(இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.07.29)
நாங்கள் பல வருடங்களாக சேவையில் ஈடுபட்டு இளைப்பாறிய பின்னர் நாடு அடைந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை தெளிவாக விளங்கிக்கொண்டோம். எங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவர இலங்கை தரைப்படை, இலங்கை வான்படை மற்றும் இலங்கை கடற்படை மேற்கொண்ட முயற்சியும் பிரயத்தனமும் சம்பந்தமாக எங்களுடைய மனங்களில் மதிப்பும் அபிமானமும் என்றென்றும் இருக்கிறது. நாடு அடைந்துள்ள நிலைமை பற்றி நீண்ட ஆய்வினை மேற்கொண்ட பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து இரண்டாவது நடவடிக்கைக்கு உயிர்கொடுக்க 2022 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு சிறிய குழுவென்ற வகையில் பிள்ளையார்சுழி போட்டோம். இன்றளவில் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் ஏறக்குறைய 40 ஆயிரம் போ் எம்முடன் இணைந்திருக்கிறார்கள். வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கதக்க ‘அதிட்டன’ மாநாட்டினை நடாத்தி எங்களுக்கு இருக்கின்ற பொறுப்புக்களையும் கடமைகளையும் பற்றி இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்திக் கூறினோம். அதனூடாக அவர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் முன்னோக்கிய பயணத்தில் இணைந்துள்ளார்கள். 2023 இல் நிலவிய பின்னணிக்கிணங்க தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அடிப்படைக் கொள்கை வெளியீட்டினை சமர்ப்பித்தாலும் நடப்பு நிலைமைக்கு இணங்க இற்றைப்படுத்தி மீண்டும் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
கடந்து சென்ற இந்தக் காலப்பகுதிக்குள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றுதல் சம்பந்தமாக எம்மீது முன்வைக்கப்பட்ட சவால்களை வென்றெடுத்து திடசங்கற்பத்துடன் செயலாற்றி வருகிறோம். அனைவரும் நிலைதளராமல் ஒரே நோக்கத்திற்காக இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியுடன் முன்னோக்கி பயணிக்கிறோம். வாழ்க்கையின் எல்லாவற்றையும் அர்ப்பணித்து நாட்டுக்காக கடமை புரிந்தாலும் இறுதியில் பார்க்கும்போது கவலைக்கிடமான நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ள நாட்டை விடுவித்துக் கொள்வதற்காக இரண்டாவது நடவடிக்கை என்ற வகையில் நாங்கள் முன்வந்திருக்கிறோம். இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் தேசிய மாபெரும் மாநாடு ஆகஸ்ட் 04 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பொரல்ல கெம்பல் மைதானத்தில் நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முப்படையைச் சோ்ந்த இளைப்பாறிய ஊனமுற்றவர்கள், இறந்த அங்கத்தவர்களின் குடும்பங்களைச் சோ்ந்தவர்கள் சம்பந்தமான சிக்கல்களை உள்ளிட்ட ஒரு வெளியீட்டினை சமர்ப்பிக்க நாங்கள் தயாராகி வருகிறோம். இன்று நாடு அடைந்துள்ள நிலைமை மீது கவனம் செலுத்தி இதுவரை எம்முடன் இணைந்திராத அனைவரையும் இதில் சோ்ந்து கொள்ளுமாறு திறந்த அழைப்பினை முன்வைக்கிறோம். நாட்டுக்கு பயனுள்ள பணியை ஈடேற்ற சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட உத்தியோகத்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இன்றளவில் தேசிய மக்கள் சக்திக்கு வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கை புத்திஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள், சிறப்பறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறைகளையும் சோ்ந்த புலமைசாலிகள் ஒன்று சோ்ந்து இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப்பிடிப்புள்ளதன்மை காரணமாக நாட்டை கட்டியெழுப்புவதற்குள்ள ஒரே அரசியல் இயக்கம் என்ற வகையில் இதனைச் சுற்றி குழுமி வருகிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்வதற்காக 2022 இல் நாங்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் மிகவும் பெருமைப்படுகிறோம்.
