-Colombo, November 06, 2023-
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியைப் பெற்றுக்கொண்ட ஆரம்ப காலத்தில் பெறுமதி கணிக்கப்பட்ட ரூபா 50/- இறக்குமதித் தீர்வையை 25 சதத்திற்கு குறைத்ததால் புரிந்த வேலையையே தற்போது ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் 25 சத வரியை ரூபா 50/- வரை அதிகரித்து தமது கூட்டாளிகளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மக்கள் இருப்பது பிரமிட் வில்மா எனப்படுகின்ற கம்பெனியை முதன்மையாகக்கொண்ட கூட்டாளிகள் சிலருக்கு செல்வத்தைக் குவிக்க வாய்ப்பினை எற்படுத்திக்கொடுக்கும் அளவிலான பின்புலத்தில் அல்ல. மரத்தால் வீழ்ந்தவனுக்கு மாடு ஐந்தாறு தடவைகள் முட்டியதுபோல் அரசாங்கம் எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம், வற் வரியை அதிகரித்து பலவிதமான வாதங்களை கொண்டுவருகின்றது. சீனி வரியை விதித்தல் சம்பந்தமாக வர்த்தக அமைச்சர் நளீன் பர்னாந்து பொறுப்புக்கூற வேண்டும். இந்த வரி திடீரென ஏன் அதிகரிக்கப்பட்டதென்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சந்தையில் நிலவுகின்ற விலைகளில் பாவனையாளர் அதிகாரசபை விதிக்கின்ற அதிகபட்ச விலை மற்றும் வரி விதிக்கப்பட்ட பின்னர் தனிவேறாக வற் என்ற வகையில் சீனி சம்பந்தமாக பல்வேறு விலைமட்டங்கள் நிலவுகின்றன. சீனிக்காக 25 சத வரியைச் செலுத்தி துறைமுகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளப்பட்ட சீனிக்காக ரூபா 50/- வரியை விதித்ததன் மூலமாக ரூ 40.75 வரியை ஒரு கிலோவுக்காக செலுத்தாமல் பாரிய இலாபத்தை ஈட்டிக்கொள்ள இடமளிக்கப்பட்டுள்ளது.
எமக்கு பதிவாகின்ற விதத்தில் ஏறக்குறைய 850 மெட்றிக்தொன் சீனியை இறக்குமதிசெய்த கம்பெனிகளுக்கு இந்த வரி காரணமாக மேலதிக இலாபம் கிடைத்துள்ளது. 2023 அக்டோபர் 30 ஆந் திகதி 520 மெட்றிக் தொன் சீனியை வில்மா கம்பெனி 25 சதத்தை செலுத்தி விடுவித்துக் கொண்டுள்ளது. முன்னர் மிகப்பெரிய நன்மையைப் பெற்றதும் இதே கம்பெனிதான். இந்த சீனித் தொகையினை நவெம்பர் 01 ஆந் திகதி விடுவித்துக் கொண்டதும் உடனடியாக இரண்டாந் திகதியில் இருந்து அமுலுக்கு வரத்தக்கதாக ரூபா 50/- வரி விதிக்கப்படுகின்றது. தற்போது நாங்கள் கடைக்குச் சென்றால் எமக்கு ஒரு கிலோவைக் கொடுப்பது 25 சத வரிக்காக அல்ல, ரூபா 50/- வரி சேர்க்கப்பட்ட சீனி விலைக்காகும். இந்த செயற்பாங்கு கபடத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. இந்த சீனித் தொகையிலிருந்து மாத்திரம் அண்ணளவாக 25 மில்லியன் ரூபா மேலதிக இலாபம் கிடைக்கிறது. இதுபோன்ற சூழ்ச்சிகளால் அரசாங்கம் இழக்கின்ற வரியைப் பற்றி நன்றாக விளங்கிக்கொள்ள அன்று ராஜபக்ஷாக்கள் சீனி வரி சம்பந்தமாக மேற்கொண்ட நடவடிக்கைபற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையிலிருந்து விடயங்களை