(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக” தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டக் கூட்டம் – கண்டி நகரம் – 2024.07.16-)
இன்று இரண்டு பிரதான செய்திகள் பிரசுரமாகின. ஒன்றுதான் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக கலந்துரையாடலொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த மாதத்தின் இறுதிக்குள் சனாதிபதி தேர்தல் பற்றிய அறிவிப்பினை வெளியிடுவதாக கூறப்பட்டது. சனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோருவதாக கூறப்பட்டது. அதற்கிணங்க 16 தொடக்கம் 21 நாட்களுக்கிடையில் வேட்பு மனுக்கள் கோரப்படும். வேட்பு மனுக்கள் கோரப்பட்ட திகதியிலிருந்து நான்கு – ஆறு வாரங்களுக்கிடையில் தேர்தலை நடாத்துவதாக கூறினார்கள். தலைவரின் கூற்றுகளை சுருக்கமாக எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் செப்டெம்பர் 28 ஆந் திகதி தேர்தல் நடைபெறும். எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் எவ்வாறான முடிவினை எடுக்கவேண்டும்? இந்த தீர்மானகரமான தேர்தலை எமது நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற தேர்தலாக மாற்றிக்கொள்ள முடியும்.
இரண்டாவது செய்தி பந்துல குணவர்தன அமைச்சரவை பேச்சாளர் கூறுகிறார் அரசியலமைப்பில் சிக்கலொன்று இருக்கிறதாம் ஐந்தா, ஆறா என. உறுதியாக ஆறு எனக் கூறுவதற்கான தீர்மானமொன்றை மேற்கொண்டதாக. அரசியலமைப்பிற்கான பொருள்கோடல் வழங்குவது அமைச்சரவையல்ல. அரசியலமைப்பின் 135 வது உறுப்புரையின் பிரகாரம் பொருள்கோடல் வழங்குவதற்கான அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே உரித்தானது. ஐந்தா ஆறா என்கிற கேள்வி பல சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றத்திடம் வினவப்பட்டுள்ளது. அமைச்சரவை அங்கீகரிக்கின்ற சட்டம் கெசட் பண்ணப்பட்டு ஒருவாரம் இருக்கவேண்டும். அடுத்ததாக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்து இரண்டு வாரம் இருக்கவேண்டும். பிரஜை ஒருவரால் நீதிமன்றத்திடம் செல்ல முடியும். உயர் நீதிமன்றத்தில் மூன்று வாரம் இருக்கவேண்டும். உயர்நீதிமன்றத்தின் அங்கீகாரத்தின் பின்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும். உயர்நீதிமன்றத்தினால் மக்கள் தீர்ப்புக்கு செல்லுமாறு கூறுவதால் ரணில் விக்கிரமசிங்க அந்த இடத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் மக்கள் கருத்துக்கணிப்பொன்றுக்கு அழைப்பு விடுக்குமாறு தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை கொடுப்பார். அந்த வேளையில் ரணில் வீட்டில். ரணில் இங்கு முயற்சிப்பது நாட்டுக்குள் ஒரு குழப்பநிலையை ஏற்படுத்துவதற்காகவே. ரணில் ஒரு ஐயப்பட்டிலேயே இருக்கிறார். இன்று தோ்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வந்தது. போட்டியிட சின்னம் ஒன்று கிடையாது. கட்சியொன்று கிடையாது. நிறம் ஒன்று கிடையாது. இந்த தோ்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் பாசறை குழப்பநிலையை அடைந்துள்ளது. அந்த குழப்பநிலையை சமூகத்திற்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். நீங்கள் குழப்பமடையவேண்டாம். தோ்தல் நிச்சயம் நடைபெறும்.
