-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் – ஊடக சந்திப்பு – 2024.01.11-
நேற்று (10 ஆந் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தில் பல திருத்தங்களை உள்ளிடக்கியதாக நீதி அமைச்சர் எடுத்தியம்ப முற்பட்டார். எனினும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்த சட்டமூலத்துடன் தொடர்புடைய 2023 செத்தெம்பர் 15 ஆந் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் பாகம் இரண்டுக்கான குறைநிரப்பி என்றே இருக்கின்றது. அமைச்சர் சபாபீடத்தில் சமர்ப்பித்தது பழைய தட்டினையாகும். இதற்கு முன்னர் இந்த வர்த்தமானப் பத்திரிகை பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ‘ஒன்லயின்’ சட்டமூலமும் அதனோடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பற்றிய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கான எதிர்பார்ப்பு அரசாங்கத்திற்கு கிடையாதென நாங்கள் அது சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவின்போது சட்டத்துறை தலைமை அதிபதி அறிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த மக்களினதும் பிரமாண்டமான எதிர்ப்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு தோன்றியதால் அரசாங்கத்தின் சார்பில் சட்டத்துறை தலைமை அதிபதி உயர்நீதிமன்றத்திற்கு அதனை அறிவித்தார்.
இதே சட்டம் கடந்த ஏப்பிறல் மாதத்தில் கசெற்றில் வெளியிடப்பட்டு, மீண்டும் திருத்தப்பட்டு, செத்தெம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது. அது தற்போது மூன்றாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓர் எழுத்தையேனும் திருத்தாமல் செத்தெம்பர் மாதத்தில் சமர்ப்பித்த சட்டமூலத்தையே மீண்டும் கொண்டுவந்திருக்கிறார்கள். அதனால் மக்களை தவறாக வழிநடாத்த செயலாற்ற வேண்டாமென நாங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறோம். இந்த சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கு முரணானது. அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது உறுப்புரைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ள மக்களின் இறைமைத் தத்துவத்திற்கு முரணானது. இந்த சட்டத்தின் உள்ளடக்கம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்திற்கும் மக்களின் இறைமைத் தத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இரண்டு உறுப்புரைகளின் ஒவ்வோர் எழுத்திற்கும் முரணானதாகும். அதைப்போலவே சமர்ப்பித்துள்ள பிரிவுகளுக்குள்ளே பயங்கரவாதம் என்பதற்கான பொருள்கோடல் வழங்கப்படவில்லை. எனினும் பயங்கரவாத தவறுகள் பற்றி பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. பயங்கரவாத தவறு என்பதற்கான பல விரிவான தெளிவுபடுத்தல்கள் தரப்பட்டுள்ளன. உதாரணமாக பயங்கரவாதத்தை தூண்டுதலுடன் தொடர்பாகவும், 11 வது பிரிவில் இருந்து சம்பந்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுதல் பற்றியும், 12 வது பிரிவில் பயங்கரவாதம் பற்றியும், ஏனைய பிரிவுகளில் தகவல்களை வழங்குதல் மற்றும் தவறவிடுதல் என்றவகையிலும் பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. எனினும் இங்கு குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பிரிவும் உள்ளடங்குகின்ற விதத்தில் குற்றவியல் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை நாங்கள் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறோம். அதபை்போலவே தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றங்கள் சம்பந்தமான சட்டங்களுடனும் தொடர்புடைய பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக 19 வது பிரிவின் பொருள்கோடல் மூலமாக பிடியாணையின்றி கைதுசெய்வதற்கான அதிகாரம் எந்தவொரு பொலீஸ் உத்தியோகத்தருக்கும் எந்தவொரு முப்படை உத்தியோகத்தருக்கும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மின்சாரசபை ஊழியர்கள் அண்மையில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள் போன்ற வேலைத்தளங்களில்கூட முன்னெடுக்கின்ற நியாயமான ஆர்ப்பாட்டங்களுக்கும் இடமளிக்காதிருக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுப்பவர்களைக் கைதுசெய்து தடுத்துவைத்தலுடன் ஏற்புடைய ஏற்பாடுகள் இதில் இருக்கின்றன. நாட்டின் சனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தடுத்துவைப்பதற்கான கட்டளையை விடுக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டுமென எந்தவோர் இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
புனர்வாழ்வு அதிகரசபை சட்டம், சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கான சட்டம், ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவர செயலாற்றுகின்ற அரசாங்கம் அந்த சட்டத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைச் செய்கின்ற, நியாயமான மக்கள் எதிர்ப்புகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக இந்த சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ரணில் ராஜபக்ஷ ஜுன்டா இந்த தேர்தல் வருடத்தில் மேலும் ஒருநாளாவது அதிகாரத்தில் இருப்பதற்காக இந்த சட்டங்களை ஆக்கி வருகின்றது. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் இந்த பயணத்தைத் தொடர நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்த சட்டங்களை அங்கீகரித்துக்கொண்டால் நோயாளர்களின் உயிர்களை ஆபத்தில் வீழ்த்திய கெஹெலிய ரம்புக்வெல்ல அப்பாவி எனக் கூறுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த ஈனியா சட்டத்திற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்திற்கு பல மனுக்களை சமர்ப்பிப்போம். இந்த படுமோசமான சட்டத்தை தோற்கடிப்பதற்காக நாங்கள் நாட்டின் எல்லா இடங்களிலம் முனைந்து செயலாற்றுவோம்.
