Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

தேசிய மக்கள் சக்திக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

-Colombo, January 23, 2024-

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (23) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்களை சந்தித்தனர்.

புதிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. Santosh Jha அவர்கள் கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையில் தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர், முதற் தடவையாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவரை சந்தித்தார்.

இதன்போது இலங்கையின் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்தும் பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.