Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா”-தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் பொருந்தொட்டச் செய்கைக்காக, வீதிகளை நிர்மாணித்தல் ஆகிய பணிகளுக்காக கொண்டுவரப்பட்ட தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறு பற்றிப் பேசவே நாங்கள் இங்கு குழுமியுள்ளோம். அந்த வரலாறே கவலைக்கிடமானது. அதைப்போலவே இது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள ஒரு வரலாற்றுத் தவறாகும். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த தவறினை ஒழித்துக்கட்டுவோம். அதுமாத்திரமல்ல தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் அந்த வரலாற்றுத் தவறினை சரிசெய்வோமென சபதம் செய்கிறோம். இன்று இந்த ஹற்றன் பிரகடனத்திற்கு அவசியமாகின்ற அடிப்படை வழிகாட்டலை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இந்த பிரகடனத்தைச் செய்வதற்காக ஏன் இந்த ஹற்றன் நகரம் தெரிவுசெய்யப்பட்டது? தமிழ் சமுதாயம் அதிகமாக வசிக்கின்ற மலையகப் பிரதேசம் என்பதாலா? இல்லை. 1964 சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் வசித்த பெருந்தொகையான தமிழ் மக்கள் இந்தியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அந்த தமிழ் மக்கள் இந்த ஹற்றன் புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற்றப்பட்டுதான் தலைமன்னாருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அந்நாட்களில் இந்த ஹற்றன் நகரமும் புகையிரத நிலையமும் கண்ணீரால் நனைந்தது. வேதனையால் அழுது புலம்பினார்கள். அது பற்றி ஒரு தமிழ் இலக்கியவாதியான தெளிவத்தை ஜோசப் அவருடைய “பாலை” எனும் நூலில் பின்வருமாறு கூறுகிறார். “மீண்டும் தாயகத்திற்கு வருதல்” என ஒருசிலர் குறிப்பிட்டதை மறுத்து இங்குள்ள பெரும்பாலானோர் கூறுவதைப்போல் “பலவந்தமாக” மலையக மக்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என நான் கூறுகிறேன்: இந்தயாவிற்கு செல்ல மறுத்து ஆங்காங்கே மறைந்திருந்த மக்களை பொலீஸாரை ஈடுபடுத்தி பிடித்து, வாகனங்களில் ஏற்றி, மன்னாருக்கு கொண்டுவந்து இந்தியாவிற்கு அனுப்பிவைத்த விதத்திற்கு வேறுவிதமாக பொருள்விளக்கம் கொடுக்க முடியுமா?” அவர் கூறுகின்ற விதத்தில் அது வேறொன்றுமல்ல, பலவந்தமாக ஏற்றி அனுப்புவதாகும். அவ்வேளையில் 150 வருடங்கள் வரை கழிந்திருந்தது. மூன்று நான்கு தலைமுறைகளால் புதிதாகிவிட்டது. ஆனால் “நீங்கள் இங்கு பிரஜைகள் அல்ல நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டும்” என அந்த மக்களுக்கு சட்டத்தினால் கூறப்படுகின்றது. அவர்கள் இந்தியாவுடன் இல்லை. இந்த பரம்பரை இந்தியாவுடன் வாழவில்லை. பொருளாதாரரீதியாக இந்தியாவிற்கு பங்களிப்பு வழங்கவில்லை. பிறந்தது இந்த பெருநிலத்திலேயே. இறந்ததும் இந்த மண்ணிலேயே. புதைக்கப்பட்டதும் வளம்பெறவைத்ததும் இந்த மண்ணிலேயே. இந்த நாட்டின் பொருளாதரத்திற்கே பங்களித்தார்கள். ஆனால் சட்டம் கூறியது, நீங்கள் இந்தியாவிற்குச் செல்லவேண்டுமென. அதோ அந்த ஹற்றன் நகரத்தில் இருந்துதான் நாங்கள் இன்று பேசுகிறோம்.