“அநீதியான சட்டங்கள் எனும் இரும்புச் சப்பாத்தினை பாவித்து மக்களின் மூச்சினை இறுக்க முடியுமானால் இந்த அரசாங்கம் அதனையும் செய்ய முனைகிறது.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி சமிலா குலசேகர-
மாத்தறை பெண்களின் பலம், காலி பெண்களின் பலம் மற்றும் கம்பறா நைவலவில் நடைபெற்ற இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் பலத்தை அரசாங்கம் கண்டது. அரசாங்கம் அதனாலேயே பதற்றமடைந்தள்ளது. வருங்காலத்தில் கம்பஹாவை உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்களில் பெண்களின் பலத்தை அரசாங்கம் கண்டுகொள்ள முடியும். தேசிய மக்கள் சக்தியுடன் பொதுமக்கள் ஒன்றுசேர்கின்ற விதத்தைக் காண்கின்ற அரசாங்கத்திற்குள்ள ஒரே மாற்றுவழி ஈனியா பங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற சட்டங்களை அங்கீகரித்துக் கொள்வதே என அவர்கள் சிந்தித்து வருகிறார்கள். மனிதர்கள் என்றவகையில் எமக்கு தற்போது எஞ்சியுள்ளது சுதந்திரமாக மூச்செடுப்பது மாத்திரமே. அநீதியான சட்டங்கள் எனும் இரும்புச் சப்பாத்தினை பாவித்து மக்களின் மூச்சினை இறுக்க முடியுமானால் இந்த அரசாங்கம் அதனையும் செய்ய முனைகிறது.
பயங்கரவாதத்தை தடுப்பதாகக் கூறிக்கொள்கின்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமானால் பயங்கரவாதம் நிலவவேண்டும். தேசிய மக்கள் சக்தியுடன் எழுச்சிபெறுகின்ற மக்களே இந்த அரசாங்கத்திற்கு பயங்கரவாதிகள்போல தெரிகின்றது. இந்த சட்டமூலத்தின் 62 வது பிரிவிற்கிணங்க வழக்கு விசாரணை நிறைவடையும்வரை பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் அனுமதியுடன் தடுத்து வைக்கலாம். அவசியமெனில் தடுத்துவைத்தல் சட்டத்தை அமுலாக்குகின்ற அதிகாரத்துடன் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சேர்க்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான ஈனியா சட்டங்கள் தொடர்பாக நாங்கள் குறைவாக மதிப்பிடலாகாது. நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளவே இந்த சட்டங்கள் மூலமாக எதிர்பார்க்கிறார்கள். இந்த சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கக்கூடியவர்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை 81,82 பிரிவுகளின்கீழ் சனாதிபதிக்கும் வழங்கத் தயாராகி வருகிறார்கள்.
அதைப்போலவே மனிதர்கள் இருக்கவேண்டிய இடத்தை தீர்மானிக்கின்ற அதிகாரத்தையும் சனாதிபதி பெற்றுக்கொள்ள தயாராகி வருகிறார். “எவ்விதத்திலேனும் வதிகின்ற இடத்திற்கு வெளியில் நடமாடித் திரிவதையும் சனாதிபதியால் கட்டுப்படுத்த முடியும்.” அதைப்போலவே வெளிநாடு செல்வதை மட்டுப்படுத்தவும், கைது செய்யவும், இடம்பெயர்வதை மட்டுப்படுத்தவும், வதிகின்ற இடத்திலும் தொழில்புரிகின்ற இடத்திலும் இருந்து வெளியில் செல்வதை மட்டுப்படுத்தவும், குறித்துரைத்த ஆட்களுடன் தொடர்பாடல் தொடர்புகளை பேணிவருவதை மட்டுப்படுத்தவும் அதிகாரங்களை சனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்க தயாராகி வருகிறார்கள். இந்த நாட்டு மக்கள் நடமாடுகின்ற இடங்கள், உண்கின்ற இடங்களை மட்டுப்படுத்துவதைத் தவிர நிறைவேற்று சனாதிபதிக்கு வேறுவேலை கிடையாதா?
