-Colombo, January 31, 2024-
(ஊடக சந்திப்பு – தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள்)
இன்றளவில் ஆங்காங்கே மனிதப் படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த படுகொலை செயற்பாங்கு வெலிகம சம்பவத்திலிருந்தே தொடங்கியது. அதன் பின்னர் நாரம்மலவிலும் பின்னர் கம்பஹா மாவட்டத்தின் பிக்கு ஒருவர் மற்றும் இன்றளவில் அநுராதபுரம் மாவட்டத்தின் இளைஞரொருவர்மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது. தற்போது மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் இன்று எங்கே? யார்? படுகொலை செய்யப்பட்டுள்ளார்களென்று. இந்த உயிர்ப்பலி சமூகமயப்படுத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கத்திற்கு எதிரான செயல்கள் மேலோங்கி வருவதோடு அரசாங்கம் அடக்குமுறை பொறியமைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பது அவற்றின் ஒரு பகுதியா என நாங்கள் அதிகாரிகளிடம் கேட்கிறோம். நேற்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் என்றவகையிலும் நாங்கள் கண்டிக்கிறோம். அதனை சனநாயகத்திற்கு எதிரான அவமதிப்பு என நாங்கள் காண்கிறோம்.
நாரம்மல சம்பவத்தின்போது மோட்டார் வாகனத்தின் பின்புற ஆசனத்தில் இருந்தவர் வாகனத்தில் இருந்து இறங்கிவந்து முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதியை அச்சுறுத்துகிறார். அந்த மோட்டார் வாகனத்தின் சாரதி வந்து டிப்பர் வாகனத்தின் சாரதியை சுட்டுக்கொலைசெய்கிறார். இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ள முடியுமா? சம்பந்தப்பட்டவரின் அடையாள அட்டையை அல்லது வருமான அனுமதிப்பத்திரம், லயிஷன் இன்சுவரன்ஸை பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு மாத்திரமே ஏதேனும் செயற்பாங்கில் பிரவேசிக்க வேண்டும். சம்பவம் மிகவும் பாரதூரமானது. சுட்ட துப்பாக்கி ரவையை பொறுக்கி அந்த உத்தியோகத்தர் பைக்குள் போட்டுக்கொள்கிறார். இதனை நேரடியாக பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தில் எமது சட்டத்தரணிகள் குழுவொன்று நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் அந்த வழக்கிற்காக தோற்றிவருகிறார்கள். பின்புற ஆசனத்தில் இருந்துவந்து கொலைசெய்யப்பட்டவரை அச்சுறுத்தியவரை முறைப்பாட்டாளரின் சாட்சியாளராக மாற்றிக்கொள்ள முறைப்பாட்டாளர் முயற்சிசெய்துகொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டாளர் சார்பில் தோற்றுகின்ற எமது சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பொலீஸாருக்கே மேற்கொள்ள இடமளிக்கவேண்டாமென மதிப்பிற்குரிய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. “அது கள்வனின் தாயிடம் மைபோட்டுப் பார்ப்பதைப் போன்ற” வேலையாகும். எமது சட்டத்தரணிகள் குழு இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றத்திடம் விடுத்துள்ளது. ஒன்று இதன் முழுமையான விசாரணை நடவடிக்கைகளையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளித்தல். இல்லாவிட்டால் அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மா அதிபரின்கீழ் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்க.