வரலாற்றில் இருந்த பேரவலம் அது மாத்திரமா? இல்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் எம்மைப்போல் இந்தியாவையும் குடியேற்ற நாட்டாக்கி் இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 1800 – 1900 யுகம் என்பது இந்திய கமக்காரர்களின் அறுவடையை அபகரித்தமையாலும் கடுமையான வறட்சிநிலை காரணமாகவும் பாரிய பஞ்சம் ஏற்பட்ட யுகமாகும். 1800 – 1900 யுகத்தில் பஞ்சம் காரணமாக இரண்டுகோடியே பதினான்கு இலட்சம் பேர் இறந்ததாக ஒருசில அறிக்கைகள் கூறுகின்றன. அது உங்களின் மூதாதையர்களே. அதுமாத்திரமல்ல பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கையில் போன்றே மிகையான வரி விதிப்பினை மேற்கொண்டார்கள். அதனால் மக்கள்மீது பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது. வரி செலுத்தாமை காரணமாக பாரிய சித்திரவதைகளுக்கு இலக்காகினார்கள். மேற்படி சித்திரவதைகள் பற்றி விசாரிப்பதற்காக மெட்ராஸில் சித்திரவதை ஆணைக்குழுவொன்றை நியமிக்கவேண்டியநிலை பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு ஏற்பட்டது. அந்த அறிக்கைகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ” ஜுன் மாதத்தில் இருந்து ஆகஸ்ற் மாதம்வரை வரித்தொகையைச் செலுத்துமாறு வருமானக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்மைக் கடுமையாக நிர்ப்பந்தித்தார். இந்த விடயத்தை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் என்னையும் மேலும் சிலரையும் பிடித்துக்கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்தார்கள். எமது முதுகினை வளைத்து வைத்து வெப்பமடைந்த கற்பாறையை முதுகின்மீது வைத்து முடிச்சுப்போட்டு நாள்முழுவதிலும் சூடான மணல்மீது இருக்க வைத்தார்கள். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இவ்வாறு சித்திரவதை புரிந்தார்கள்…” அது இந்தியாவில் அல்லற்பட்ட மூதாதையர்கள்.

அந்த சுற்றாடல் இதைவிட நல்லதோர் இடத்தை தெரிவுசெய்யுமாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. மறுபுறத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் அவர்களில் பெரும்பாலானோரை பல்வேறு நாடுகளுக்கு உழைப்பாளிகளாக கொண்டுசென்றார்கள். இவ்விதமாக இலங்கையில் வீதிகளை நிர்மாணிக்கவும், கோப்பிச் செய்கையை ஆரம்பிக்கவும் பெருந்தொகையான உழைப்பாளிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். தனுஷ்கோடி துறைமுகத்தில் இவர்களை கப்பலேற்றி மன்னார் துறைமுகத்தில் தரையிறக்கினார்கள். கடலில் புயலில் சிக்குண்டு பெருந்தொகையானோர் இறந்துவிட்டதாக ஒருசில அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்கள் கடலிலேயே வீசியெறியப்பட்டன. அவர்கள் மன்னாரிலிருந்து, மதவாச்சி, தம்புள்ள. மாத்தளை வரை நடந்தே வந்தார்கள். பின்னர் மலைமுகடுகளில் ஏறி இந்த பிரதேசத்திற்கு வந்தார்கள். இக்காலத்தில் இலங்கையில் 3000 அடிகளுக்கு மேற்பட்ட எந்தவொரு பிரதேசமும் குடியிருப்பு மயமாக்கப்பட்டிருக்கவில்லை. மனித வசிப்பிடங்கள் நிலவவில்லை. டயகம, ஹற்றன், தலவாகலை, றாகல இவையனைத்துமே 3000 அடிகளுக்கு மேற்பட்ட உயரத்திலேயே அமைந்திருந்தன. பாதைகள், வீதிகள் இருக்கவில்லை. இந்த மக்கள் கால்நடையாகவெ காடுகள் ஊடாக இப்பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்டார்கள். பணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டதும் சற்று சிறிய உணவையும், தேங்காய் சிரட்டையில் தண்ணீரையும் கொடுத்து இவர்களை அழைத்து வந்தார்கள். தலைமன்னார் தொடக்கம் இப்பிரதேசம்வரை காடுகளை ஊடறுத்து நடந்து வருகையில் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி அந்த பயணத்தின்போது 15% மடிந்தனர். இவர்களின் சடலங்கள் புதையுண்டு கிடப்பது இந்த மலையகப் பிரதேசத்தில் மாத்திரமல்ல: தொலைதூர தலைமன்னார், மதவாச்சி, தம்புள்ள, மாத்தளை வரை அவர்களின் சடலங்கள் பரந்து புதையுண்டு இருக்கின்றன. அவர்கள் தோட்டச் செய்கைக்காக சாதகமான எதிர்பார்ப்புடன் வந்தார்கள். அவர்களின் நாட்டார் பாடல்கள் ஊடாக அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

குனி்ஞ்சி குனிஞ்சி ஏறிய மலை

கோப்பிச்செடி நாட்டிய மலை

அண்ணன்மார் சறுக்கி விழுந்த மலை

அதோ தெரிகிறது

அதன் மூலமாக கூறப்படுவது என்ன? இந்த மலைகள் பூராவிலும் அவர்கள் மடிந்துள்ளார்கள் என்பதல்லவா. இந்த சிரமமான பயிர்வளர்ப்பில் அந்த மனிதர்கள் அனுபவித்த வாழ்க்கை என்ன? அது பற்றி ஒரு நாட்டார் பாடலில் பின்வருமாறு கூறப்படுகின்றது.

