Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“நிதிசார் ஒழுக்கம் பற்றி பேசிவருகின்ற ரணில், 875 கோடி ரூபா பொதுப்பணத்தை ஜனாதிபதி தோ்தலில் பிரச்சாரத்திற்காக ஒதுக்கிக் கொண்டார். இந்த ஊழல்மிக்க முறையை தொடர்ந்தும் பேணிவரவேண்டுமா?” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க-

(-மறுமலர்ச்சிக்காக முழு நாடுமே ஒன்றாக – தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை பொதுக்கூட்டம் – 2024-06-29-)

Kaluthara-Public-Rally

ஜனாதிபதித் தோ்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை, தயக்கம், சந்தேகம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி தோ்தலுக்கு முன்னராகவே அது நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் அரசாங்கமொன்றுக்காக பொதுமக்கள் ஒன்று சோ்ந்திருக்கிறார்கள். அது தொடர்பில் ஆளுங்குழு பதற்றம் அடைந்துள்ளது. ஜனாதிபதி தோ்தலை நடத்தாதிருக்க மேற்கொண்ட படிமுறைகள் உரையாடல்கள் தற்போது முற்றுப்பெற்றுள்ளன. ஜுலை மாதம் 17 ஆம் திகதியாகும்போது ஜனாதிபதி தோ்தலை பிரகடனம் செய்வதற்கான, வேட்பு மனுக்களை கோருவதற்கான, தோ்தல் தினத்தை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்றது. தோ்தலை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வி கண்டுள்ளன.

தற்போது அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்திருப்பது தோ்தலை எதிர்கொண்டு வெற்றிபெறுவதற்கான சதிவேலைகளை மேற்கொள்வதாகும். மக்களை ஒன்றுதிரட்டி மக்கள் முன் உரையாற்றி தோ்தல் இயக்கமொன்றை முன்னெடுப்பதில் ரணில் தற்போது தோல்வி கண்டுள்ளார். அதனால் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழு தற்போது மாளிகைக்குள்ளே சதிவேலைகளை புரிந்துந்து வருகின்றது. நாங்கள் ஹொரண பொது விளையாட்டரங்கில் மக்கள் முன் உரையாற்றிக்கொண்டிருக்கிறோம். ரணில் விக்கிரமசிங்க மாளிகைக்குள் ஹர்ஷ த சில்வா, கபீர் ஹஷீம், மயந்த, காவிந்தவுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். ஆங்காங்கே இருக்கின்ற குழுக்களை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து தோ்தலை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறார். மேலிடத்திருந்து புரிகின்ற மாளிகை சூழ்ச்சிகளால் மக்களின் எழுச்சியை மீளத்திருப்ப முடியாதென்பதைத்தான் ஹொரணவில் குவிந்துள்ள மக்கள் வெளிக்காட்டுகிறார்கள். இப்போது ரணில் விக்கிரமசிங்க பாசறை, சஜித் பிரேமதாஸ பாசறை, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்கின்ற பாசறை என்ற வகையில் மூன்று பாசறைகள் ஜனாதிபதி தோ்தலுக்கு முகம் கொடுப்பதற்காக அணிதிரண்டுள்ளன.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்கு உள்ள ஒரே தகைமை அவரே கூறுகின்ற விதத்தில் பிரேமதாஸவின் மகனாக அமைந்துள்ளமை மாத்திரமேயாகும். சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரேமதாஸவின் மகனாக அமைந்திராவிட்டால் என்ன நடக்கும்? அவர் ஹொரண நகரசபையின் உறுப்பினர் பதவிக்குக்கூட பொருத்தமான ஒருவரல்ல. இப்பொழுது சஜித்தைப் பற்றி அவருடைய கட்சியைச் சோ்ந்த சரத் பொன்சேகாவே பேசி வருகிறார். அவர்களுடைய அரசாங்கத்தில் திருட்டுக்களை அம்பலப்படுத்துகின்ற பொறுப்பினை சரத் பொன்சேகாவிடம் கையளிப்பதாக சஜித் கூறினார். இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னரே சரத் பொன்சேகா ஒரு திருடனை பிடித்துள்ளார். கெஷினோ பணம் வருகின்ற விதம் பற்றி கூறினார். எனவே சஜித்தின் பாசறையைப் பற்றி இனிமேலும் பேசுவதில் பயனில்லை.

Kaluthara-Public-Rally

எனினும் ரணிலின் பாசறையைப் பற்றி பேசியேயாகவேண்டும். மக்களின் எழுச்சியை முழுமையாகவே காட்டிக்கொடுத்து மக்கள் எதிர்பார்ப்புக்களை முற்றாகவே அழித்து பழைய நாசகார பயணத்திலேயே நாட்டை இழுத்துச் செல்ல முயற்சித்து வருவது ரணில் விக்கிரமசிங்கவின் பாசறையாகும். கடந்த தினமொன்றில் பாராளுமன்றத்திற்கு குறைநிரப்பு மதிப்பீடொன்றை கொண்டு வந்து தனக்கு வரவு செலவில் ஒதுக்கிய பணத்திற்கு மேலதிகமாக 875 கோடியை ஒதுக்கிக் கொள்கிறார். காலமோ இன்னும் இரண்டு மாதங்கள் தான். (அணையப்போகின்ற ஒரு மின்குமிழ்.) இந்த பொதுச் செல்வத்தை முற்றாகவே தனது தோ்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்த ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். தெற்கின் ஆளுநர் பல புதிய நியமனங்களை கொடுத்துள்ளார். முன்னாள் பிரதேச சபையின் தலைவர்களுக்கு ஆளுநரின் ஒருங்கணைப்பாளர் பதவி. பெரும்பாலான தலைவர்கள் உள்ளூர் அதிகார சபை தோ்தலில் அபேட்சகர்கள் ஆவர். தோ்தலின்போது அவர்கள் எவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை செலவிடுவது? கருத்திட்டங்களுக்காக எவ்வாறு பிரயோகிப்பது? அந்த கருத்திட்டத்தை எவ்வாறு வகுப்பது? அவற்றில் எவ்வாறு இடையீடு செய்வது? யாருக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்? தான் ஒரு தொகை பணத்தை எவ்வாறு சுருட்டிக்கொள்வது? அதற்காக தற்போது லக்ஷ்மன் யாப்பா முன்னாள் தலைவர்களை நியமித்துள்ளார். பொதுப்பணத்தை தமது அடிவருடிகளை தோ்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்த ரணில் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.

