Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“சமூக மாற்றத்திற்காக புரிந்த போராட்டத்தை பூர்த்தி செய்து கொள்ள ஜனாதிபதி தோ்தலை ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொள்ளுங்கள்.” -மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா-

(-தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பு – 2024-07-17-)

npp-press-presidential-election

இன்றைய தினம் எமது நாட்டுக்கு ஒரு முக்கியமான நாளாகும். ஜனாதிபதி தோ்தலை நடத்துவதற்காக தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு திகதியை விதிப்பதற்கான அதிகாரம் 17 ஆம் திகதியாகிய இன்றைய தினமே கிடைக்கிறது. தோ்தல்கள் ஆணைக்குழு தனக்கு கிடைக்கின்ற சட்ட ஏற்பாடுகளுக்கு இணங்க தோ்தலை நடத்துவதற்காக அண்மித்த தினமொன்றை பிரகடனம் செய்யுமென நாங்கள் நினைக்கிறோம். அதிகாரத்தில் இருக்கின்ற குழுக்களால் தோ்தல் பற்றிய சந்தேகமொன்று கிளப்பப்பட்டுள்ளது. ஆணைக்குழுவும் கால அவகாசம் எடுத்துக்கொள்ளுமா என்றே மக்களும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணைக்குழு சீக்கிரமாக ஒரு தினத்தை பிரகடனம் செய்து இந்த சந்தேகத்தை போக்குமென்று நாங்கள் நினைக்கிறோம்.

1982 இலிருந்து பல ஜனாதிபதி தோ்தல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அந்த அனைத்து ஜனாதிபதி தோ்தல்களையும் விட இந்த தோ்தல் தனித்துவம் பெறுகின்றது. எமது நாட்டில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை கைவிட்டுச் சென்று அந்த வெற்றிடத்தை நிரப்ப வேறொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது அதன் பின்னர் நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தோ்தலாகும். கடந்த காலத்தில் பாரிய மக்கள் போராட்டமொன்று நிலவியது. கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் நாடு அராஜகம் அடைந்து, மக்கள் வரிசைகளில் மடிந்து, மக்கள் பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில், மக்கள் வீதியில் இறங்கி பிரமாண்டமான போராட்டத்தை நடத்தினார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியையும் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியையும், பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவிகளையும் கைவிட்ட நிலையிலேயே போராட்டம் முற்றுப்பெற்றது. அவர்கள் அமைச்சுப் பதவிகளை கைவிட்டு மக்கள் ஆணையற்ற ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மக்கள் ராஜபக்ஷ ஆட்சியை இல்லாதொழித்து புதிய மாற்றமொன்றையே எதிர்பார்த்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் நோக்கங்கள் ஈடேறவில்லை. அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதற்காக கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பு தான் இந்த ஜனாதிபதி தோ்தல். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த போராட்டத்தின் முடிவினை காணவேண்டிய தேவையுடையவர்களாக இருக்கிறார்கள். இங்கே இருக்கின்ற மூர்க்கமான ஆட்சியாளர்களை மாற்றியமைத்து தமக்கு மிகவும் சிறந்த ஆட்சியொன்றை அமைத்துக்கொள்வதற்கான தேவை நிலவுகின்றது.

மறுபுறத்தில் பார்த்தால் எமது நாட்டை ஆள்பவர் மக்கள் ஆணையற்ற ஒருவராவர். அவரை ராஜபக்ஷாக்களின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் வாக்குகளால் ஜனாதிபதியாக நியமித்துக் கொண்டார்கள். மக்கள் போராடியது ராஜபக்ஷாக்களை ரணில் விக்கிரமசிங்காகக்களை தோற்கடிப்பதற்காகும். 2019 இல் ரணிலை தோற்கடிப்பதற்காகவே மக்கள் வாக்குகளை அளித்தார்கள். அந்த வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ஷாக்கள் எஞ்சிய காலத்திற்காக ரணிலை ஜனாதிபதியாக்கிக் கொள்கிறார்கள். தற்போதுள்ள பாராளுமன்றம் மக்களின் ஆணை பிரதிநித்துவம்படுத்தப்படாத திரிபு நிலையடைந்த ஒரு பாராளுமன்றமாகும். ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதனால் மக்களுக்கு மக்கள் ஆணையால் நியமித்துக் கொள்ளப்படுகின்ற ஒரு ஜனாதிபதி தேவை. அதனால் ஜனாதிபதி தோ்தல் மிகவும் தனித்துவமான ஓர் இடத்தை வகிக்கிறது. புதிய பயணப்பாதையில் பிரவேசிக்க, புதிய ஆட்சிப் பொறிமுறையொன்றை கட்டியெழுப்பிக்கொள்ள இந்த ஜனாதிபதி தோ்தல் மூலமாகவே வாய்ப்பு கிடைக்கின்றது. அதனால் மக்கள் தமது கருத்தினை வெளிப்படுத்த தோ்தல் வரும்வரை பொறுமையை இழந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதாவது தமது எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்காகவே.

