Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது.

(-Colombo, October 15, 2024-)

இன்றைய சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அவர்களுக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டது.

இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதியின் செயலாளருக்கு கொடியை அணிவித்தார்.

கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பார்வையற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவதுடன் அவர்களின் நலனுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

பின்னர், இலங்கை பார்வையற்ற பட்டதாரி சபை உறுப்பினர்களுடன் சமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயலாளர், அவர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தியதுடன், எதிர்காலத்தில் அவற்றுக்கு தீர்வு வழங்குவது குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் செயலாளர் சமோத் நயனாநந்த மற்றும் சங்கத்தின் அதிகாரிகள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.