கோணக்கோண மலையேறி

கோப்பிப்பழம் பறிக்கையில

ஒருபழம் தப்பிச்சின்னு

ஒதச்சான் ஐயா சின்ன தொர

இந்த பெருந்தோட்டச் செய்கை மிகவும் கடினமானதாக அமைந்தது. வாழ்க்கை என்றால் என்னவென அறிந்திராத மக்கள், சுவையான உணவுவேளையொன்று பற்றிய உணர்வற்ற மக்கள், வீடு பற்றிய அனுபவமற்ற மக்கள், வாழ்க்கையில் எந்தவிதமான களியாட்டத்தையும் கண்டிராத மக்கள், மகிழ்ச்சியுணர்வு பெற்றராத மக்கள் இந்த மலைகளின் மத்தியில் செத்துமடிந்தார்கள். கோப்பிச் செய்கை சீரழிந்த பின்னர் அவர்கள் தேயிலைச் செய்கைக்கு இசைவாக்கம் அடைந்தார்கள். அங்கே வாழ்க்கை சாதகமானதாக அமைந்ததா? அன்று நாட்டார் பாடலாசிரியர் பின்வருமாறு கூறினார்.

கொங்கணி போட்டு பழக்கமில்ல நாங்க

கொழுந்தெடுத்தும் பழக்கமில்ல

சில்லறை கங்காணி சேவகமே எங்களை

சீமைக்கு அனுப்புங்க சாமிசாமி

இந்த மக்களில் எவருமே விருப்பத்துடன், மகிழ்ச்சியுடன், எதிர்பார்ப்புடன் இந்த தாய்மண்ணில் வாழவில்லை. பெருமூச்சு விட்டுக்கொண்டு நாள்தோறும் வேதனையின் அடித்தளத்தில் அமிழ்ந்து சீவித்தவர்களாவர்.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கீழ் 125 வருடங்கள் நிகழ்கால ஆட்சியாளர்களின்கீழ் 75 வருடங்கள் என்ற வகையில் இந்த 200 வருடங்கள் நான்கிற்க மேற்பட்ட தலைமுறைக்கு வழங்கியுள்ள தலைவிதி என்ன? 1948 இல் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் சென்றபின்னர் சுதேச குழுவொன்று ஆட்சியைக் கைகளில் எடுத்துக்கொண்டது. 1949 இல் பிரசாவுரிமை சட்டம் கொண்டுவரப்படுகின்றது. பிரசாவுரிமை பெறவேண்டுமாயின் 1949 நவெம்பர் 15 இற்கு முன்னர் பிறந்திருக்கவேண்டுமென பிரசாவுரிமை சட்டத்தில் பணிப்புரை விடுக்கப்படுகின்றது. இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக எழுத்திலான சான்று இருக்கவேண்டும். பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத, முகவரியொன்று இல்லாத, பதிவேடொன்றில் பெயர் குறிப்பிடப்படாத பிரசைகள் தாம் இரண்டு தலைமுறைகளாக இங்கு வசித்ததாக கொடுப்பதற்குள்ள சான்றிதழ் என்ன? ஏழு இலட்சம் பேருக்கு பிரசாவுரிமை கிடையாது, இந்த நாட்டில் வசிக்கிறார்கள், பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்கிறார்கள், இந்த நாட்டில் இறக்கிறார்கள், எனினும் நாட்டின் பிரசைகள் அல்ல. மிகவும் சிறிய குழுவினருக்கு மாத்திரம் பிரசாவுரிமை வழங்கப்பட்டது. வர்த்தகங்களால் செல்வத்தை திரட்டிய, தோட்டங்களிலிருந்து செல்வத்தைக் குவித்துக்கொண்ட, பெருந்தொகையான பயிர்நிலங்களை சொந்தமாகக் கொண்டிருந்த மிகவும் சிறிய குழுவினருக்கு பிரசாவுரிமை கிடைத்தாலும் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட தாழ்ந்த வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு பிரசாவுரிமை கிடைக்கவில்லை. ஆளும் வர்க்கத்தினர் மீண்டும்மீண்டும் அவர்களாகவே பிரசாவுரிமையை ஒழித்து, மீண்டும்மீண்டும் தேர்தலின்போது “நாங்கள் பிரசாவுரிமையைக் கொடுப்போம்” என்ற அரசியல் வாக்குறுதியை வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஏலவிற்பனை செய்தார்கள். மக்கள் என்ற வகையில் இவர்கள் 2003 இல் பிரசாவுரிமையை நிறைவுசெய்கிறார்கள். 1949 இல் இருந்து 54 வருடங்களில் ஒரு தலைமுறைக்கு மேலானவர்கள் பிரசாவுரிமையின்றி இந்நாட்டில் இறந்தார்கள். முழுமையான பிரசாவுரிமை கிடைத்து இன்றளவில் 20 வருடங்கள் கழிந்துள்ளன. அவர்களுக்கு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பிரசாவுரிமை கிடைத்திருந்தாலும் இலங்கையின் பிரசைக்கு இணையான உரிமைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை

மலையகத் தமிழ் மக்களின் தேவை கௌரவமான மனித சமுதாயமாக வளர்வதாகும். தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் உங்களை நோக்குவது இரக்கத்தை வேண்டிநிற்கின்ற மக்களாக அல்ல. உங்களுக்குத் தேவை இந்நாட்டில் கௌரவமான பிரஜைகளாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதாகும். அதற்கான நியாயமான உரிமை உங்களுக்கு உண்டு.

உலகம் படிப்படியாக ஒன்றாக இணைந்து வந்தது. தொழில்நுட்பத்தினால், சந்தையால், தொடர்பாடலால், போக்குவரத்தினால் உலகில் ஒருங்கிணைப்புகள் கட்டியெழுப்பப்பட்டு வந்தது. உலகின் எந்தவொரு நாடும் அந்நாடு உலகச் சந்தையில் எந்தளவு பங்கினைக் கைப்பற்றியுள்ளதெனும் காரணியின்பேரிலேயே தங்கியிருக்கின்றது. கடந்த வருடத்தில் எண்ணெய், கேஸ், மின்சாரம் கிடைக்காமல் போயிற்று. மக்கள் வாழ்க்கையே செயலற்றுப் போனது. நாடு சீர்குலைந்தது. அதற்கான பிரதானமான காரணம் யாது? எமக்கு அவசியமான வெளிநாட்டுப் பணம் டொலர் அளவு எமது ஒதுக்கங்களில் இல்லாமல் போனமையாகும். நிகழ்கால உலகில் உலக சந்தையில் நியாயமான பங்கினை கையகப்படுத்திக்கொள்ள வேண்மென ஒவ்வொரு நாடும் நிர்ப்பந்திக்கப்படுகின்றது. பல தசாப்தங்காளக உலக சந்தையில் எமது பெரிய பங்கு என்ன? சேவைப் பங்களிப்பு. இன்றும் வருடமொன்றிற்கு 130 கோடி டொலர் சேவைகளை வழங்குவதன் மூலமாகவே பெறப்படுகின்றது. கொழும்பிற்குச் சென்றால் பாரிய கட்டிடங்களை நாங்கள் காண்கிறோம். அவற்றுக்காக பெரும்பாலான பண்டங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களில் நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கிருந்து அங்கு அனுப்பிவைத்து ஈட்டுகின்ற டொலர்களைக்கெண்டு நாடு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு தேயிலை வளர்த்து ஈட்டுகின்ற டொலர்களிலிருந்து பாலங்கள் அமைத்திருக்கிறார்கள், புகையிரத பெட்டிகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதாவது புகையிரதத்திலும், பஸ் வண்டியிலும், பெரிய ஜீப் வண்டியிலும், பெரிய கட்டிடத்திலும், பாரிய பாலங்களுக்குள்ளேயும் உங்களின் உழைப்பு மறைந்திருக்கின்றது. அதற்கான நியாயமான பெறுமதியை செலுத்தவேண்டுமல்லவா?

எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக ஏதேனும்வகையிலான முன்னேற்றம் காணப்பட்டிருப்பின் அதற்க பிரதான காரணமாக அமைவது நீங்கள் சிந்துகின்ற உழைப்புதான். பொருளாதாரம் மாற்றமடைந்தது. உலகம் மாற்றமடைந்தது. நீண்டகாலமாக நீங்கள் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது? ஏறக்குறைய 150 வருடங்கள் பழமையான லயன் அறையில் நீங்கள் இன்றும் இன்னமும் வசிக்கிறீர்கள். இது நீதியாகுமா? 150 வருடங்களுக்கு மேலாக பழைய வீடு என்றால் என்ன? தோழர் பிரதீப் வசிக்கின்ற ஊரில்தான் கஹவத்தையிலேயே இலங்கையின் மிகப்பெரிய லயன் வரிசை இருக்கின்றது. அவை 150 வருடங்கள் பழையவையென அவர் கூறினார். உங்களை மனித சமுதாயமாக மதிக்கின்ற, அந்த பெறுமதி கிடைக்கின்ற புதிய ஆட்சியொன்று எமக்குத் தேவையில்லையா? நாங்கள் 200 வருடங்களுக்குப் பின்னராவது இந்த மாற்றத்தை செய்யவேண்டும்.

உங்களுடைய துன்பங்களும் வேதனைகளும் உங்கள் கையில் தாலாட்டுகின்ற பிள்ளைக்கு, வயிற்றில் அசைகின்ற குழந்தைக்கு உரித்தாகாத ஒரு தேசத்தை நாங்கள் உருவாக்குவோம். 1823 இல் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட உழைப்பாளிகளில் இரண்டு இலட்சம் பேர் மலேரியா பெருந்தொற்றினால், அரவம் தீண்டியதால், கொலறா பெருந்தொற்றினால், அதைப்போலவே மகப்பேற்றின்போது இறந்துள்ளார்கள். வேதனையால் நசுக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதாரரீதியாக மாத்திரமல்ல சமூக மதிப்பையும் இழந்த மக்களுக்கு நல்ல வாழ்க்கையையும் மதிப்புமிக்க வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களில் நூற்றுக்கு 63 வீதத்தினருக்கு இந்த நாட்டில் ஓரங்குல நிலம்கூட கிடையாது. இருக்க வீடு கிடையாது. தோட்டத்துடன் முடிச்சுப்போட்ட வீடொன்று இருக்கிறது. தொழிலில் இருந்து நீங்குவதாயின், வேறு தொழிலொன்றைத் தெரிவுசெய்வதாயின் லயன் அறையை விட்டுச்செல்லவேண்டும். அவர் ஒரு சுதந்திரமான பிரசையல்ல.

நீங்கள் ஒரு நல்ல வீட்டினை எதிர்பார்த்து எவ்வளவு காலமாக அரசாங்கங்களை உருவாக்கினீர்கள்? நான் ரொசிட்டா பண்ணையில் என்.எல்.டீ.பீ. விற்பனை நிலையமொன்றுக்குச் சென்றேன். அங்கு ஒரு தமிழ் சகோதரர் ” நாங்கள் பண்ணையில் வேலை செய்கிறோம். வேலை செய்கின்ற காலத்தில் எமக்குச் சிறிய அறையொன்றைத் தந்திருக்கிறார்கள். தொழிலை இழந்தால், இளைப்பாறிச் சென்றால் அறையிலிருந்து பிள்ளைகளும் மனைவியும் நானும் எங்கே போவது?” எனக் கேட்கிறார். இந்த வீடு, காணி, வீடற்ற மலையக மக்களுக்கு நாங்கள் மிகவும் தெளிவாக வாக்குறுதியையும் உத்தரவாதத்தையும் அளிக்கின்றோம். உங்களுக்கான காணியையும் வீட்டையும் உறுதிசெய்கின்ற ஆட்சி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாகும்.