எமது மக்கள் பெருந்தொகையினராக வீதியில் இறங்கி பிரமாண்டமான அமைதிவழிப் போராட்டமொன்றை நடாத்தி சமூக மாற்றமொன்றுக்கான போராட்டமொன்றை முழுநிறைவு செய்வதற்கான, புதிய ஆட்சியொன்றை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கின்ற வாய்ப்பே இந்த ஜனாதிபதி தோ்தலாகும். அதனால் எல்லா கோணங்களிலும் தனித்துவமும் முக்கியத்துவமும் வகிக்கின்ற ஒரு தோ்தலாகும். மற்றைய தனித்தன்மை என்னவென்றால் இந்த நாட்டிலே மிக அதிகமான இடையூறுகள் நிலவிய தோ்தலாகும். இதற்கு முன்னர் மக்கள் தோ்தலை விரும்பாத தருணங்களில் ஆட்சியாளர்கள் மிகுந்த ஆசையுடன் தோ்தலை நடத்தினார்கள். எனினும் இத்தடவை மக்கள் தோ்தல் வரும்வரை ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்களோ தோ்தலைக் கண்டு பயந்துபோயிருக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க வந்து கடனை மீளச்செலுத்தாதிருந்து கடனை மீளச்செலுத்தாத அனுகூலத்தைக் கொண்டு வரிசைகளை குறைத்த பின்னர் அவரே தன்னை நாட்டைக் கட்டியெழுப்பிய நாயகனாக வர்ணித்துக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற வேளையில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச படுகடன் 83 தொடக்கம் 84 பில்லியன் டொலர் வரை இருந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இந்த வருடத்தின் மார்ச் மாதமளவில் ஒட்டுமொத்த அரச படுகடன் 100.2 பில்லியன் டொலர்கள் என மத்திய வங்கி அறிக்கைகளில் கூறப்படுகின்றது. எமது மக்கள் மீது கட்டுக்கடங்காத வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வருமானம் பெறுகின்ற தொழில் புரிகின்றவர்கள் மீது மட்டற்ற வரி விதிக்கப்பட்டது. இந்த நிலைமையை அவ்விதமாக மக்களின் கழுத்தை நெரித்தே அமைத்துக் கொண்டார்கள். ரணில் விக்கிரமசிங்க நாட்டை கரைசோ்க்கவில்லை. அவரால் வெற்றிபெற முடியுமென அவர் நினைத்தாலும் கால ஓட்டத்தில் வெற்றிபெற முடியாதென்பதை அவர் விளங்கிக் கொண்டார். அதனால் ஜனாதிபதி தோ்தலை தவிர்த்துச் செல்ல முயற்சி செய்தார். அதனால் முதலில் நிறைவேற்று ஜனாதிபதி பதவியை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தாலும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு அஞ்சுபவர் என்பதால் மகிந்த ராஜபக்ஷாக்கள் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னர் பொதுத்தோ்தலை நடாத்த முயற்சி செய்தார்கள். அந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தனது கையாட்களைக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு மேலும் சில வருடங்கள் பதவியிலிருக்க வாய்ப்பினைக் கொடுப்போம் என முன்மொழிந்தார்கள். ரங்கே பண்டார மக்கள் தீர்ப்பொன்று மூலமாக மேலும் இரண்டு வருடங்கள் இடமளிக்கவேண்டுமென ஒரு முன்மொழிவினை கொண்டுவந்தார். அந்த முன்மொழிவு மீது பாரிய தாக்குதல் இடம்பெற்றது. தோ்தலுக்குச் செல்லாமல் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் பதவியில் வைத்துக்கொள்வதற்காக அதன் பின்னரும் பல்வேறு முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டன.

