தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி மாநாடு – 2023.10.21
தேசிய மக்கள் சக்தியின் 90% தொகுதி மாநாடுகள் நாடு பூராவிலும் நடாத்தி முடிக்கப்பட்டு விட்டன. அதைப்போலவே உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாநாடுகளை நடாத்தி ஒருங்கிணைத்து வருகிறார்கள். கமக்காரர்களின் மாநாடுகள், இளைஞர் சங்கத்தின் புதிய அரசியல் உரையாடல்கள், இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு உள்ளிட்ட பல்வேறு தொழில்வாண்மையாளர்களை ஒழுங்கமைத்து தொழிலதிபர்களையும் கைத்தொழில் உரிமையாளர்களையும் ஒழுங்கமைத்து வருகிறோம். அதைப்போலவே திசெம்பர் இறுதியளவில் எமது நாட்டின் மிகப்பிரமாண்டமான பெண்களின் ஒருங்கிணைவினை உருவாக்குவோம். இவ்விதமாக ஒழுங்கமைத்து இந்நாட்டின் அதிகாரத்தைப் பரிமாற்றிக்கொள்ள நாங்களும் தயாராகி வருகிறோம். ஏனைய தரப்பினரின் கையில் பல சாதனங்கள் இருக்கின்றன. வரி மோசடிகளிருந்து குவித்துக்கொண்ட அளப்பரிய செல்வம் அவர்களின் கையில் இருக்கின்றது. மக்களிடமிருந்து கொள்ளையடித்த அந்த செல்வத்தை அவர்களின் தேர்தல்களுக்கான பம்ப் பண்ணுகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பிற்குச் சென்று தங்கியிருந்த ஹோட்டலுக்காக செலவிட்டது யாரென முடியுமானால் கூறுங்கள். அரசாங்கத்தின் பாதுகாவலுடன் தீத்தொழில் புரிபவர்கள் சேகரித்து வைத்துள்ள பணம் தேர்தல் காலங்களில் வெளியில் வருகின்றது. ஊர் மக்களுக்கு பணம்கொடுத்து ஏமாற்றி வாக்குகளைப் பெறுகின்ற சூதாட்டத்தை சதாகாலமும் புரிய அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தீத்தொழில் புரிபவர்களின் செல்வத்தை தேர்தலுக்காக சேகரிக்கின்றவேளையில் நாங்கள் மக்களை ஒன்றுசேர்த்து தேர்தலை நோக்கிச் செல்கிறோம்.
மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்காக்கள் தேர்தலை பிற்போடுவதற்காக மாளிகை சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறார்கள். மக்களுக்கு முகங்கொடுக்காமல் அவர்கள் மாளிகை சதித்திட்டங்களை தீட்டுகையில் நாங்கள் மக்களை ஒன்றுதிரட்டி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அணிதிரள்கிறோம். மிகவும் முக்கியமான தருணத்திலேயே கம்பளை தொகுதி மாநாடு நடைபெறுகின்றது. எதிர்வரும் 10 மாதகாலப்பகுதிக்குள் இலங்கையின் தலைவிதி எழுதப்படுகின்ற காலப்பகுதியொன்று வருகின்றது. ரணில் வந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரென ஒருசில சிறப்பறிஞர்கள் செய்தித்தாள்களில் எழுதினார்கள். ரீ.வீ. இல் வந்து கூறினார்கள். ஆனால் என்ன நேர்ந்துள்ளது? இந்த நெருக்கடியின் வேரில் இருக்கின்ற கடனெடுத்தல் மற்றும் விற்பனை செய்தலின் பேரில் நெருக்கடியின் மூலவேர் அமைந்துள்ளது. நீண்டகாலமாக இந்த பாதையில் வந்தார்கள். கடனெடுத்தல் மற்றும் விற்பனைசெய்தல் நீங்கலாக வேறு பொருளாதார உபாய மார்க்கத்தை எமது நாட்டுக்கு அறிமுகஞ் செய்யவில்லை. அரசாங்கத் தொழிற்சாலைகள் அனைத்துமே மூடப்பட்டுவிட்டன. 21 பெருந்தோட்டக் கம்பெனிகள் விற்பனை செய்யப்பட்டன. ரெலிகொம்மில் அரைவாசிக்கு கிட்டிய பங்கினை விற்றார்கள். ஒருசில வங்கிகளை விற்றார்கள். தற்போது விற்பதற்கு ஒன்றுமே இல்லாமல் இறுகிப்போகும் நிலைக்கு வந்துள்ளார்கள். எஞ்சியுள்ளவற்றை வேகமாக விற்பதற்கே ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார்.
