Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இனிமேலும் மௌனிகளாக இருக்க எமது நாட்டுப் பெண்கள் தயாரில்லை” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் விராய் கெலீ பல்தசார்-

(ஊடக சந்திப்பு – 2024.03.06 – தேசிய மக்கள் சக்தி)

மார்ச்சு 08 ஆந் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். அந்த தனித்துவமான தினம் பற்றி தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் என்றவகையில் நாங்கள் ஒரு கருத்தினைக் கூறவேண்டியுள்ளது. 1910 எனும் வரலாற்றில் அமெரிக்கா வரையான நீண்ட வரலாறு மகளிர் தினத்திற்கு உள்ளது. பெண்களின் வாக்குரிமைக்காக போராட்டம் நடாத்தியதன் விளைவாக விரிவடைந்ததன் மூலமாக சர்வதேச மகளிர் தினம் பிற்காலத்தில் பிரகடனஞ் செய்யப்படுகின்றது. பெண்களின் போராட்ட வரலாறு, பெண்களின் தனித்துவமான சிக்கல்கள் முதலியவை தொடர்பில் அதன்போது விசேட கவனஞ் செலுத்தப்படுகின்றது. இலங்கைப் பெண்கள் இன்றளவில் எதையேனும் வென்றெடுத்திருப்பார்களாயின் அவை வரலாற்றில் புரிந்த போராட்டங்களின் பெறுபேறு காரணமாகவே கிடைத்தன. 1931 இல் சர்வசன வாக்குரிமையைப் பெற்றுக்கொள்ளும்போதுகூட அக்காலத்தில் இருந்த பெண்கள் போராட்டம் நடாத்தியுள்ளார்கள். குறிப்பாக இடதுசாரி வரலாற்றில் பெண்கள் முன்னணிக்கு வந்து புரிந்த போராட்டம் காரணமாகவே. நாட்டைக் கட்டியெழுப்ப தொடர்ந்தும் பெண்கள் பங்களிப்புச் செய்யவேண்டுமென சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். எனினும் மிகுந்த சிரமத்துடன் வாழ்கின்ற இலங்கைப் பெண்களிடம் இனிமேலும் கொடுப்பதற்கு எதுவுமே எஞ்சவில்லை.

வரவுசெலவில் பெண்களுக்கு பிள்ளைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற பணத்தொகை 50% ஆல் வெட்டிவிடப்பட்டது. அதற்கெதிராக தேசிய மக்கள் சக்தியின் பெண்களாகிய நாங்கள் பொல்தூவ சந்தியில் போராட்டம் நடாத்தினோம். அமைதிவழிப் போராட்டம்மீது கோழைத்தனமான தலைவர்கள் நீர்த்தாரைப் பிரயோகம் செய்து மனிதாபிமானமற்றவகையில் தாக்குலை மேற்கொண்டார்கள். பல வருடங்களாக வீடுகளில் அடைபட்டிருந்த பெண்கள் இன்றளவில் அடக்குமுறைக்கு அடிபணியாமல் துணிச்சலுடன் போராட்டங்களில் பங்கேற்பது மூர்க்கத்தனமான ஆட்சியாளர்கள் காரணமாகவே. குறிப்பாக நாளுக்கு நாள் தீவிரமடைகின்ற கடன் சுமையின் மத்தியில் நுண்நிதிக் கடன்களுக்கு இலங்கையின் பெரும்பாலான பெண்கள் இரையாகி உள்ளார்கள். நாங்கள் இனிமேலும் இவ்வாறு வாழவேண்டிய அவசியம் கிடையாது. எமது நாட்டுப் பெண்கள் வீடுகளுக்குள்ளேயும் அதற்கு வெளியிலும் மட்டற்றவகையில் களைத்து வேலைசெய்தாலும் வரிச்சுமையைத் தாங்கமுடியாததாலேயே உயிர்வாழ்வதற்கான சிரமம் நிலவுகின்றது. தமது சுகாதாரம் பற்றிச் சிந்திக்காமல் பிள்ளைகளின் கல்விக்காக செலவுசெய்துகொண்டு தொடர்ந்தும் மௌனிகளாக இருக்க பெண்கள் தயாரில்லை. பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் என தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி பெருந்திரளான பெண்கள் நாளுக்குநாள் ஒன்றுசேர்ந்து இந்த படுமோசமான அரசியலை முடிவுக்குகொண்டுவர புத்துணர்வுடன் முன்வந்துகொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்காகவே மார்ச்சு 08 ஆந் திகதிய மகளிர் தினத்தை நாங்கள் 10 ஆந் திகதி அணிதிரண்டு கொண்டாடுகிறோம்.