பொதுப்பணத்தை பயன்படுத்திக் கொண்டு ரணில் கட்சிக்குழுக்களுக்கு விசேட நிதியேற்பாடுகளை ஒதுக்கி அவர்களை தமது பக்கம் தூண்டிலிட்டு எடுக்க ரணில் முயற்சி செய்கிறார். பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலிருந்து 120 கோடி ரூபாவை எதிர்கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்தார். றிசாட் பதுர்தீன், சன்பிக ரணவக்க, ஹர்ஷ த சில்வா, மான்னப்பெரும, மயந்த திசாநாயக்க, காவிந்த ஜயவர்த்தன, அலவத்துவல ஆகியோருக்கு கொடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பொதுப்பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார். ரணிலுக்கு ஊரிலே ஐக்கிய தேசிய கட்சியின் கிளைச்சங்கங்கள் கிடையாது. தொகுதி அமைப்பாளர் ஒருவர் கிடையாது. அதனால் ரணில் ஆளுங்கட்சியில் இருக்கின்றவர்களுக்கும் ஆளுங்கட்சியை சாராத தான் தெரிவு செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பார் லைசன் வழங்கி, பெற்றோல் ஷெட்களில் லைசன் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார். “அண்மைக்காலத்தில் வழங்கப்பட்ட பார் லைசன் எல்லாவற்றையும் கென்சல் பண்ணுவதாக” சஜித் அண்மையில் கூறினார். நான் சஜித்திடம் கேட்கிறேன் “உங்களால் கூறமுடியுமா உங்கள் கட்சியைச் சோ்ந்த எவருமே பார் லைசன் பெறவில்லையென்று.” ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு, நாட்டின் நிதி நிறுவனங்களுக்கு நிதி ஒழுகலாறு பற்றி உபதேசம் செய்கிறார். நிதி ஒழுகலாறு பற்றி பேசுகின்ற ரணில் விக்கிரமசிங்க மக்கள் மீது வரி விதித்து மிகவும் கஷ்டமான நிலைமையில் மக்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு சேமித்த பணத்தை தனது தோ்தல் இயக்கத்திற்காக செலவிடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளார். இத்தருணத்தில் ரணில் கூறுகின்றவற்றை பார்த்தால் ரணில் விக்கிரமசிங்க கட்டாயமாக தோற்கடிக்கப்பட்டேயாக வேண்டும்.

மக்களின் பிரார்த்தனை “மாற்றமொன்று அவசியம் என்பதாகும்.” வடக்கின் தமிழ் மக்களும் கிழக்கின் முஸ்லிம் மக்களும் தெற்கின் சிங்கள மக்களும் மாற்றமொன்று அவசியமெனக் கூறுகிறார்கள். கமக்காரர்கள், மீனவர்கள், தொழிற்முயற்சியாளர் சமூகம், முச்சக்கரவண்டி சாரதிகளை சந்தித்தால் ”தொடர்ந்தும் இவ்வாறு பயணிக்கமுடியாது. மாற்றமொன்று அவசியம். என்றே கூறுகிறார்கள். “மாற்றம்” பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாகும் எவ்வாறான மாற்றம் ஒன்று தேவை? ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? மொட்டுக்கட்சியைச் சோ்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனால் மொட்டுக் கட்சியை சோ்ந்த சிலர் ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறியுள்ளார்கள். அவர்கள் யார்? பாராளுமன்றத்திற்கு மிளகாய் தூள் கொண்டுவந்த, எயார் போர்ட்டில் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய, துர்ப்பிரயோக செயல்களுடன் தொடர்புடைய கம்பஹா பிரசன்ன ரணவீர, கப்பம் வாங்கியமை காரணமாக மேல் நீதிமன்றத்தினால் நான்கு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள கம்பஹா பிரசன்ன ரணதுங்க, சிறைச்சாலைக்குள் நள்ளிரவில் புகுந்து சிறைக்கைதிகளை முற்றத்திற்கு கொண்டு வந்து கைத்துப்பாக்கியை தலையில் வைத்து மண்டியிடச் செய்வித்து அச்சுறுத்திய கண்டி லோஹான் ரத்வத்த அமைச்சர், நீங்கள் அறிந்த நீர்கொழும்பின் நிமல் லன்சா, கிழக்கின் கருணா, கிழக்கின் பிள்ளையான் புதிய மாற்றத்திற்காக ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இந்த குழுவில் உள்ளவர்கள் யார்? நாட்டை மாற்றியமைப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சூழவுள்ளவர்களும் அயோக்கியத்தனமிக்க குழுவினரிடமும் கையளிக்கமுடியுமா? ஏற்கெனவே இருக்கின்ற வஜிர அபேவர்தன போன்றவர்கள் பழைய தோல்வி கண்ட பயணத்தில் தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்லவே தயாராகி வருகிறார்கள். இந்த அயோக்கியத்தனமான குழுவின் கைகளில் அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க முடியாது என்ற திடசங்கற்பத்திற்கு மக்கள் வரவேண்டும். அப்படியானால் சஜித்தின் குழுவிற்கு கொடுக்கவே வேண்டுமா? பாவம், அது பற்றி அதிகமாக கூறவேண்டியதில்லை.

Kaluthara-Public-Rally

ஜே.ஆர் ஜயவர்தன நாட்டை ஆட்சி செய்த பின்னர் மருமகன் அதிகாரத்தை கோரி நிற்கிறார். பிரேமதாஸ நாட்டை ஆட்சி செய்தார். இப்போது அவருடைய மகன் அதிகாரத்தை கோருகிறார். மகிந்த ராஜபக்ஷ நாட்டை ஆட்சி செய்தார். இப்போது மகன் அதிகாரத்தை கோரத் தயாராகி வருகிறார். எமது நாட்டில் அரசியல் பலத்தின் சுக்கான் ஒரு சில குடும்பங்களில் கைகளிலேயே சுழன்றது. பழைய அழிவுமிக்க ஊழல் புரிந்த பிரபுக்கள் வர்க்கத்தின் கைகளுக்கே மீண்டும் அதிகாரத்தை கோரி வருகிறார்கள். அவர்கள் எவராலும் இந்த நாட்டுக்கு எந்த விதமான மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஹொரண பொது விளையாட்டரங்கிற்கு இத்தருணத்தில் குழுமியுள்ள உங்களைப் போன்ற நாடு பூராவும் பரந்துள்ள மக்களாலேயே அதனை சாதிக்க முடியும். ஒருபோதுமே அரசியல் மேடையில் ஏற நினைக்கவில்லையென்றே அமைச்சு செயலாளர் ஒருவராக பணியாற்றிய திரு. ஏ.பி.ஏ. குணசேகர இந்த மேடையில் கூறினார். ரவி செனெவிரத்ன அவர்கள், சம்பத் துய்யகொந்தா அவர்கள், பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி தோழர் போன்ற பலர் இன்று அந்த கதையைக் கூற காரணம் எம்மனைவருக்கும் நாட்டை மாற்றியமைப்பதற்காக இந்த மேடைக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளதால் ஆகும். இந்த எவருமே பழைய தோல்வி கண்ட அரசியல் பயணத்திற்கு துணைநின்று அந்த பயணத்திற்கு தோள்கொடுத்து சென்றவர்களல்ல. புதிய குழுவினரை சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பாரிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பியிருப்பது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும்.

