2010 இல் ஸ்கொட்லாந்து பொலிஸ் எமது நாட்டின் சமுதாய பொலிசுக்கு எந்த விதமான கட்டணமும் அறவிடாமல் மூன்று நோக்கங்களுக்காக ஒரு விசேட பயிற்சியை அளித்தது. முதலாவது, இந்த நாட்டில் பெண்களுக்கு இடம்பெறுகின்ற பாலியல் துன்புறுத்தல்கள் நிறுத்தவேண்டும். இரண்டாவது, நோக்கம் வீட்டுக்குள் கூட தனது கூரைக்கு அடியில்கூட பெண்களுக்கு துன்புறுத்தல் இடம்பெற்றால் அதனை நிறுத்தவேண்டும். மூன்றாவது, அதைபோலவே பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் சமூகத்தில் இடம்பெறுகின்ற பாரபட்சம் காட்டப்படுதலை ஒழித்துக் கட்டுங்கள். அப்படித்தான் பயிற்சியளித்தார்கள். பயிற்சியை எவ்வளவு நன்றாக கொடுத்தார்கள் என்றால் இந்த பயிற்சியை இடைநடுவில் நிறுத்தவேண்டுமென ஸ்கொட்லாந்து அரசாங்கம் தீர்மானிக்கிறது. காரணமென்ன? பொலிஸ் கைதில் இருக்கும்போதே எங்களுடைய சந்தேக நபர்கள் துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.

அதாவது எமது நாட்டில் மனித உரிமை மீறப்படுதல் பற்றி பாரிய உரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் சிறுவர் மீது பாரபட்சம் காட்டப்பட்டது. அதனால்தான் ஸ்கொட்லாந்து அரசாங்கம் பயிற்சியை நிறுத்திக் கொண்டது. எமது நாட்டின் ஜனாதிபதி எமது நாட்டின் பிரதமர் எமது நாட்டின் பொலிஸ் மா அதிபர் இதற்கு பதிலளித்தாரா? இல்லை. சட்டவிரோத தடுத்து வைத்தலுக்கு துன்புறுத்தலுக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்ட ஒருவர் பொலிஸ் மா அதிபராக்கப்பட்ட ஒரு நாடு தான் இது. அப்படிப்பட்ட பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ் பெண்களாகிய எங்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து பிரமாண்டமான அரண்போல இருக்கின்ற பெண்களாகிய நாங்க

Anura Kumara Dissanayake Speeking At NPP Womens Rally
Anura Kumara Dissanayake At Stage Of NPP Womens Rally From the Back of the Stage
Harini Amarasooriya Wawing At NPP Womens Rally
Womens Singing At NPP Womens Rally