உங்களுக்கு வருமான வழியொன்று இருக்கிறதா? ஒரு நாளுக்கு 1000 ரூபா சம்பளம் பெறுவதற்காக எத்தனை நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட நேரிட்டது? சாலைமறியலில் ஈடுபட, பேரணியில்செல்ல நேரிட்டது? ரூபா 1000 போராட்டத்தை தொடங்கியவேளையில் ஒரு இறாத்தல் பாண் ரூபா 40 ஆகும். 1000 ரூபா வழங்க தீர்மானிக்கும் போது பாண் ரூபா 160. இன்று போதுமானதா? பிரஜைக்கு தான் ஈடுபடுகின்ற தொழிலில் இருந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், உடையை கொள்வனவுசெய்ய முடியாவிட்டால், மருந்து வாங்க முடியாவிட்டால், பிள்ளைக்கு கல்வி புகட்ட முடியாவிட்டால் அது ஒரு தொழிலா? அதனால் தோட்டக் கம்பெனிக்காரர்களிடமிருந்து “உடலில் இருந்து ஓர் எலும்பினை எடுப்பதுபோல்தான்” தொழிலாளருக்கு ரூபா 1000 வழங்க இணங்குவது. ரூபா 1000 செலுத்தமுடியாத கைத்தொழில் எதற்காக? கைத்தொழிலின் பிரச்சினையல்ல நிலவுவது. அவர்கள் கோரிநிற்பது இந்த தோட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வழங்குகின்ற வருமானத்தில் இருந்து சேகரித்து பிழிந்துகொண்டிருக்கின்ற செல்வத்திலிருந்து விரல் இடுக்களிலிருந்து கீழே வடிகின்ற ஒரு சொட்டினை மாத்திரமே வேண்டிநிற்கிறார்கள். உங்களுக்கு வாழ்க்கையைப் பேணிவர அவசியமான நியாயமான வருமான வழியைக்கொண்ட பொருளாதாரத்தை அமைத்துக்கொடுப்பதாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். இன்றும் தோட்டத்தில் வேலைசெய்கின்ற மக்களுக்கு வெளியில் வருவதற்கான வாய்ப்பு நிலவுவது கல்வியால் மாத்திரமே. சகோதரி போல்ராஜ் இலவசக் கல்விச் சட்டத்தினால் இலவசக் கல்வி கிடைத்தாலும் நீங்கள் இந்த நாட்டில் வசித்தாலும் பிரஜையாக இல்லாமை காரணமாக அதன் நியாயமான பெறுபேறுகள் கிடைக்கவில்லையென சுட்டிக் காட்டினார். இன்றும் அப்படித்தான். இரத்தினபுரி மாவட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவில் உயர்தரத்தை தமிழில் கற்பதற்கான ஒரு பாடசாலைகூட கிடையாது. இந்த மத்திய மலைநாட்டில் ஓரளவுக்கு இருந்தாலும் கீழ்நோக்கிச் செல்லும்போது கிடையவே கிடையாது. கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகள் தலைமுறையினரே இங்கு வசிக்கிறார்கள்.

இந்த மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் பத்தகமொன்றை வாசிக்கின்ற, கவிதையை இரசிக்கின்ற, தமழ்நாட்டுத் திரைப்படத்திலிருந்து விடுபட்டு இலங்கை சினிமா பற்றிச் சிந்திக்கின்ற புதிய தலைமுறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டுமென நாம் நினைக்கிறோம். மலையக மக்களின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொள்வதற்கான நியாயமான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதன் மூலமாக மாத்திரமே அந்த புதிய தலைமுறையினரை உருவாக்க முடியும். அது தீர்க்கப்படவேண்டிய பிரச்சினையாகும். அதைப்போலவே பொதுவில் எடுத்துக்கொண்டால் எமது நாட்டில் பெண்கள் கடுமையாக இன்னல்களுக்கு இலக்காகி உள்ளார்கள். அதிலும் இந்த மலையகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பெண்களாக விளங்குவது எமக்குப் புலனாகின்றது. மெலிந்த உடல்கள், பிளவுபட்ட கூந்தல், உலர்ந்த சருமத்துடனான உடல், பாரிய இன்னல்களுக்கும் விரக்திக்கும் இலக்காகிய மகள்மார் இங்கே வசிக்கிறார்கள். அவள் வாழ்க்கை என்றால் என்னவென்பதை அறியாதவள். தோட்டத்தில் பிறக்கிறாள். தோட்டத்தில் உழைக்கிறாள். தோட்டத்திலேயே இறக்கிறாள். தோட்டத்திற்கு வெளியில் உள்ள உலகம் பற்றியோ, சமூகம் பற்றியோ, வாழ்க்கை பற்றியோ அனுபவமின்றி இறக்கிறாள். அவளுக்கு நியாயமானதும் நீதியானதுமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