“தமது மகத்துவமும் நன்மதிப்பும் பாதுகாக்கப்படுகின்ற ஒரே மேடை திசைகாட்டியே என்பதை பெண்கள் உணர்ந்துள்ளார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

இந்த வருடத்தின் சர்வதேச மகளிர் தினம் இலங்கைப் பெண்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாக மாறுவதில் சந்தேகம் கிடையாது. பெண்கள் அனைவருமே உழைக்கும் பெண்களாவர். வரலாற்றுக்காலம் பூராவிலும் போராடிய அந்த பெண்களை நினைவுகூர்ந்ததைப்போன்றே இந்த மார்ச்சு 08 ஆந் திகதி இலங்கைக்கு தனித்துவமானதாக அமையக்காரணம் எமது வரலாற்றில் முதல்த்தடவையாக ஒழுங்கமைந்தவகையில் அரசியல்ரீதியாக குழுமி எதிர்காலம் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக முன்வருகின்ற போக்காகும். மாத்தறையில் இருந்து தொடங்கிய “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” எனப்படுகின்ற மாநாட்டுக்கு வருகைதருகின்ற பெண்கள் தொடர்ந்தும் இந்த அரசியல் கலாசாரத்தையும் பொருளாதார அழுத்தத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதை விளங்கிக்கொண்டுள்ளார்கள். கௌரவத்துடன் தமது பெருமையைப் பாதுகாத்துக்கொண்டு பலம்பொருந்தியவகையில் பெண்கள் என்றவகையில் கூட்டாக கொண்டுவருகின்ற மேடை அமைக்கப்படும்வரை அவர்கள் காத்திருந்தார்கள் என்பது எமக்கு உறுதியாகின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் பெண்களுக்கு தலைமைத்துவம் வழங்கி அவர்களிடம் மறைந்திருந்த திறமைகள், அரசியல் தேவைகள் மற்றும் தலைமைத்துவத்திற்கான மேடையை அமைத்துக்கொடுக்க இயலுமானமை பற்றி நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தமது வகிபாகம் மற்றும் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாகவே இவர்கள் இத்தடவை மகளிர் தினத்திற்காக முன்வருகிறார்கள்.

யு.என்.பி. அரசாங்கம் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் மகளிர் தினத்தை தடைசெய்து மகளிர் தினத்தைக் கொண்டாடவந்த பெண்கள்மீது தாக்குதல் நடாத்தி கைதுசெய்த யுகமொன்று இருந்தது. மகளிர் தினத்தின் உண்மையான நோக்கங்களை திரிபுபடுத்தி, வணிக நோக்கங்களுக்காக ஈடுபடுத்திய யுகமொன்றே எமக்கு இருக்கின்றது. எனினும் 2024 மகளிர் தினத்தை மீண்டுமொருதடவை அர்த்தமுள்ளதாக ஏற்பாடுசெய்வதற்கான இயலுமையை பெற்றுக்கொண்டமை தொடர்பாக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கைப் பெண்கள் பற்றி மாத்திரமல்ல, எமது சகோதரத்துவம், ஈடுபாடுகள், கூட்டுமனப்பான்மையை உலகம் பூராவிலும் இருக்கின்ற பெண்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில் காசா துண்டுநிலத்தில் மிகவும் கொடூரமான மனிதாபிமானமற்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் தோற்றுகிறோம். இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கான அதிகாரம்கொண்டுள்ள நாடுகள் மௌனம் சாதிக்கின்ற வேளையிலேயே நாங்கள் அவர்களின் உரிமைகளுக்காக தோற்றுகிறோம். யுத்தமென்பது மனிதன் எனப்படுகின்ற விலங்கிடம் பொதிந்துள்ள மிகுந்த கொடூரமும் மூர்க்கத்தனமும் வெளிப்படுகின்ற ஒரு தருணமாகும். யுத்தமில்லா அமைதியான ஓர் உலகிற்காகவே நாங்கள் தோற்றுகிறோம். காசா துண்டுநிலத்தில் உள்ள சகோதரிகளுக்கும் பிள்ளைகளுக்கும் நேரிடுகின்ற சேதத்தை குறைத்துக்கொள்வதற்காக உடனடியாக இடையீடுசெய்யுமாறு உலகத்தாரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

