(-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு – 2024.09.14-)
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு கிடைகின்ற முறைப்பாடுகளை பிரதேச மற்றும் வட்டாரசபை மட்டத்தில் கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களை நியமித்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்து இற்றைவரையான காலப்பகுதியை ஒட்டுமொத்தமாக நோக்கினால் தேர்தல் சட்டமீறல்களில் துரித அதிகரிப்பு காணப்படுகின்றது. தேர்தல் சட்டங்களை மீறுதல் பற்றிய 392 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதோடு, சட்டவிரோதமான பிரச்சாரம் 186, சட்டரீதியான தேர்தலுக்கு தடையேற்படுத்துதல் 06, வன்செயல்கள் 30, மக்கள் அபிப்பிராயத்திற்கு முறையற்ற அழுத்தம் பிரயோகித்தல் 120, அரச வளங்களின் முறையற்ற பாவனை 73 மற்றும் அரச உத்தியோகத்தர்களை பாவித்தல் 39 என்றவகையில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களை பாவித்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை மையப்படுத்தி பாரிய சேறுபூசுதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடமென உணர்த்தக்கூடியவகையில் தயாரித்த போலியான தகவல்களையும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை திரிபுபடுத்தியும் தொகுத்தமைத்து தயாரித்த காணொளிகளைப்போன்றே தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் பெயரில் தயாரித்த போலியான மருத்துவ அறிக்கை போன்றவற்றை பிரசுரித்துள்ளார்கள். அந்த மருத்துவ அறிக்கை உண்மையானதென காட்டுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கடிதத்தலைப்பின்கீழ் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி திரு. சுனில் வட்டகலவின் போலியான கையொப்பத்துடன் தயாரித்த போலியாவணத்தையும் சமூகமயப்படுத்தி உள்ளார்கள். அது சம்பந்தமாக புலன்விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சமூக ஊடக முறைப்பாடுகள் பிரிவிற்கு விடயங்களை முன்வைத்தோம்.
தேர்தல்கள் சட்டம் மாத்திரமன்றி அதற்கு அப்பால்சென்ற தண்டனைச் சட்டக்கோவையில் காட்டப்பட்டுள்ள போலியாவணம் புனைதல் எனும் குற்றச்செயலையும் புரிந்துள்ளார்கள். போலியான மருத்துவக் குறிப்பினை பிரசுரித்த பின்னர் ஆசிரி வைத்தியசாலையின் உத்தியோகபூர்வ “பேஸ் புக்” தளத்திலிருந்து மும்மொழியிலும் அறிவித்தல்களை விடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவக் குறிப்பு போலியானதென சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த போலியான குறிப்பினை தொலைக்காட்சி உரையாடலொன்றின்போதும் காட்டுவதற்காகவும் பிரயோகித்தார்கள். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் பொலீசுக்கும் முறைப்பாடு செய்தாலும் அவற்றை தடுத்துநிறுவத்துவதற்காக தெளிவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை புலனாகவில்லை. நியாயமான தேர்தலொன்றை நடத்துவது மாத்திரமன்றி அதற்காக பின்புலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். தேர்தல்கள் சட்டத்தை ஒருபுறம் வைத்தாலும் சாதாரண சட்டம் சீராக அமுலாக்கப்படுகின்றதென நாங்கள் நல்லெண்ணத்துடன் நம்பிக்கை வைத்திருக்கிறோம். “புதிய பாதை தேசிய இயக்கம்” எனும் அமைப்பினை உருவாக்கிக்கொண்ட ஒருவர் அதன் செயலாளராக அனில் சாந்த பர்னாந்து என்ற பெயரில் தோற்றி, ஊடக கலந்துரையாடலொன்றையும் நடாத்தினார். அவர் 21 ஆந் திகதிக்குப் பின்னர் மதம்சார் வன்முறையொன்று வருமெனவும் மக்கள் விடுதலை முன்னணி ஆயுதங்களை சேகரித்து வருவதாகவும் பாரதூரமான ஒரு கூற்றினை வெளியிட்டுள்ளார். இல்லாத பீதிநிலையை சமூகத்தில் உருவாக்கிட முயற்சிக்கின்ற அவர்கள் தேர்தல்கள் சட்டத்திற்கும் அப்பால்சென்ற சிவில் மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தை (ஐ.சீ.சி.பி. ஆர்.) மீறுவதில் ஈடுபட்டுள்ளார். மக்கள் மத்தியில் சமூக சகவாழ்வினை இல்லாதொழிக்க மேற்கொள்கின்ற முயற்சியாகும்.