ஆங்காங்கே இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற படுகொலை செயற்பாங்கிற்கு அரசாங்கம் வேண்டுமென்றே இடமளித்து வருகின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது. ஆளொருவரை படுகொலைசெய்து அடுத்தநாளன்று பதில் பொலீஸ் மா அதிபர் பத்திலட்சம் ரூபா பணத்தை குடும்பத்தவர்களுக்கு வழங்குகிறார். தனது கணவனின் பெறுமதி பத்திலட்சமா? அந்த பணமும் மக்களின் வரிப் பணத்திலிருந்தே போகின்றது. பொது திறைசேரியின் பணமாகும். மனித உயிரின் பெறுமதியை பொருட்படுத்தாமல் செயலாற்றுவது பாரதூரமான விடயமாகும். அது பாரதூரமான குற்றமொன்றை பொதுமைப்படுத்துதல் ஆகும். ஒரு சமூகம் என்றவகையில், சமூகத்தின் பொறுப்புவாய்ந்த அரசியல் இயக்கமொன்றின் சட்டத்தரணிகள் என்றவகையில் அதனை எம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது சட்டத்தினதும் சனநாயகத்தினதும் விலகிச்செல்லலாகும். 1992 இலும் இவ்விதமாக ஆங்காங்கே மனிதப் படுகொலைகள் இடம்பெற்று பாரிய குற்றச்செயல்கள்வரை பயணித்ததை நாங்கள் அறிவோம். இங்கு வந்துகொண்டிருப்பது அந்த பாணியிலான வேலையா? இது ஒரு தேர்தல் வருடமாகும். ரணில் விக்கிரமசிங்க கூறுகின்ற வகையிலேயே இரண்டு தேர்தல்கள் உள்ளன. இந்த தேர்தலில் வெற்றியடைய ஏற்புடைய பின்னணியை அமைத்துக்கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமூகத்தை ஒரு பயங்கரமான நிலைமைக்கு கொண்டுவந்து அரசாங்க எதிர்ப்பு என்பதை அடக்கியாள தோல்விகண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய மக்கள் சக்தி என்றவகையில் நாங்கள் இந்த சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி மிகப்பெரிய சமூக அரணாக இதனை எதிர்கொள்வோம். நீங்கள் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல்களுக்கு அஞ்சவேண்டாம். இந்த கொடிய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாங்கினை வாபஸ்பெற வேண்டாம்.
“மனைவிக்கு கணவன், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனை இல்லாதொழித்து தான் பெறப்போகின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா? என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன்.” -தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த-
இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்னராக பொலீஸாரின் தாக்குதலிலேயே பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மடிந்தார். ஒரு பொலீஸ் குழுவிற்கு அவசியமாகி இருந்த, மறைந்திருந்த நிகழ்ச்சி நிரலொன்றின் செயற்பாங்கு என்றவகையிலேயே அந்த பொலீஸ் உத்தியோகத்தர் இறந்தார். அவர் ஒரு சார்ஜன்ட் பதவி வகித்தவராக இருந்து இறந்த பின்னர் எஸ்.ஐ. பதவிக்கு மாற்றபட்டுவிட்டால் நியாயம் கிடைக்குமா? அந்த பொலீஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு கணவனையும் பிள்ளைகளுக்கு தகப்பனையும் இல்லாதொழிப்பதை விட தேஷபந்துவின் பதில் பொலீஸ் மா அதிபர் நிலையை பொலீஸ் மா அதிபராக மாற்றுவது பெரியதா? நாரம்மல அப்பாவி மனிதனின் மனைவிக்கு கணவனையும் அவரது உலகத்தையும் இல்லாதொழித்து, மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனையும் அவர்களின் உலகத்தையும் இல்லாதொழித்து தான் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்ற பொலீஸ் மா அதிபர் பதவி பெரியதா என நான் தேஷபந்துவிடம் கேட்கிறேன். அதனை பத்திலட்சத்திற்கு சுருக்கிவிட முடியுமா? தேஷபந்து இந்த பத்திலட்சங்களை கொடுத்துக்கொடுத்துக்கொண்டே போக நேரிடும். தான் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கியவருக்கு சொந்தப் பணத்தில் இருந்து ஐந்து இலட்சத்தை செலுத்துமாறு உயர்நீதிமன்றம் தேஷபந்துவிற்கு கட்டளையிட்டது. இந்த மனிதாபிமாமற்ற சித்திரவதையை 05 இலட்சத்திற்கு சுருக்கிவிடவும் முடியாது. சட்ட மா அதிபர் சரிவர சட்டத்தை அமுலாக்கினால் வருங்காலத்தில் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் சம்பந்தமாக குற்றப்பகர்வொன்று வரவேண்டும்.