நான் உங்களிடம் கேட்கிறேன், உங்களுக்கு இருப்பது பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமா? உங்களுக்கு சமூக அங்கீகாரம் இருக்கிறதா? அத்தகைய அங்கீகாரம் கிடையாது. கொழும்பு வீடொன்றில் வேலைசெய்ய எவரும் இல்லாவிட்டால் ஹற்றனில் இருந்து தலவாகலையில் இருந்து இளம்பெண்ணைத் தேடுவார்கள். கொழும்பு நகரத்தை உள்ளிட்ட பாரிய நகரங்களில் ஹோட்டல்களின் பீங்கான் கழுவுபவர்கள் தோட்டங்களிலிருந்து வந்த இளைஞர்களாவர். தமக்கு இணையானவர்களாக அவர்களை நோக்குவது கிடையாது. அவர்களுக்கு தாழ்வான குறைந்த சிறப்புரிமை பெறுகின்ற மக்கட் பிரிவினரை பார்ப்பதுபோல்தான் பார்க்கிறார்கள். வீடுகளில் சமைக்க, கூட்டிச் சுத்தஞ்செய்ய, பபாவின் கக்கா கழுவ, ஹோட்டல் பீங்கான் கழுவ, கழிப்பறைத் தொகுதிகளைக் கழுவ இதற்காகத்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவை தொழில்கள்தான். அப்படியில்லாத உலகமொன்ற நிலவமாட்டாது. ஆனால் அவற்றை தாழ்ந்தவையாகக் கருதி அவற்றின் மரபுரிமையாளர்களாக மலையக மக்களை மாற்றியிருப்பதே இங்குள்ள பிரச்சினையாகும். உங்களுக்கு நல்ல நியாயமான வாழ்க்கை கிடைக்கவேண்டும். பொருளாதாரரீதியாக மாத்திரமன்றி சமூக நன்மதிப்புடன் சமூக அங்கீகாரத்தைக்கொண்ட வாழ்க்கை கிடைக்கவேண்டும்

நீண்டகாலமாக அந்த பிரதேசங்களில் நிலவுவது வாக்குகள் அல்ல, வாக்கு வங்கிகளே. மகிந்த ராஜபக்ஷவிற்கு மலையகத்தில் வாக்குகள் கிடையாது. ஆனால் தொண்டமானின் வாக்கு வங்கியொன்ற இருக்கின்றது. எத்தனை அமைச்சுப் பதவிகள்? ஆளுனர் பதவி கிடைக்குமா? வாக்கு வங்கியை அடகு வைக்கிறார்கள். பிரசையின் தனித்தனி வாக்கிற்கு கிடைக்கின்ற அதிகாரத்தை வாக்கு வங்கியில் வைப்புச்செய்து அந்த இரும்புப்பெட்டியின் திறவுகோலை தொண்டமானின் திகாம்பரத்தின் கையில் வைத்துக்கொண்டு இங்கமிங்கும் இரும்புப்பெட்டியைத் திறக்கிறார்கள். இதுவரை கட்டியெழுப்பப்பட்ட அரசாங்கங்களுக்கு தனித்தனி ஆட்களுடன் பேரம்பேசுகின்ற தேவை நிலவவில்லை. தனித்தனி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. வாக்குகள் அனைத்துமே வாக்கு வங்கியின் இரும்புப் பெட்டியில் இருக்கின்றன. இரும்புப் பெட்டியின் கதவினைத்திறந்து தொண்டமான்கள் அவற்றை அங்குமிங்கும் பகிர்ந்தளிக்கிறார்கள். பேரம்பேசும் சக்தி இருந்தது வாக்காளரின் கையிலல்ல: வாக்கு வங்கி உரிமையாளரின் கையிலாகும். அரசாங்கம் டீல்பண்ணவது, பேரம்பேசுவது, அரசாங்கங்கள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்வது. பிரச்சினைகளைத் தீர்ப்பது இரும்புப்பெட்டிச் சொந்தக்காரருடனேயே. இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைக்கு தோட்டத்தில் பாடசாலை இல்லாவிட்டாலும் இரும்புப்பெட்டியின் சொந்தக்காரரின் பிள்ளை இங்கிலாந்தில் இருந்து வந்துதான் இரும்புப்பெட்டியின் திறவுகோலை பொறுப்பேற்றது. தந்தை இறந்த பின்னர் இரும்புப்பெட்டியின் திறவுகோல் மகனுக்கு கிடைத்தது. ஒருவர் போதாது என்பதால் இந்தியாவிலிருந்து ஒருவரை திறவுகோலை பொறுப்பேற்பதற்காக கொண்டுவந்தார்கள். அவர் தற்போது கிழக்கின் ஆளுனர். இந்த ஆட்சியாளர்கள் யாருடைய பிரச்சினையைத் தீர்த்துவைத்துள்ளார்கள்? தோட்டத்தில் வேலைசெய்கின்ற பிரஜையின் பிரச்சினையை அல்ல. வாக்காளரின் பிரச்சினையை அல்ல. அவர்கள் இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் பி்ரச்சியைத்தான் தீர்த்து வைத்துள்ளார்கள். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உருவாக்குவது உங்களின் வாக்குகளை சேகரித்த வாக்கு வங்கியொன்றை அல்ல. ஒவ்வொரு பிரஜைக்கும் தமது வாக்கின் உரிமையை சுயாதீனமாக பாவிக்கக்கூடிய உளப்பாங்கினைக்கொண்ட புதிய மக்கள் உரையாடல் களமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.