நீண்டகாலமாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை இந்த அனர்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். கமக்காரர்களுக்கு மீனவர்களுக்கு கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு சீவிக்க முடியாதுள்ளது. தொழில் முயற்சி சமுதாயம் எடுத்தகடனை மீளச்செலுத்தமுடியாமல் இருக்கிறது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை கைவிட்டுச் செல்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். இளைஞர் தலைமுறையினர் உயிர்வாழ்வதற்கான ஒரே வழிவகை நாட்டை விட்டு வெளியேறுவதே என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். குற்றச்செயல்களும் போதைப்பொருட்களும் தாண்டவம் ஆடுகின்றன. கடன் செலுத்த முடியாத நாடாக மாறியுள்ளது. ஒரு நாட்டுக்கு நேரக்கூடிய அனைத்துவிதமான அனர்த்தங்களும் எமக்கு ஏற்பட்டுவிட்டன. அதனால் எல்லா இடங்களிலும் மக்கள் மாற்றத்தை வேண்டி நிற்கிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்தப்போவது யார்? இந்த நாட்டை நான்கு ஐந்து தசாப்தங்களாக ஆட்சி செய்த தோல்வி கண்ட அரசியல் பாசறையால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இன்று இந்த நாட்டுக்கு ஓர் அரசியல் மாற்றம் அவசியமாகின்றது. எமது மனோபாவங்களில், கல்வியில், அனைத்து துறைகளிலும் மாற்றமொன்று அவசியமாகிறது. இந்த நாட்டை புதிய அரசியல் மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். இருபதாம் நூற்றாண்டு உலகிற்கு பல்வேறு வெற்றிகளை கொண்டுவந்த நூற்றாண்டாகும். இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டுமென்பதை பற்றி சிந்திக்க தொடங்கினார்கள். இலக்கியவாதிகள் இவ்வாறான உலகம் எமக்கு வேண்டுமென்றே எழுதினார்கள். விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு எதிர்காலம் இவ்வாறு அமையவேண்டுமென முன்மொழிந்தார்கள். அரசியல் சிந்தனையாளர்கள் குடும்பங்களுக்கு இரத்தமரபுரிமை வருகின்ற ஆட்சியதிகாரத்திற்கு பதிலாக மக்களின் பங்கேற்புடனான ஆட்சி அதிகாரமொன்று உருவாகுமென்று கூறினார்கள். 14 வது 18 வது நூற்றாண்டுகளில் சிந்தித்தவை இருபதாம் நூற்றாண்டிலே பௌதீக ரீதியாக கட்டியெழுப்பப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகளை உறிஞ்சி எடுத்து எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான நோக்கமோ இயலுமையோ எங்களின் ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் இருபதாம் நூற்றாண்டை தவறவிட்ட ஒரு நாடாகும். உலகத்தில் தோன்றியுள்ள அறிவின் வளர்ச்சிகள், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள், கலையின் இசையின் இலக்கியத்தின் வளர்ச்சிகளை உறிஞ்சி எடுத்துக்கொண்ட புதிய இலங்கை தேசமொன்றாக மாற்றுவதற்கான சவாலைத்தான் தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்கின்றது. இந்த நாடு உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகிய நாடாகும். இந்த நாட்டை உலகில் கீர்த்தி மிக்க நாடாக மாற்றுவதற்கான சவாலையும் பொறுப்பையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ள தயார்.
பிரஜைக்கு சட்டத்தின் முன் தனக்கு நியாயம் கிடைக்கின்றதென்ற உணர்வு இல்லாவிட்டால் அந்த சமூகம் அநாகரிகமான சமூகமாக மாறிவிடும். மீண்டும் சட்டத்தின் ஆட்சியை பலம் பொருந்திய வகையில் உறுதிப்படுத்துகின்ற நாடாக இலங்கை மாற்றப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றினால் மாத்திரமே அவ்வாறு சாதிக்க முடியும். இந்த சமூகத்தில் குற்றச்செயல்களின் அலை, போதைப்பொருட்களின் அலை நிலவுகின்றது. இவற்றிலிருந்து எமது நாட்டை மீட்டெடுக்க வேண்டும். இந்த குற்றச் செயல்களை நிர்மாணித்ததும் பாதுகாப்பதும் அரசியல்வாதிகளே. இந்த அரசியல்வாதிகளும் குற்றச் செயல் புரிபவர்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். குற்றச் செயல் புரிபவர்கள் பாதாள உலகத்தை சோ்ந்தவர்கள் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் குற்றச் செயல் புரிகிறார்கள். கெஹெலியவும் மஹிந்தானந்தவும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டார்கள். உடதலவின்னவில் சுட்டுக்கொண்டார்கள். றகர் விளையாட்டு வீரனை படுகொலை செய்தார்கள். இன்று தொழில் முயற்சியொன்றை நடாத்த பஸ் ஒன்றை வீதியில் இறக்க கப்பம் வழங்க வேண்டும். எங்களுடைய நாட்டை கட்டுப்படுத்துவது மேலே தெரிகின்ற அரசாங்கத்தை விட கீழே இருக்கின்ற உலகமாகும். இந்த நாடு குற்றச் செயல் புரிபவர்களின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு பிரஜைக்கும் தனது பிள்ளைகளின் வாழ்க்கை பற்றியும் தனது உயிர் பற்றியும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகின்ற நாடொன்று தேவை. அந்த நாட்டை உருவாக்குவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமாகும். நாங்கள் ஏற்படுத்துகின்ற மாற்றம் அதுவாகும்.