மல்வத்த மகாநாயக்க தேரரை சந்தித்த வேளையில் அவர் கூறிய கதையொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. 1970 மற்றும் 1980 சதாப்தங்களில் அவர் இந்தியாவுக்கு சென்ற வேளையில் ஒரு குடையை பிடித்துக்கொண்டு சென்றால் இந்தியர்கள் வந்து குடையை தடவிப்பார்த்து அபகரித்துக்கொள்ள முயற்சி செய்வார்களாம். அதைப்போலவே இந்தியாவுக்கு காற்சட்டை துணியை எடுத்துச் சென்றால் எயார் போர்ட்டிலிருந்து வெளியில் சென்றதுமே விற்றுவிட முடியுமென ஒரு வியாபாரி கூறினார். அப்படிப்பட்ட இந்தியா இந்த பிராந்தியத்திற்கு அவசியமான ஔடதங்கள், மோட்டார் வாகனங்கள், உணவுகளை உற்பத்தி செய்வதைப்போன்றே தொழிநுட்பத்தை உற்பத்தி செய்கின்றது. சந்திரனுக்கு செல்கின்றது. எமது ஆட்சியாளர்கள் நாட்டில் இருந்த கைத்தொழில் முறைமையை முற்றாகவே நாசமாக்கி எஞ்சியிருந்த நிறுவனங்களையும் விற்றுவிட முயற்சி செய்கிறார்கள். ரணிலின் பொருளாதார பயணம் அதுவாகும்.

எங்கள் நாட்டில் இருக்கின்ற வளங்களை நன்றாக பயன்படுத்தி புதிய பயணம் ஒன்றுக்கு புதிய மாற்றமொன்றுக்கு கொண்டு செல்வதற்கான நிலைமாற்றத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதற்காக உலகம் பூராவிலும் இருக்கின்ற இலங்கை விஞ்ஞானிகள் ஒன்றுக்கூடி எங்களுடைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கைத் தொடரின் அடிப்படை வரைவினை சமர்ப்பித்தார்கள். தனது பிள்ளை எந்த நேரத்தில் போதைப் பொருளுக்கு இறையாகிவிடும் என்ற பயத்துடன் இருக்கின்ற சமூகத்தை முற்றாகவே மாற்றியமைத்து விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தின் ஒரு புதிய மலர்ச்சியை அந்த பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இதுவரை எம்மீது நம்பிக்கை வைத்திராத மக்களில் ஏறக்குறைய 90% எம்மைச் சுற்றி குழுமியிருப்பது நாட்டை கட்டியெழுப்புவதற்கான பயணத்தின் முதலாவது படிமுறையாகும். மக்கள் மாற்றமடைந்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும். தமக்குள் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்தை நாட்டின் வெற்றிவரை பிரயோகித்து ஜனாதிபதி தோ்தலின்போது திசைகாட்டியை வெற்றியீட்ட செய்விக்க வேண்டும். இன்றளவில் தாமும் மாற்றமடைந்து அவ்விதமாக மாற்றிக் கொண்ட விடயங்களை பற்றி மற்றவர்களுடன் கலந்துரையாடுகின்ற பெருந்தொகையானோர் எமது நாட்டில் இருக்கிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ச்சியாக சமூகத்துடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு ஒன்று சோ்வதிலான வெற்றியை நாட்டுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Kaluthara-Public-Rally

“சேறு பூசி குறை கூறி எங்கள் இயக்கத்தின் வெற்றியை தடுக்க இயலாது”
-மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா-

இந்த மைதானம் பூராவிலும் நிறைந்துள்ள திடசங்கற்பமிக்க மக்களை பார்க்கும்போது ஜனாதிபதி தோ்தலின் வெற்றிக்காக தமது பங்கினை சோ்ப்பதற்காக ஹொரண தொகுதியின் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே தெளிவாகின்றது. இன்றவில் ஜனாதிபதி போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் சஜித் பிரேமதாஸ அவர்கள் எவரிடமிருந்தாவது சிறிது பணத்தை பெற்று பாடசாலைக்கு ஒரு பஸ் வண்டியையோ வகுப்பறையையோ வழங்கி பிள்ளைகளை சோ்த்துக்கொண்டு “நண்பர்களே” என அரசியல் உரைகளை ஆற்றுகிறார். திருவாளர் பொன்சேகா அவரை நிலத்தில் விழக்கூடிய வகையில் தாக்கியதால் இந்நாட்களில் சற்று பேச்சினை குறைத்துக்கொண்டுள்ளார். மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்க அரச பலத்தை பிரயோகித்து மாவட்ட அபிவிருத்தி சபைக் குழுக்களுக்கு அழைப்பு விடுத்து மறுபுறத்தில் இலஞ்சம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பண்டங்களையும் காணி உறுதிகளையும் வழங்கி வருகிறார்.

ரணில் விக்கிரமசிங்க சதாகாலமும் எதிர்காலம் பற்றிய மக்களுக்கு கூறிக்கொண்டிருக்கிறார். அவர் எதிர்காலத்திற்காக சதாகாலமும் கூறிய எதுவுமே ஈடேற்றப்படவில்லை. இற்றைக்கு சில காலத்திற்கு முன்னர் எமது நாட்டின் இளைஞர்களுக்கு தங்க பிறேஸ்லற் அணியக்கூடிய நிலைமையை உருவாக்குவதாக கூறினார். எனினும் இறுதியில் வீட்டிலுள்ள தாய்மார்களினதும் சகோதர சகோதரிகளினதும் தங்கச் சாமான்கள் வங்கிகளுக்கு சொந்தமாகிவிட்டன. அதன் பின்னர் நாடு பூராவிலும் wifi வலயங்களை உருவாக்குவதாக கூறினார். இறுதியில் ரூபா 100 டேட்டா காட் ஒன்றைக்கூட போட்டுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2020 அளவில் இலங்கையை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக முன்னர் கூறினார். மேலும் நான்கு வருடங்களில் கடன் செலுத்த ஆரம்பிப்பதாக இப்போது கூறுகிறார். முன்னர் வானொலியில் பாட்டுக்கு பாட்டு என ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது போல் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறுவது பொய்க்கு பொய். ஒரு பொய்யை கூறி அது மறந்து போகும்போது மற்றுமொரு பொய்யை கூறி முதலாவது பொய்யை மக்களுக்கு மறக்கச் செய்கிறார். பொய்க்கூறிக் கொண்டே பயணிக்கிறார். அவர்கள் ஏதாவது செய்வார்கள் என நம்பிய காலத்தில் மக்கள் அந்த பொய்யை நம்பினார்கள். எங்கள் நாட்டு மக்களை இவ்வாறான பொய்களால் ஏமாற்ற முடியாததென்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொய் வேலை செய்த, பொய்க்கூறிய அனைவரையும் தமக்கு கிடைக்கின்ற முதலாவது சந்தர்ப்பத்திலே தோற்கடிக்க மக்கள் தயார்.

எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தொடர்பில் எவருமே சந்தேகம் கொள்ளவேண்டாம். நாங்கள் எவருமே திடீரென ஒரு தோ்தலில் குதித்தவர்களல்ல. ரணில் விக்கிரமசிங்க பொறுக்கிக் கொள்ளும் முறைக்கிணங்க ஒரு கும்பலை கழற்றி எடுப்பதே செய்து வருகிறார். மொட்டிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து போல் ஆங்காங்கே ஆட்களை சோ்த்து அமைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். மகிந்த ராஜபக்ஷாக்களுக்கு அப்படியொன்றுக்கூட கிடையாது. சஜித் பிரேமதாஸவும் தனது கும்பலை பாதுகாத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முயற்சி செய்கிறார். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் கொழும்பில் தேசிய மாநாட்டினை நடாத்தி, அதன் பின்னர் மாவட்ட மாநாடுகளை நடாத்தி, தொகுதி மாநாடுகளை நடாத்தி, நிறைவேற்று குழுக்கள் மற்றும் ஏற்பாட்டு சபைகளை நிறுவி இயங்கினோம். இறுதியாக கிராம சேவைகள் பிரிவு மட்டத்தில் வட்டார சபைகளை தாபித்தோம். இவ்விதமாக பிரமாண்டமான அமைப்பாண்மை வலையமைப்பை சுற்றி இந்த நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயாராகிய ஐக்கிய தேசிய கட்சியினதும் மொட்டுக்கட்சியினதும் அனைவரையும் சோ்த்துக் கொண்டோம். அத்துடன் நின்று விடாமல் பெண்களை சோ்த்துக் கொண்டு “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” அமைப்பினை கட்டியெழுப்பினோம். பல்லாயிரக்கணக்கான பெண்கள் அமைப்புக்களை அரசியலில் சோ்த்துக்கொண்டோம். முப்படைகளைச் சோ்ந்த இளைப்பாறியோர் கூட்டமைப்பு, இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒன்றியம், சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு, மருத்துவர்களின் கூட்டமைப்பு, பொறியியலாளர்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சக்திகளையும் மேல் மட்டத்தைப்போன்றே அடிமட்டம்வரை சோ்த்துக் கொண்டு நாட்டை மாற்றியமைக்கக்கூடிய பாரிய மக்கள் சக்தியொன்றை கட்டியெழுப்பினோம். எங்கள் நாட்டின் பொதுமக்கள் திசைகாட்டியை வெற்றிபெற செய்விப்போம் என்ற நம்பிகையுடன் இயங்கி வருகிறார்கள்.

எமக்கு மாத்திரமன்றி திசைகாட்டி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை ரணிலுக்கும் உண்டு. ரணிலால் இந்த ஜனாதிபதி தோ்தலை எளிதாக வெற்றி கொள்ள முடியுமானால் ஜனாதிபதி தோ்தலை பிற்போடுவதற்கான வழிமுறைகளை தேடிக்கொண்டிருக்கமாட்டார். அவர்கள் ஜனாதிபதி தோ்தலிலிருந்து தப்பியோட முயற்சி செய்வதன் மூலமாக திசைகாட்டியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. நாங்கள் திசைகாட்டியை வெற்றிபெற செய்விப்பது நிலவுகின்ற இந்த அரசாங்கங்களுக்கு பதிலாக புதிய அரசாங்கமொன்றை அமைக்கவோ அல்லது தற்போது இருக்கின்ற ஜனாதிபதிக்கு பதிலாக வேறொரு ஜனாதிபதியை நியமிக்கவோ மாத்திரமல்ல. நாங்கள் கட்டியெழுப்புகின்ற அரசாங்கத்தால் மாத்திரம் சாதிக்கமுடியாத நாம் அனைவரும் ஒன்றுசோ்ந்து ஆழமான சமூக மாற்றத்தை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புகின்ற சவால் எம்மெதிரில் இருக்கின்றது.

Kaluthara-Public-Rally

தேசிய மறுமலர்ச்சி யுகமொன்றை நாங்கள் உருவாக்கவேண்டும் உலக நாடுகள் வேகமாக முன்னோக்கி நகர்ந்தாலும் இருந்த ஆட்சியாளர்கள் கடந்த நூற்றாண்டில் எமது நாட்டை பின்னோக்கியே எடுத்துச் சென்றார்கள். சுதந்திரம் பெற்றவேளையில் ஆசியாவின் பலம் பொருந்திய இரண்டாவது பொருளாதாரம் நிலவிய இலங்கை இன்று ஆசிய பொருளாதாரத்தில் கடைசி நாடாகும். சுதந்திரம் பெறுகின்ற வேளையில் வெளிநாடுகளுக்கு கடன்பட்டிராத இலங்கை தற்போது கடனை மீளச்செலுத்த முடியாமல் வங்ரோத்து அடைந்து சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் போய் முனங்கிக்கொண்டு கடனை மீளச்செலுத்துதலை பிற்போட்டுக்கொண்டிருக்கிறது. எமக்கு முற்காலத்தில் பாரிய மகிமை இருந்ததென்பதை நாம் அனைவரும் அறிவோம். புதிய ஆட்சியாளர்கள் மீண்டும் பராக்கிரமபாகு யுகமொன்றை உருவாக்குமெனக்கூறி ஒரு மாயையை முன்வைத்தார்கள். மகிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக்காலத்தில் துட்டுகெமுனு பற்றிய திரைப்படமொன்றை திரையிட்டு இறந்தகாலத்திற்கு கொண்டு செல்ல எத்தனித்தார்கள்.

மலேசியா விவசாயத்தில் புதிய விதையினங்களை கண்டுபிடித்து முன்னேறிச் செல்கையில் எமது நாடு மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தவற்றை தெருவோரங்களில் விற்கின்ற நிலைக்கு மாறியது. மலேசியாவின் புளியம் பழமும் இங்கு இருக்கிறது. ஏனைய நாடுகள் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பதுறையில் பாய்ச்சலுடன் முன்னேறுகையில் ஆட்சியாளர்கள் எமது நாட்டை இருபதாம் நூற்றாண்டிலிருந்து கைவிட்டார்கள். அதனால் இருபத்தோராம் நூற்றாண்டுக்காக எமது நாட்டுக்கு மறுமலர்ச்சி யுகத்திற்கான பாச்சலொன்று அவசியமாகியிருக்கிறது. அதனால் இது ஜனாதிபதி தோ்தலை வென்றெடுக்கின்ற அல்லது பாராளுமன்ற தோ்தலை வென்றெடுக்கின்ற ஒரு தோ்தல் அல்ல. முழுநாடுமே ஒரு பாச்சலுக்காக அனைத்து சக்திகளையும் சோ்த்துக்கொள்கின்ற தருணமாகும். அதற்காக ஒட்டுமொத்த மக்களையும் இணைத்துக்கொண்ட மக்கள் பங்கேற்பு உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவோம். சியம்பலாண்டுவவிற்கு, வவுனியாவிற்கு, கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிராத அபிவிருத்தியை அங்குள்ள மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். கீழிலிருந்து மேல்நோக்கி அதைபோலவே மையத்திலிருந்து பரிதிவரை மக்களுக்கு நியாயமான வகையில் பொறியமைப்பொன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்வரை நிவாரணங்களை வழங்கி நிவாரணங்கள் இன்றி சொந்தக்கால்களால் நிற்கக்கூடிய மக்களை இந்நாட்டில் உருவாக்குவோம். இந்த பணியில் ஈடுபடுகின்றபோது எம்மிடம் அடிக்கடி கேட்கின்ற ஒரு சில கேள்விகள் இருக்கின்றன.