“நாட்டை ஆட்சிசெய்கின்ற திருடர்களை ஒரேகட்டாக வைத்து தோற்கடித்திட பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன் தயார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சமன்மலீ குணசிங்க-

எமது நாட்டிலுள்ள பெண்களுக்கும் உலகில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் கொடுப்பதற்கான ஒரு செய்தி எம்மிடம் இருக்கின்றது. நாங்கள் வசிக்கின்ற உலகம் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சொந்தமானதல்ல. பொருளாதார, சமூக மற்றும் கலாசாரரீதியான உலகத்தை நாங்கள் இழந்துள்ளோம். இழந்த அந்த உலகத்தை பெண்களுக்கு வென்றெடுத்துக் கொடுப்பதற்காக முழு உலகத்திலுமுள்ள பெண்கள் ஒன்றுசேர்ந்து புரியவேண்டிய போராட்டமொன்று இருக்கின்றது. போராட்டப் பாதையில் மாத்திரமே எமது நாட்டிலும் உலகத்திலும் பெண்கள் உரிமைகளை வென்றெடுத்திருக்கிறார்கள். 1910 இல் கோப்பன்ஹெகன் நகரத்தில் நடைபெற்ற உலக சோஷலிஸ தலைவிகளின் இரண்டாவது அகிலத்தில் உரையாற்றுகையில் தோழர் கிளாறா செட்னிக் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட தினமொன்றை முன்மொழிந்தார். அந்த தினத்தை மார்ச்சு 08 இந் திகதியென பிரகடனஞ் செய்யுமாறும் முன்வைத்த மேலதிக முன்மொழிவினை அன்று குழுமியிருந்த அனைத்து சோஷலிஸ தலைவிகளும் அங்கீகரித்தனர். 1911 இல் இருந்து இற்றைவரை 113 வருடங்களாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவ்வாறு கூறிக்கொண்டு மலர்மாலை அணிந்து விருந்துபசாரம் நடாத்தவேண்டிய தினமல்ல. நாங்கள் பாரிய போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 2024 இல் அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்தி, நாங்கள் புதிய யுகமொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதன் பெரும்பங்கு சனத்தொகையில் 52% ஆக அமைந்த பெண்களுக்கே இருக்கின்றது.

இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தின்போது எமக்குள்ள இறைமைத் தத்துவத்தை பாவிப்பதற்கான விழிப்புணர்வு அவசியமாகும். பெண்களின் இறைமைத் தத்துவத்தை இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென இதுவரைகாலமும் இருந்த ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். அரசியல்ரீதியாக ஏமாற்றி, பொய்கூறி, இதுவரை அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அத்தகைய பெண்களுக்கு அரசியல் புரிந்துணர்வினைப் பெற்றுக்கொடுத்து பெருந்தொகையான பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம். எமது நாட்டின் பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராடி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடவேண்டி நேர்ந்துள்ளது. பெண்களை ஒருபோதுமே ஏமாற்றாத, பெண்களின் ஆற்றல்கள் மற்றும் சக்தி பற்றிய புரிந்துணர்வுடன் அரசியல் பெண்ணாக மாற்றிய தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி இந்த நாட்டின் பெண்கள் அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைப்பு விடுக்கிறோம்.

மத்திய வங்கியை வெறுமையாக்குகின்ற தலைவர்கள் தொடக்கம் கிராமிய வங்கிகளிலுள்ள பணத்தை திருகின்ற கிராமிய மட்டத்திலான அடிவருடிகள் வரை களவும் ஊழலும் வியாபித்துள்ளது. பொருளாதார கொலைகாரர்களென நீதிமன்றத்தினால் பெயர்குறிக்கப்பட்டுள்ள ராஜபக்ஷாக்கள் ஒரு தருணத்தில் நுண்நிதிக் கடனை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அவர்கள் அதனை மீறினார்கள். அதன்பின்னர் 2023 வரவுசெலவினை சமர்ப்பித்து சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அதே வாக்குறுதியை அளித்து மீறியுள்ளார். அதன் காரணமாக நுண்நிதிக் கடனுக்காக தற்கொலை புரிந்துகொள்ளவேண்டிய நிலை எமது நாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. நுண்நிதிக் கடனை இல்லாதொழிப்பதற்குப் பதிலாக கிராமிய வங்கிகளில் எமது பெண்கள் வைப்புச் செய்திருந்த பணத்தைக் கொள்ளையடிப்பதுவரை பயணித்துள்ளார்கள்.