அதைபோலவே நாங்கள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக எமது நாட்டை ஆட்சி செய்தது. இனவாதமாகும். எமது நாட்டில் நிலவியது மற்றவருக்கு எதிராக சந்தேகம், அவநம்பிக்கை, பகைமை, வன்மத்தை பரப்புகின்ற அரசியலாகும். வடக்கிலுள்ள மக்களுக்கு எதிராக தெற்கில் எதிரியொருவரை சுட்டிக்காட்டினார்கள். தெற்கிலுள்ள மக்களுக்கு எதிராக வடக்கில் எதிரி ஒருவரை காட்டினார்கள். கிழக்கிற்கு எதிராக தெற்கில் எதிரியொருவரை காட்டினார்கள். எதிரியை உருவாக்குவதும் எதிரிக்கு எதிராக வீரர்களை உருவாக்குவதும் ஊடகமாகும். 2019 இல் ஒட்டுமொத்த தோ்தல் இயக்கமும் அந்த விதத்தில் தான் ஊசலாடியது. அதன் பெறுபேறு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கிடையில் அவநம்பிக்கை அதிகரித்தாகும். நாங்கள் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ளாத இனமாக மாறினோம். எங்களுக்கு மாற்றமொன்று அவசியமாகும். பிறருக்கு எதிராக புரிந்த அரசியலுக்கு, கருத்தியலுக்கு பதிலாக எமக்கு மாற்றமொன்று அவசியமாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கிடையில் ஒற்றுமையான அரசியல் அவசியமாகும். அது தான் தேசிய மக்கள் சக்தியின் அரசியல். இந்த அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள அணைத்து மக்கள் சமுதாயங்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அந்த அடிப்படைத்தான் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரத்தை இடுகின்றது. இந்த அரசாங்கம் உருவாவதே தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் தான். அது தான் தேசிய மறுமலர்ச்சி. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து தேசிய ஒற்றுமையுடன் அரசாங்கமொன்றை அமைத்திடுவோம் என நான் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இந்த நாட்டை கட்டியெழுப்பிட புதிய பொருளாதார பயணமொன்றுக்கு மாற்றியமைக்க வேண்டும். இந்த வழிமுறை சரியானதென்றால் நாடு முன்னேறியிருக்கவேண்டும். அவர்கள் வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார்களாம். பல தசாப்பதங்களாக அமைக்கமுடியாமல் போய்விட்டது. அவர்கள் தான் இந்த நாட்டை அனர்த்தத்தில் தள்ளிவிட்டார்கள். இந்த நாட்டை கட்டியெழுப்ப உலகின் புதிய தொழில்நுட்பத்தை உறிஞ்சி எடுத்து தொழில்நுட்ப மாற்றங்களின் அடிப்படையில் உற்பத்தி பொருளாதாரமொன்றுக்கு செல்ல வேண்டும். உலகின் சுகாதாரத்துறையில், ஔடத துறையில், விதையினங்கள் உற்பத்தியில் ஏற்படுகின்ற தொழில்நுட்ப மாற்றங்களை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்கின்ற ஒரு நாடாக மாற எம்மால் முடியவில்லை. நாங்கள் உலகின் புதிய உற்பத்திகளை நுகர்பவர்களாக மாறினோம். நாங்கள் ஒரு நுகர்வு நாடாக மாறினோம். இந்தியா அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முட்டைக்கான உற்பத்திச் செலவினை குறைத்துக் கொள்வதில் வெற்றிபெற்றது. இந்தியாவில் உற்பத்தி செய்கின்ற ஔடதங்கள் மோட்டார் வாகனங்களை நுகர்கின்றவர்களாக நாங்கள் மாறினோம். எங்களுடைய வைத்தியசாலைகளில் இருக்கின்ற பாரிய மருத்துவ உபகரணங்கள் இஸ்ரேயலிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. நாட்டுக்கு புதிய பொருளாதார மாற்றமொன்று தேவை. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார உபாய மார்க்கம் உலகில் இடம்பெறுகின்ற தொழில்நுட்பம் மூலமாக உற்பத்தியை முன்னேற்றுகின்ற ஒரு தேசமாக இலங்கையை மாற்றுவதாகும்.