முதன்முதலாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை விற்கப் போகிறார்கள். பொருளாதார நெருக்கடியொன்று நிலவுகையில் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 1000 கோடி ரூபா இலாபத்தை ஈட்டியது. தேசிய பாதுகாப்பினைப்போன்றே நாட்டின் எதிர்காலத்துடன் பின்னிப்பிணைந்துள்ள ரெலிகொம் நிறுவனத்தை விற்கத் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு வருடத்திற்கான இலாபம் 1300 கோடி ரூபாவாகும். ஹில்டன் ஹோட்டல், லங்கா ஹொஸ்பிட்டல், லிற்றோ கேஸ் கம்பெனி, மில்கோ நிறுவனம், தேசிய கால்நடைவள நிறுவனம், பொஸ்பேற் படிவுகள், கனிய மணல் வளம் மற்றும் இரத்தினக்கல் காணிகளை விற்பனை செய்யத் தயாராகி வருகிறார்கள். எதிர்வரும் ஏழு, எட்டு மாதங்களுக்குள் எமது அனைத்து வளங்களையும் விற்கத் தயாராகி வருகிறார்கள். மின்சார சபையின் மின்சார பிறப்பாக்கத்தை சமனல வெவ, மகாவலி தொகுதி மற்றும் லக்ஷபான என மூன்றுதுண்டுகளாக உடைத்து விற்கப் போகிறார்கள். இவ்வாறு விற்பனை செய்வது மின்நிலையங்களையாகும். அத்துடன் நீர்த்தேக்கங்களின் உரிமையையும் விற்கப் போகிறார்கள். அதைப்போலவே நீர் வளத்தையும் விற்கப் போகிறார்கள்.
எமது தொழில்வாண்மையாளர்கள்மீது பாரிய வசிச்சுமையை ஏற்றி அவர்கள் நாட்டைக் கைவிட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். எமது நாட்டின் உழைப்புப் படையில் 15% தொழில்வாண்மையாளர்களாவர். வரிச்சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்கள் நாட்டைவிட்டுச் செல்வதைப்போலவே பொதுமக்கள்மீது பாரிய வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் சிலமாதங்களுக்கொருதடவை எண்ணெய் விலை, மின்சார விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றது. மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் சுமையை ஏற்றி எஞ்சிய வளங்கள் அனைத்தையும் தேர்தலுக்கு முன்னர் விற்றுவிட ரணில் செயலாற்றி வருகிறார். அவர்கள் அடுத்த தேர்தலுக்கான திட்டங்களை வகுத்து வருகிறார்களேயொழிய நாட்டின் எதிர்காலத்திற்காக திட்டங்களை வகுப்பதில்லை. உலகமானது இன்று தொழில்நுட்பத்தினால் சந்தையால் அபிவிருத்தியால் மூடிச்சிப் போடப்பட்டுள்ளது. அதனால் உலகில் ஏற்படுகின்ற எந்தவொரு சிறிய அசைவும் மற்றுமொரு நாட்டில் தாக்மேற்படுத்துவதை தடுக்க இயலாது. கொவிட் பெருந்தொற்று நிலைமை முழுஉலகம் மீதும் தாக்கமேற்படுத்தி பயணித்த பொருளாதாரப் பயணப்பாதையை மீள்பரிசீலனை செய்யுமாறே கூறிநின்றது. யுக்கிரெயின் யுத்தம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளிலும் தாக்கமேற்படுத்தி உள்ளது. காசா துண்டுநிலத்தை மையமாக்கொண்டு தோன்றியுள்ள மோதலைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால் புதிய உலகமொன்று நிர்மாணிக்கப்படுகின்ற நிலைமைக்குச் பயணிக்க இயலும். ஐக்கிய அமெரிக்காவும் மேற்குலக நாடுகள் சிலவும் தனிமைப்பட்டு ஏனைய நாடுகள் அனைத்துமே அவற்றுக்கு எதிராக அணிதிரளுகின்ற நிலைமை உருவாகக்கூடும். இந்த விடயங்களை கவனத்திற்கொள்ளாமல் இனிமேலும் பயணிக்க முடியாது.