முன்வைக்கிறேன். அரசாங்கத்தின் கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்த அறிக்கையில் “வெள்ளைச் சீனிக்காக அர்ப்பணித்த வரி” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜபக்ஷாக்கள் அன்று பிரமிட் வில்மா கம்பெனிக்கு அர்ப்பணித்த வரியைப்போன்றே ரணில் விக்கிரமசிங்க தற்போது அர்ப்பணித்துள்ளார். அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த பதினாறாயிரத்து எழுநூற்றி அறுபத்தி மூன்று மில்லியன் வரி வருமானத்தை 2020 அக்டோபர் 17 ஆந் திகதி தொடக்கம் 2021 பெப்புருவரி 28 ஆந் திகதி வரை இழந்துள்ளதாக இந்த அறிக்கையில் கணக்காய்வாளர் தலைமை அதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த செயற்பாங்கு காரணமாக ஆயிரத்து அறுநூற்று எழுபது கோடி ரூபா வரி வருமானம் இழந்தமைக்கு மேலதிகமாக மேலும் பல வருமான இழப்புகள் பற்றிய பட்டியலொன்றை கணக்காய்வாளர் தலைமை அதிபதி சமர்ப்பித்துள்ளார். சதொசவிற்கு சீனி விற்பனையால் 102 மில்லியன், இறக்குமதி அபராதக் கட்டணம் குறைத்தமையால் 433 மில்லியன், உரிமம் பெறாமல் இறக்குமதி செய்தமையால் 283 மில்லியன், இறக்குமதிக் கட்டுப்பாட்டாளர் உரிமக் கட்டணத்தை இழந்தமையால் 203 மில்லியன், சுங்கக் கட்டணம் 267 மில்லியன் என்றவகையில் மேலதிக வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இந்த வருமானம் கூட்டாளிக் கம்பெனிகளுக்கிடையில் இலாபமென்றவகையில் பகிர்ந்துசெல்ல இரண்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து எழுநூற்றி பதினைந்து மெட்றிக்தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்த அளவில் 45% பிரமிட் வில்மா கம்பெனியாலேயே கொண்டுவரப்பட்டது. வில்மா கம்பெனிக்கு மாத்திரம் 622 கோடி மேலதிக இலாபம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஆயிரம் கோடி மேலும் ஒன்பது கம்பெனிகளுக்கிடையில் பகிர்ந்துசென்றுள்ளது. இது சம்பந்தமாக நாங்கள் நீதிமன்றத்தில் முறைப்பாடொன்றினை தாக்கல் செய்துள்ளோம்.
பாவனையாளர் அதிகாரசபையினால் வெள்ளை சீனிக்கான உச்ச சில்லறை விலை ஒரு கிலோவிற்கு 275/- எனவும் பழுப்பு சீனிக்கான உச்ச சில்லறை விலை ஒரு கிலோவிற்கு 330/- எனவும் குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. இந்த வர்த்தமானிக்கிணங்க சீனி விற்பனை செய்யப்பட்டாலும் மோசடியை சட்டபூர்வமானதாக்கியதன் மூலமாக கம்பெனிகளுக்கு மேலதிகமாக பாரிய இலாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சந்தையில் தற்போது 330/- ரூபாவிற்கும் சீனி விற்பனை செய்யப்படுகின்றது. அரசாங்கம் கூறுகின்ற உச்ச விலை தேநீர் பருகுகின்ற, சாயம் குடிக்கின்ற மக்களுக்கு அமுலாக்கப்படுவதில்லை. சீனியைப் பாவித்து தயாரிக்கப்படுகின்ற அனைத்து உணவு வகைகளினதும் விலை அதிகரிக்கின்றது. திடீரென இந்த வரியை விதிக்கக் காரணம் அக்டோபர் மாதத்தில் மாபெரும் அளவிலான சீனியைக் கொண்டுவந்து இலங்கை மக்களை எறும்பு தின்று