Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இந்த ஆட்சியாளர்கள் இருந்தால் எமது பிள்ளைகளின் சந்ததியினருக்கும் யுத்தம்புரிய நேரிடும்.” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் – அநுர திசாநாயக்க-

-Colombo, November 10, 2023-

இலங்கை மண்ணுடன் தாயகத்துடன் இருக்கின்ற பிணைப்பினைக் கைவிட்டுவிடாமல் அங்கு வசிக்கின்ற மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகவும் ஆழமான நெருக்கடிகள் பற்றிய ஒத்துணர்வுடன் இருக்கிறீர்கள் என்பது நீங்கள் இங்க வருகைதருவதன் மூலமாக உறுதியாகியுள்ளது. நீங்கள் இதில் கலந்து கொண்டமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தோற்றியவர்களே. வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களில் பெரும்பான்மையானவர்கள் 2019 சனாதிபதி தேர்தலிலும் அதனைத் தொடர்ந்துவந்த பொதுத்தேர்தலிலுமே முனைப்பாக பங்கேற்றார்கள். ஆனால் இன்று உங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது. உங்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகவே நாசமடைந்துள்ளன. எனினும் அதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் அரசாங்கங்களை அமைக்கவும் நீங்கள் பங்களித்துள்ளமை உறுதியாகின்றது. மேற்படி அத்தனை தருணங்களையும் திரும்பிப் பார்க்கையில் உங்களுக்கு நேர்ந்துள்ளது மனவேதனையும் எதிர்பார்ப்புச் சிதைவும் மாத்திரமே. நான் உங்களிடம் ஒரு விடயத்தை உறுதியாகக் கூறுகிறேன். தற்போது எம்மோடு உரையாடுவதற்கும் நாம் கூறுவதை செவிமடுக்கவும் பெருமளவிலான குழுவினர் இருக்கிறார்கள் என்பதை நம்புகிறோம். நீங்கள் எம்மீது வைத்தள்ள நம்பிக்கை கடுகளவேனும் சிதைவடைய இடமளியோம் என்று சபதம் செய்கிறோம். நீங்கள் இத்தருணத்தில் பங்கேற்று நாட்டுக்காக ஏதேனுமொரு பணியை ஈடேற்றினீர்கள் என்பது நினைவில் நிற்கின்ற நாளாக அமையுமென்பது உறுதியானதாகும்.

இவ்விதமாக தொடர்ந்தும் நாட்டுக்கோ மக்களுக்கோ முன்நோக்கி நகரமுடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான உணவு சம்பந்தமாக நாட்டில் எத்தகைய நிலைமை நிலவுகின்றது? சனத்தொகையில் 68% ஏதேனும் விதத்திலான உணவு நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளதாக மத்தியவங்கி அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்படக்கூடாதா? அதைப்போலவே குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட அவலநிலைக்குச் சென்றுள்ள நிலைமையை மாற்றியமைத்தே ஆகவேண்டும். அதைப்போலவே போதைப்பொருட்களையும் பாதாள உலகத்தையும் பயங்கரமான முறையில் வளர்த்தெடுத்துள்ள அரசியல் சுற்றுச் சூழலே நிலவுகின்றது. அம்பாந்தோட்டை வம்பொட்டா, ஜுலம்பிட்டியே அமரே போன்ற குற்றச்செயல் புரிபவர்களை வளர்த்தெடுத்துள்ள அரசியலை மாற்றயமைத்திட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை முற்றாகவே சிதைத்து குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் நாட்டை ஆட்சிசெய்கின்ற நிலைமைக்கு நாசமாக்கியுள்ளார்கள். இந்த நிலைமையை மாற்றியமைத்திட நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்த உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும். எனினும் மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோன்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும். அது நியாயமானதே. ஆனால் உங்களுக்கு தற்போது வாய்ப்பு உருவாகி இருக்கின்றது: அது பற்றி எம்மிடம் கேழுங்கள். அதனால் இந்த உரையாடல் சிக்கல்களை தீர்த்துக்கொள்ளலின்பால் பிரவேசிப்பது முக்கியமானது.

