(-Colombo, September 23, 2024-)
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உப சரத்து 52 (1) இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக டி.டபிள்யூ. ஆர். பி. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவீ செனவிரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான அவர், விசேட அதிரடிப் படையின் ஆரம்பகால உறுப்பினராகவும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளராகவும், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தின் முன்னாள் முதல் செயலாளராகவும், இன்டர்போல் இலங்கைக் கிளையின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.