இவையனைத்தின் மத்தியிலும் பலம்பொருந்தியவகையில் முகங்கொடுக்கின்ற ஒருசில நாடுகளின் அத்திவாரமாக அமைவது அவற்றின் தேசிய உற்பத்தியை அதிகரித்துள்ளமையாகும். தென் கொரியாவின் ஒரு வருடத்திற்கான ஏற்றுமதி வருமானம் 680 பில்லியன் டொலர்களாகும். எமது நாட்டில் 12 பில்லியன் டொலர்களாகும். புதிய சந்தைகளைக் கைப்பற்றிக்கொள்வதற்கான திட்டங்கள் அவர்களிடம் இருந்தது. ஆழகுச்சாதனப் பொருட்களைப்போன்றே செம்சசுங் போன்களில் உலகின் முதன்மை உற்பத்தியாளன் கொரியாவாகும். மனிதர்களின் இரசனையையும் இன்பத்தையும் தேடிச் செல்கின்ற பாதைகள் பலதரப்பட்டவையாக மாறியுள்ளன. மனிதர் ஒரே இடத்தில் நின்றுவிடுவார்களாயின் உலகம் நின்று நீண்டகாலமரகி இருக்கும். கொரியாவைப் போலவே சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் எதிர்காலத் திட்டங்கள் இருந்தமையால் கொவிட் நிலைமைக்குப் பின்னரும் யுக்கிரெயின் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையிலும் தாக்குப்பிடித்து வளர்ந்துவருகின்ற ஆற்றலை அவர்கள் அடைந்துள்ளார்கள். எனினும் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகள் அத்தகைய வளர்ச்சியை அடையவில்லை.
எனினும் எமது நாட்டில் இருப்பவர்கள் இன்னமும் தேர்தலின்போது சாதியடிப்படையில் வேட்பாளர்களைத் தெரிவுசெய்கின்ற பழங்குடித் தலைவர்களே இருக்கிறார்கள். அப்படியில்லாவிட்டால் இந்திய ஆலயங்களுக்குச்சென்று நேர்த்திக்கடன் வைக்கின்ற தலைவர்கள். ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியான பின்னர் வெளிநாட்டு விஜயங்களுக்காக ஸ்ரீலங்கன் விமான சவையை பாவிக்கவில்லை. காரணம் பஸ்ற் கிளாஸ் இன்மையாகும். பிரதமருக்கு மூவாயிரத்து தொள்ளாயிரம் இலட்சம் பெறுமதியான கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டது. அந்த வாகனங்களில் அதிகபட்சமாக பயணிப்பது 25 கிலோமீற்றராகும். எஞ்சிய தூரம் செல்வது ஹெலிகொப்டர்களில். மந்திரம் ஓதிய வளையல்களை அணிந்துகொண்டு பாதுகாப்பு புடைசூழ பாரிய வாகனங்களில் அவர்கள் பயணிப்பது தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் போன்றாகும். வெட்டுக்கத்தி மாத்திரமே குறைவு. நவீனத்துவத்தை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு முடியுமா?
திரைப்படக் கலையில், இசையில், இலக்கியத்தில் எத்தனை மாற்றங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன? எனினும் இரண்டுகோடியே இருபது இலட்சம் பேர் இருக்கின்ற எமது நாட்டில் இலக்கியப் புத்தகமென்றின் ஆயிரம் பிரதிகள் விற்பனையாவதில்லை. கவிதையை இரசிக்காத, திரைப்படத்தை இரசிக்காத, பாடலொன்றை இரசிக்காத, புதியவற்றை கற்றுக்கொள்ளத் தவறிய ஒரு நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பழைய தடைகளை அகற்றி நாட்டை மாற்றியமைக்கின்ற யுகத்தை நாங்கள் தொடங்கவேண்டும். பேராதனை பூங்காவின் வருமானத்திலிருந்து 1000 கோடி ரூபாவை செலவிட்டு தி.மு. ஜயரத்ன அம்புலுவாவவை அமைத்தார். அதன்பின்னர் அவருக்கு கீழிருந்த அமைச்சுக்களிலிருந்து பணம் செலவிட்டார். இறுதியாக அவர்களின் குடும்பத்திற்கு எழுதிக்கொள்வதற்காக பாராளுமன்றத்திற்கு சட்டமொன்றைக் கொண்டுவந்தார். இந்த நாட்டின் மலைகளை, பூங்காக்களை தமது குடும்பங்களுக்கு எழுதிக்கொள்ள தலைவர்களுக்கு எப்படிப்பட்ட நோய் இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட தலைலவர்கள் தமது குடும்பத்தையும் தம்மைச் சுற்றியுள்ள கொள்ளைக்கார கும்பலையும் உருப்படியாக்கிக்கொள்வதை மாத்திரமே செய்தார்கள். கடந்த 20 வருடங்களில் உலகம் பல பாரிய வெற்றிகளை அடைந்துள்ளது. எமது ஆட்சியாளர்கள் அந்தக் காலப்பகுதிக்குள் எமது நாட்டை பின்நோக்கித் தள்ளினார்கள். இந்த படுமோசமான, அயோக்கியத்தனமான, அசிங்கமான, மரபுரீதியான, பழங்குடித்தன்மைகொண்ட அரசியலை மாற்றியமைத்து நவீன தேசமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