இந்த கள்வர்களை ஒரே கட்டாக வைத்து தோற்கடிப்பதே எமது தேவையாகும். அதற்காக எமது நாட்டுப்பெண்கள் கூட்டாக எழுச்சிபெற வேண்டும். லயிற் பில் 400% ஆல் அதிகரிக்கப்பட்டமையால் ஏறக்குறைய பத்திலட்சம் வீடுகள் லயிற் பில் செலுத்தமுடியாமல் மின்சார துண்டிப்பிற்கு இலக்காகின. அத்தகைய தகப்பனொருவர் தனது பிள்ளை பாடம் படிப்பதற்காக அயல்வீட்டிலிருந்து மின்சாரத்தைப் பெற முயற்சிசெய்கையில் விபத்து மரணத்தை சந்தித்தார். மின்சார சபையினால் புரியப்படுகின்ற மாஃபியா சம்பந்தமாக சனாதிபதியை மற்றும் பிரதமரை உள்ளிட்ட ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும். பெண்களை இருளில் தள்ளிவிட்ட மின்சார மாஃபியாவை இல்லாதொழித்திட செயலாற்றுவதேயன்றி இனிமேலும் நிவாரணங்களை எதிர்பார்க்க வேண்டியதில்லை. தேர்தல் காலத்தில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதென்பது ஏமாற்றுவேலையாகும். அதற்கெதிராக வெளிச்சத்தை, வாழ்க்கையை, புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்வருமாறு அழைப்பு விடுக்கிறோம். பெருநிலத்தில் இருக்கின்ற மக்கள் இந்நாட்டு வரலாற்றில் முதல்த்தடவையாக நடுவீதியில் போராட்டம் நடாத்துகின்ற விதத்தை எதிர்காலத்தில் பார்க்கமுடியும். தருகின்ற நிவாரணங்களை உடனடியாக வழங்கி நீங்கிச்செல்லுமாறு நாங்கள் ஆட்சியாளர்களை வலியுறுத்துகிறோம்.

“இதுவரை அரசாங்கங்கள் முன்னெடுத்துவந்த ஊழல்மிக்க பயணத்திற்குப் பதிலாக புதிய பாதையொன்றை தேர்ந்தெடுப்பதற்காக பெண்கள் அணிதிரண்டுள்ளார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்-

பொருளாதார நெருக்கடி ஒருபுறத்தில் இருக்கையில் ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் சனநாயகத்திற்கு எதிரான பாதையில் ஈடுபட்டுள்ளவேளையில் 113 வது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இந்நாட்டின் பெண்களையும் பிள்ளைகளையும் தேர்தல் கருத்திட்டத்தில் ஈடுபடுத்தி முன்நோக்கிநகர ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் எத்தனிக்கின்றது. எனினும் இதுவரை பயணித்த ஊழல்மிக்க பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பெண்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக புதிய அரசியல் முறைமையொன்று மற்றும் புதிய அரசியல் போக்குமீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுமீது சுமத்தப்பட்டுள்ள வரம்பற்ற ஏழ்மைநிலை காரணமாக எமது நாட்டின் 43 இலட்சமாக அமைகின்ற பாடசாலைப் பிள்ளைகளில் 54% கல்விச்சாதனங்களை பெற்றுக்கொள்வதற்கான சிரமங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். உணவு, ஓளடங்கள், பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் சாதனங்கள் மீது எல்லையற்ற வரி விதித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக முழு நாட்டினதும் பெண்களை ஒன்றுதிரட்டி மார்ச்சு 08 ஆந் திகதி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டத் தொடரொன்றை நடாத்த நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அரசாங்கத்திற்கெதிராக பிரமாண்டமான மக்கள் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்போலவே எதிர்வரும் 10 ஆந் திகதி கொழும்பில் நடாத்தப்படுகின்ற பெண்கள் மாநாட்டினை 76 வருடகால ஆட்சியை மாற்றுவதற்கான வாய்ப்பாகவும் ஈடுபடுத்துவோம்.

