Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“தேர்தலுக்காக நிறைவேற்று அதிகாரத்தை முறைகேடாக பாவிப்பதை தடுக்கவேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.” -தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024.07.19-)

npp-press-sunil

கடந்த 17 ஆந் திகதியிலிருந்து சனாதிபதி தேர்தலுக்காக செயலாற்றுவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்தபோதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக சனாதிபதி அதிகாரம், உத்தியோகத்தர்கள், பொதுப்பணம் செலவிடப்பட்டு பல்வேறு கருத்திட்டங்கள் இடையறாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரச நிதிகளின் முறைகேடான பாவனையை தடுத்து உண்மையான மக்கள் அபிப்பிபராயம் சித்தரிக்கப்படுவதற்கான ஊழல்மிக்க முறைமையில் மாற்றமொன்றைக் கொண்டுவருவதற்காகவே 2022 போராட்டத்தின்போது மக்கள் வீதியில் இறங்கினார்கள். எனினும் இன்றும் சிதைந்துபோன ரணிலின் பிம்பத்தைக் கட்டியெழுப்புவதற்காக கருத்திட்டங்கள் அமுலாக்கப்பட்டு வருகின்றன. சமுதாய பொலிஸ் குழுக்களை அரசியலாக்குகின்ற நோக்கத்துடன் ஒன்றுசேர்த்து வருகிறார்கள். இந்த கூட்டங்களுக்காக பொலி்ஸ் வெகுமதிகள் நிதியத்தை முறைகேடாக பாவிப்பதோடு சுற்றறிக்கைகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தை ஈடுபடுத்துவதற்காக வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளின் நிதியங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு மேலதிகமாக இளைஞர் அலுவல்களுக்காக பணம் கிடையாதெனக் கூறுகின்ற அதேவேளையில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணத்தை பலவிதங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளக்காக பிரயோகித்து வருகிறார்கள்.

நிதிசார் முறைகேடான பாவனையைத் தடுப்பதற்காக விரிவான மக்கள் அபிப்பிராயமொன்று அவசியமாகின்றது. ஏறக்குறைய 200 கோடி ரூபா பணத்தை சனாதிபதி செலவுத் தலைப்பிலிருந்து ஒதுக்கி சட்டபூர்வ உத்தரவாதமற்ற உறுதிகளை வழங்குகின்ற வைபவங்களை நடாத்தி வருகிறார்கள். வருடத்தின் தொடக்கத்தில் சனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தொகையைவிட பெருமளவிலான பணத்தை குறைநிரப்பு மதிப்பீடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதோடு வேறு செலவுத் தலைப்புகளைக்கூட பாவிக்கின்ற முன்மொழிவுகள் பாராளுமன்றத்தில் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளன. 2024 சனாதிபதி செலவுத் தலைப்புக்காக 6607 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கையில் மேலும் 8758 மில்லியன் ரூபாவை ஒதுக்கிக்கொண்டு தேர்தல் செயற்பாங்கிற்காக ஈடுபடுத்தி இருக்கிறார்கள். இன்னமும் ஒரு வேட்பாளராக உத்தியோகபூர்வமாக பெயர்குறிக்கப்பட்டிராத நிலைமையின்கீழ் பொதுப்பணத்தைப்போன்றே உத்தியோகத்தர்களையும் ஈடுபடுத்தி உள்ளார்கள். தேர்தல் சம்பந்தமாக திகதியொன்று ஆணைக்குழுவினால் பிரகடனஞ் செய்யப்பட்ட பின்னர் அதிகாரத்தை துர்ப்பிரயோகம்செய்து பிரச்சார அலுவல்களுக்காக ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள். அதற்கெதிராக மக்கள் மற்றும் அரசியல் கட்சி என்றவகையில் நாங்கள் இடையீடு செய்வதோடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பாரிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

npp-press-sunil

“பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான இரண்டு கோப்புகள் இருக்கின்றன என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