ஜே.வி.பி. மற்றும் என்.பி.பி. பற்றி கேள்வி கேட்கின்ற பலருக்கு இந்த மக்கள் இயக்கம் பற்றி விளங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்னர் தோ்தல் ஒன்று நெருங்குகையில் கூட்டணிகளை நிறுவிக்கொண்டு உறுப்பினர் பதவிகள், தேசிய பட்டியல் உறுப்பினர்கள் போன்றே அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்கின்ற அரசியலே காணப்பட்டது. எங்களுக்கு என்ன கொடுப்பீர்கள்? எனக் கேட்கின்ற எவருமே என்.பி.பி. மேடைகளில் இல்லை. நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து நாட்டுக்காக எவ்வாறு சேவையாற்றுவது எனும் திடசங்கற்பம் கொண்ட குழுவினரே எம்மைச் சுற்றியிருக்கிறார்கள். மறுமலர்ச்சி யுகத்தின் பிரதான பணியாக இலங்கை தேசத்தவரை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இலங்கை தேசம் கட்டியெழுப்பப்பட்டதும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைவரதும் அடையாளம் அதற்குள்ளே பாதுகாக்கப்படும். திசைகாட்டி உருவாகியுள்ள பல்வேறு அமைப்புக்களின் அடையாளம் தனித்தனியாக இருக்கின்ற அதேவேளையில் சீரழித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான மறுமலர்ச்சி யுகத்தின் செயற்பொறுப்புக்காக நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இவ்வாறான ஒரு சக்தி வேறு எவருக்குமே கிடையாது. ரோஹித அபேகுணவர்தன போன்ற ஒருவருக்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் பதவியை கொடுத்தவர்கள் எமது அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு நியமிக்கப்படுகின்றவர்களின் தகைமைகளைப் பற்றி கேட்கிறார்கள். மஹிந்தானந்த அளுத்கமகே கமத்தொழில் அமைச்சராக இருந்த வேளையில் நுண்ணங்கிகள் இல்லாத கரிம உரத்தை சீனாவிலிருந்து கொண்டு வருவதாகக் கூறினார். எனினும் திசைகாட்டியைச் சுற்றி ஒவ்வொரு துறையையும் சார்ந்த உயர் மட்ட ஆற்றல் படைத்த தொழில்வாண்மையானவர்கள் அணிதிரண்டு இருக்கிறார்கள்.

எம்மை கண்டு பதற்றம் அடைந்துள்ள எதிரிகள் எமது உரைகளை திரிபுபடுத்தி மக்களை அச்சுறுத்துகின்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எம்மீது கல்லெறிந்து சேறு பூசி வீழ்த்த முடியாதென்பதை எதிரிகளுக்கு ஞாபகப்படுத்துகிறேன். நாங்கள் கூறும் கதைகளை திரிபடுத்தி பிரச்சாரம் செய்வதால் பதற்றமடைபவர்களுக்கு நாங்கள் முழு உரையையுமே கேட்குமாறு கூறியதும் எங்களுடைய உரைகள் அடங்கிய வீடியோவை முழுமையாக கேட்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனூடாக மிகவும் நன்றாக உண்மையை விளங்கிக்கொள்கின்ற மக்கள் அவர்களிடமிருந்து விலகி எங்களுடன் சோ்ந்துகொள்வார்கள். எமக்கு சேறு பூசுகின்ற தொலைக்காட்சி அலைவரிசைகளை வேகமாக நிராகரிப்பார்கள். எம்மீது சேறு பூசுகின்ற யூ ரியுப் அலைவரிசைகள் மக்களால் வேகமாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. சேறு பூசல்களால் இந்த மக்கள் வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கமுடியாது. “முன்னணியின் தடைகளை கண்டு – எந்த ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டது” என கூறுவார்கள். ஆற்றின் ஓட்டம் தடைகளால் நின்றுவிடமாட்டாது. திசைகாட்டி அனைத்து தடைகளையும் தாண்டி முன்னோக்கி நகரும். நாங்கள் அனைவரும் ஜனாதிபதி தோ்தல் வரை ஒன்றாக சோ்ந்து எவராலும் தோற்கடிக்க முடியாத மக்கள் பிரவாகமாக கட்டியெழுப்பி முன்னோக்கி நகரவேண்டும். வெற்றி எங்கள் கைகளில் தான் இருக்கிறது. இறந்தகாலம் எதிரிகளுக்கு சொந்தமானதாகும். எதிர்காலம் மக்களுக்கு சொந்தமானதாகும். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பொதுமக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்போம். ஜனாதிபதி ஒருவரை நியமித்துக்கொண்டு மக்கள் நேயமுள்ள ஆட்சியை நிறுவி நாட்டை வெற்றிபெறச் செய்விப்போம்.

Kaluthara-Public-Rally

“மறுமலர்ச்சி யுகத்தில் பிரஜைகளின் வரலாற்றினை எழுதுவதற்கான உரிமை பிரஜைகளுக்கே கிடைக்கும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய-

நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் எங்களுடைய கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நாசமாக்கினார்கள் என நாங்கள் அன்று நினைத்தோம். இன்று அது மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் நீங்களே. எனினும் நாட்டின் ஆட்சியாளர்கள் மாறவில்லை. அந்த ஊழல்மிக்க அயோக்கியமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் என்ற வகையில் ஒரே நோக்கத்துடன் கூட்டாக ஒன்றுசோ்ந்து நாம் அனைவரும் மீண்டும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம்; கனவு காண்கின்ற வாய்ப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. புதிய எதிர்பார்ப்புகளை கொண்டதாக இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எம்மால் ஒன்றுசேர முடிந்துள்ளது.

எங்களுடைய எதிர்பார்ப்புக்கள் என்ன? இந்த மூர்க்கத்தனமான ஆட்சியை மாற்றியமைத்து இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தோழர் ஒருவரை நியமித்துக்கொள்ள எமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தோழர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கழியமுன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதாக கூறியிருக்கிறார். அதன்போது ஊழல் மிக்க பாராளுமன்றத்தை சுத்தம் செய்து எமக்கு அவசியமான வகையில், மக்கள் நேயமுள்ள, மக்களைப் பற்றி சிந்திக்கின்ற புதிய மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த இரண்டு விடயங்களை நிறைவு செய்து கொண்ட பின்னர் நாட்டை கட்டியெழுப்புகின்ற வேலையை தொடங்க எமக்கு இயலுமானதாக அமையும்.