அதைப்போலவே இன்னமும் இந்நாட்டில் தேசிய ஒற்றுமை கட்டியழுப்பப்படவில்லை. சனநாயகமும் பொருளாதார நியாயத்தன்மையும் ஏற்படுத்தப்படவில்லை. அளப்பரிய செயற்பாறுப்பினை ஈடேற்றுகின்ற பெண்களில் 30% தான் உழைப்புப் படைக்கு பங்களிக்கிறார்கள். சம உழைப்பிற்கான சம சம்பள உரிமையினை நாங்கள் நீண்டகாலமாக கோரியபோதிலும் இன்னமும் கிடைக்கவில்லை. கர்ப்பிணித் தாய்மார்களில் 33% உம் 10 இலட்சத்திற்கு கிட்டிய பெண்களும் பிள்ளைகளும் போசாக்கின்மையால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பேணிவந்த போசாக்குப் பொதியை வழங்குவதைக்கூட முறைப்படி செய்யமுடியாத அரசாங்கம் பெண்களின் பொருளாதாரத்தையும் சனநாயக உரிமைகளையும் சுருட்டி வருகிறார்கள். உயர்நீதிமன்றத்தினால் தவறாளியாக்கப்பட்ட ஒருவரை பொலீஸ் மா அதிபராக நியமித்து ஒன்லயின் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்றே ஊடக நிறுவனங்களை ஒழுங்குறுத்துகின்ற சட்டம்போன்ற சட்டங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அரசியல் அதிகாரத்தைப் பேணிவருவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சிகளின் மத்தியில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இருக்கின்றதா என நாங்கள் கேட்கிறோம். சமூக வலைத்தளங்களிலும் பிரதான ஊடகங்களிலும் பெண்களை இலக்காகக்கொண்ட துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்த நிலைமைக்குள் பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பொருளாதார சனநாயக உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்குகின்றது. மக்களுக்காக செயற்படாத அரசாங்கத்திடம், வரியை அறவிட்டுக்கொள்வதற்காக மாத்திரம் வரையறையற்று செயற்படுகின்ற அரசாங்கத்திடம் மக்கள் தொடர்ந்தும் ஏமாறப் போவதில்லை என்பதை வலியுறுத்துகிறோம். இந்த நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு பெண்ணுடைய வீட்டுப் பிரச்சினைக்கும் தட்டுமாறி முறையினால் தீர்வு கிடைக்கப்போவதில்லை. இந்நாட்டுக்கு புதியதொரு யுகத்தை உருவாக்குவதற்காக செயலாற்றுவோமென்பதை 113 வது சர்வதேச மகளிர் தினத்தன்று வலியுறுத்துகிறோம்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய பதிலளிக்கையில்

கேள்வி: தீயில் வெந்துகொண்டிருந்த தேசத்தை மீட்டெடுத்தவர் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே என்பதை சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் கூறினார். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில் : சிரிப்பது மாத்திரமே எங்களுக்கு இருக்கின்றது. தேர்தல் இயக்கத்திற்கு தயாராகவே அவர் அந்த கதைகளைக் கூறுகிறார். மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டதாக அவரால் கூறமுடியாது என்பதால் பல பொய்களைக் கூறுகிறார். 2022 மே 09 ஆந் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இராஜிநாமா செய்ததும் நாங்கள் பிரதிபலிப்புச்செய்யவேண்டிய விதம் பற்றி நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவை கோட்டாபய ராஜபக்ஷ பிரதமராக நியமித்தார். அதன் பின்னர் சனாதிபதியை பாராளுமன்றத்தில் தெரிவுசெய்கையில் போட்டியிட முன்வந்தவர் அவர் மாத்திரமல்ல. மேலும் இருவர் முன்வந்திருந்தார்கள். எமது தலைவர் அநுர திசாநாயக்கவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் டலஸ் அழகப்பெருமவும் முன்வந்திருந்தார்கள். மொட்டில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகப்படியான வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அவர் மாத்திரமே முன்வந்தார் என்பது அப்பட்டமான பொய்யாகும். மொட்டின் பாதுகாப்பு கருதியே அவர் நியமிக்கப்பட்டாரேயன்றி நாட்டை மீட்டெடுப்பதற்காக அல்ல. அந்த தீயில் இருந்து காப்பாற்றியதாக கூறுவது பொய்யாகும்.