நாட்டடின் ஆட்சியாளர்களை தெற்கின் மக்கள் வீதியில் இறங்கி விரட்டியடித்தார்கள். தெற்கின் ஆட்சியாளர்கள் மக்களுக்குப் பயந்தவர்கள். மக்கள் மத்திக்கு வரமாட்டார்கள். மக்களை தவிர்த்துச்செல்ல பதில் தேடுகிறார்கள். உள்ளுரதிகாசபைகள் தேர்தலை பிற்போடுகிறார்கள். மேலும் தேர்தல்களை பிற்போட திட்டம்தீட்டி வருகிறார்கள். கொழும்பு, தென்பகுதி, வடமத்தி அப்சற்தான் என அவர்கள் கதைக்கிறார்கள். ஆனால் நுவரெலியாவில் தொண்டமான் இருக்கிறார் அல்லவா. திகாம்பரம் இருக்கிறார் அல்லவா. அவர்கள் காப்பாற்றித் தருவார்கள். ஆட்சியார்கள் அவர்களின் மக்களுக்கு எதிரான ஆட்சியை, அழிவுமிக்க ஆட்சியை முன்னெடுத்துச்செல்ல வேண்டுமாயின் இந்த மலையக மக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென நினைக்கிறார்கள். அது இறந்தகாலத்தில் உண்மை. அதனை நிகழ்காலத்தில் பொய்யாக மாற்றவேண்டும். வாக்கு இரும்புப்பெட்டிச் சொந்தக்காரரின் அரசியலுக்குப் பதிலாக பொதுமக்களின் அரசியலை மலையக மக்கள் மத்தியில் மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.

பெருந்தொகையான இளைஞர் சமுதாயம் தற்போது தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமி வருகின்றது. இந்த நுவரெலியாவின் பலம்பொருந்திய பாராளுமன்ற உறுப்பினரொருவர் “தோட்டத்தில் வேலைசெய்பவர்கள் இன்னமும் தலைவர்களுக்கு கட்டுப்பட்டவர்களே. தோட்டத்திருந்து வெளியில் வந்துள்ள இளைஞர் தலைமுறையினர் உங்களுடனேயே, என்பி.பி. அமைப்புடன்தான் இருக்கிறார்கள்” என பாராளுமன்றத்தில் கூறினார். தோட்டத்தின் நுகத்தடியில் இருந்து விடுபட்ட புறா இன்று சுதந்திரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டது. அதனால் மலையக மக்கள் மத்தியில் புதிய இளைஞர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மரபுரீதியான அல்லற்படுத்திய ஆட்சிக் குழுக்களுக்குப் பதிலாக பொது மக்களின் தேவைகளுடன் பின்னிப்பிணைந்த புதிய இளைஞர் தலைமுறையொன்று அந்த மலையக மக்கள் மத்தியில் இருந்து முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். மென்மேலும் முன்னணிக்கு வரவேண்டியுள்ளது. 200 வருடங்களாக நேர்ந்துள்ள வரலாற்றுத் தவறினை மாற்றியமைக்கின்ற அபிலாஷையும் எதிர்பார்ப்பும் எமக்கு இருக்கின்றது. அது எமது இனிமையான கனவாக மாத்திரம் அமைந்துவிடலாகாது. வரலாற்றில் ஏற்பட்ட தவறினை திருத்தியமைக்க வேண்டுமென மலையக மக்கள் தீர்மானமொன்றை எடுத்தால் மாத்திரமே அதனை சாதிக்கமுடியும். எம்மனைவராலும் ஒன்றுசேர்ந்து இனிமையான கனவினைக் காணமுடியுமாயின் இந்த இருள்மயமான இரவினை குறுகியதாக்க இயலும். நாங்கள் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த இருள்சூழ்ந்த இரவினை குறுகியதாக மாற்றிடுவோம். அதற்காக அனைவரையும் ஒன்றுசேருமாறு அழைக்கிறோம்.