முதலாவது நாளிலிருந்தே எமது செயற்பாடுகளில் எமது பாவனைகள் மூலமாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை நிறுவிக்கொள்வோம். அரசியல்வாதியின் எல்லையை விளங்கிக் கொள்ள தரவு விஞ்ஞானத்தின் பேரில் மக்களை முதன்மையாகக் கொண்ட மக்களை மையப்படுத்திய கொள்கைகளை வகிக்கின்ற அரசியல் கலாச்சாரமொன்றை நாங்கள் ஆரம்பிப்போம். அரசியல் என்பது சிறப்புரிமைகளுக்காக பேராசையுடன் இருக்கின்ற தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக உழைப்பதற்கு பதிலாக மக்களுக்கு நோ்மையாக சேவையாற்றுகின்ற மக்களுக்கு பொறுப்புக்கூறுகின்ற அரச பொறியமைப்பொன்றினை நாங்கள் நியமிப்போம். அந்த பொறியமைப்பூடாக புதிதாக உருவாக்கப்படுகின்ற புதிய எதிர்பார்ப்புக்களுடன் கூட்டான கொள்கைகளுக்கு அமைவாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுடன் அரசியல் தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்து இந்த நாட்டை படிப்படியாக கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சியுகத்தை நாங்கள் தொடங்குவோம்.

புதிய பொருளாதார முறையியலொன்று எமக்கு தேவை. மக்களை மையமாகக் கொண்ட, மக்கள் பங்கேற்பினை பெற்றுக்கொள்வதற்காக உற்பத்தி அதிகரிக்கின்ற பொருளாதாரமொன்று எமக்கு தேவை. அதற்காக அவசியமான தரவுகள், கொள்கைகள், விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். இந்த தேவையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் முதல் தடவையாக பெருந்தொகையான விஞ்ஞானிகள் ஒன்றுசோ்ந்து நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமான ஆராய்ச்சிகள் என்ன என்பதை கலந்துரையாடுவதற்கான எமது ஆராய்ச்சிக் கொள்கையை நாங்கள் களமிறக்கினோம். அத்தகைய பொருளாதாரமொன்றில் எம்மனைவரினதும் ஒத்துழைப்பினை பெற்றுக்கொண்டு பலம் பொருந்திய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். இந்த நாட்டில் 52% ஆக அமைகின்ற பெண்களுக்கு தமது பராமரிப்பு வேலைகளுக்கு பெறுமதியொன்றைக் கொடுக்கின்ற, சமூக பொறுப்பை எடுத்துக்கொண்டு தமது தொழில்களை சுதந்திரமாக புரியக்கூடிய வகையிலான அரச இடையீடுகள் மூலமாக அந்த பராமரிப்பு வேலைகளில் சுமையை குறைத்துக் கொண்டு அவ்வாறு அமைக்கின்ற கட்டமைப்புக்குள் பெண்களுக்கு இந்த பொருளாதாரத்தின் சம பங்காளிகளாக மாறக்கூடிய பொருளாதாரமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். அந்த பொருளாதாரத்தின் நன்மைகளை நாம் அனைவரும் நியாயமான வகையில் அனுபவிக்கக்கூடிய முறையியலொன்றை நாங்கள் தயாரிப்போம். அவை அனைத்தையும் செய்ய எங்களுடைய மனித வளத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மக்கள் சேவைகளூடாக மக்களுக்கு சேவையாக அமைகின்ற மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கக்கூடிய வகையிலான மக்கள் சேவைகள் கிடைக்கத்தக்க வகையிலான நிலைமாற்றமொன்றை நாங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும்.

Kaluthara-Public-Rally

கல்வி கற்கின்ற ஒரு பிள்ளையை முன்பள்ளியில் இருந்து உயர் கல்வி வரை ஒரு நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாத்து, சமூகப் பொறுப்பு கிடைக்கின்ற, சமூகத்திலிருந்து தமக்கு கிடைக்கின்ற பொறுப்பு பற்றிய மனோபாவங்களை உருவாக்குகின்ற, சமூக அபிவிருத்தியில் பங்கேற்றக்கூடிய நிலைமையொன்று கட்டியெழுப்பப்படும். சமூகத்திற்கு தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய பிரஜையொருவரை உருவாக்குகின்ற கல்வியை நாங்கள் படிப்படியாக வழங்குவோம். ஆரோக்கியமான பிரஜையை உருவாக்குகின்ற, பாதுகாக்கின்ற சுகாதார சேவையொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். பொதுமக்களின் தேவைகளுக்கிணங்க மக்கள்மீது கூருணர்வுபடைத்த பொதுப் போக்குவரத்துச் சேவையொன்றினை நாங்கள் உருவாக்குவோம்.

எமது பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துவிட்ட உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எவரையும் பசியுடன் இருக்க இடமளிக்க மாட்டோம் என்பதோடு , போசாக்கினால் நிறைவடைந்த, உணவின் தரம் பற்றிய சந்தேகத்துடன் வாழ இடமளிக்க மாட்டோம். அதைப்போலவே எமக்கு பலம்பொருந்திய சமூகப் பாதுகாப்பு அவசியமாகும். சமூகத்தின் அனைத்துப் பாகங்களையும் ஊனமுற்றவர்கள், விசேட தேவை கொண்ட பெண்கள், பிள்ளைகள், மூத்த பிரஜைகள் அனைவருமே பாதுகாக்கப்படுகின்ற நிறுவன முறைமையொன்று எமக்கு அவசியமாகின்றது. எவருமே நிர்க்கதிநிலையுறத் தேவையில்லை. அனைவர் சார்பிலும் பொறுப்புக்கூறுகின்ற, அனைவரையும் பாதுகாக்கின்ற, சமூகப் பாதுகாப்பினை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த நாட்டுக்கு சட்டத்தின் ஆட்சி அவசியமாகின்றது. எவருக்கும் பாரபட்சம்காட்டாத, சட்டத்தின் ஆட்சி, நீதி, நியாயம் உறுதிப்படுத்தப்படுகின்ற சட்ட முறைமையொன்றை, நீதிமன்ற செயற்பாங்கினை நாங்கள் அமைத்துத் தருவோம்.இவையனைத்தையும் சாதித்துக்கொள்ள எமக்கு பலம்பொருந்திய அரசியலமைப்பொன்று தேவை. அந்த அரசியலமைப்பு மக்கள் இறைமைக்கு முதன்மைத்தானம் வழங்குகின்றவகையில், சனநாயகத்திற்கான அகல்விரிவான அர்த்தத்தைத் தருகின்றவகையில் தயாரிக்கப்படும். இலங்கைப் பிரஜை தேர்தலின்போது புள்ளடி இடுகின்ற நிலைக்கு அப்பால் பயணிக்கின்ற, தான் நிருவாகத்துடன் நேரடியாக தொடர்புபடக்கூடிய, தனது இறைமையை அமுலாக்கக்கூடிய, தனது உரிமைகள் உறுதிசெய்யப்படுகின்ற, பாதுகாக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பினை வகுக்கின்ற செயற்பாங்கினை நாங்கள் தொடங்குவோம்.