இவ்விதமாக மனிதர்கள் ஆங்காங்கே நாய்கள் போல் செத்து மடிவதும், அது அரசாங்க பொலீஸினால் இடம்பெறுவதாயின் அது அரச பயங்கரவாதமாகும். அவ்வாறான செத்துமடிதல்கள் காரணமாக உருவாகின்ற அதிர்ச்சியைத்தான் நாங்கள் சமூகமயப்படுத்துகிறோம். இவ்விதமாக காரணமின்றி ஒருவரை கொலைசெய்தலானது அந்த குடும்பத்திற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்குமே இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகும். இந்த அதிர்ச்சி சமூகத்தை சென்றடையவேண்டும். தமக்கு ஏதாவது நேரிடும்வரை ஒத்துணர்வு தெரியமாட்டாது. உங்களுக்கோ, உங்கள் குடும்ப அங்கத்தவருக்கோ அல்லது உறவினருக்கு ஏற்பட்டால் இதன் தாற்பரியம் புரியும். இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தேஷபந்துவை ஹெல்மட்டினால் மக்கள் தாக்கியபோது தப்பான இடத்தில் பட்டிருந்தால், ஏதாவது வேதனை ஏற்பட்டிருந்தால் மனைவியும் பிள்ளைகளும் அந்த அதிர்ச்சியை உணர்ந்திருப்பார்கள். பதில் பொலீஸ் மா அதிபர் தனது தொனிப்பொருள் வாசகத்தைப் பார்த்திட வேண்டும். ” தம்மே பவே ரக்கிதி, தர்ம சாரீ” தர்மவழியில் நடப்பவனை தர்மம் தலைகாக்கும் என்பதாகும். தொனிப்பொருள் வாசகம் அதனைத்தான் கூறுகிறது. தனது பதவி அதிகாரத்திற்கு வருங்காலத்தில் எடுக்கவுள்ள புரமோஷனுக்கு தனது தொனிப்பொருள் வாசகத்தின்படி செயலாற்றாமல் நடந்துகொள்ள வேண்டாம்.
பதில் பொலீஸ் மா அதிபர் மே 09 சம்பவத்தின் பிரதான பிரதிவாதிகளில் ஒருவராவார். அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றவேளயில் மேல்மாகாண வடக்கு (நீர்கொழும்பு) சீனியர் டீ.ஐ.ஜீ. கட்டுவாபிட்டியவில் மனிதப்படுகொலை இடம்பெற்றது. நீதியின் மறைவில் இருந்துகொண்டு அநீதி இழைக்கப்படுமானால் சட்டத்தரணிகள் என்றவகையிலும் தேசிய மக்கள் சக்தி என்றவகையிலும் நாங்கள் அதனை எதிர்ப்போம். நீதியின் பெயரால் இந்த நாட்டில் போதைப்பொருள், குற்றச்செயல்கள், பாதாள உலகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதானால் நாங்கள் இருகரங்களையும் உயர்த்தி ஆதரவு தெரிவிப்போம். ஆங்காங்கே மனிதர்கள் செத்துக்கிடப்பதன் மூலமாக அரசியல் தலைமையின், சமூகத்தின், பொருளாதாரத்தின் சீரழிவே வெளிக்காட்டப்படுகின்றது. இந்த நாடு ஒரு தரிசுநிலமல்ல, குடிமக்கள் – மக்கள் – மனிதர்கள் நிறைந்த சமூகமாகும் என்பதை தேஷபந்துவிற்கு கூறுகிறோம். நீங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளீர்கள். மக்களை நேசிப்பவர்கள் அல்ல. தர்மவழியில் பயணிக்குமாறு பொலீஸ் மா அதிபரை பாதுகாக்கின்ற அரசியல்வாதிகளுக்கும் கூறுகிறோம். அப்படிச் செய்தால் தர்மம் தலைகாக்கும்.