எளிமை எமது அரசியல் கலாசாரமாக மாறவேண்டும். பிறருக்கு செவிமடுத்தல், சட்டத்தை மதித்தல் எமது கலாசாரமாக அமைதல் வேண்டும். பொதுமக்களின் ஒவ்வொரு சதமும் மீண்டும் மக்கள் சேவைக்காக ஈடுபடுத்தப்படுகின்ற அரசியல் கலாசாரம் தேவை. இந்த ஆட்சியாளர்களின் ஆடை அணிகலன்கள், நிறம் நவீனமானதாக இருக்கலாம். எனினும் அவர்களின் ஆசாபாசங்கள் ஒரு நூற்றாண்டைவிடப் பழமை வாய்ந்தது. அதனால்த்தான் பாராளுமன்றத்திற்குள்ளே அடிபட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் எந்த மனோநிலையில் செயற்படுகிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அந்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டுக்கு புரிந்தவற்றினால் ஏற்பட்ட அழிவினைப் பார்க்கிலும் அந்த தருணத்தில் செய்யவேண்டி இருந்தவற்றை செய்யாமையால் அதிக அழிவினை ஏற்படுத்தியுள்ளார்கள். உலகத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற வழிமுறைகளை மேற்கொள்ளாமையே அந்த அழிவாகும்.
தேசிய மக்கள் சக்தி உலகத்துடன் முன்நோக்கிச் செல்கின்ற ஆட்சியொன்றைக் கொண்டுவரும். அவர்கள் அதற்குத்தான் பயப்படுகிறார்கள். தேர்தலை நடத்தாமல் வெட்டுப்போடுவது அதற்காகத்தான். நாட்டில் வசிக்கின்ற அனைத்து இனக்குழுக்களினதும் உரிமைகளை ஏற்றுக்கொண்டு பாதுகாத்து சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் ஒற்றுமையை வளர்க்கின்ற ஆட்சியை நாங்கள் நிறுவுவோம். சிங்கள, தமிழ், முஸ்லீம் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அந்த அனைவரதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஆட்சியொன்றையே நாங்கள் அமைப்போம். தேசிய மக்கள் சக்தி கட்டியெழுப்புவது தேசிய ஒற்றுமையை பாதுகாக்கின்ற ஆட்சியையாகும். அதற்காக நாங்கள் அனைவரும் ஒழுங்கமைந்து பலம்பொருந்தியவகையில் முன்னணிக்கு வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். கம்பளை தொகுதியில் தேசிய மக்கள் சக்தியின் கொடியை உச்சத்தில் உயர்த்திவைக்க அனைவரையும் முன்னணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
“அரசியலமைப்பு சதிவேலைகளை செய்துகொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமெனப் பார்ப்போமே”
–தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கே.டீ. லால்காந்த–
நேற்றைய தினமானகும்போது மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதென்பதை நாமனைவரும் அறிவோம். அதற்கெதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பந்தம் ஏந்திய ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் நாங்களும் அதில் பங்கேற்போம். ரணில், ராஜபக்ஷாக்கள், மகிந்தானந்தாக்கள் ஒன்றுசேர்ந்து வாக்களிக்கின்ற உரிமையைப் பெற்றுக்கொடுக்காமல் பலவிதமான வெட்டுகளைப்போட்டு பயணிக்கின்ற பயணத்தை தொடங்கி உள்ளார்கள். எனினும் நாங்கள் தேர்தல் பாதைக்கு மேலதிகமாக அதிகாரத்தை மாற்றிக்கொள்ள இருக்கின்ற மாற்று வழிமுறைகள் பற்றியும் சிந்திக்கவேண்டி உள்ளது. ஆனால் தேர்தல் மூலமாக அதிகாரத்தைப் பெறுவதையே நாங்கள் மிகவும் விரும்புகிறோம். அதனாலேயே ரணில் வெட்டு போடும்போது நாங்கள் மூன்றாவது பாதையையும் தொடங்கியுள்ளோம் என்பதை கம்பளை தொகுதி மாநாட்டில் கூறவிரும்புகிறோம். தேர்தலை நடத்தாவிட்டால் ஆட்சியாளர்களை வேறுவிதத்தில் விரட்டியடித்திடுவதற்கான வேலைத்திட்டமொன்றையும் தொடங்கியுள்ளோம். அதில் ஒன்றுதான் எம்மிடம் இருக்கின்ற பிரமாண்டமான தொழிற்சங்கப் பலம். அதைப்போலவே மிகப்பெரிய கமக்காரர் , இளைஞர், மாணவர் போன்றே கலையமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.