நாங்கள் பல வருடங்களாக இரத்தம்சிந்திய ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாவோம். அதற்கு மூலகாரணமாக அமைந்த தேசிய ஒற்றுமையை நாங்கள் நிலைநாட்டுவோம். எந்தவொரு பிரஜைக்கும் பாரபட்சம் காட்டாத, இரண்டந்தர பிரஜையாக கருதாத, அனைவரும் இலங்கையர் எனும் அடையாளத்தைக்கொண்டதாக தனது கலாச்சார உரிமைகளை, மொழி, மதம் என்பவற்றை அபிமானத்தை பாதுகாக்கக்கூடிய சமூகமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம். அனைவரும் ஏற்றுக்கொள்கின்ற, சமூகத்தில் நிலவுகின்ற பன்வகைமைக்கு மதிப்பளிக்கக்கூடிய, தேசிய ஒற்றுமையுடனான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

நாங்கள் எதிர்பார்க்கின்ற மறுமலர்ச்சி, ஆழமான சமூக நிலைமாற்றம் என்பது மக்களின் யுகம் ஆரம்பிக்கின்ற காலப்பகுதியாகும். நாங்கள் 2500 வருடகால வரலாறு பற்றியும் 75 வருடகால வரலாறு பற்றியும் பேசினோம். எமக்கு வாசிக்க, கேட்க கிடைப்பது ஆட்சியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்ட வரலாறாகும். அந்த வரலாற்றின் வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ஆட்சியாளர்கள் அல்லது பிரபுக்கள் வர்க்கத்தைச் சோ்ந்தவர்களாவர். மன்னர்களின் கோமகன்களின் ஜனாதிபதிகளின் கதைகளை கேட்கிறோம். பிரதமர்கள் அமைச்சர்கள் பற்றி தெரியும். இந்த நாட்டின் உண்மையான வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் அமைவது இந்நாட்டு மக்களே. அனைத்துவிதமான நெருக்கடிக்களையும் தாங்கிக் கொண்டு, அவற்றுக்கு முகங்கொடுத்து, நாட்டை வீழ்ந்திடச் செய்யாமல் இந்த நாட்டு மக்களே, இந்த நாட்டு பிரஜைகளே தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். எனினும் பிரஜைகளின் வரலாறு பற்றி கேட்க கிடைப்பதில்லை. எனினும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் நாங்கள் எழுதப்போவது பிரஜைகளின் வரலாற்றினையாகும். அதனை எழுதுகின்ற உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வார்கள். 2024 பின்னர் நாங்கள் ஆரம்பிப்பது பிரஜைகள் பொறுப்பேற்கின்ற, பிரஜைகள் எழுதுகின்ற, பிரஜைகள் நிர்மாணிக்கின்ற ஒரு வரலாற்றினையாகும். அதனை எழுதுவதற்கான உரிமையை பிரஜைகள் பெற்றுக்கொள்வார்கள். அது தான் மறுமலர்ச்சி யுகத்தில் இடம்பெறுகின்ற தனித்துவமான விடயம். பிரபுக்கள் வர்க்கத்திலிருந்து விடுபட்ட பிரஜைகள் யுகமொன்றை நாங்கள் தொடங்குவோம். அதற்காகத்தான் அதன் பங்காளிகளான நீங்கள் அனைவரும் இந்த இடத்திற்கு குழுமியிருக்கிறீர்கள். அந்த மறுமலர்ச்சி யுகத்தை அடைவது ஒரு கனவு, எதிர்பார்ப்பு மாத்திரமன்றி அதனை யதார்த்தமாக அனுபவமாக எமது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வோம்.

Kaluthara-Public-Rally

“இலங்கையை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கும் அதற்கு தலைமைத்துவம் வழங்குவதற்குமான ஆற்றலை திசைகாட்டி கொண்டுள்ளது” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி-

தோழர் நிலந்தி ‘உபுன்டு’ எனும் வார்த்தையை கூறும்போது எனது செவிகளுக்கு இசை போன்றதாகும். தென்னாபிரிக்க ஜனநாயக உரையாடலில் ‘உபுன்டு’ எனும் வார்த்தை முன்னேற்றமடையாத பழங்குடியினரின் வார்த்தையொன்றல்ல. மானிட சகோதரத்துவம் பற்றிய உன்னதமான வார்த்தையாகும். இவர் தான் எங்கள் ‘உபுன்டு’. இதுதான் எமது சகோதரத்துவம். இதுதான் பிறர் பற்றிய எமது அர்ப்பணிப்பு, கரிசனை.

இன்று நான் இங்கு பேசுவது சுயநலம் கலந்த ஒரு ஆசையுடனாகும். நான் முதிய வயதில் இருப்பவன். எனக்கு ஏற்பட்ட ஒரு தொல்லையிலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். அது எனது சுயநலம் கலந்த ஆசையாகும். தொலைக்காட்சியை பார்க்கையில், செய்தித்தாள் ஒன்றை வாசிக்கையில் எனது வயது முதிர்ந்த வாழ்க்கைபூராவிலும் இரண்டு கண்களுக்கும் தொல்லையாக அமைந்த ஒரு சிக்கலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். செய்திகளை கேட்கும்போது செவிகளுக்கு ஏற்படுகின்ற இரைச்சலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். எனது செவிகள் இரண்டையும் வேதனைக்கு இலக்காக்குகின்ற அந்த தொந்தரவு என்ன? இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பிரதான அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்கின்ற மனிதர்களின் முகங்களும் குரல்களும் வியத்தகு துன்புறுத்தலாகும். ஒக்டோபர் மாதத்தில் அந்த அரியாசனத்திலிருந்து விடுபட நான் விரும்புகிறேன். இது சுயநலம் கலந்த ஆசையாகும். உங்கள் அனைவருக்கும் அவ்வாறான ஆசைகள் கிடையாதா? அது தான் எங்கள் ‘உபுன்டு’. அது தான் சகோதரத்துவம். அதுதான் நாடு பற்றிய கரிசனை. அது தான் பிறர் மீதான கரிசனை. அது ஒரு கூட்டான ஆசையாகும். கூட்டான பிரார்த்தனையாகும். கூட்டான கனவாகும். அநுர என்றால் எமது கூட்டான கனவின் பிரதிபிம்பம். எங்களுடைய கூட்டான ஆசையின் இதய கீதம். எங்களுடைய கூட்டான ஆசையின் பிரதிபலிப்பு.

