Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் NPP இற்கும் இடையிலான சந்திப்பு!

-Colombo, January 18, 2024-

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தொழிற்பாட்டுப் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று (18) மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவம் செய்து திரு. பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி சர்வத் ஜஹான் மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவையை பிரதிநிதித்துவம்செய்து சுனில் ஹந்துன்னெத்தி, பேராசிரியர் அனில் ஜயந்த, பொருளாதார பகுப்பாய்வாளர் கலாநிதி ஹர்ஷ சூரியப்பெரும மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் பங்கேற்றனர்.