கடந்த வருடத்தின் மே மாதத்தின் ஒன்பதாந் திகதி மகிந்தவிற்கு பிரதமர் பதவியைக் கைவிட்டுச்செல்லவேண்டி நேரிட்டது. விரும்பிச் செல்லவில்லை விரட்டியடிக்கப்பட்டார். அதுவும் ஒரு வழிமுறையாகும். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதி பதவியைக் கைவிட்டு ஓட்டம் பிடித்தார். அவை தேர்தலால் நிகழவில்லை. அந்த போராட்டம் அவ்வேளையில் பாராளுமன்றப் பக்கத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தால் அதனையும் கலைக்கவேண்டி நேரிட்டிருக்கும். அந்தப் பாதை பற்றியும் நாங்கள் ரணிலுக்கும் ராஜபக்ஷாக்களுக்கும் ஞாபகப்படுத்துகிறோம். தொழிற்சங்க இயக்கத்திற்கு மேலதிகமாக நகரங்களின் வர்த்தக சங்கங்கள், சட்டத்தரணிகள் சங்கங்கள் போன்ற அமைப்புகளும் இருக்கின்றன. அவர்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்துள்ளோம். ” உங்களின் ஆட்சியின்கீழ் தொடர்ந்தும் வேலைசெய்ய நாங்கள் தயாரில்லை, நீங்கள் அதிகரித்த மின்கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாரில்லை, நீங்கள் அதிகரித்த வரியைச் செலுத்த நாங்கள் தயாரில்லை. நீங்கள் போய்விடுங்கள்.” என்ற இடத்திற்கு நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாங்கள் வேலைசெய்கிறோம். அதன் பின்னர் எங்கள் ஆட்சியின் கீழ் டபிள் வேலை செய்வோம். அரசியலமைப்பு சதிகளைப் புரிந்துகொண்டு எவ்வளவு தூரம் போகமுடியுமெனப் பார்ப்போமே. நாங்களும் மாநாடுகளை நடாத்தி மக்களை ஒழுங்கமைத்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேலைசெய்து வருகிறோம். நாங்கள் தேர்தலுக்கு தயாராவோம். தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அவர்களை விரட்டியடிக்கும்வரை பேராடத் தயாராவோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
“நாங்கள் அசுப நேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே உழைக்கவேண்டும்“
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதுபெரும் கலைஞர் ஜகத் மனுவர்ண-
இன்று ஒரு முகூர்த்த நாள். ஆனால் நாங்கள் இருப்பதோ முழுநாட்டையுமே அசுபத்தில் அமிழ்த்திய ஆட்சியின் கீழாகும். அவ்வாறான ஒரு நாட்டில் சுபமுகூர்த்தத்தில் ஒன்றைத் தொடங்குவதற்கு முன்னராக நாங்கள் அசுப நேரத்தை முடிவுக்கு கொண்டுவரவே உழைக்கவேண்டும். அடைமழை பொழிகின்ற வானிலையைப் பொருட்படுத்தாமல் நீங்கள் இங்கு வந்திருப்பது இந்த அசுபநேரத்தை முடிவுக்க கொண்டுவரவே என்பது எமக்குத் தெரியும். இந்நறாட்டின் எதிர்காலத்தை அனைவருக்கும் சாதகமானதாக அமைத்துக் கொடுத்திட, இதுவரை ஆட்சியாளர்கள் புரிந்த பொய்களை விளங்கிக் கொண்டதாலேயே திசைகாட்டியைச் சுற்றி மக்கள் குழுமுகிறார்கள். இந்த பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் அன்றாட ஈட்டல்களில் தங்கிவாழ்வதைப்போன்றே அரசியல்வாதிகளிடமிருந்து ஏதேனம் சலுகைகளைப்பெற எதிர்பார்த்துள்ளவர்களாவர். அதனால் தமது அரசியல் அபிப்பிராயத்தை வெளிப்படுத்த இன்னமும் இவர்கள் பயப்படுகிறார்கள். அவ்வாறு பயமில்லாதவர்களே இங்கு குழுமி இருக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு தைரியமூட்டுவதற்கான ஒரு பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அதற்காக பலவற்றை சாதிக்கவேண்டும். இந்த ஆட்சியாளர்கள் புரிந்த அழிவுகளை தெளிவுபடுத்தவும் தேசிய மக்கள் சக்தி நாட்டைக் கட்டியெழுப்புகின்ற விதத்தை தெளிவுபடுத்தவும் அர்ப்பணிப்புச்செய்ய வேண்டும். 