இதுவரை காலமும் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியாமல் போனவர்களுக்கு இத்தடவை அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை எப்படி கிடைத்துள்ளது? அரசியல் பலதசாப்தங்களாக தன்வழியில் பாய்ந்தோடினாலும் அதற்குப் பதிலாக அரசியல் மாற்றமொன்றை ஏற்படுத்த அவசியமான அடிப்படை அத்திவாரம் உருவாக்கப்பட்டுள்ளது. ரணிலுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷவின் அணியை தெரிவுசெய்தவர்களுக்கு இப்போது என்ன நடந்துள்ளது? ஆளும் வர்க்கத்தினருக்கு அனைத்துவிதமான முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு ஒன்றுசேரும் அளவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதைப்போலவே இரண்டாவதாக மக்களால் தொடர்ந்தும் வழமைபோல் வாழமுடியாதவகையில் அடிமட்டத்திலிருந்து தோன்றுகின்ற நெருக்கடியும் மிகவும் உயரத்திற்குச் சென்றுள்ளது. இவ்விதமாக ஆட்சியாளர்களுக்கு வழமைபோல் ஆட்சியை நடாத்திவர இயலாதென்பதாலும் மக்களால் வழமைபோல் தொடர்ந்தும் செயலாற்ற இயலாதென்பதாலும் சமூக மாற்றத்திற்கு அவசியமான பலம்பொருந்திய காரணிகளை நெறிப்படுத்துதல் வரை வந்துள்ளது. இப்போது அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியுமா முடியாதா எனும் கேள்வி இருப்பது எம்மிடமே. அப்படியானால் எம்மிடமிருக்கின்ற வெற்றிகள் மற்றும் தோல்விகள் யாவை? அவர்கள் இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க பாரிய செல்வத்தையும் அரச பலத்தையும் ஊடகப் பலத்தையும் கொண்டுள்ளார்கள். எவ்வளவு எனக் கூறுவதானால் எனக்கு கிறெபைற் எனும் சொல் தவறியமை டேலி மிரர் செய்தித் தாளில் முதற்பக்கச் செய்தியாக மாறுகின்றது. இந்த ஊடகப் பலத்தினால் சமூக மனதை திரிபுநிலைக்கு உள்ளாக்க முடியும். கடந்த சனாதிபதி தேர்தலின்போது முன்னெடுத்துவந்த பிரச்சாரங்களை உச்ச மட்டத்திற்கு கொண்டுவந்த டாக்டர் சாஃபியின் மலட்டு அறுவை சிகிச்சைகளும் களணி கங்கையில் நாகம் தோன்றியதுமாகும். இலங்கையின் சொல்லகராதியில் கருப்பை யுத்தம் எனும் நிலைமை வரை புனைகதைகள் பிரச்சாரம் செய்யப்பட்டன. இறுதியாக தேசம் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, உயிர்த்தஞாயிறு தாக்குதலால் நாடு அராஜகநிலை அடைந்ததிலிருந்து காப்பாற்றிக்கொள்ள “நாகலோகத்திலிருந்து” நாகம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அவர்களிடம் மிகப்பெரிய கறுப்புப்பண பலமும் இருக்கின்றது. இவையனைத்தினதும் மத்தியில் எம்மிடம் இருக்கின்ற ஒரே பலம் மக்களின் பலமாகும். இந்த மாற்றத்திற்காக இருக்கின்ற பலம்பொருந்திய அரண் எமது மக்கள் பலமாகும்.

இந்த மக்கள் கமக்காரர், மீனவர், தொழில்வாண்மையாளர்கள், கலைஞர்களை உள்ளிட்ட பலவிதமானவர்களாக இருப்பதோடு தேர்தல்களின்போது பாரிய அழுத்தங்களைப் புரிபவர்கள் வெளிநாடுசென்றுள்ள இலங்கையர்களே என்பது இனங்காணப்பட்டுள்ளது. எனினும் தற்போது இவையனைத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் அபிப்பிராயத்திற்கு இடமளிக்காமல் உள்ளுரதிகாரசபை தேர்தலும் மாகாணசபைகள் தேர்தலும் சுருட்டிக்கொள்ளப்பட்டது. எனினும் அரசியலமைப்பில் மிகவும் தெளிவாக மக்களின் நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற சனாதிபதியால் வகிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளுரதிகார சபைகளை ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழும் மாகாண சபைகளை ஆளுனரின் கட்டுப்பாட்டின்கீழும் கொண்டுவர இயலுமெனினும் அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் கட்டாயமாக சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும். ஏதேனும் விதத்தில் தேர்தலை நடத்தாதிருக்க அவர் தீர்மானிப்பாராயின் அடுத்த வருடத்தின் அக்டோபர் 17 ஆந் திகதிக்கு முன்னர் அவருக்கு செல்லவேண்டிய நிலையேற்படும். இத்தனை பாதிப்புகள் வந்தபோதிலும் ஏன் மக்கள் வீதியில் இறங்குவதில்லை என ஒருசிலர் கேட்கிறார்கள். அக்டோபரில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படும்வரை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனை நடாத்துதில்லை எனும் சமிக்ஞை வந்தால் மக்கள் வீதியில் இறங்குவார்கள்.

