Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“அரசாங்கத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி பயப்படமாட்டாது” -தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சுனில் வட்டகல-

-2023.11.22 – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பும் அதிட்டன இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினதும் ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பு-

தேசிய மக்கள் சக்தி கடந்த காலம் பூராவிலும் கணிசமான மக்கள் வெற்றியைப்பெற்று முன்னேறி வந்துகொண்டிருக்கிறது.  இந்த சாக்கடை அரசியலில் இருந்து விடுபட்டு இந்த கேடுகெட்ட ஆட்சியை மாற்றியமைப்பதற்கான எதிர்ப்புக் கூட்டமொன்று கடந்த 18 ஆந் திகதி எதிர்ப்புப் பேரணியின் பின்னர் நடாத்தப்பட்டது. மக்கள் ஆணையற்ற ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை நலிவடையச் செய்விக்க அரசியலல்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒருசில தருணங்களில் அவை மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகும். தேசிய மக்கள் சக்தி எனும் அரசியல் இயக்கத்தைக் கட்டிவளர்க்க ஒன்றுசேர்ந்துள்ள ஏனைய அமைப்புகள் மத்தியில் “தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு” மிகப்பெரிய பணியை ஆற்றிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின்  சட்டத்தரணிகள் அமைப்பானது நாடுபூராவிலும் வியாபித்துள்ள ஓர் இயக்கமாகும். தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற அருவருக்கத்தக்க நடவடிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தவே நாங்கள் இந்த ஒருங்கிணைந்த ஊடக சந்திப்பினை நடாத்துகிறோம்.

அரசாங்கம் தத்தமக்கு பக்கச்சார்பான  பிரிவுகளைப் பயன்படுத்தி ஒருசில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. இவ்விதமாக அழுத்தம் கொடுப்பவர்களுக்கு நாங்கள் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறோம். தேசிய மக்கள் சக்தியின் இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைப்பிற்கு எதிராக புரியப்படுகின்ற அழுத்தங்கள் பற்றிய பிரச்சினையை நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்தோம். எனினும் எங்கள் இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களுக்கு முகாம்களுக்குள் பிரவேசித்தல், வருடாந்த ஒன்றுகூடல்களில் பங்கேற்ற தடைவிதித்தல்,  மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ள தடையேற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை வாய்மொழிரீதியாக மேற்கொண்டு வருகிறார்கள்.  ஊடக சந்திப்பில் பங்கேற்கின்ற திரு. சம்பத் துய்யகொன்தாவை விமானப்படையில் வாய்மொழிரீதியாக கறைநிரலில் சேர்த்தார்கள். இது  சம்பந்தமாக நாங்கள் உயர்நீதிமன்’றத்திற்கு FCR 132/2023 எனும் வழக்கினைத் தாக்கல் செய்தோம்.  தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடுசெய்யப்பட்ட கம்பஹா மாவட்டக் கூட்டமொன்றில் ஆற்றிய உரையை அடிப்படையாகக்கொண்டு கறைநிரலில் சேர்த்திருந்தார்கள். இந்த ஒட்டுமொத்த உரையையும் நாங்கள் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாத்திற்கு செவிமடுக்கச் செய்வித்தோம். கோட்டாபய ராஜபக்ஷ, சரத் பொன்சேகா, சரத் வீரசேகர, கமல் குணரத்ன போன்ற  இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்குள்ள உரிமை ஏன் திரு. சம்பத் துய்யகொன்தாவிற்கு கிடையாதெனும் பிரச்சினையை நாங்கள் உய்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். விமானப் படையின்சார்பில் தோற்றிய சட்டத்துறை தலைமைஅதிபதி திணைக்கள சட்டத்தரணியால் தனது தரப்பு தவறிழைத்துள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி நேரிட்டது.  அடுத்த வழக்கு விசாரணை 2024 சனவரி 10 ஆந் திகதியளவில் சம்பந்தப்பட்ட தடையை நீக்கி அதுபற்றி உயர்நீதிமன்றத்திற்கு எழுத்தில் அறிவிக்கவேண்டி உள்ளது. திரு. சம்பத் துய்யகொன்தாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.

அத்துடன் நின்றுவிடாமல் இந்த கூட்டமைவிற்கு ஒருசில அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறார்கள். இந்த நாட்டின் பொருளாதாரப் படுகொலைக்கு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவை, பொதுதிறைசேரியின் செயலாளர்,  மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதைப்போலவே உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் முன்னாள் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இருந்து கீழ்மட்டம் வரையானவர்களுக்கு குற்றத் தீர்ப்பளித்து நட்டஈடு செலுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளது.  இத்தகைய பின்னணியில் திரு. சம்பத் துய்யகொன்தாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும் தொடரந்தும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டே அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 14 (1) இன் கீழ்  வழங்கப்பட்டுள்ள உரிமையை அடிப்படையாகக்கொண்டே தேசிய மக்கள் சக்தியின் அதிட்டன இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றது. அந்த உரிமைமீது  சட்டரீதியாக ஆட்சேபனை விடுக்க எவருக்குமே முடியாது. 