75 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரு கட்சிக்கும் அடுத்த தேர்தலில் அதிகாரத்திற்கு வரமுடியாதென்பது அனைத்துவிதமான மதிப்பாய்வு அறிக்கைகள் மூலமாகவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் தேர்தல் தேசப்படத்தை சுருட்டுவதற்கான பலவிதமாக தந்திரோபாயங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றிக் குழுமியுள்ளவர்கள் மக்களின் வாக்களிக்கும் உரிமைக்காக வீதியில் இறங்கி விளங்கக்கூடிய மொழியில் எடுத்துரைக்கவேண்டி நேரிடும்.
கம்பளை நகரத்தின் அசுத்தமான வடிகான் தொகுதி உள்ளிட்ட அனைத்துமே இன்றும் அவ்வண்ணமே நிலவுவது கம்பளையில் இருந்து பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னணியிலாகும். அவர்களின் பரம்பரையினர் வந்து இந்த நிலைமையை மாற்றித்தருவார்கள் என நினைக்கிறீர்களா? மரபுவழிச் சொத்தினால் அரசியல் புரிந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சிந்திக்கின்ற இலட்சக் கணக்கான மக்கள் திசைகாட்டியைச் சுற்றிக் குழுமியுள்ளார்கள். திசைகாட்டியின் ஆட்சி இனிமேலும் ஒரு கனவல்ல என்பதை முழுநாட்டு மக்களுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
“பாதிக்கப்பட்ட பெண்கள் அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளவேண்டும்”
-உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் கம்பஹா கம்பளை அமைப்புக்குழு உறுப்பினர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் சூலா குமுதினீ-
கட்சிசார்பற்றவர்களாக ஒன்றுசேர்ந்த மக்கள் போராட்டம் நடாத்தி முன்னாள் சனாதிபதியையும் பிரதமரையும் விரட்டியடித்தார்கள். எனினும் அதற்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஆட்சியாளர்களின்கீழ் மக்கள் பரம நிர்க்கதி நிலையுற்றார்கள். ஒரு பெண் என்றவகையில் இற்றைவரை நானும் நாட்டின் ஏனைய பெண்கள் சிந்திக்கின்ற விதத்திலேயே சிந்தித்தேன். குறிப்பாக அரசியல் எமக்கு உரிமையற்ற ஒன்றென நினைத்தேன். நாங்கள் தேடிக்கொண்டால் எமக்கு உண்டுகளிக்க முடியுமென நினைத்தேன். ஆனால் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்புடனும் முற்போக்கான மகளிர் கூட்டமைவுடனும் ஒன்றுசேர்ந்து செயலாற்றக் கிடைத்தபின்னர் பெயரளவிலான பிரபுக்கள் அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்ற அளவினை விளங்கிக்கொண்டேன். எமது உரிமைகளுக்காக குரல்கொடுக்கவேண்டுமென்பதை விளங்கிக்கொண்டேன். பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் உண்மையான அரசியல் மாற்றத்திற்காக அணிதிரளவேண்டுமென நாமனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இருளில் துலாவிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஒன்றூக முன்னணிக்கு வந்து ஒழுங்கமைந்து வெற்றியை நொக்கி வீறுநடைபோடவேண்டும்.