தேர்தல் நெருங்கும்பொதது அரச வளங்கள் முறைகேடாக பாவிக்கப்படுவதைப்போன்றே அரச சொத்துக்களை சொச்சத்தொகைக்கு விற்றுத்தீர்த்து கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளித்தும் வருகிறார்கள். இன்று இந்த நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகமடக்கல் பிரிவைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்கள். தமது பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்வதற்காக வந்த 3000 இற்கு மேற்பட்ட பிரிவினர் அலுவலகத்திற்கு முன்னால் குழுமியிருக்கையில் அதனை ஒன்லயின் திட்டத்தின்படி பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்கள். அதனோடு தொடர்புடைய உள்ளக சுற்றுநிருபம் கடந்த 17 ஆந் திகதியன்றே வெளியிடப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் ஒன்றை வழங்குவதற்காக இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது சம்பந்தமாக கண்டறிகையில் பாஸ்போர்ட் சேவையை வழங்குதல் டெண்டர் அழைப்பித்து ரணில் விக்கிரமசிங்காக்களின் நண்பரொருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறுபுறத்தில் விமான நிலையத்தில் வீசா வழங்குதலை கூட்டாளிகளுக்கு பெற்றுக்கொடுத்தலுக்காக செயலாற்றிய விதத்தை நாங்கள் அண்மையில் கண்டோம். நாட்டின் வளங்களை தமது கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதில் காட்டுகின்ற வேகத்தை நிக்கவரெட்டியவில் கால்நடைவளப் பண்ணையை கையளிக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்ற முயற்சியூடாக கண்டுகொள்ளலாம். ,எனினும் பிரதேச செயலாளர் பண்ணையின் ஊழியர்கள் வெளிக்காட்டியுள்ள எதிர்ப்பினை பொருட்படுத்’தாமல் பிரதான வீதியை நோக்கியதாக இருக்கின்ற 20 ஏக்கர் காணியை 30 வருடக் குத்தகைக்கு ரூபா 60,000 இற்கே வழங்கியுள்ளார். கால்நடைவள பண்ணை உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்திருக்கையில் இந்த பண்ணையில் 1000 ஏக்கர் காணியில் 20, 25 ஏக்கர் காணித்துண்டங்கள் என்றவகையில் துண்டாடி நண்பர்களுக்கு வழங்குகின்ற செயற்பாங்கு தொடங்கப்பட்டுள்ளது. சனாதிபதி செயலாளர் அலுவலகத்திலிருந்து கிடைத்த பணிப்புரையின்பேரில் தேர்தலுக்கு முன்னராக காணிக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதைப்போலவே பொலநறுவை நகர மத்தியில் இருக்கின்ற ஐந்து கோடி ரூபா மதிப்பீட்டுப் பெறுமதிகொண்ட 40 பர்ச்சஸ் காணியை இரண்டு கோடி ரூபாவிற்கு புதிய மதிப்பீட்டு அறிக்கையொன்றைப் பெற்று நண்பரொருவருக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.