npp-press-presidential-election

ஜனாதிபதி தோ்தலை நடத்தி தோல்வி கண்ட பின்னர் ரணில் வீட்டுக்கு செல்லவேண்டும். ஜனாதிபதி பதவியின் அதிகாரம் காரணமாக அவரை சுற்றியிருந்து கொண்டு பலவிதமான சிறப்புரிமைகளையும் பதவிகளையும் எடுத்துக் கொண்டு வசிக்கின்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள். ஆலோசகர் பதவிகள் பறிபோய்விடும். அவர்களிடம் பாரிய அச்ச உணர்வு தோன்றியுள்ளது. பொதுப்பணத்தில் மேலும் ஓரிருவருடங்கள் உயிர்வாழ அவர்கள் விரும்புகிறார்கள். அதன் பின்னர் அரசியலமைப்பின் ஓட்டைகளில் நுழைந்து செல்ல முடியுமா என முயற்சி செய்தார்கள். அதற்கான தான் 05 வருட காலப்பகுதியை 06 வருடங்கள் வரை நீடித்துக்கொள்ள முடியுமா என்பதை பார்க்க பல்வேறு முயற்சிகளை செய்தார்கள். அதில் ஒன்றுதான் லேனவ என்பவரால் உயர் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்த மனு. அதன் பெறுபேறு யாதெனில் மனு தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமையாகும். மற்றுமொரு சட்டத்தரணி அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானதென சுட்டிக்காட்டி தோ்தலை நிறுத்துவதற்கான மனுவொன்றை சமர்ப்பித்தார். உயர்நீதிமன்றம் அந்த மனுவையும் தள்ளுபடி செய்து ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதித்தது. இந்த ஆட்சிக்குழு ரணில் விக்கிரமசிங்காக்கள் மகிந்த ராஜபக்ஷாக்கள் எதிர்நோக்குகின்ற மிகவும் வெறுக்கின்ற தோ்தல் தான் ஜனாதிபதி தோ்தல். இது தோ்தலை தடுக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து நடத்தப்படுகின்ற விசேடமான தோ்தலாகும். இன்னமும் மக்கள் மத்தியில் ஒரு ஐயப்பாடு நிலவுகின்றது. இன்னமும் அமைச்சரவை அங்கீகரித்த அரசியலமைப்பு திருத்தமொன்று இருக்கிறது. அது பயனுள்ளதாக அமையாவிட்டாலும் இன்னமும் வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். நிலவுகின்ற சட்டத்திற்கிணங்க அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தோ்தலை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழி கிடையாதென்பது எங்களுக்கு தெரியும்.

இன்று முதல் ஜனாதிபதி தோ்தலை நடத்துவதற்கான பொறுப்பு இருப்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ அரசாங்கத்திற்கோ அல்ல; தோ்தல்கள் ஆணைக்குவிற்காகும். ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி தோ்தலை அறிவிப்பதற்கும் தோ்தலை நடாத்துவதற்குமான அதிகாரம் கையளிக்கப்படுகின்றது. எம்மைப்போன்ற ஒரு நாட்டில் மக்கள் தோ்தல் மீது நம்பிக்கை வைப்பதாயின், ஜனநாயக ரீதியாக ஆட்சிகளை மாற்ற முடியுமென்ற கருத்து சமூகத்தில் நிலவ வேண்டுமானால் இவர்கள் புரிகின்ற அசிங்கமான வேலைகளை நிறுத்தவேண்டும். இந்த ஐயப்பாட்டு நிலையை ஒழித்துக்கட்டவேண்டும். தோ்தல் நடைபெறமாட்டாது எனும் கருத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தற்போது தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இருக்கிறது. நாங்கள் தோ்தல்கள் ஆணைக்குழுவிடம் தமது அதிகாரத்திற்கிணங்க தினத்தை பிரகடனப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். தோ்தல்கள் ஆணைக்குழு பற்றியும் சமூகத்திலே ஒரு சந்தேக நிலை நிலவுகின்றது. அது தான் ரணில் விக்கிரமசிங்காக்கள் உள்ளூர் அதிகார சபை தோ்தலை பிற்போட்டதும் அதனை நடாத்த ஆணைக்குழுவிற்கு இயலாமல் போயிற்று. ஆணைக்குழு ஒரு விதத்திலான முயற்சியை எடுத்தது. எனினும் உச்சளவிலான முயற்சியை எடுக்கவில்லை. சமூகத்திலே ஆணைக்குழு பற்றி நிலவுகின்ற கருத்தினை மாற்றிக்கொள்ளவில்லை. ஆணைக்குழு மக்களுக்காகவும் சனநாயகத்திற்காகவுமே தோற்றுகிறது. தோ்தல்கள் ஆணைக்குழு தோ்தலை பிற்போடுகின்ற ஓர் ஆணைக்குழுவல்ல. தோ்தலை நடாத்துகின்ற ஆணைக்குழுவாகும். எனவே “தோ்தலை நடாத்த நாங்கள் தயார். எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் கிடையாது” என்று சுயாதீனமாக செயலாற்றுகின்ற ஓர்ஆணைக்குழுவாக செயற்பட்டு தோ்தலுக்கான தினத்தை அறிவிக்கவேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தோ்தல்கள் ஆணைக்குழு இந்த நாட்டின் அரசியல் அமைப்பிற்கு, நாட்டு மக்களுக்கே பொறுப்புக்கூறவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு, மகிந்த ராஜபக்ஷாவிற்கு, சஜித் பிரேமதாசவிற்கு அல்லது எமக்குக்கூட பொறுப்புக்கூறவேண்டியதில்லை.

