மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்த மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் “ஹட்டன் பிரகடனம்” இற்கு கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. மலையக தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஹட்டன் நகரில் டி. கே. டபிள்யூ. கலாசார மண்டபத்தில் இந்த விசேட நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு வரவேற்புரையை அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பிரதிச் செயலாளர் கிருஷ்ணன் கலைச்செல்வி நிகழ்த்தியதுடன் பிரதான உரையை தோழர் அனுர திஸாநாயக்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சரோஜா போல்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இங்கு “தீயில் முளைத்த தேயிலை கொழுந்து” என்ற ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் எழுத்தாளர் சதீஷ் செல்வராஜ் எழுதிய “குளிரும் தேசத்துக் கம்பளிகள்” புத்தகம் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதுடன் “பிடி தளராதே” குழுவினரால் பல கலாச்சார நிகழ்ச்சிகளும் வழங்கப்பட்டன.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த பிரமுகர்களான தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களான சட்டத்தரணி லால் விஜேநாயக்க, பேராசிரியர் விஜய குமார், கலாநிதி P.P. சிவப்பிரகாசம், மஹிந்த ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ், நுவரெலியா மாவட்ட ஜே.வி.பி. அமைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் மஞ்சுள சுரவீர, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி அனுஷ்கா தர்ஷனீ திலகரத்ன, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தொழிலாளர் கூட்டுறவு சங்க அமைப்பாளர் ராமையா நடராஜா, வைத்தியர் அருள் கோகிலன், நாடக நடிகர் முனியாண்டி காளிதாஸ், சட்டத்தரணி செல்வராஜ், தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் ஸ்ரீதரன், தேசிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி செயற்குழு உறுப்பினர் கே. அஷோக் குமார், தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் அஷோக் குமார், இலங்கை ஆசிரியர் சேவை சங்க அகரபத்தனை பிரதேச செயலாளர் ரிச்சட் ரொஹான், நுவரெலியா மாவட்ட அதிபர் சேவை சங்கத்தின் நல்லமுத்து விஜயகுமாரன், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அதிபர் கருப்பண்ணன் ராமராஜ், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னய்யா விஸ்வநாதன், தேசிய கல்வி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பு விரிவுரையாளர் திருமதி அர்ஷலா விவேகானந்தன், நுவரெலியா மாவட்ட சோஷலிச இளைஞர் சங்கத்தின் குழு உறுப்பினர் கந்தசாமி பிரபு, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்க மஸ்கெலியா பிரவுன்சிக் தோட்டப் பிரதிநிதி சோமசுந்தரம் ஆனந்தபாபு, வட்டவளை லோனாக் தோட்ட ஓய்வுபெற்ற தொழிலாளி திருமதி சிலம்பரம் கனகம்மா, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி செயற்குழு உறுப்பினர் அஷோக கருணாரத்ன, தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி செயற்குழு உறுப்பினர் சிவகுமார் பிரகாஷ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.