எங்களுடைய நாட்டிலே காபன் சதவீதம் அதிகமான பெறுமதியான காரீய வளங்கள், புல்மோட்டை கனிய வளங்கள், புத்தளத்தில் பெறுமதிமிக்க சிலிக்கா வளம் இருக்கின்றது. நாங்கள் விஞ்ஞானிகளை சந்தித்தோம். இந்த வளங்களைக் கொண்டு பெறுமதிமிக்க பண்டங்களை எவ்வாறு உற்பத்தி செய்வது எனக்கேட்டோம். அது தொடர்பில் அறிவுபடைத்த விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். நாங்கள் முதலீட்டாளர்களுடன் தொழில் முயற்சியாளர்களுடன் உரையாடினோம். அவர்கள் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளை இலங்கையில் ஆரம்பிக்க தயார். எங்களுக்கு தொழில்நுட்பம், மூலதனம், சந்தையில்லாவிட்டால் அதற்கு அவசியமான தொழில்நுட்பம் நிலவுகின்ற, மூலதனம் இருக்கின்ற, சந்தை இருக்கின்ற முதலீட்டாளர்களை நாங்கள் வருமாறு அழைக்கவேண்டும். 1978 இலிருந்து 44 வருடங்களுக்கு 23 பில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு மூலதனமே கிடைத்துள்ளது. வியட்நாமிற்கு கடந்த வருடத்தில் மாத்திரம் 22 பில்லியன் டொலர் கிடைத்தது. இந்த நாட்டை புதிய உற்பத்திக்கு மாற்றியமைக்க முடியும். அதைப்போலவே உலகில் விரிவடைந்து வருகின்ற சேவைகள் சந்தையின் ஒரு பங்கினை நாங்கள் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். அவற்றுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பொருளாதாரம் வளரும்வரை தொழில்கள் கிடைக்கும் வரை மக்களால் காத்திருக்க முடியாது. ஊரிலுள்ள சாதாரண மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும். மக்களில் 68 வீதத்திற்கு உணவு கிடையாதென மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது. பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரும்வரை மக்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துகின்ற அரசாங்கம் தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். வருமான வழிவகை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். நாட்டு மக்களை பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பொதுமக்களின் பணத்தை திருடுகிறார்கள். விரயமாக்குகிறார்கள். அவற்றுக்கு சட்டம் அமுலாக்கப்படுவதில்லை. அப்போது சிரித்துக்கொண்டு போய் மீண்டும் திருடுகிறார்கள். சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். இந்த பொருளாதாரப் பயணம் எமது நாட்டை பாரிய கடன் பொறிக்குள் சிறைப்படுத்தி வைத்துள்ளதென்பதை நாங்கள் பாராளுமன்றத்தில் கூறுகிறோம். அவ்வாறு கூறினாலும் மென்மேலும் கடன் எடுக்கிறோம். நாங்கள் இதனை எவ்வளவோ கத்திக் கத்திக்கூறியிருக்கிறோம். எந்த பிரயோசனமும் கிடையாது. இனி கூறுவதற்கு பதிலாக அதிகாரத்தை எடுத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியானால் எதிர்வரும் ஜனாதிபதி தோ்தல் ஒரு தீர்மானகரமான தோ்தலாகும். இங்கே இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான நீங்கள் உங்களுடைய நண்பர்களிடமும் அன்பர்களிடமும் உறவினர்களிடமும் உரையாடுங்கள். எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றியைப் பெற்றுக்கொடுங்கள் நாங்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து நாட்டை மாற்றியமைப்போம். அதற்காக அனைவரையும் ஒன்று சேருமாறு அழைப்புவிடுக்கிறோம்.