இந்த சர்வதேச சமவாயத்திற்கிணங்க இந்த நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை எவ்வளவு பலம்பொருந்தியதாக அமுலாக்கினார்கள் என்பது கடந்த காலங்களில் நன்றாகவே சித்தரிக்கப்பட்டது. சமூகத்தில் சட்டத்திற்கிணங்க நடந்துகொள்ளத் தெரியாவிட்டால் அந்த ஆட்களை சட்டத்தினால் கட்டிப்போட வேண்டும். தமது மண்டைகளில் இருக்கின்ற திரிபுநிலைகளை சமூகமயப்படுத்தி மற்றவர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற வகையில் நடந்துகொள்வார்களாயின் இது ஒரு பாரதூரமான நிலைமையாகும். அமைதியான சுயாதீனமான தேர்தலுக்கான சுற்றுச்சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளவேளையில் இவ்வாறான ஆட்கள் மேற்கொண்டு வருகின்ற திகிலூட்டுகின்ற பிரச்சாரங்கள் சம்பந்தமாக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படல் வேண்டும். இவ்வாறான செயல்கள் தொடர்பில் நாட்டில் சட்டத்தை அமுலாக்குகின்ற நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.
கடந்த 07 ஆந் திகதி தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் மாநாட்டுக்கு நாடு பூராவிலும் பரந்துள்ள சட்டத்தரணிகள் வருகைதந்திருந்தவேளையில் ஒரு போத்தல் தண்ணீர் மாத்திரமே கொடுத்தோம். எனினும் அன்றைய தினம் மாலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சந்திப்பின் பின்னர் இராப்போசன விருந்து மதுபானத்தை உள்ளிட்டதாகவே வழங்கப்பட்டது. அது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நாங்கள் அதனை நடாத்துவதற்கு முன்னராகவே முறைப்பாடு செய்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலைவேளையில் 2,800 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட எமது சட்டத்தரணிகள் மாநாடு நடாத்தப்பட்டபோதிலும் மாலையில் அவர்கள் அதே வளவில் நடாத்திய மாநாட்டில் தேர்தல் சட்டத்தை மீறி செயலாற்றி உள்ளார்கள். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின்படி சனாதிபதி வேட்பாளர்கள் அனைவருக்கும் நியாயமாக நடந்துகொள்வார்களென நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேர்தல் சட்டத்தைப்போன்றே தண்டனைச் சட்டக்கோவையையும் மீறுதல் தொடர்பில் அந்த நிறுவனம் கடுமையாக இயங்கிவருமென நாங்கள் நம்புகிறோம்.
“தேர்தல்கள் ஆணைக்குழு தனது தத்துவங்களின்படி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் பிரதானீ இளைப்பாறிய சிரேட்ட பிரதிப் பொலீஸ் மா அதிபர் மார்க் குணவர்தன-
இன்று முதல் ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஏழு நாட்கள் மாத்திரமே இருக்கின்றன. ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான சட்டத்தின்படி சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே இருக்கிறது. அந்த பொறுப்பினை நடைமுறையில் ஈடேற்றுகையில் பொலீஸாரும் ஏனைய அரச சேவைகளும் உதவி புரிகின்றன. இவ்விதமாக நடாத்தப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றி நாட்டின் எல்லாபக்கங்களிலும் உறுதியாகி உள்ளது. நாங்கள் இதுவரை முன்வைத்துள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடமிருந்து எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை. 2024 செப்டெம்பர் மாதத்தில் இலங்கை மன்றக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் விருந்துபசாரமொன்ற நடைபெற்றது. இதுவும் மக்கள் அபிப்பிராயத்தை மாற்றுவதற்கான உபசரிப்பாக நிலவுகின்றது. அதைப்போலவே சுகாதார அமைச்சர் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு “வோட்டர்ஸ் எஜ்” ஹோட்டலில் கூட்டமொன்றை நடாத்துவதற்காக அழைப்பு விடுத்திருந்தார். அது நடாத்தப்பட்டது. எந்தவிதமான தயக்கமும் அச்சமுமின்றி சனாதிபதியின் உத்தியோகபூர்வ “பேஸ்புக் கணக்கில்” இது நேரலையாக பிரசுரமாகியது. அவர்கள் சட்டத்தை மீறி எம்மை குறைகூறுகிறார்கள்.
