(-தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் ஊடக சந்திப்பு – 2024.09.02-)
எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியுடன் இளைப்பாறிய முப்படைக்கூட்டமைவின் அதிட்டன கூட்டமைவில் ஏறக்குறைய 40,000 போ் நாட்டில் முனைப்பாக செயலாற்றி வருகிறார்கள். இந்த நாட்டுக்காக ஒழுக்கமுடையவர்களாக பொறுப்புக்களை வெற்றிகரமாக ஈடேற்றி இளைப்பாறியுள்ளதோடு இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை எம்மால் தெளிவாக காணக்கிடைத்தது. இந்த நிலைமையிலிருந்து மீண்டெழ நாம் ஈடேற்ற வேண்டிய செயற்பொறுப்பினை ஈடேற்றல் பற்றி விசாரித்தறியும்போது தேசிய மக்கள் சக்தி முன்னோக்கி வருகின்ற விதத்தை நாங்கள் கண்டோம். அவர்களுடன் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி எமது இரண்டாவது அரும்பணியாக 2021 இறுதியில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அதிட்டன கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம். கழிந்து சென்ற இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற எமது இளைப்பாறியவர்கள் கூட விசேட அர்ப்பணிப்பினை செய்தார்கள். நாங்கள் பெற்றுள்ள தொழில்சார் அறிவையும் ஆற்றலையும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து வழங்கத் தொடங்கினோம். எமது இளைய தலைமுறையினரைப் போன்றே ஒட்டுமொத்த மக்களையும் நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் முனைப்பான சேவையில் இருந்த காலத்தில் மனிதப் பண்புடையவர்களாக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட அனுபவங்களை உச்சளவில் பயன்படுத்தி இந்த விசேட பணிக்காக எமது ஒத்துழைப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் ஏனைய கட்சிகளும் அரசாங்கமும் நினைத்துப் பார்க்காத அதிர்ச்சிக்கு இலக்காகியுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சிகளும் குழுக்களும் அதிட்டன முப்படைக் கூட்டமைவு சம்பந்தமாக பல்வேறு சேறுபூசல்களையும் குறைகூறல்களையும் எடுத்தியம்புகின்ற வீடியோக்களையும் போஸ்ட்களையும் ஊடகங்களில் பிரசுரித்து வருகின்றன. திசைக்காட்டிக்கு எதிராக செயலாற்றி வருகின்ற அரசியல் கட்சிகள்கூட ஊடக சந்திப்புக்களை நடத்தி அதிட்டன கூட்டமைவின் செயற்பாடுகள் பற்றி போலியான, பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
அதனால் யுத்தம் நடைபெற்ற கடந்த காலத்தில் இந்த அங்கத்தவர்கள் பாரிய மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் என்பதை முதலிலேயே வழியுறுத்தினேன். நாங்கள் தேசிய மக்கள் சக்தியை நம்புகிறோம். அதைப்போலவே எமது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். வளமான நாடு – அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நோக்குடன் செயலாற்றி வருவதோடு கொள்கை ரீதியாக செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலுக்கு உச்சளவிலான ஒத்துழைப்பினை வழங்கி மிகவும் அமைதியான தோ்தலுக்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுப்போம். அதன் பின்னரும் அமைதிச்சூழலை பேணிவருவது எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். அதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டதாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஈடேற்றுவோம். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்ற அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நாட்டை அமைதியான வகையில் பேணிவர அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். எங்கள் கூட்டமைவு நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக அமைத்துக்கொண்ட ஒரு கூட்டமைவு அல்ல. தீவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலைமுடுக்குகள்தோறும் சென்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம். செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிலே பாரிய கலவரங்களை ஏற்படுத்துவதாகவும் அதில் அதிட்டன இளைப்பாறிய முப்படை கூட்டமைவை சோ்ந்தவர்கள் தொடர்புபடுவதாகவும் சேறுபூசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான குறைகூறல்களுக்கு செவிசாய்க்க வேண்டாமென நான் மிகுந்த பொறுப்புடன் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் கிடையாது.