“சட்டத்திற்கும் மக்களுக்கும் இடையிலான அரசியல் தலையீடு நீங்கிய நாளில்தான் இந்நாட்டு மக்கள் நீதிதேவதைமீது நம்பிக்கை வைக்கமுடியும்.” -சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி-
எந்தவொரு நாடும் சமூகமும் முன்னேற்றகரமானதென்பது பொருளாதார அளவுகோல் மூலமாக மாத்திரம் அளவிடப்படுமாயின் அது நூற்றுக்கு நூறுவீதம் சரியானதாக அமையமாட்டாது. ஒரு பிரச்சினைக்கு பிரச்சினைக் கட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது சிக்கலாக மாறிவிடும். ஆட்சியாளர்கள் சிக்கலுக்கு சிக்கல் கட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது நெருக்கடியாக மாறிவிடும். ஆட்சியாளர்கள் நெருக்கடிக்கு நெருக்கடிக் கட்டத்தில் கட்டத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால் அது அனர்த்தமாக மாறிவிடும். ஒரு நாட்டில் வசித்த மக்கள் என்றவகையில் நாங்கள் மிகவும் மேசமான அனர்த்தத்திலேயே இருக்கிறோம். அதற்கு பதில் தேடுவது சுலபமான விடயமல்ல. நாங்கள் அனர்த்தத்தை பஞ்சமாகவும், வறுமையாகவும், அரசியல் கிளர்ச்சியாகவும், யுத்தச் சூழ்நிலையாகவும் காணமுடியும்.
சமூகத்தில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களையும் அனர்த்தமாகக் காணமுடியும். மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் பதில் பொலீஸ் மா அதிபரும் நீதியின் பெயரால் முன்னெடுத்துவருகின்ற நடவடிக்கையின் பெறுபேறாக குற்றச்செயல்கள் 17% ஆல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நாட்டில் குற்றச்செயல்களை தடுக்க, பாதாள உலகத்தை ஒழித்துக்கட்ட எடுக்கின்ற முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டுமென்ற குறுகிய அரசியல் கருத்தியலில் ஓர் அரசியல் இயக்கமென்றவகையில் நாங்கள் இல்லை. எனினும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளும்விதத்தில் சிக்கல் நிலவுகின்றது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையே சாதாரண பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு இன்றளவில் சிதைந்துள்ளது.
நீங்கள் இனிமேலும் சட்டம் மீது நம்பிக்கை வைத்திருப்பின் நாங்கள் ஒரு கட்சிஎன்றவகையில் ஒரு வாக்குறுதியை அளிக்க விரும்புகிறோம். சட்டத்தின் ஆட்சி என்பது, சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பது, சட்டம் அனைத்துப் பிரசைகளையும் சமமாக மதிக்கின்றது என்பது, மக்களின் உரிமைகள் அமுலாக்கபடுகின்றதென்பது முறைசார்ந்த நீதிமன்ற முறைமைக்குள் மாத்திரமே இடம்பெறும். அந்த செயற்பாங்கு நிகழ்காலத்தில் இடம்பெறமாட்டாதெனில் “நீதியின் நடவடிக்கை” என்பது பெயரளவில் மாத்திரம் அமுலாக்கப்படின் நாங்கள் மக்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்க விரும்புகிறோம். முறைமை மாற்றத்தின் ஊடாக மக்களின் பலத்தை முறைப்படி தேர்தல் மூலமாக பெற்றுக்கொண்ட பின்னர் இந்த மண்ணில் நடைமுறைச்சாத்தியமானதாக அமுலாக்குவதற்கான பிரமாண்டமான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரித்து வருகிறோம். சட்டத்திற்கும் மக்களுக்கும் இடையிலான அரசியல் தலையீடு நீங்கிய நாளில்தான் இந்நாட்டு மக்கள் நீதிதேவதைமீது நம்பிக்கை வைக்க முடியம். எனினும் அதனூடாக இடம்பெறுவது மக்கள் மேலும் பாதிக்கப்படுவதாயின் அத்துடன் குற்றச்செயல்கள் புரியப்படுவதை நியாயப்படுத்துவதாயின் நாங்கள் ஒரு போதுமே அதற்கு உடன்படமாட்டோம்.
