(-Colombo, September 16, 2024-)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம் அல்லது மீலாத் – உன் – நபி தினம் இன்றைய (16) தினம் ஆகும். அதனை வைபவரீதியாக கொண்டாடுகின்ற இலங்கைவாழ்; இஸ்லாமிய அடியார்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
பலவீனமுற்று, பலம்பொருந்திய பூர்வீகக் குடிகளின் கட்டுப்பாட்டுக்கு இலக்காகி அரபு பிரதேசத்தில் பரந்து காணப்பட்ட சிறிய சிறிய ஆட்சிப் பிரதேசங்களை ஒன்றுசேர்த்து அரபுப் பிரதேசத்திற்கு பலம்பொருந்திய இராச்சியமொன்றை உருவாக்கித் தந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாவார். அது எவராலும் சாதிக்க இயலுமென எவருமே நம்பியிராத யுகமொன்றில் வித்தியாசமாக சிந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த வித்தியாசமான சிந்தனைக்கான ஆரம்பகர்த்தாவாகவும் அதனை நடைமுறைப்படுத்திய மார்க்க அறிஞராகவும் விளங்கினார்.
ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களும் சகோதரத்துவத்தின் நாமத்தால் ஒன்றாக கைகோர்த்துக்கொண்டு புதிய மாற்றத்தின் அருகில் நிலைகொண்டுள்ள தருணத்தில் வித்தியாசமாக சிந்தித்து, நாட்டின் மரபுரீதியான பயணத்தை மாற்றியமைக்கின்ற உண்மையான மாற்றத்துடன் அணிதிரள மீலாத் உன் நபி தினம் இலங்கைவாழ் இஸ்லாமிய அடியார்களுக்கு வலிமையையும் ஊக்கத்தையும் வழங்குமென நாங்கள் வாழ்த்துக் கூறுகிறோம்.
அநுர குமார திசாநாயக்க
தலைவர்
தேசிய மக்கள் சக்தி
2024.09.16