2023.10.11 தேசிய மக்கள் சக்தியின் செய்தியாளர் சந்திப்பில்…
எமது நாட்டுக்கு வருடாந்தம் மழைவீழ்ச்சி மூலமாக கிடைக்கின்ற நீர் இயற்கையாக பெருக்கெடுத்து ஓடுகின்ற 103 ஆறுகளாலும் 94 சிற்றாறுகளாலும் எமது நிலத்தின் இடஅமைவுக்கிணங்க இயற்கையாகவே முகாமை செய்யப்படுகின்றது. அதைப்போலவே மனிதனின் இடையீட்டினால் நிலத்தின் இடஅமைவினை பயன்படுத்தி தொடர்படு அருவி முறைமையை நிர்மாணிப்பதால் மகத்தான உயிர்ப்பன்வகைமையை மரபுரிமையாக்கிக் கொடுத்துள்ளது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற 130 பில்லியன் கன மீற்றர் மழைநீர் அளவினை சந்தைப் பெறுமானத்திற்கு சீராக்கம்செய்ய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இந்த ஒரு லீற்றர் நீரின் விலை ஒரு சதம் என எடுத்துக்கொண்டால் பதினொரு இலட்சம் மில்லியன் கணக்கில் ஈட்டிக்கொள்ள இந்த மோசமான சிந்தனை மூலமாக கணிப்பீடு செய்துள்ளார்கள். அதற்கிணங்க பராக்கிரம சமுத்திரத்தின் நீர்க் கொள்ளளவான 134 மில்லியன் கன மீற்றரக் விலைக் கணித்தால் 1340 மில்லியன் ரூபாவாக மதிப்பீடுசெய்ய முடியும். ஒரு லீற்றர் நீருக்கு ஒரு சதம் வீதம் கணித்தால் இந்த பெறுமானமே கிடைக்கும். எவ்வளவு பெருந்தொகையான இலாபத்தை ஈட்டுவதற்காக இயற்கையாக கிடைக்கின்ற நீரை விற்பனைசெய்ய முன்மொழிந்துள்ளமை தெளிவாகின்றது. 16 இலட்சம் ஏக்கர் வயலுக்கு நெற் செய்கைக்காகவும் நீரில் 88% ஐ பாவிக்கின்ற ஒட்டுமொத்த விவசாயத்திற்காகவும் நெற்செய்கைக்காக வயல் ஏக்கரொன்றுக்கு ஒரு போகத்தின்போது ஒரு லீற்றர் நீரை ஒரு சதம் வீதம் எடுக்க ரூ. 4000 விலையை செலுத்த நேரிடும். அதன் மூலமாக நீரை விற்பனை செய்வதில் உள்ள பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளலாம்.
உலகின் சுற்றாடலியலாளர்கள் கணிப்பிட்டுள்ளவிதத்தில் ஒரு கிலோ தானியத்தை உற்பத்திசெய்ய 350 லீற்றருக்கு கிட்டிய அளவு அவசியமாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். ரணில் – ராஜபக்ஷாக்கள் நீருக்கான விலையை நிர்ணயித்தால் எமது நாட்டில் ஒரு கிலோ அரிசியை உற்பத்திசெய்ய 35 ரூபா செலவாகும். ஒரு முட்டையை உற்பத்திசெய்ய ஏறக்குறைய 360 லீற்றர் நீர் செலவாகின்றதெனக் கண்டுபிடித்துள்ளார்கள். அப்படியானால் ஒரு முட்டைக்காக 4 ரூபாவுக்கு கிட்டிய மேலதிக செலவினை ஏற்கநேரிடும். ஒரு லீற்றர் பால் உற்பத்திசெய்ய பசுக்களுக்காக அண்ணளவாக 1000 லீற்றர் நீர் தேவைப்படுகின்றது என கண்டுபிடித்துள்ளார்கள். நெல், காய்கறிகள், பழங்கள் மாத்திரமல்ல கால்நடைவள உற்பத்தியின்போதும் அதிகூடிய கிரயத்தை ஏற்க நேரிடும். நீரை பாவிக்கின்ற எந்தவொரு துறையிலும் நீருக்காக செலுத்தவும் அதற்காக வரி விதிக்கவும் அதன் விளைவாக விலை அதிகரிப்பதையும் தடுக்கமுடியாமல் போய்விடும். இந்த சட்டத்தை உடனடியாக சுருட்டிக்கொள்ளுமாறு நாம் அனைவரும் ஏகோபித்த குரலில் அழுத்தம் கொடுக்கவேண்டும்.