“மக்களின் விருப்பத்துடன் நியமிக்கப்படுகின்ற திசைகாட்டியின் அரசாங்கத்தினால் மாத்திரமே சட்டம் சரிவர அமுலாக்கப்படமுடியும்” -சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார-
1992 காலப்பகுதியில் படுகொலை கலாசாரமொன்று நிலவியது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வந்தார்கள். குற்றச்செயல்கள் பொதுநிலைப்படுத்தப்படுகின்ற ஒரு போக்கு நிலவியது. அதைப்போலவே தேர்தல் காலங்களில் வன்முறைச் செயல்கள் காரணமாக ஆட்கள் உயிரிழந்ததை நாங்கள் கண்டோம். எனினும் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த கலாசாரம் ஓரளவு தணிந்தது. அண்மைக்காலமாக நாளாந்தச் செய்தித்தாள்களில் எத்தனை கொலைகள் இடம்பெற்றன என்பதை வாசிக்கிறோம். அரசாங்கத்தால், பொலீஸாரினால், தவறுதலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த படுகொலை மனிதர்களின் மண்டைகளில் பொதுமைப்படுத்தப்படுவதன் மூலமாக இதனைக் கேள்விக்குட்படுத்துவது நிறுத்தப்படுகின்றது. அத்தகைய நிலைமையில் இவை துரிதமாக அதிகரிக்கின்றன.
இது ஒரு தேர்தல் வருடம். “தேர்தல் காலங்களில் இவை இடம்பெறுவது சகஜம்” என மக்கள் மௌனம் சாதிப்பார்கள். இவை அரசாங்கத்தின் அரசியல் கலாசாரத்தினால் உருவாக்கப்படுகின்ற நிலைமையாகும். ஒரு நாட்டில் தவறு புரிந்தால் கைதுசெய்யப்படல் வேண்டும். வழக்கு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும். நீதிமன்ற முறைமைக்குப் புறம்பாக மக்கள் மடிவது “நல்லது, அவன் பாதாள உலகக்காரன், தூள் பாவிப்பவன்” என மௌனமாக இருக்கவேண்டாம். ஏனென்றால் அது பொலீஸ் ஊடகப் பேச்சாளரோ, எவரேர ஓர் அமைச்சரோ கூறுகின்ற விடயமாகும். அதனால்த்தான் பொலிஸ் அமைச்சரும் தேஷபந்து தென்னக்கோனும் கூறுகின்ற விடயங்கள் மற்றும் நடந்தகொள்கின்ற விதம் பற்றிய எமது கடுமையான விமர்சனம் நிலவுகின்றது.
இந்த நிலைமையை உருவாக்கியதே இந்த நாட்டின் அரசியல் கலாசாரம்தான். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா கோட்டாபய ராஜபக்ஷ கூறினார் “எனது வார்த்தைகள்தான் சுற்றுநிருபங்கள்” என. ரணில் விக்கிரமசிங்க போய் “எனக்கு போஸ்ற் ஒபீஸை தருவீர்களா? இல்லையா?” என அச்சுறுத்தல் விடுக்கிறார். பொலீஸ் அமைச்சர் “அடித்தால் அடிக்கவேண்டும்” என்கிறார். அவர்களுக்கு அரசாங்க பாதுகாப்பு உண்டு. எவரையும் கைதுசெய்வதற்கான அதிகாரம் உண்டு. எனினும் இவ்வாறு செய்வதனால் கீழ்நோக்கிச் செல்கின்ற செய்திதான் ” நீங்கள் என்ன தவறு புரிந்தாலும், எந்த மனித உரிமையை மீறினாலும் நாங்கள் அரசாங்கம் என்றவகையில் பார்த்துக்கொள்வோம்” என்பது. அப்போதுதான் நாரம்மல போன்ற சம்பவங்கள் இடம்பெறும். இதனை விமர்சித்தது நாங்கள் மாத்திரமல்ல. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இதனை விமர்சித்துள்ளது. அதனால்த்தான் பொலீஸ் ஆணைக்குழு ” நாட்டு மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படத்தக்க வகையில்” செயலாற்றுமாறு தேஷபந்துவிற்கு கூறியுள்ளது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படத்தக்கவகையில் சட்டத்தை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கூறுகிறோம். அந்த ஆற்றல் தேசிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. ஏனென்றால் நாங்கள் மக்களின் விருப்பத்துடனேயே ஆட்சிக்கு வருவோம். மக்களின் விருப்பத்திற்கு முரணாக அதிகாரத்தில் இருக்கின்ற அரசாங்கங்களே இத்தகை அடக்குமுறைசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முனைகின்றன. அதனால் நாங்கள் சமூகத்தைக் குணப்படுத்த வேண்டும். அதற்கு அவசியமான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கின்றது.