நாங்கள் அடிமட்டத்திலிருந்து முப்படையிலிருந்து இளைப்பாறியவர்களை சந்தித்த பின்னரே இந்த கூட்டமைவினை கட்டியெழுப்பினோம். அதனால் இந்த கூட்டமைவு மண்ணில் வளர்ந்த ஆணிவேரைக்கொண்ட மாபெரும் விருட்சமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்துள்ளது. எதிர்வரும் ஐந்தாம் தேதியும் ஆறாம் திகதியும் தபால் மூல வாக்குகளை அளிக்கையில் முப்படை அங்கத்தவர்களுக்கும் அந்த வாய்ப்பு உரித்தாகியிருக்கின்றது. எம்முடன் கடமையாற்றியவர்கள் என்ற வகையில் இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள அவல நிலை பற்றி அனைவருக்கும் மிகச் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது. அதனால் தபால் மூலம் வாக்களிக்கையில் விவேகமுள்ளவர்களாக நன்றாக சிந்தித்துப்பார்த்து செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். முப்படை அங்கத்தவர்களுக்கு இற்றைவரை சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள எந்தவொரு வசதியும் குறைவடைய மாட்டாது என்பதையும் குறிப்பாக கொள்கை ரீதியாக தேசிய மாகாநாட்டில் பிரகடனம் செய்துள்ளோம். முப்படையினரின் நன்மதிப்பு, அடையாளம் மற்றும் சட்டப்பூர்வமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் எதுவுமே குறைக்கப்படமாட்டாதென்பதை உறுதி செய்கிறோம். நாங்கள் கூறிய விடயங்களை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்யுமளவிற்கு ஒரு சில குழுக்கள் அச்சமடைந்திருக்கின்றன. நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அவ்விதமாக செயலாற்றி வருவதை நாங்கள் காண்கிறோம்.
சிவில் பாதுகாப்பு படையணி ஆற்றல் மிகுந்த ஏறக்குறைய 30,000 அங்கத்தவர்களை கொண்டதாக நாடு பூராவிலும் இயங்கி வருகிறது. அவர்களின் நன்மதிப்பை பாதுகாக்கின்ற வகையில் அவசியமான பயிற்சிகளை வழங்கி நாட்டுக்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுத்துவோம். அவர்களின் தொழில் உறுதி நிலையை பாதுகாப்போம். இறந்த மற்றும் காணாமல் போன முப்படை அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களுடன் தேசிய மக்கள் சக்தி நீண்ட உரையாடல்களை மேற்கொண்ட பின்னர் அதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது. அதைப்போலவே ஓய்வூதியத்தில் நிலவுகின்ற முரண்பாடுகளை முடிவுறுத்த நடவடிக்கை எடுப்போம். செப்டெம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் தோ்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தோ்தல் முடிவடையும்வரை எங்களுடைய டீசேட்டுக்களை அணிய முடியாது. அந்த காலப்பகுதிக்குள் அதிட்டன டீசேட்க்களை அணிந்து செயலாற்றினால் அவர்கள் எங்களுடைய அங்கத்தவர்கள் அல்ல. அதிட்டன டீசேட்களை பாவித்து வீடியோ கிளிப் தயாரித்து போலியான கருத்தியல்களை முன்வைத்திருந்தார்கள். செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாங்கள் ஏதாவது பணியை மேற்கொள்வதாயின் இவ்விதமாக பகிரங்க ஊடக சந்திப்பினை நடாத்தி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைப்போம். இதற்கிணங்க எங்களுடைய செயற்பாடுகள் பற்றி மக்கள் வெளிப்படைத்தன்மையுடன் விளங்கிக்கொள்வது வசதியானதாக அமையும். தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் அடைந்துள்ள மாபெரும் வரவேற்பின் மத்தியில் பின்வாங்கியுள்ள குழுவினர் அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக செயலாற்றுகின்ற விதத்தை மக்களால் இந்நாட்களில் நன்றாக விளங்கிக்கொள்ள முடியும். அதனால் சமூக வலைத்தளங்களை பாவித்து வருங்காலத்தில் பரிமாற்றிக்கொள்ளப்படுகின்ற பொய்யான விடங்களைக் கண்டு ஏமாந்து விடவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.
“பயங்கரவாதம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் அரசியல்வாதிகளின் பலவீனமான தலைமைத்துவம் காரணமாகவே தோன்றியதென்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும்.”