இலங்கையின் அரசியல் துறையின் இந்த நேரத்திலே இருக்கின்ற மிகவும் பரிபூரணமான, தூரநோக்குடைய அரசியல்வாதி அவராவார். அவர் எங்கள் இதயக்கனி. எதிர்வரும் சில மாதங்களில் அந்த பிரதிபிம்பத்தை பின்தொடர்ந்து செல்வோம். புதிய இலங்கையொன்று பற்றி கனவு காண்கின்ற ஆசையுடன் இயலுமைகளையும், அறிவையும் சோ்த்திடுவோம். எங்கள் கனவுடன் விவேகத்தை சோ்த்திடுவதற்கான புலனுணர்வினை சோ்த்திடுவதற்கான ஆசைதான் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியும் தோழர் அநுரவின் வெற்றியுமாகும். இந்த நாட்டின் கீர்த்திமிக்க எதிர்காலத்தை பார்த்துக்கொண்டிருப்போம். அந்த எதிர்காலம் நிகழ்காலமாக மாறுகின்ற நாள் அண்மித்துவிட்டது. தேசிய மக்கள் சக்தியின் ஒரு பலம் தான் விவேகத்தின் மூலாதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ அதனை ஈர்த்துக்கொள்வதற்கான திறந்த மனதும் நலமான நெகிழ்ச்சித்தன்மையும் எம்மிடமிருக்கிறது. அதுவொரு வலிமையாகும். இலங்கைக்கு மறுமலர்ச்சியொன்று அவசியமாகும். இலங்கையை மறுமலர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தலைமைத்துவம் வழங்குவதற்கான ஆற்றலும் எமக்கிருக்கின்றது.

மறுமலர்ச்சியை நோக்கிச் செல்வதற்கு மனிதத்திற்கு எதிரான 11 பாவங்களை தோற்கடிக்கவேண்டியது அவசியமாகும். நீதியை அடிப்படையாகக் கொண்ட கொள்கை சார்ந்த கோட்பாடுகள் இல்லாத அரசியலை நாங்கள் தோற்கடிக்கவேண்டும். அது கொள்கைசார் அத்திவாரமற்ற அரசியல் பாவமாகும். அந்த பாவம் எம்மிடம் கிடையாது. இரண்டாவது பாவம் களியாட்டமாகும். எங்கள் நாட்டின் அரசியல்வாதிகள், ஜனாதிபதி மைந்தர்கள் கொவிட் 19 க்குள்ளே பஞ்சத்திற்குள்ளே கடல் சார் விளையாட்டுகளுக்காக சென்றிருந்தார்கள். அந்த பொழுதுபோக்கு ஒரு பாவமாகும். அரசியல்வாதிகளின் இரவு நேர வாழ்க்கையை அலசிப்பார்த்தால் மனசாட்சியற்ற பொழுதுபோக்கு நிறைந்த வாழ்க்கையாகும். உழைப்பற்ற செல்வம் ஒரு பாவமாகும். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான காரணம் இந்த நாட்டின் அரசியல் வர்க்கத்தின் கொள்ளைக்கார வளையம் பற்றிய தோழர் அநுரவின் அம்பலப்படுத்தல். அந்த பாவத்தை தோற்கடிப்பதற்கான பலமும் ஆற்றலும் இருப்பது தேசிய மக்கள் சக்தியிடமாகும். குணநலனற்ற அறிவு நான்காவது பாவமாகும். மக்களுடன் கூட்டான விடுதலையின் பக்கத்தில் நிற்பதற்கான குணநலன் இல்லாவிட்டால் அது அறிவல்ல. அது குணநலனற்ற அறிவாகும். ஐந்தாவது பாவம் விழுமியங்களற்ற தொழில் முயற்சி. எங்களுடைய சாதாரண பொதுமகன் பசியால் இறக்கையில், நோய் காரணமாக இறக்கையில் அவர்களுக்குக்காக கொண்டுவரப்படுகின்ற அன்டிஜன்களிலிருந்து திருடுகின்ற வியாபாரி ஒழுக்கநெறிகளற்ற நல்லவை கெட்டவைப்பற்றிய தர்க்கரீதியான சிந்தனையற்ற வியாபாரியாவான். ஆறாவது பாவம் மனிதபிமானமற்ற விஞ்ஞானம். அது மனிதத்துவத்திற்கு பொதுவான சகோதரத்திற்கு சேவையாற்றாவிட்டால் அந்த விஞ்ஞானத்தில் பலனொன்று இருக்கிறதா? அதுதான் இன்றைய விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப கொள்கையை வெளியிடுகின்ற தருணத்தில் விஞ்ஞானிகள் கேட்டது. பரிவிரக்கமற்ற மதம் ஏழாவது பாவமாகும். புத்த மதமோ வேறொரு மதமாகவோ அமையலாம். பொறுப்பற்ற உரிமை ஒரு பாவமாகும். எமது பொறுப்புக்கள் பற்றி உணர்வுமற்ற உரிமைகளை பின்தொடர்ந்து செல்வது ஒரு பாவமாகும். தேசிய மக்கள் சக்தியின் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் செல்ல அவ்வாறான பாவங்களுக்கு பங்களிப்புச் செய்யாத மக்களே சோ்த்துக்கொள்ளப்படுவார்கள். அடுத்த பாவம் பொறுப்புக்கூறலற்ற அதிகாரம். இந்த நாட்டில் அனைத்து அதிகாரங்களும் பொருளாதார, நிதிசார், ஆயுத, கலாச்சார, அதிகாரத்தை ஒப்படைக்கையில் அதுவொரு பொறுப்புக்கூறலாகும். ஒக்டோபர் மாதத்தில் தமது கைக்கு வருகின்ற இந்த மட்டற்ற அதிகாரத்தை பாவிப்பவர் ஜனாதிபதி தோழர் அநுர குமார ஆவார். நீண்ட காலம் நிலைத்திராத அபிவிருத்தி ஒரு பாவமாகும். எமது சூழற்றொகுதி, விலங்கினங்கள், எமது தாவரங்கள், எமது மதனிதர்களை நாசமாக்குகின்ற அபிவிருத்தியல்ல எமது மறுமலர்ச்சியின் அபிவிருத்தி. அடுத்த பாவம் நியாயமற்ற சட்டம். தற்போது இருக்கின்ற ஜனாதிபதி அரசியலமைப்பில் சிறிய ஓட்டையை எதற்காக தேடிக்கொண்டிருக்கிறார்? நுழைந்து செல்வதற்கான சட்ட இடைவெளி. அதாவது விடுபட்டு செல்வதேயன்றி நீதியை தேடுவதில்லை. எமது கூட்டங்களில் குழுமியுள்ள மக்கள் நீதியின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கையில் சட்டத்தில் எவ்வளவுதான் ஓட்டைகள் இருந்தாலும் நாங்கள் அவற்றை தோற்கடிப்போம்.

நான் இங்கு முன்வைத்த 11 பாவங்களை தோற்கடித்த செல்வம் கொழிக்கும் சமூகமொன்றை சகவாழ்வு கொண்ட சமூகமொன்றை உருவாக்கக்கூடிய அரசியல் சக்தியொன்று இருக்குமேயானால் அது தேசிய மக்கள் சக்தி மாத்திரமேயாகும். அதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய எங்கள் கனவின் இதயகீதம் அநுர குமார திசாநாயக்க ஆவார். எதிர்வருகின்ற ஒரு சில வாரங்களில் இந்த மாற்றத்திற்கான பயணத்தில் நாங்கள் கூட்டாக பயணிப்போம். மென்மேலும் சோ்த்துக் கொள்வோம். எங்கள் அனைவரதும் முகங்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் ததும்புகின்ற நாளை நோக்கி பயணிப்போம்.