தேசிய மக்கள் சக்தியால் கட்டியெழுப்பப்படுகின்ற மக்கள் அரசாங்கத்தின் மூலமாக முப்படை அங்கத்தவர்களுக்கு கௌரவமாகவும் அபிமானத்துடனும் உயிர் வாழ்வதற்கான இடமளிப்பது இந்த அரசியல் இயக்கத்தின் கொள்கையாக அமைந்திருக்கிறது. இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் அனுபவித்து வருகின்ற பொருளாதார அழுத்தத்தின் மத்தியில் ரஷ்யா, யுக்கிரேன் போன்ற நாடுகளில் மிகவும் அபாயகரமான தொழில்களில் கூட ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு தனித்துவமான பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ள ஒழுக்கம், ஒழுங்கமைந்ததன்மை, அர்ப்பணிப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட அவர்களை நாட்டுக்கான விசேட பணிகளில் ஈடுபடுத்த முடியும். படைகளை கைவிட்டுச் சென்றுள்ள எனினும் இற்றைவரை அதனை சட்டபூர்வமாக செய்து கொண்டிராதவர்களின் சிக்கல்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி கௌரவமான பிரஜைகளாக வாழக்கூடிய சுற்றுச்சூழலை உருவாக்கிக் கொடுப்போம். ஒரு தேசம் என்ற வகையில் போதைப் பொருள் தீத்தொழில், உணவு பாதுகாப்பின்மை, நிதிசார் குற்றச் செயல்களுக்கு இடமளித்து சட்டத்தின் ஆட்சியை சிதைத்துள்ள நிலைமையிலிருந்து மீட்டெடுத்து நாட்டை கட்டியெழுப்ப எங்களுடைய தனித்துவமான திறமைகளை ஈடுபடுத்த மிகுந்த ஆர்வத்துடன் அணித்திரண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 04 ஆம் திகதி இளைப்பாறிய முப்படையினரின் தேசிய மாநாடு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலிலும் இருக்கின்ற இலங்கையர்களுக்கு ஒரு விசேட செய்தியை கொடுப்பதற்காகவே நடாத்தப்படுகின்றது. முதலாவது கோபுரமாக இளைப்பாறிய முப்படை கூட்டமைவும் அடுத்த கோபுரமாக இளைப்பாறிய பொலிஸ் கூட்டமைவும் உள்ளிடங்கியதாக அனைத்துத்துறைகளையும் சோ்ந்த தொழில்வாண்மையாளர்களையும் தலைசிறந்தவர்களையும் பங்கேற்க செய்வித்துக் கொண்ட மக்கள் ஆட்சியொன்றினை பெற்றுக் கொள்வதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலில் மகத்தான வெற்றியை அடைய நாம் அனைவரும் அணிதிரண்டிருக்கிறோம்.
“ஊழலற்றத்தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்”
-இளைப்பாறிய றியர் அத்மிரால் பிரெடி செனவிரத்ன-
நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்து செயலாற்றுதல் சம்பந்தமாக எம்முடன் இருந்த ஒரு சிறிய குழுவினர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள். அனைவரும் அறிந்தவாறே இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களும் தாம் விரும்பிய அரசியல் கட்சியுடன் இணைந்து செயலாற்றுவதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்கள். வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த விதமான விமர்சனமும் கிடையாது. எனினும் அதிட்டனவுடன் இணைந்துள்ள நாம் எவரும் முனைப்பான சேவையின் போது அரசியலுடன் தொடர்புபட்டிருந்தவர்களல்ல. இடம்பெறுகின்ற சமூக அநீதி தொடர்பிலே சமூகத்திற்காக ஆற்றுகின்ற அரும்பணி என்ற வகையிலேயே நாங்கள் இளைப்பாறி பல வருடங்களுக்கு பின்னர் இந்த அரசியல் இயக்கத்துடன் இணைந்திருக்கிறோம். இந்த நாட்டை இதுவரை ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் மரமும் பட்டையும்போல் பிணைந்து ஊழல் மிக்க அரசியல் கலாச்சாரத்தை பேணி வந்தார்கள். இந்த நிலைமையிலிருந்து ஊழலற்றத் தன்மையை நிரூபித்துள்ள தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும். நடப்பு தேவை என்ற வகையிலும் தேசிய அரும்பணி என்ற வகையிலும் இளைப்பாறிய முப்படை கூட்டமைவினை நிறுவி தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம்.
“அரசியலுக்கு நன்மதிப்பினை கொண்டுவரக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் திசைக்காட்டி மாத்திரமே”
-இளைப்பாறிய எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த்தா-
நான் இளைப்பாறிய வான்படை உத்தியோகத்தராக முன்னர் முப்பது வருடகால யுத்தத்திற்கு முடிவுகாண்பதற்காக முனைப்பாக பங்களித்த ஒருவனாவேன். எனது சமக்காலத்தவர் அனைவரும் உயர்ந்த அர்ப்பணிப்புடன் உயிரை பணயம் வைத்து தாய் நாட்டு அவசியமான சமாதானத்தை பெற்றுக்கொடுக்க பங்களிப்புச் செய்தார்கள் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் குடிமக்களை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோருக்கு உயிர்களை இழக்கச் செய்வித்த பெருந்தொகையான வளங்களை அர்ப்பணித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இயலுமாற்று. நாங்கள் அதற்காக உன்னதமான நோக்கத்தை மனதில் வைத்துக்கொண்டே செயலாற்றினோம். நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான அமைதியான சுற்றுச்சூழலையும் முன்னேற்றத்தையும் பெற்றுக்கொள்ள கடந்த 15 வருடங்களில் செயலாற்றுவதற்கு பதிலாக கடன்களை மீளச்செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக எமது நாடு மாற்றப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் கூட ஜனநாயகத்தை ஒருபுறம் ஒதுக்கித்தள்ளிவிட்டு மேற்கொண்டு வருகின்ற அரசியல், சட்டவிரோதமான செல்வத்தை திரட்டுகின்ற வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது. நாங்கள் எவருமே அருவருக்கின்ற இந்த அரசியல் முறைமையை மாற்றியமைத்து கௌரவமான அரசியலைப் போன்றே அரசியல்வாதிகளுக்கு நன்மதிப்பினை ஏற்படுத்தக்கூடிய ஒரே அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். நாங்கள் தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். எங்களுடைய இரண்டாவது தேசிய மாநாட்டில் பங்கேற்குமாறு இளைப்பாறிய வான்படை அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.