ரணில் விக்கிரமசிங்க  நீதிமன்றம்மீது குற்றஞ்சுமத்தி தொடங்கியவிதம் எமக்கு ஞாபகம் இருக்கின்றது. ஈ.பி.எஃப் மற்றும் ஈ.ரீ.எஃப்.  வழக்குகள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க நீதிமன்றத்திற்கு முடியாதென ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதன்பின்னர் சபாநாயகரும் அதுபற்றிக் கூறினார். மூன்று கோபுரங்களில் ஒன்றுக்கு அச்சுறுத்தல்விடுத்த அவர்கள் மேற்கொண்டுவருகின்ற இந்த பயணம் அடுத்த வருடம் ஓகத்து மாதத்தில் முற்றுப்பெறும். அதற்காக பயப்பட்ட இந்த கீழ்த்தரமான அரசாங்கம் தமது பொலீஸாரைப் பயன்படுத்தி வளர்ந்துவருகின்ற எதிர்ப்பினை அடக்கியாள முற்படுகின்றது. இளைப்பாறியோர் கூட்டமைவின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு  அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் பலவிதமான தடைகளை ஏற்படுத்துகிறார்கள்.  அரசாங்கத்தின் இந்த கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு தேசிய மக்கள் சக்தி பயப்படமாட்டாது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த கூட்டமைவிற்கு எதிராகப் புரிகின்ற அனைத்துவிதமான தொந்தரவுகள் தொடர்பிலும்  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தோற்றுவார்கள். இலங்கையின் எந்தப் பிரதேசத்திலிருந்தும் இந்த கூட்டமைவிற்கு தொல்லைகள் புரிந்தாலும் நாங்கள் அத்தகைய எந்தவோர் இடத்திலும் தோற்றுவோம்.  இந்த அங்கத்தவர்களின் உரிமைகளை அரசாங்கத்தின் கோழைத்தனமான, கீழ்த்தரமான வேலைகளால்  அடக்கமுடியாதென்பதையும்  அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்துகிறோம். நாங்கள் சனநாயக சட்டகத்திற்குள்ளேயும் சட்டக் கட்டமைப்பிற்குள்ளேயும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதோடு அதற்குப் புறம்பாக எவரேனும் புரிகின்ற அழுத்தங்களுக்கு கட்டுப்படப்போவதில்லை என்பதையும் வலியுறுத்துகிறோம்.

“எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எமது நாட்டுக்காக வருங்காலத்திலும் செயலாற்றுவோம்”
-இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின்  பிரதான ஒருங்கிணைப்பாளர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர-

தேசிய மக்கள் சக்தியின் அதிட்டன இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு தறபோது பாரிய விருட்சமாக கட்டிவளர்க்கப்பட்டுள்ளது.  இந்த வருடம் பெப்புருவரி மாதம் 11 ஆந் திகதியன்று மகரகம இளைஞர் சேவைகள் மன்ற  மண்டபத்திலேயே “அதிட்டன” எனும் பெயரில் இந்த இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவு தாபிக்கப்பட்டது. நாட்டுக்கு விளைவித்துள்ள அநியாயத்தின் மத்தியில் இளைப்பாறியவர்கள் என்ற வகையில் எம்மால் பாராமுகமாக இருந்துவிட முடியாது. நாடு வீழ்த்தப்பட்டுள்ள நிலையிலிருந்து மீட்டெடுக்க இந்நாட்டின் பிள்ளைகளுக்காக நல்லதொரு நாட்டை நல்லதொரு நாளைய தினத்தை உருவாக்குவதற்காக நாங்கள் இந்த கூட்டமைவினை நிறுவிக்கொண்டோம். இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவில் இருக்கின்ற  அனைத்து அங்கத்தவர்களும்  இராணுவ, விமான, கடற்படையினர் ஆகிய முப்படையினரதும் நன்மதிப்பினை பாதுகாத்திட செயலாற்றி வருகிறார்கள். தொழில்வாண்மை மட்டத்தில் உயர்ந்த பங்களிப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவதற்காகவே நாங்கள் இந்த கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம்.   நாங்கள் சட்டபூர்வமாக செயலாற்றி வருவதோடு இந்த கூட்டமைவின் அங்கத்தவர்களுக்கு பலவிதமான வாய்மொழிரீதியான தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களின் எத்தகைய தடைகள் தோன்றினாலும் எமது அதிட்டன கூட்டமைவின் அனைத்து அங்கத்தவர்களும் மென்மேலும் முன்னணிக்கு வந்து செயலாற்றுவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். தேசிய மக்கள் சக்தி கொண்டுள்ள ஊழலற்ற, தன்னிச்சையாக அரப்பணிக்கின்ற ஆற்றலை இனங்கண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாங்கள் இந்த கட்சியுடன் இணைந்து செயலாற்றிவருகிறோம். எமக்கு எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் எமது நாட்டுக்காக தொடரந்தும் செயலாற்றுவோம் என்பதை  உறுதியாகக் கூறுகிறோம்.

“‘அதிட்டனஅங்கத்தவர்கள் வாழ்க்கையால் அல்லது மனச்சாட்சியால் ஓய்வுபெறவில்லை
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்கார –

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி அடுத்த ஆண்டில் உருவாவது பெருநிலத்தின் யதார்த்தமாக மாறியுள்ளது. அதற்காக தேர்தலைப் பிற்போட்ட அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளுக்கு எல்லாவிதத்திலும் தடைகளை ஏற்படுத்த பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு  வருகின்றது. அத்தகைய எதனாலும் எம்மைத் தோற்கடிக்க முடியாது. தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து, மக்களை ஒழுங்கமைத்து, வட்டார சபைகளை நிறுவி பாரிய சக்தியாக முன்னேறிவருகிறோம். அதேவேளையில் இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு கிராமங்கள்தோறும் வேகமாக வியாபித்து ஒன்றரை வருடங்களுக்குள்  பெருந்தொகையான அங்கத்தவர்களை சேர்த்துக்கொண்டு பலமடைந்துள்ளது. “அதிட்டன” அமைப்பினைக்கண்டு அரசாங்கம் எந்தளவிற்கு எஞ்சுகின்றது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அவர்கள் தொழிலில் இருந்து மாத்திரமே  இளைப்பாறியுள்ளார்கள் என்பதை அரசாங்கம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கையால் அல்லது  மனச்சாட்சியால் ஓய்வுபெறவில்லை. அரசியல்ரீதியாக அவர்கள் ஓய்வுபெறவில்லை. இந்த சமூகத்தை ஒழுங்கமைத்து குணப்படுத்துவதற்கான பாரிய செயற்பொறுப்பினை ஈடேற்ற அவர்கள் முன்வந்துள்ளார்கள். கடமைப் பருவத்தில் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்  இவ்விதமாக தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி குழுமியுள்ளார்கள். அவர்களுக்கு எதிராக சட்டரீதியற்றமுறையில் கொண்டுவரப்படுகின்ற எந்தவொரு  தடைக்கும் நாம் எவருமே அஞ்சப்போவதில்லை.  அரசாங்கத்தின் தேவைக்கிணங்க ஒருசில உத்தியோகத்தர்கள் வாய்மொழிரீதியான பணிப்புரைகளை ஏற்றுநடக்க வேண்டாமென நான் அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறேன்.  இவ்விதமாக அழுத்தம் கொடுக்கின்ற அதிகாரிகளுக்கும் குறிப்பாக ஒன்றைக் கூறிக்கொள்ள நான் விரும்புகிறேன்.  உங்களின் மூப்புநிலை, உங்களின் பதவி, உங்களின் கட்டளைகள் முகாமிற்குள் பலம்பொருந்தியதாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்னிலையில் நாமனைவரும் சமமான பிரஜைகளே. சமமான உரிமைகளே இருக்கின்றன.  நீங்கள் தோற்றவேண்டியது  அரசியல் பலத்தினால் வருகின்ற போகின்ற அரசாங்கங்களுக்கல்ல, அரசுக்கும் மக்களுக்காகவுமே.

அடுத்த ஒற்றோபர் மாதத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்காக்கள், ராஜபக்ஷாக்கள் எவருமே அதிகாரத்தில் இல்லை. அடுத்ததாக நியமிக்கப்படுகின்ற அரசாங்கம்  சட்டத்தின் ஆட்சியை சரிவர அமுலாக்கும்.  தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின்கீழ் அந்த பணிகள் முறைப்படி ஈடேற்றப்படுமென்பதை அந்த உயரதிகாரிகளுக்கு வினயமாக ஞாபகப்படுத்துகிறேன். சட்டமுறையற்ற  கட்டளைகளுக்கு அடிபணிந்து அரசி்யல்வாதிகளுக்கு வக்காலத்துவாங்கி ஒட்டுமொத்த தொழில்சார் வாழ்க்கையையுமே இருள்மயமாக்கி்க்கொள்ள வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  சட்டமுறையாக சனநாயகரீதியாக  அரசியலில் ஈடுபடுதல் சம்பந்தமாக விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் அல்லது பொய்யான எமாற்றுவேலைகளுக்கு இளைப்பாறிய முப்படையினர் எவரையும் அகப்பட்டுவிட வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.  தேசிய மக்கள் சக்தியிலிருந்து விலகினால் சிறப்புரிமைகளைத் தருவதாக கடிதங்களை அனுப்பிவைக்கவும் ஒருசிலர் நடவடிக்கை எடுத்துவருகின்றமை வெளிப்பட்டுள்ளது. எனது இந்த தயவான நினைவுறுத்தல் சட்டரீதியற்றவகையில் செயலாற்றுகின்ற உயரதிகாரிகளுக்கே.