சதொசவிற்குச் சொந்தமான 100 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 51 ஐ தமது நண்பர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையை அர்ஜுன் அலோசியஸ் போன்றோர் அமுலாக்கி வந்தார்கள். நாங்கள் அதனை அம்பலமாக்கியதால் தற்காலிகமாக நிறுத்தி சதொச களஞ்சியங்களை தமது அன்பர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். மக்கலம் வீதியின் வாகனத் தரிப்பிடத்தை ஒரு இலட்சம் ரூபா வீதம் குத்தகைக்கு விட தயாராகி வருகிறார்கள். நுவரெலியா வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள சதொசவிற்குச் சொந்தமான பங்களாவை 05 இலட்சம் ரூபா மதிப்பீடு இருக்கையில் கூட்டாளிகளுக்கு ஒரு இலட்சத்து பதினையாயிரம் ரூபாவிற்கு வாடகைக்குக் கொடுக்க தயார் செய்திருக்கிறார்கள். தொழில் அமைச்சின் வெளிநாட்டுத் தொழில்கள் சம்பந்தமான பகுதியை மாத்திரம் அமைச்சரின் அலுவல்களுக்காக முனைப்பானதாக்கி இருக்கிறார்கள். “வெற்றிபெறுவோம் ஸ்ரீலங்கா” எனும் பிரச்சார வேலைத்திட்டம் இன்றளவில் 22 நகரங்களில் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டுத் தொழில்களுக்காக புறப்பட்டுச் சென்றவர்களின் எண்ணிக்கையைவிட இந்த பிரச்சார வேலைத்திட்டத்திற்குள்ளே வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. எனினும் இந்த கண்காட்சியொன்றுக்காக 200 இலட்சம் ரூபா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணம் செலவிடப்படுகின்றது. எந்தவிதமான டெண்டர் நடைமுறைகளுமின்றி அமைச்சரின் நண்பரொருவருக்கு இந்த கண்காட்சி கூடங்களை அமைப்பதற்காக ரூபா 200 இலட்சம் வீதம் வழங்கப்படுகின்றது. ஏற்கெனவே 4400 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுவிட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுமக்ககள் பாதுகாப்பு அமைச்சின் சமுதாய பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைத்தியசாலைகளில் 75 அத்தியாவசியமான ஔடத வகைகள் இல்லாத பின்னணியிலேயே மக்களின் நலன்கருதி செலவிடவேண்டியுள்ள பணத்தை இவ்விதமாக தனது பிரச்சார வேலைகளுக்காக ஈடுபடுத்தி வருகிறார்கள். பல பாடசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள பின்னணியிலாகும். தேர்தலைக்கண்டு அஞ்சியுள்ள ஆட்சியாளர்கள் பொதுப்பணத்தை இவ்விதமாக பாவிப்பதை தடுக்க அவசியமான அதிகாரத்தைப் பிரயோகிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வலியுறுத்திக் கூறுகிறோம். ரணில் விக்கிரமசிங்க சட்டத்துறை தலைமை அதிபதிக்கு அறிவுறுத்தல் வழங்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்ற குற்றப்பகர்வு சம்பந்தமான 31 கோப்புகளை கடந்த காலத்தில் அகற்றிக்கொண்டுள்ளார். எனினும் இந்த தருணத்திலும் பொலநறுவை பண்ணையினதும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினதும் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றிய தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அது சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படுமென்பதோடு மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான இரண்டு கோப்புகள் இருக்கின்றன என்பதை ஞாபகப்படுத்துகிறேன். அதற்கு மேலதிகமாக கடந்த காலத்தில் நாங்கள் முன்வைத்த ஊழல், மோசடிகள் அனைத்தும் தொடர்பிலான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முறைப்படி மேற்கொள்ளுமென்பதை வலியறுத்துகிறோம்.

npp-press-sunil

“ராஜபக்ஷாக்களின் அயோக்கியத்தனமான அரசியல் கலாச்சாரத்தையே ரணிலும் முன்னெடுத்து வருகிறார்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டாக்டல் நளிந்த ஜயதிஸ்ஸ-

ராஜபக்ஷாக்களின் அசிங்கமான, அயோக்கித்தனமான அரசியல் கலாச்சாரத்தையே தானும் முன்னெடுத்து வருவதை ரணில் விக்கிரமசிங்க இன்றளவில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். 2014 இல் ராஜபக்ஷாக்கள் தொலைத் தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் பணத்தை பாவித்து சில் அனுட்டிப்பதற்கான புடவைகளை பகிர்ந்தளிப்பதில் முதன்மையாக செயலாற்றிய உத்தியோகத்தர்களுக்கு மேல்நீதிமன்றம் தண்டனை வழங்கியதென்பதை ரணில் விக்கிரமசிங்க மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களின் கடுமையான எதிர்ப்பு நிலவுகின்றது. எதுவுமே செய்ய முடியாத பின்னணியிலேயே உத்தியோகத்தர்கள் அதில் பங்கேற்கிறார்கள். இது சம்பந்தமாக விழிப்புடன் இருந்து தேர்தலில் சரியான பதிலடி கொடுக்குமாறு நாங்கள் மக்களை வலியுறுத்துகிறோம்.