ரணில் விக்கிரமசிங்க “ஒரு கேம் அடித்து இந்த தோ்தலை நடத்தாதிருப்பார்” என்கின்ற கேலிக்கூத்தான கருத்தியலை தொடர்ச்சியாக சமூகத்தில் பேணிவந்தார்கள். ரணில் சரியாக முடிச்சு போடுபவர் என்றால் இதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே தோ்தலை நிறுத்தியிருக்க வேண்டும். அவர் தோ்தலை நிறுத்துவதற்கான எல்லா தில்லுமுல்லுகளையும் செய்து விட்டு தோல்வி கண்டிருக்கிறார். இது ஒரு யுக மாற்றமாகும். நாங்கள் ஒரு யுகத்திலிருந்து அதை விடச்சிறந்த முறைமையொன்றுக்கு மாறப்போகின்ற தருணமாகும். ஆளுங்குழுக்கள் சதாகாலமும் தோ்தலை நடத்தாதிருக்க முயற்சி செய்கின்றன. மறுபுறத்திலே அச்சுறுத்தல்களையும் மேற்கொள்கிறார்கள். வீம்பு வார்த்தைகள் பேசுகிறார்கள். நிஸ்ஸங்க சேனாதிபதி அநுரவை தோல்வியடைச் செய்விப்பதற்காக கோடிக்கணக்கில் செலவிட தயார் எனக்கூறினார். இப்போது அவர் இருக்குமிடம் தெரியவில்லை. லொஹான் ரத்வத்தே உயிருடன் இருக்கும்வரை “அநுரவை ஜனாதிபதியாக்க இடமளிக்க மாட்டேன்” எனக்கூறுகிறார். மக்களின் விருப்பத்தையும் மக்களின் பலத்தையும் மாற்றியமைக்க வீண் வார்த்தை பேசுபவர்களால் முடியாது. இப்பொழுது மலர்ந்து வருவது மக்களின் விருப்பமாகும். 76 வருடகால மூர்க்கத்தனமான அயோக்கியத்தனமான ஆட்சியை வெறுத்து, அல்லற்பட்ட மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அந்த மாற்றத்தை பெற்றக்கொள்வதற்கான மிகச்சிறந்த இடம் தேசிய மக்கள் சக்தியே என மக்கள் நினைக்கிறார்கள். எம்மோடு மக்கள் இணைகிறார்கள். அச்சுறுத்தல்விடுத்து பொய்கூறி பணத்தை செலவிட்டு அதனை நிறுத்திவிட முடியாது. இறுதியிலாவது தாம் சனநாயக ரீதியாகிவிட்டோம் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக அந்த அபிப்பிராயத்திற்கு தலைசாய்த்து ஜனாதிபதி தோ்தலை நடாத்தி மக்களின் விருப்பத்துடனான ஒருவரை நியமித்துக்கொள்வதே தற்போது இடம்பெறவேண்டும். கட்டாயமாக இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்பட்டே ஆகவேண்டும்.