இறக்கின்ற நிலைமை உருவாகியதாலா? அவ்வாறின்றேல் இந்த வரியை அதிகரிக்க ஏதுவாக அமைந்த காரணங்களை அமைச்சர் நாட்டுக்குக் கூறவேண்டும். அடுத்ததாக நடைபெறப் போகின்ற தேர்தல்களின்போது பிரமிட் வில்மா ரணில் விக்கிரமசிங்கவிற்கு பணத்தை அள்ளிவீசுவதற்கான முயற்சியா இது? சந்தைக்கு வருவதற்கு முன் 520 மெட்றிக் தொன் சீனியிலிருந்து 25 மில்லியன் ரூபா இலாபத்தை ஒரு கம்பெனிக்கு வழங்கிய சூதாட்டமே இங்கு இடம்பெற்றுள்ளது. இந்த சூதாட்டத்தை நிறுத்த வேண்டும். இதற்கு முன்னர் இதே தீத்தொழில் புரிபவர்கள் அரசாங்கத்திற்கு இழக்கச்செய்வித்துள்ள வரித்தொகையின் அளவினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி வெளிக்கொணர்ந்துள்ள வேளையில் மீண்டும் அவர்களுக்கே சீனி வரியை அதிகரித்ததன் மூலமாக அநுகூலம்பெற இடமளித்துள்ளார்கள் என்பதை மக்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறோம். அனைத்திலிருந்தும் கைநழுவிச் செல்கின்ற அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரைக் கேள்விக்குட்படுத்துமாறு நாங்கள் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். வரி விதிக்கப்படுவதை அறிந்து தகவல்கள் எவ்வாறு வெளியில் சென்றன எனவும் கோள்வி கேட்கிறோம். இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அநுகூலம் பெறுவதற்காக அல்ல.
“அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பதிற்செயலை வெளிக்காட்டும்போது “கடனிறுக்க வகையற்ற சர்வாதிகாரத்தை” நோக்கிப் பயணிக்க முயற்சி செய்கிறார்களா எனும் சந்தேகம் எமக்குத் தோன்றுகிறது.” –தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் – பேராசிரியர் அனில் ஜயசிங்க–
இத்தருணத்தில் நாடும் மக்களும் எவ்வளவு ஆழமான பிரச்சினைகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருகிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். பிரச்சினைகளிலிருந்து மக்களை மீட்டெடுப்பதாகக்கூறி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் தற்போது சாதாரண பொதுமக்கள்மீது மென்மேலும் பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்து வருகின்றது. குறிப்பாக 2024 ஆண்டுடன் தொடர்புடைய வரவுசெலவு வருவதற்கு முன்னராகவே இந்த வரிவிதித்தல் இடம்பெறுகின்றது. சீனி வரிக்கு மேலதிகமாகவே சேர்பெறுமதி வரி (வற்) 18% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரில் வரிகளை அதிகரிப்பதன் மூலமாக சாதாரண மக்கள் கைகளில் உள்ள பணத்திலிருந்து கொள்வனவு செய்யக்கூடிய பண்டங்களின் அளவு வேகமாக வீழ்ச்சியடைவதே இடம்பெறும். எரிபொருள், மின் கட்டணம், கேஸ் விலையை அதிகரித்து வருகின்ற பின்னணியில் வற் வரியும் மற்றுமொரு சுற்றில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புகையிலை மற்றும் புகைக்கும் பொருட்கள் மூலமாக அறவிடப்படத்தக்கதாக இருந்த 113 பில்லியன் வரியை அறவிட்டுக் கொள்ளாமல் போர்ட் சிட்டி போன்ற விசேட இடங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட அதானி போன்ற வெளிநாட்டுத் தீத்தொழில் புரிபவர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏன் அவ்வாறான நிலைமை வரவுசெலவுக்கு முன்னராகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது? ஐ.