அதிகாரத்திற்கு வந்த பின்னர் நாட்டை எவ்வாறு மாற்றுவது எனும் கேள்வி இருக்கக்கூடும். அதற்கு அவசியமான அனைத்து சகக்திகளும் எம்மிடம் இருக்கின்றன. அதுவன்றி நானோ எனது கட்சியோ மாயாஜால வித்தைக்காரர்கள் அல்ல. ஆசியாவின் மிகப்பெரிய மூளையுமல்ல. மனித வரலாற்றில் ஒவ்வொரு பிரமாண்டமான வெற்றியும் கூட்டு முயற்சியாலேயே பெறப்பட்டுள்ளன. மனிதன் கையப்படுத்திக்கொண்ட அறிவின் திரட்சி என்றவகையில் நாகரிகம் கூட்டுமுயற்சியிலேயே உருவாகி உள்ளது. எமது ஆட்சியென்பது அவ்வாறான கூட்டு முயற்சியாகும். அரசியலமைப்பின்படி அமைச்சரவையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அதில் நியமிக்கப்படுகின்ற அமைச்சர்களுக்கு ஏதேனும்விதமான அனுபவமும் அறிவும் இருக்கின்றது. எனினும் எம்மில் எவருக்குமே எல்லாமே தெரியாது. எமது கல்வித்திட்டமே உடைத்து பிரித்துக் கற்றுக்கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் காட்டுகின்ற திறன்களின் கூட்டுமனப்பான்மை மூலமாக அமைச்சுக்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும். எனினும் அதற்காக நிபுணத்துவ அறிவுபடைத்த அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கத்தக்க சிறப்பறிஞர் குழுவொன்று நியமிக்கப்படும். புதிய ஆராய்ச்சிகளுக்காக அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 500 பில்லியன் டொலர் ஈடுபடுத்தப்படுகின்றது. இலங்கையின் ஒட்டுமொ்த பொருளாதாரமே அண்ணளவாக 80 பில்லியன் டொலராகும். புதிய அறிவின் உற்பத்திக்கு அவசியமான மேலதிக செல்வம் மேலைத்தேய நாடுகளில் இருக்கின்றனவென்பதே அதன்மூலமாக கூறப்படுகின்றது. அவர்கள் உருவாக்குகின்ற சிறப்பறிஞர்களில் பெருந்தொகையான இலங்கையர் இருக்கிறார்கள். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டை மீட்டெடுப்போம்.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமென்பது உலகம் பூராவிலும் பரந்துள்ள இலங்கையின் அறிவினை ஒன்றுதிரட்டுவதற்கு அவசியமான அமைப்பாண்மை பொறியமைப்பினையும் நெறிப்படுத்துதலையும் வழங்குகின்ற ஆட்சியாகும். பொருளாதார, சமூக, அரசியல் வேறுபாடுகளை உருவாக்கவேண்டுமாயின் ஊழல், களவு, மோசடி, விரயம் என்பவற்றைக் கட்டாயமாக நிறுத்தி அந்த மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் தண்டனை வழங்கி நிச்சயமாக பொதுமக்களின் ஆதனங்களைக் கையகப்படுத்தும். நோய்வாய்ப்பட்டுள்ள தாய் தந்தையருக்கு வைத்தியசாலையில் இருந்து மருந்து வாங்கிக் கொடுப்பதற்காக ஈடுபடுத்தவேண்டிய செல்வத்தைக் கோடிக்கணக்கில் அவர்கள் குவித்துள்ளார்கள். பழிவாங்குதலல்ல, எவரையும் தனிப்பட்டமுறையில் பழிவாங்கும் நோக்கமோ கோபமோ எம்மிடம் இல்லை. எனினும் சமூக நீதி மற்றும் நியாயம் பற்றிய பிரச்சினையொன்று எமது நாட்டில் நிலவுகின்றது. நாங்கள் அதனை ஈடேற்றுவோம். எமது பிள்ளைகளின் 20% இற்கு கிட்டிய தொகையினர் மிகையான போசாக்கின்மையாலும் கரப்பிணித் தாய்மார்களில் 17% இற்கு கிட்டிய தொகையினர் இரத்தச் சோகையாலும் அவதிப்படக் காரணம் மக்களின் செல்வத்தைக் குவித்துக்கொண்ட கொள்ளைக்காரக் கும்பல் காரணமாகவே. அந்த செல்வத்தை சமூகமயப்படுத்தவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்த பணியைச் செய்யும். அதைப்போலவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தற்போது நிலவுகின்ற அழிவுமிக்க அசிங்கமான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம். அதைப்போலவே மனோபாவரீதியான மாற்றத்தை நவீன தொழில்நுட்பத்தை பாவிக்கின்ற அரச சேவையொன்றை உருவாக்குவோம். அதைப்போலவே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் தேசிய ஒற்றுமையை உருவாக்கிட வேண்டும். இரண்டு மொழிகளைப் பேசுகின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் ஆகிய மூன்று இனக்குழுக்கள் இருக்கின்றன. நான்கு பிரதான மதங்கள் இருக்கின்றன. பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் என்பவற்றுக்கிணங்க மூன்று பிரதான கலாசாரங்கள் நிலவுகின்றன. சிங்கள பௌத்தர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லீம் இஸ்லாம் ஆகிய கலாசாரங்கள் பிரதானமாக நிலவுகின்றன. வெசாக், பொசொன், நத்தார், பெரிய வெள்ளிக்கிழமை, உயிர்த்த ஞாயிறு, தைப்பொங்கல், ரமழான் ஆகிய சமய கலாசார வைபவங்கள் இருக்கின்றன. இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடுகின்ற கலாசார வைபவமொன்றேனும் கிடையாது. எம்மை பிரித்தே வைத்துள்ளார்கள்.