நாங்கள் மக்களுக்கு கூறுவது ஜனாதிபதி தோ்தல் கட்டாயமாக நடாத்தப்படும். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஜனாதிபதி தோ்தலை நாட்டுக்கு புதிய யுகமொன்றை, மக்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புகின்ற, வீழ்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற, வறுமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கின்ற, மறுமலர்ச்சியை உருவாக்குகின்ற ஆட்சியொன்றுக்கான அடித்தளமிடுகின்ற தோ்தலாக அமைத்துக்கொள்ள வேண்டும். இதுவரை இருந்த கனவினை நனவாக்கிக் கொள்ள முன்வாருங்கள். நிலவுகின்ற இந்த விசேட நிலைமைகளை சரிவர விளங்கிக் கொண்டு தமது பொறுப்பினை வெகுவிரைவில் ஈடேற்றுமாறு தோ்தல்கள் ஆணைக்குழுவிடம் நாங்கள் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

npp-press-presidential-election

“ஆணைக்குழு தொடர்பிலான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதற்கான இயலுமை தோ்தல்கள் ஆணைக்குழுவிடமே இருக்கின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க-

இன்று எமது நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு நாளாகும். ஜனாதிபதி தோ்தலை நடாத்துதல் பற்றிய திகதியை பிரகடனம் செய்து அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கிறது. தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அது பற்றி ஞாபகப்படுத்தவும் தோ்தல்கள் ஆணைக்குழு பற்றிய மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்குமான இயலுமை தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கே இருக்கின்றது. தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கின்ற அதிகாரத்துடன் ஜனாதிபதி தோ்தல் நடாத்தப்படுகின்ற தினத்தை விரைவில் அறிவிக்குமென நாங்கள் நினைக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆட்சியாளர்கள் மிகவும் நிர்க்கதிநிலையுற்று, அச்சமடைந்து, பதற்றமடைந்துள்ளார்கள். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் எனவும் தோ்தலை விரைவாக நடத்தவேண்டுமெனவும் நீதிமன்றம் திட்டவட்டமான தீர்மானத்துடன் இருக்கின்றதென்பது தோ்தலை நடத்துவதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை மூலமாக தெளிவாகிவருகின்றது. சீக்கிரமாக தோ்தலை நடாத்துவதற்கான தினத்தை பிரகடனம் செய்யுமாறு நாங்கள் தோ்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தோ்தலை இலக்காகக் கொண்டு அஸ்வெசுமவை பெற்றுக்கொடுக்க, இளைப்பாறிய இராணுவ அங்கத்தவர்களுக்கு புதிய கவனிப்புகளை கொடுக்க, புலமைப்பரிசில்களை உருவாக்கிட ஜனாதிபதி நிதியத்திலிருந்து பல்வேறு நோய்களுக்கு நிதியுதவி வழங்க முயற்சி செய்கிறார். இதுவரை ஆளும் வர்க்கங்கள் அனைத்தும் தோ்தல்களை இலக்காகக்கொண்டு புரிந்த செயற்பாங்கினையே அவரும் செய்கிறார். இவை மூலமாக மக்களை ஏமாற்ற முடியுமென ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இந்த நேரத்திலேயே மக்களை தவறாக வழிநடத்துகின்ற மக்கள் கருத்துக்கணிப்பு, ஊடக களியாட்டங்கள், நாளுக்குநாள் புதிய செய்தியொன்றை கொண்டுவந்து மக்களின் மனதை குழப்பியடித்து வழமைப்போல மக்களின் அபிப்பிராயத்தை மாற்றியமைத்து அதிகாரத்தை தம்வசம் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாங்கில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் சரியாக நாட்டை ஆட்சி செய்திருப்பின் இந்த நாடு வங்குரோத்து அடைந்திருக்கமாட்டாது. இவர்கள் அதிகாரத்தின் மீதுள்ள பேராசையையே வெளிக்காட்டுகிறார்கள். இதுவரை புரிந்த திருட்டுக்கள் ஊழல்கள் அம்பலமாவதை தடுக்கும் நோக்கத்துடன்தான் மக்கள் மனதை திரிபுபடுத்தி தோ்தல் பெறுபேறுகளை மாற்றியமைக்க முயற்சி செய்கிறார்கள். எமது நாட்டை வங்குரோத்து அடையச் செய்விக்க காரணமாக அமைந்த அனைவரும் ஒன்று சோ்ந்து தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புகின்ற அரசியல் இயக்கம் அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் விவேகமான தீர்மானமொன்றை மேற்கொள்ள தயார். ஜனாதிபதி தோ்தலின் போது மக்கள் இந்த ஊழல் போ்வழிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். கிடைக்கின்ற முதலாவது வாய்ப்பிலேயே இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். 2022 இல் மேற்கொண்ட போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூர்த்தி செய்ய மக்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை வெற்றியீட்டச் செய்வித்து நாட்டை சாதகமான திசைக்கு நகர்த்திச் செல்ல தயாராக இருக்கிறார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