எம்.எஃப். இன் அடுத்த கடன் தவணையை பெற்றுக்கொள்ள அவசியமான நிபந்தனைகளை ஈடேற்றுவதே இங்கு இடம்பெறுகின்றது. அவர்களின் நிபந்தனைகள் மத்தியில் அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதே முதன்மைத்தானம் வகிக்கின்றது. அதைப்போலவே அரசாங்கத்திற்குச் சொந்தமான வளங்களை விற்குமாறு நிர்ப்பந்தித்தலாகும். ஐ.எம்.எஃப். பணிப்புரைகளுக்கிணங்க இலக்காகக்கொள்ளப்பட்ட வரி வருமானத்தின் 15% செத்தெம்பர் இறுதியளவில் அறவிடப்பட்டிருக்கவில்லை. இந்த வருடத்தில் அந்த வரியை அறிவிட்டுக்கொள்வதற்காக பொதுமக்கள் மீது திணிப்பதே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நாணய நிதியத்தினாலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் வரி அறவிடல் பற்றிய விபரங்கள் தொடர்பில் உங்களின் கவனத்தை ஈர்க்கச்செய்விப்பது அவசியமானதாகும். உலக நாடுகளில் அந்தந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஐ விட அதிகமான அளவினை அந்தந்த அரசாங்கங்கள் வரியாக அறவிட்டுக்கொண்டுள்ளன. இத்தகைய அளவிலான வரியை அறிவிட்டால் மாத்திரமே மக்களுக்கு அவசியமான பொது வசதிகளை வழங்க முடியும். ஆசிய பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 20% வரியாக அறவிட்டாலும் இலங்கையில் அந்த அளவு 10% ஐ விடக் குறைவானதாகும். எனினும் ஆசியாவில் மிகவும் அதிகமான நேரில் வரிகள் இலங்கையிலேயே நிலவுகின்றன. அதைப்போலவே வருமான வரி அறவிடுகின்ற அளவும் 36% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேரில் வரியையும் வருமான வரியையும் மிகவும் அதிகமான சதவீதத்தில் அறவிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஐ விடக் குறைவான அளவினையே பொதுமக்கள்மீது அனைத்துவிதமான அழுத்தங்களையும் சுமத்தியே அரசாங்கத்தின் வரியாக அறவிடப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் கூட்டாளிகளான தீத்தொழில் புரிபவர்களுக்கு வரி வலையிலிருந்து தப்பிச்செல்ல இடமளிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிப்பெறுபேறு மக்கள் மென்மேலும் அழுத்தங்களுக்கு இரையாவதாகும். ஒருபுறத்தில் மக்களின் வாழ்க்கையை குற்றுயிராக்குதல் இடம்பெற்று வருவதோடு மறுபுறத்தில் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாங்கு நலிவடையவும் இந்த வரிகள் தாக்கமேற்படுத்தி உள்ளன. ஒட்டுமொத்த கேள்வி குறைவடைந்தவிடத்து பொருளாதார வளர்ச்சி செயற்பாங்கிற்கு உந்துசக்தி கிடைக்கமாட்டாது. அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு நிலவுகின்றது.
குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு பேணிவருகின்ற உற்பத்திகளுக்கும் சந்தையில் நிலவுகின்ற கேள்வி இல்லாதொழிகின்றது. இறுதியில் அனைத்தினதும் நன்மைகள் கிடைப்பது கொள்ளைக்காரப் கும்பலுக்கு மாத்திரமேயாகும். தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை என்றவகையில் இத்தருணத்தில் எம்மால் செய்யக்கூடியது சம்பந்தப்பட்ட விடயங்களை மக்களுக்கு விளக்கிக்கூறுவது மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் ஊழல்மிக்க மற்றும் தவறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை மாத்திரமே இவ்வேளையில் செய்யமுடியும். அதற்கு மேலதிகமாக விசேடமாக செய்யவேண்டியது ஊழலற்ற ஆட்சியொன்றை நிறுவவேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்திக் கூறுவதாகும். மக்களால் இனிமேலும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பதிற்செயல் புரிகையில் ” கடனிறுக்கவகையற்ற சர்வாதிகாரத்தை” நோக்கிச்செல்ல முயற்சி செய்கிறார்களா எனும் கடுமையான சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஏற்கெனவே இவ்விதமாக வரிகளை விதித்து எதிர்வரும் வரவுசெலவிலும் மீண்டும் அழுத்தத்தைக் கொடுத்து கடனிறுக்கவகையற்ற சர்வாதிகாரத்திற்கான பாதையை அமைத்துக்கொண்டு மக்களை அடக்கியாள முயற்சி செய்கிறார்களா? 2024 ஆம் ஆண்டுக்காக முன்வைத்துள்ள செலவுத் தலைப்புகளுக்கு அமைவாக மிகவும் அதிகமான பணத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது மக்களின் பொது வசதிகளுடன் தொடர்புடைய செலவுகளுக்காகவல்ல. அந்த செலவுகளை வெட்டிவிட்டு சனாதிபதிக்கும் அவரைச் சுற்றியுள்ள குழுக்களுக்கும் பாதுகாப்புப் பிரிவுகளுக்கும் செய்கின்ற செலவுகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளே காணப்படுகின்றன. தற்போது விதிக்கப்பட்டுள்ள வரிச்சுமை மாத்திரமன்றி வரவுசெலவு மூலமாக வருங்காலத்தில் மேலும் பாரியளவில் நேரில்வரிகளை அறிவிட்டுக்கொள்கின்ற ஆபத்து நிலவுகின்றதென்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது சம்பந்தமாக விழிப்புணர்வூட்டப்பட்டு ஒழுங்கமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்
கேள்வி :- விளையாட்டுத்துறை மூலமாக எமது நாட்டுக்கு பணம் தேடிக்கொள்ள முடியாதா?
பதில் :- முடியும். யுறோக்களில், டொலர்களில் பணத்தை ஈட்டிக்கொள்ள முடியும். விளையாட்டு அணிகளுக்கு மாத்திரமல்ல விளம்பரங்கள் மூலமாகவும் பணத்தை ஈட்டிக்கொள்ள முடியும். ஆனால் தற்போது கிரிக்கெற் பற்றியே விசேடமாக பேசப்படுகின்றது. கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபை ஈடுபடாதது கிரிக்கெற்றுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் மாத்திரமே. கிரிக்கெற் நிறுவன உத்தியோகத்தர்களின் பிரத்தியேக கணக்குகளுக்கு பணம் சென்றவிதம் வெளிப்பட்டுள்ளது. அதனால்த்தான் ஒருசிலரது தனிப்பட்ட முதுசமாக கிரிக்கெற் கட்டுப்பாட்டுச் சபையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டுக்கு வருகின்ற வருமானத்தை பகிர்ந்து கொள்வதற்கான பாரிய போட்டியே சபைக்குள்ளே நிலவுகின்றது.
கேள்வி :- அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இடைக்கால நிருவாக சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சிக்கல்களுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அந்த சபைக்கு இயலுமா?
பதில் :- என்னால் அதுபற்றி இப்போதே சரியான பதிலைக் கூறமுடியாது. காரணம் அந்த சபையை நிறுவி இன்னமும் ஒரு நாள்தான் கழிந்துள்ளது. ஆனால் இவ்வாறு கூறலாம். எவர் நியமிக்கப்பட்டாலும் வேறு தில்லுமுல்லுகள் இடம்பெறாமல் கிரிக்கெற் விளையாடினால் எமது நாட்டில் கிரிக்கெற்றை உருப்படியாக்க முடியும். இந்த விளையாட்டு எமது மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிப்போயுள்ளது. பொருட்களின் விலைகளால் வரிச் சுமையினால் இவ்வளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதனால்த்தான் கிரிக்கெற் மீது விரக்தியடைந்துள்ளார்கள். கிரிக்கெற் தோல்வியால் வேதனை அடைந்துள்ளமைக்கான காரணம் அவர்கள் கிரிக்கெற்றை நேசிப்பதாலாகும்.