முப்பது வருடகால யத்தத்தில் பெருநிலம் ஈரமாகும் வரை இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும்வரை கண்ணீர் சிந்தப்பட்டுள்ளது. மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகாதிருக்க சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவேண்டும். எமது பரம்பரையினர் யுத்தம் புரிந்துகொண்டாலும் எமது பிள்ளைகளின் தலைமுறையினருக்கு யுத்தம் இல்லாத நாடு தேவை. இந்த ஆட்சியாளர்கள் இருந்தால் எமது பிள்ளைகளின் தலைமுறையினருக்கும் யுத்தம் புரியவேண்டிய நிலையேற்படும். அவர்களுக்கு யத்தம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடையாது, நட்டமே ஏற்படும். யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தால் எண்ணெய் இல்லாமை போனமை, கேஸ் இல்லாமல் போனமை, கடன்செலுத்த முடியாமல் போனமை, மருந்து இல்லாமை இவற்றுக்கு காரணம் யுத்தமையே எனக் கூறுவார்கள். அதனால்த்தான் அவர்களுக்கு யுத்தம் இல்லாவிட்டால் மகிழ்ச்சி கிடையாது: நட்டம் எனக் கூறப்படுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில் ஓற்றுமை நிலவுகின்ற நாட்டைப்போலவே சட்டத்தின் ஆட்சி நிலவுகின்ற ஒரு நாடு உருவாக்கப்படும். செல்வம் இருப்பவருக்கு அதிகாரம் இருப்பவருக்கு ஒரு சட்டமும் செல்வமும் அதிகாரமும் இல்லாதவருக்கு ஒரு சட்டமும் இருக்கின்ற நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்து சட்டம்மீது நம்பிக்கை கொண்ட ஒரு நாட்டை உருவாக்கிடுவோம். நாகரிகமுடைய ஒரு நாட்டை உருவாக்குகையில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும். எமது நாட்டின் அத்திவாரம் சின்னாபின்னமக்கப்பட்டுள்ளது. நாங்கள் அந்த அத்திவாரத்தை மீண்டும் பலம்பொருந்தியவகையில் இட்டு அதன்மீது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம். அதற்குள்ளே பிறர்மீது ஒத்துணர்வும் ஈரமும் கொண்ட மனித சமூகத்தை உருவாக்கிடுவோம்.

இன்று கனவுகள் மடிந்துபோன, எதிர்பார்ப்புகள் சிதைவடைந்த ஒரு நாடாக இருக்கின்ற இலங்கையை கனவுகள் காண்கின்ற, எதிர்பார்ப்புகள் நிறைந்த நாடாக கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படுவோமென அழைப்பு விடுக்கிறோம்.