-அதிட்டன முப்படை கூட்டமைவின் இளைப்பாறிய எயார்வயிஸ் மாஷல் சம்பத் துய்யகொன்தா-
தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் கொள்கை பிரகடனமொன்றை வெளியிட்டோம். அதன் 223 வது பக்கத்தில் “உயர்வான தேசிய பாதுகாப்பு – பாதுகாக்கப்பட்ட தேசம்” எனும் அத்தியாயத்தின் கீழ் எமது கொள்கைகைய முன்வைத்திருக்கிறோம். அது சம்பந்தமான விபரங்களை npp.lk இணையத்தளத்தில் பிரவேசித்து எவராலும் பார்க்க முடியும். அது சம்பந்தமாக விழிப்புணர்வு பெறுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். எமது முப்படையில் தற்போது இருக்கின்ற பதவிகளுடன் தொடர்புடையதாக அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளையும் அவ்விதமாகவே வழங்குவோம். பொது மக்களுக்கு கிடைக்கின்ற சுகாதார வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை விருத்தி செய்வதன் மூலமாகவும் பயன் கிடைக்கின்றது. இளைப்பாறிய அங்கத்தவர்களுக்காக நிலவுகின்ற விடுமுறை விடுதிகளை உள்ளிட்ட வசதிகள் அவ்வண்ணமே வழங்கப்படும். முப்படையில் தொழில்சார் பயிற்சியை பெற்றவர்கள் இளைப்பாறிய பின்னர் ஈடுபடுவதற்கான தொழில்களை இழப்பதனால் யுக்ரேன் அல்லது ரஷ்யா போன்ற யுத்தக்களங்களுக்கு சென்று உயிராபத்திற்கு இலக்காகியுள்ளார்கள். கௌரவமான இளைப்பாற்று வாழ்க்கையை கழிப்பதற்கான வசதிகளின்மையால் அவர்கள் அத்தகைய அபாய நோ்வினை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
முப்படையினர் பொலிஸாருடன் இணைந்து தேசிய பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்பு செய்து யுத்தகாலத்தில் கூட உச்ச அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருக்கிறார்கள். பயங்கரவாதம், உயிர்த்தஞாயிறு தாக்குதல் அரசியல்வாதிகளின் பலவீனமான தலைமைத்துவம் காரணமாகவே தோன்றியதென்பதை கவலையுடனேனும் குறிப்பிடவேண்டும். இன்றும் ஆட்சியாளர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அவ்வண்ணமே செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்த வண்ணம் இன்னமும் பதில் பொலிஸ் மா அதிபரொருவர் நியமிக்கப்படவில்லை. குறுகிய அரசியல் சிந்தனைகள் காரணமாக அந்த பொறுப்புக்களை தவறவிட்டிருக்கிறார்கள். குறுகிய அரசியல் இலாபம் கருதி ஆட்சியாளர்கள் செயலாற்றுகின்ற விதத்தை நன்றாக விளங்கிக்கொள்ளுமாறும் அவர்கள் நாடு பற்றி சிந்திக்காமல் செயலாற்றி வருகின்ற விதத்தை விளங்கிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவதற்காகவே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கிறோம். நாங்கள் சிவிலியன்கள் என்ற வகையில் சட்டபூர்வமாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒருபோதுமே நாட்டுக்குள் வன்முறை உருவாகக்கூடிய வகையில் செயலாற்ற மாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம். அது மாத்திரமன்றி முனைப்பான சேவையில் ஈடுபட்டிருந்ததுபோலவே இத்தருணத்திலும் அமைதியான ஒரு நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே செயலாற்றிவருகிறோம்.
“தேசிய மக்கள் சக்தியில் எமது அரசியல் நடைமுறைகள் மக்களால் பாராட்டப்பட்டுள்ளன.”
-அதிட்டன முப்படை கூட்டமைவின் இளைப்பாறிய ரியர் அட்மிரால் பிரட் செனவிரத்ன-
நாங்கள் எந்த விதமான அரசியல் நன்மையையும் எதிர்பார்த்து இளைப்பாறிய முப்படை கூட்டமைவுடன் இணையவில்லை. நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமூக அநீதியின் முன்னிலையில் அமைதியாக இருக்க முடியாதென்பதால் நாங்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப செயலாற்றி வருகிறோம். ஏனைய அரசியல் கட்சிகளும் இளைப்பாறிய இராணுவ கூட்டமைவுகளை சோ்த்துக்கொண்டு அமைப்புக்களை கட்டியெழுப்ப முயற்சி செய்தனர். ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் அவர்களுடன் மரமும் தோலும்போல் இணைந்து செயலாற்றுகின்ற ஒரு சில உத்தியோகத்தர்களும் எமக்கு எதிராக கடந்த காலத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதிட்டனவுடன் இணைந்துள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியலுடன் எந்த விதமான தொடர்பும் இன்றி கௌரமாக கடமை புரிந்து முனைப்பான சேவையிலிருந்து இளைப்பாறியவர்களாவர். 40,000 மேற்பட்ட இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்கள் இந்த நிலைமை காரணமாகவே எம்மைச் சுற்றி இணைந்திருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்திக்குள் எமது அரசியல் நடைமுறை மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுதலுக்கு இலக்காகியுள்ளது. அரசியல் மேடைகளில் எம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற அரசியல்வாதிகளும் இளைப்பாறிய இராணுவ உத்தியோகத்தர்களும் சம்பந்தமாக கருணை அடிப்படையில் சிந்தித்துப்பார்ப்பதோடு அவர்கள் முனைப்பான அரசியலில் ஈடுபட்டிருந்த வேளையில் செயலாற்றிய விதம் சம்பந்தமாக பரிசீலனை செய்யுமாறு சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். விசேட பிரமுகர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவு அங்கத்தவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் எதுவும் மாற்றமடைய மாட்டாதென்பதை வலியுறுத்துகிறோம். அதைபோலவே இதுவரை எம்முடன் சோ்ந்திராத இளைப்பாறிய இராணுவ அங்கத்தவர்களை எம்முடன் இணைந்து கொள்ளுமாறும் மக்கள் நேயமுள்ள அரசாங்கமொன்றை உருவாக்க பங்களிப்புச் செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
“சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வாக்காளரின் மனதை திரிபுபடுத்துகின்ற செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.”
-தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும-
தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக மக்கள் அணிதிரண்டு கொண்டிருக்கின்ற விதத்தைக் கண்டு எதிரான குழுவினர் பதற்றமடைந்து மிகவும் கீழ்த்தரமான சேறுபூசல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று (01) நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடொன்றை செய்தோம். அவர் 22 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் அங்கத்தவர்களால் மக்களின் ஆதனங்களை கொள்ளையடித்தல், வாகனங்களை கைப்பற்றிக்கொள்ளல் போன்ற செயல்களை புரிவார்களென பாரிய பீதிநிலையொன்றை சமூகத்தில் விதைக்க முயற்சி செய்கிறார். அதைபோலவே உயர்நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதாக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார மற்றுமொரு பீதியை கிளப்பி தேசிய மக்கள் சக்தியின் வெற்றியுடன் பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெறுமென பிரச்சாரம் செய்து வருகிறார். 1977 தோ்தலின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். 1994 இல் இருந்து இற்றைவரை அவ்விதமான தோ்தல் வன்செயல்கள் இலங்கையில் இடம்பெறவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இதுவரையும் அவர்கள் கூறுகின்ற விதத்தில் தோ்தல் வன்செயல்கள் உருவாகவில்லை. அதனால் 22 ஆம் திகதியோ அதன் பின்னரோ அவர் கூறுகின்ற விதத்திலான வன்செயல்கள் பற்றி மக்கள் அச்சமடைய தேவையில்லை. அதைபோலவே தபால் மூல வாக்காளர்களின் மனதை திரிபுபடுத்துகின்ற விதத்திலான செய்திகளை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி தொடர்பில் தோன்றியுள்ள மக்கள் ஆதரவினை ஓரளவிற்கேனும் குறைக்க இவை மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாங்கள் மக்களின் நிலையான வைப்புக்களை அரசாங்கத்திற்கு கையகப்படுத்திக்கொள்வதாக தோழர் ஹந்துன்னெத்தி கூறினார் என நேற்று ஆங்கில செய்தித்தாளொன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்த நாட்டின் மனிதர்களுக்கு ஆதனங்களை வைத்துக்கொள்வதற்கான உரிமை சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பணம் என்பது மக்களின் ஆதனங்களில் ஒன்றாகும். சட்டமொன்றை விதிப்பதாயின் அதற்கு முன்னர் சட்ட மூலம் உயர்நீதிமன்றத்திற்கு செல்லும். உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்த பின்னர்தான் தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்து விட்டது என்பதற்காக நினைத்தவாறு சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளமுடியாது. பொய் பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம். எமது நாட்டு மக்களிடம் நான் அதனை மிகுந்த அன்புடனும் கௌரவத்துடனும் குறிப்பிடுகிறேன். அரசியல் சம்பந்தமாக மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அவ்விதமே செயற்படுத்தி வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் ஜனாதிபதி என்ற வகையில் தோழர் அநுர குமார திசாநாயக்கவை நியமித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கான பதில்
கேள்வி: மனுஷ நாணாயக்கார தொடர்பில் கடைப்பிடிக்கப்போகின்ற நடவடிக்கை என்ன?
பதில்: நாங்கள் ஏற்கெனவே பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனிலுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம். மனுஷ நாணாயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்வோம். செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை செய்து வருகின்ற அனைத்து விதமான பொய் பிரச்சாரங்களுக்கும் சேறுபூசல்களுக்கும் எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம்.