“தேசிய மக்கள் சக்தியைத் தவிர வேறு எவருடனும் அணிதிரள்வதில் அர்த்தமில்லை என்பது மக்களுக்குத் தெரியும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மௌலவி முனீர் முலாஃபர்-
சுதந்திரத்திற்குப் பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலவிதமான வாக்குறுதிகளை வழங்கி ஐந்து வருடங்களுக்கொருதடவை ஆட்சிக்கு வந்தவர்கள் பற்றி எமக்குத் தெரியும். தேர்தல் மேடைகளில் அவர்கள் கூறிய விடயங்களை நம்பி வாக்குகளை அளித்த நாங்கள் 75 வருடங்களுக்குப் பின்னர் நேர்ந்த அழிவுகளை அனுபவித்து வருகிறோம். எனினும் தேசிய மக்கள் சக்தியைத் தவிர்ந்த வேறு எவருடனும் அணிதிரள்வதில் அர்த்தமில்லை என்பதை மக்கள் விளங்கிக்கொண்டுள்ளார்கள். சனாதிபதி சந்திரிக்காவின் கீழ் அமைச்சர் பதவியை வகித்து பின்னர் பிரதமராகிய கம்பளை பிரதேசத்தைச் சேரந்த தி.மு. ஜயரத்னவைப் பற்றியும் ஹொரண ரத்னசிறி விக்ரமநாயக்கவைப் பற்றியும் நாங்கள் அறிவோம். அவர்கள் தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும் அந்த இருவரினதும் புதல்வர்கள் இருவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின்கீழ் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – ஐக்கிய தேசிய கட்சி என அடிபட்டுக்கொண்டாலும் அந்த பிரதமர்கள் இருவரினதும் புதல்வர்கள் இன்று இருப்பது ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் ஆகும்.
அந்த ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தமக்கு அடிமைச்சேவகம் புரிகின்றவர்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் பதவிகளைக் கொடுக்க செயலாற்றினார்கள். அந்த நிறுவனங்களில் தேவையான அளவில் பொதுப்பணத்தைக் கொள்ளையடிக்க இடமளித்தார்கள். அந்த பணத்தின் ஒருபகுதியை அந்த அரசியல்வாதிகளின் தேர்தல்களுக்காக மீண்டும் பெற்றுக்கொண்டார்கள். அந்த ஆட்சியாளர்களின்கீழ் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தவிதமான பேதமுமின்றி வீதியில் இறங்கி அசிங்கமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டுமென உரத்த குரலில் கூறினார்கள். போராட்டம் நடத்தினார்கள். அவ்வாறான நிலைமையில் நியமனம்பெற்ற ரணில் விக்கிரமசிங்க இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பார்களென ஒருசிலர் நினைத்தார்கள். எனினும் அவர் சனாதிபதியான இடத்தில் இருந்து அசிங்கமான காடைத்தனமான அரசியலை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். தேர்தலை சதிநிறைந்த வகையில் நடத்தாதிருப்பதற்காக ஆணைக்குழுவிலிருந்து பதவிவிலகிய அம்மையாருக்கு வடக்கின் ஆளுனர் பதவி வழங்கப்பட்டது. அவர்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டது இந்த அசிங்கமான கலாசாரத்தைப் பாதுகாப்பதற்காகவேயொழிய பொதுமக்களுக்கு நன்மை விளைவிப்பதற்காவல்ல. நாடு எவ்வளவு சீரழிந்துள்ளது எனக் கூறுவதாயின் இந்த வனப்புமிகு நாடு பங்களாதேஷின் முன்னிலையில் தோற்கடிக்கப்படுகின்ற நிலைமைக்கு இழுத்துப்போடப்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களின் வழிப்பறிக்கொள்ளை செயற்பாங்குகள் காரணமாக எமது நாட்டு மக்கள் இன்று உலகத்தார் முன்னிலையில் பிச்சையேந்துகின்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தமது வீட்டில் இருந்தாலும் வாடகை வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வு பெரும்பாலானோருக்கு எற்பட்டுள்ளது. எந்த நேரத்தில் தண்ணீரை மின்சாரத்தை துண்டிப்பார்கள் என்ற பிரச்சினையில் சிக்கியுள்ளார்கள். ஆனால் நாமனைவரும் நம்பிக்கையை தளரவிடக்கூடாது. அனைத்து இனத்தவர்களுக்கும் மதத்தவர்களுக்கும் “இலங்கையர்” எனும் பெருமையுடன் செயலாற்றக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியொன்றை நிறுவுவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.