npp-press-presidential-election

“ஜனாதிபதி தோ்தல் தொடர்பிலான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை ஆட்சியாளர்கள் சீக்கிரமாக வீட்டுக்குப் போக வேண்டி நேரிடும் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார-

தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி தோ்தலுக்கான திகதியை அறிவிக்கவும் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரம் கிடைத்திருக்கிறது. நடைமுறையில் இயலுமானவரை சீக்கிரமாக அதனை செய்யுமாறு நாங்கள் தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு நினைவுறுத்தல் செய்கிறோம். வேறு சந்தர்ப்பத்தில் போலன்றி மக்கள் ஜனாதிபதி தோ்தல் வரும்வரை எதிர்பார்ப்பினை சுமந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் தோ்தல் பற்றி கேட்கின்ற அளவு அதிகரிப்பதன் மூலமாக ஆட்சியாளர்கள் வெகுவிரைவில் வீடு செல்ல வேண்டி நேரிடும் என்ற விடயமே சுட்டிக்காட்டப்படுகிறது. வீட்டுக்குச் செல்லவேண்டி நேரிடும் என்பதை அறிந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மக்களின் மனதில் சந்தேகத்தையும் ஐயப்பாட்டினையும் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த ஜனாதிபதி தோ்தலை பிற்போடுவதற்கு எந்த விதமான வழிமுறையும் கிடையாதென்பதை நான் ஒரு சட்டத்தரணி என்ற வகையிலே கூறுகிறேன். ரணில் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வி கண்டுள்ளன. ரணில் என்னதான் முயற்சிகளை எடுத்தாலும் எங்கள் நாட்டின் தோ்தல்கள் சட்டங்களின்படி இந்த ஜனாதிபதி தோ்தலை பிற்போட முடியாது. அதனால் அனைவரும் அந்த ஐயப்பாட்டினை மனதிலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும்.

அதைப்போலவே சட்டமும் அரசியலும் என்பது இரண்டாகுமென நான் கூறுகிறேன். எல்லாமே சட்டத்தின்படி இடம்பெறுவதில்லை. சட்டத்தின் இலக்கண வழுக்களை பிடித்துக்கொண்டு ஆட்டம் போட்டாலும் அரசியலின் போக்கு இருப்பது வேறொரு இடத்தில் என்றால் அதுவொரு வித்தியாசமான நிலைமையாகும். இந்த மாத இறுதிக்குள் தோ்தல் திகதி தெளிவாகவே அறிவிக்கப்பட்டுவிட்டால் ரணில் விக்கிரமசிங்க ஒரு ஜனாதிபதி வேட்பாளராவார். அவர் வேட்பாளராகி தனது அதிகாரத்தை பாவித்து அவர் போட்டியிடுகின்ற தோ்தலுக்கு அழுத்தம் ஏற்படுத்துகின்ற வேலைகளை செய்வாராயின் அது எந்தளவிற்கு அரசியல் அமைப்புடன் அமைந்தொழுகுகின்றது, சட்டவிரோதமானது என்பதை நாங்கள் கேள்விக்குட்படுத்த நேரிடும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளரான பின்னர் தோ்தலுக்கு அழுத்தம் கொடுத்து எதையாவது செய்ய முற்படுவாராயின் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தயார். தெளிவாகக்கூறுவதானால் ரணிலும் முழுமையாகவே பெயில். அவர் வீட்டுக்கு போவார். அது தொடர்பில் சிக்கல் கிடையாது. தேசிய மக்கள் சக்தியின் அடிமட்டத்திலான தோழர்கள் ஐயப்பாடு கொள்ளவேண்டாம். ஜனாதிபதி தோ்தல் வரும். தத்தமது வேலைகளை உச்சமட்டத்தில் செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.