இந்த ஈனியா சட்டங்களின் ஒரே நோக்கம் சனநாயகரீதியாக எழுச்சிபெறுகின்ற மக்களின் குரலை அடக்குவதாகும். தொழிற்சங்க செயற்பாடுகளை இல்லாதொழிப்பதும் ஒரே குறிக்கோளாகும். இவ்வாறான அநீதியான சட்டங்களுக்கெதிராக குரல்கொடுக்க தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் எந்நேரத்திலும் தயாராக இருக்கிறார்கள் என்பதை வலியுறுத்துகிறோம். ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கான சனநாயகரீதியான இடவசதியை சுருட்டுவதாயின் அந்த இடத்தில்தான் அரசாங்கமொன்றின் சரிவு இருக்கின்றது. எனினும் அபிவிருத்தி நலிவடைவதை தடுப்பதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பிரயோகிப்பதாகவே அவர்கள் இந்த சட்டம் மூலமாகக் கூறுகிறார்கள். தேசிய அபிவிருத்தியை நலிவடையச்செய்த பொருளாதாரக் கொலைஞர்கள் யாரென உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. நாங்கள் நேர்மையாக. சனநாயகரீதியாக இந்த அநீதியான சட்டங்களைத் தோற்கடித்திட முன்வருவோமென்பதை வலியுறுத்துகிறோம்.
“ஆபத்தினை முன்கூட்டியே கண்டு அதற்கெதிராக மக்களை அணிதிரட்டுவதே எமது பொறுப்பாகும்…”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார-
இந்த பயங்கரவாத சட்டம் பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டினோம். சட்டத்தின் ஆட்சி பற்றி நாங்கள் பேசும்போது “அவற்றை நாங்கள் தின்னப்போகிறோமா?” என ஒருசிலர் கேட்டார்கள். எனினும் அவர்கள் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட வேளையில் தான் அவர்களுக்கு சனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் ஞாபகத்திற்கு வரும். மக்களுக்கு வரப்போகின்றஆபத்தினை முன்கூட்டியே கண்டு அதற்கெதிராக மக்களை அணிதிரட்டுவதே எமது அரசியல் மற்றும் சமூகப் பொறுப்பாகும்.
இலங்கையில் சாதாரணமாக குற்றவியல் சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கக்கூடிய பல தவறுகள் பயங்கரவாத தடுப்பு எனும் பெயரில் வருகின்ற இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்திடமிருந்து அதிகளாவிலான தத்துவங்கள் அதன்மூலமாக நீக்கப்பட்டு நிறைவேற்று சனாதிபதியிடம் எடுத்துக்கொள்ள அல்லது அவருக்கு உடைமையாக்கிக்கொள்ள தயாராவதே அதற்கான அடிப்படைக் காரணம். சரவ்தேசரீதியாக எடுத்துக்கொண்டால் இரண்டு அடிப்படை நோக்கங்களை நிறைவுசெய்த பின்னரே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். மரணத்திற்கு காரணமாக அமைகின்ற கடுமையான சேதங்கள் அல்லது பணயக் கைதியாக எடுத்தலே அத்தகைய நோக்கங்களாகும். அடுத்தது அரசாங்கத்தை அல்லது மக்களை திகிலடையச் செய்விப்பது, பயமுறுத்துவது, சர்வதேச நிறுவனங்களுக்கு எதையேனும் புரியுமாறு அல்லது புரியாதிருக்குமாறு நிர்ப்பந்தித்தல் அதில் இரண்டாவது செயலாகும். பயங்கரவாதச் செயல் என்பது இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவுசெய்வதாகும்.
எனினும் இதில் உள்ளடக்கியுள்ள விரிவான வரைவிலக்கணங்கள் மூலமாக அரசாங்கம் எதிர்பார்ப்பது மக்கள் அபிப்பிராயமற்ற அரசாங்கத்திற்கெதிராக சிவிலியன்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அடக்கவும் பயமுறுத்தவும் முயற்சிசெய்வதாகும். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்பினை நடாத்துதல், போஸ்ற் ஒன்றைப் போடுதல், துண்டுப்பிரசுத்தை விநியோகித்தல் முதலியவற்றையும் பயங்கரவாத வெளியீடுகளாக பெயர்குறித்து பணிப்புரை வழங்கவும் முடியும். “நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம்” மற்றும் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்” ஆகிய இரண்டு சட்டங்களையும் ஒன்றாக நிறைவேற்றிக் கொள்வதன் நோக்கமாக அமைவது தும்மினாலும்கூட அரசுக்கெதிரான பயங்கரவாதச் செயலென குறிப்பிட இயலும். யுத்தம் முற்றுப்பெற்று பயங்கரவாதம் இல்லாத காலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவது ஏன் என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியலுக்கு தடையேற்படுத்துகின்ற நோக்கத்துடனேயே இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. நீதின்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்ப்பட்ட தேசபந்து தென்னக்கோன் போன்ற ஒருவரை பதில் பொலீஸ் மா அதிபராக பெயர்குறித்தல் போன்ற விடயங்களுடன் சட்டத்தை கருத்திற்கொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனும் அநீதியான செயற்பாடுகளுடனும் இணங்குகின்ற ஒருசில உத்தியோகத்தர்கள் இருப்பார்களாயின் “நீங்கள்தான் பயங்கரவாதிகள்” எனஎம்மால் அவர்களுக்கு கூறமுடியும். பயங்கரவாதியாக மாற அரசாங்கத்திற்கு லயிஷன் கொடுக்க முனைகின்ற சட்டமாவே நாங்கள் இதனைக் காண்கிறோம். அதனைத் தோற்கடிப்பதற்காக பாராளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும், வீதியிலும் நாங்கள் போராடுவோம். அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.