கடந்த 13 ஆந்திகதி நிரொஷன் பாதுக்க இணைப்பாக்கம்செய்து “சினமன் லேக்’ ஹோட்டலில் போசன விருந்தொன்று நடாத்தப்பட்டது. அதில் ஒரு பீங்கான் சாப்பாட்டின் பெறுமதி ரூபா 5,500 விட அதிகமாகும். அதைப்போலவே பிலியந்தலையில் சனாதிபதியின் கூட்டமொன்றை நடாத்த நீர்கொழும்பு டிப்போவிலிருந்து லங்கம சாரதிகள், நடாத்துனர்கள் மற்றும் ஏனைய குழுவினரை ஈடுபடுத்தி சட்டவிரோதமான போக்குவரத்து அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஏதாவது நடந்தபின்னர் அந்த இடங்களுக்குச் செல்வதில் பலனில்லை. எனினும் எதிர்காலத்திலேனும் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைவாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நம்புகிறோம். அதன் மூலமாக உண்மையாகவே சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
“வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது”
-தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் அங்கத்தவர் இளைப்பாதறிய பொலீஸ் அத்தியட்சகர் எச்.யூ. பியனந்த-
இன்னும் ஆறு நாட்களில் இந்நாட்டின் ஜனாதிபதியாக எவரை நியமித்துக்கொள்ள வேண்டுமென்பதை பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏனைய பிரதான வேட்பாளர்கள் பலவிதமான வன்செயல்களுக்கு தூபமிட்டு வருகிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மிகுந்த கவனத்துடன் கீழ்மட்ட அங்கத்தவர்கள் வரை வார்த்தையால்கூட எந்தவிதமான துன்புறுத்தலையும் புரியவேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இருக்கையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பிரதான அலுவலகத்திற்கும் பம்பல தேர்தல் அலுவலகத்திற்கும் கறுப்பெண்ணெய் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக நேற்று (13) மொனறாகலையில் நடைபெற்ற எமது கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள்நிறைந்த பஸ்வண்டிமீது புத்தல, மஹபொடயாய பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் முன்னால்வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இன்றளவில் தேசிய மக்கள் சக்தியை சுற்றி மக்கள் திரண்டுவருவதை தாங்கிக்கொள்ள முடியாமலேயே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள். எமக்கு இதுபற்றி அறிவித்ததும் புத்தல பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்து இது சம்பந்தமாக வெளிப்படைத்தன்மைகொண்ட விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அறிவித்தோம். நாங்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலாகும். அவர்கள் எமது கூட்டமைவைச்சேர்ந்த மூவரைத் தாக்கியுள்ளதோடு அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குகிறார். அவருக்கு ஆறு தையல்கள் போடப்படப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவலின்படி சீ.பீ.ஐ. 1077 இலக்கமுடைய அல்ட்டோ காரில்வந்த குழுவினர் மதுபானங்களை பகிர்ந்தளித்து தாக்குதல் நடாத்த தூண்டியுள்ளார்கள். அது சம்பந்தமாக சாகர எனும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு வாக்குமூலத்தை வழங்கியவேளையில் மதுபானம் வழங்கி பஸ் வண்டிகளுக்கு தாக்குதல் நடாத்துமாறு அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டுள்ளார். அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர் அல்லது குழுவினர் எதேனும் வன்செயலை கட்டவிழ்த்துவிட்டால் பொலீஸார் முறைப்படி செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. புத்தல தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அனைவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறான வன்முறைச்செயல்களை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது. புத்தல தாக்குதலுடன் தொடர்புடைய அண்ணன், தம்பி ஆகிய பிரதான சந்தேகநபர்கள் பொலீஸில் சரணடைந்துள்ளார்கள். இந்த நாட்டின் அமைதியை விரும்புகின்ற பிரஜைகள் இவ்வாறான செயல்களுக்கு ஒருபோதுமே இடமளிப்பார்கள் என்பதை நாங்கள் நம்பமாட்டோம்.