நாட்டை மீட்டெடுத்ததாகக் கூறினாலும் உண்மையிலேயே புரிந்திருப்பது பொருளாதாரத்தை மேலும் சுருக்கியமையாகும். கடன்பொறியின் பெறுபேறு காரணமாக நாடு வங்குரோத்து அடைந்தது. தற்போது பொருளாதார ஆற்றாமை காரணமாக மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது. 10 இலட்சம் வீடுகளின் மின்சாரத் துண்டிப்பு அவருக்குத் தென்படவில்லையா? பிள்ளைகள் பாடசாலை செல்வதிலான வீழ்ச்சி அவருக்கு தென்படவில்லையா? பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைப்பதாகக்கூறி மக்களின் வாழ்க்கையை எம்மால் மறந்துவிட முடியாது. இந்த நாட்டின் மிகவும் வறுமைப்பட்ட அத்துடன் எந்தவிதமான அதிகாரமுமற்ற பிரஜைகளே பொருளாதாரத்தைப் பலப்படுத்த மிகுந்த அர்ப்பணிப்பைச் செய்துள்ளார்கள். குறைந்தபட்சம் அவர் அந்த அர்ப்பணிபினைப் பாராட்ட வேண்டும். மின்சாரசபை பாரிய இலாபத்தை ஈட்டியுள்ளது ஊழல் மற்றும் மோசடியை நிறுத்தியதால் அல்ல. மக்கள் மின்சாரத்திற்காக செலுத்துகின்ற கட்டணங்களை அதிகளவில் அதிகரித்தமையாலாகும். மண்ணில் கால் பதித்திராத அவருக்கு கூறுவதற்கு பல கதைகள் தேவை. அவருடைய தேர்தல் இயக்கத்திற்காக கூறுகின்ற அவ்வாறான கதைகளை நாங்களும் மக்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

கேள்வி : பசில் ராஜபக்ஷ மீண்டும் திரும்பிவந்ததால் மொட்டு மலர்ந்துவிட்டதாக ஒரு கதை அடிபடுகின்றது. உங்களுக்கு சவாலாக அமைந்துவிடுமா?

பதில் : ஐயோ கிடையாது. ஒருபோதுமே சவாலாக அமையமாட்டாது. நாங்கள் எந்தவிதமான மலர்ச்சியையும் காணவில்லை. வருவதற்கு முன்னர் ஊர்வலமாக அழைத்து வருவதாக கூறினார்கள் அல்லவா? அந்த ஊர்வலத்திற்கு என்ன நடந்ததென தெரியவில்லை. நாங்களென்றால் ஊர்வலமொன்றைக் காணவில்லை. வெளியில்கூட மிகவும் கஷ்டப்பட்டே இறங்கினார். பொருளாதார கொலைகாரர்களுக்கு இந்நாட்டு மக்களிடமிருந்து அடுத்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும். நீங்கள் கூறிக்கொள்கின்ற எந்தவோர் அரசியல்வாதியும் மக்களுடன் இருக்கவும் இல்லை. இன்றும் இல்லை. அவர்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக மேல்மட்டத்தில் அரசியல் டீல் போடுவதே ஒரே உபாயமார்க்கமாகும். மக்களுடன் உண்மையான அரசியலில் ஈடுபடுவதற்கான ஆற்றலும் அவர்களுக்கு கிடையாது, விளங்கவும் மாட்டாது. இவர்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிப்பது மேல்மட்டத்தில் டீல் போடவும் மக்களை ஏமாற்றுவதையும்தான். இத்தடவை வித்தியாசம் மக்கள் ஏமாற மாட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மேடைக்கு வந்தாலும் பலனில்லை. அந்த அரசியல் கலாசாரம் இந்த வருடத்தில் முடிவுக்கு வரும். அதனை செய்பவர்கள் இந்நாட்டு மக்களே.

கேள்வி: இந்த அரசியல் கட்சிகள் எல்லாமே ஒன்றுசேர்ந்து தேசிய மக்கள் சக்தி தனித்துவிடுமென்பது தென்படுகின்றது. அவ்வாறு இடம்பெற்றால் வெற்றிபெற முடியுமா?

பதில் : அவ்வாறு இடம்பெற்றால் மேலும் எளிதானதாக அமைந்துவிடும். ஒன்று சேர்ந்தால் எமக்கு மிகவும் இலகுவானது. மக்களுக்கு மிகவும் வசதியாக அமையும். பழைய, துர்நாற்றம் வீசுகின்ற, ஊழில்மிக்க அரசியலுக்குப் பதிலாக மக்களும் பங்கேற்கின்ற புதிய அரசியலை நோக்கி நாட்டை கொண்டுசெல்கின்ற யுகமொன்றை நாங்கள் தொடங்குவோம். இரண்டு குழுக்களும் சரியாக பிரிந்துவிட்டால் மக்களுக்கும் எமக்கும் மிகவும் இலகுவானதாக அமைந்துவிடும்.