(-Colombo, March 19, 2024-)
இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (19) முற்பகல் ம.வி.முவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது ஜப்பான் தூதரகத்தின் பதில் பிரதானி திரு. Katsuki Kotaro மற்றும் இரண்டாம்நிலை செயலாளர் திருமதி. Imai Kaori அவர்களும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் இணைந்துகொண்டிருந்தனர்.
இன்றளவில் இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருதரப்பும் விரிவாக கலந்துரையாடியதுடன், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் இடையீடுகள் பற்றிய தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பானின் இராஜதந்திர பிரதிநிதிகளிடம் தெளிவுப்படுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஜப்பான் தயாராகவுள்ளதாகவும் இதன்போது ஜப்பான் பிரதிநிதிகள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது