Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“இனவாதத்தை தூண்டிவிட ரணில் மேற்கொண்ட முயற்சி வடக்கில் திரு. சுமந்திரனே நிராகரித்தமையால் ரணில்தான் மன்னிப்புக் கோரவேண்டும்.” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தின் 25 வது வருடாந்த மாநாடு – மாளிகாவத்த பி.டீ. சிறிசேன விளையாட்டரங்கு-)

Anura Kumara Dissanayake At Stage Of ICEU Summit

இலங்கையில் இதுவரைகாலமும் இருபக்கத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்த அரசியல் அதிகாரம் இந்த செப்டெம்பர் 21 ஆந் திகதி முற்றுப்பெறுவது நிச்சயமாகிவிட்டது. இதன்காரணமாக பகைவர்கள் அனைவரும் அரசியல் வாதங்களுக்குப் பதிலாக பொய்யான குறைகூறல்கள், திரிபுபடுத்தல்களை பாரியளவில் பிரச்சாரம்செய்த வருகிறார்கள். தோழர் வசந்தவையும் தோழர் மகிந்தவையும் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்ததாக கடந்த 06 ஆந் திகதி பிரச்சாரமொன்று மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்ற பணிப்பரையொன்றை திரிபுபடுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். இன்றளவில் எமக்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைத்தல், முறைப்பாடுகள் செய்தல் குறைவின்றி இடம்பெற்று வருகின்றது. நீதிமன்றம் தொடர்பில் பொய்யான கூற்றுகளை வெளியிடுதல் சம்பந்தமாக சட்டத்தரணிகளின் மேலங்கிகளைக்கூட கழற்றமுடியும். நாங்கள் நீதிமன்றத்தின் முன் அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அரசியல் மேடையில் இந்த திரிபுபடுத்தல்களையும் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் இப்போதாவது நிறுத்தவேண்டும். றவூப் ஹக்கீம், திஸ்ஸ அத்தநாயக்க போன்றவர்களுக்கும் கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ அத்தநாயக்க மன்னிப்புக் கோரினாலும் வழக்கத் தொடுக்கக்கூடிய அளவில் போலியாவணம் புனைவதில் பிறவித்திறமை கொண்டவராக மாறியிருக்கிறார். அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்குப்போய் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாகக் கூறுகிறார். அதற்காக மன்னிப்புக் கோரவேண்டுமாம். நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூறுகிறேன் “ரணில் விக்கிரமசிங்க, நீங்கள் அசிங்கமானவகையில் அரசியலில் இனவாதத்தை விதைக்க முயற்சிசெய்ய வேண்டாம்.” என்றாலும் தான் அதற்கு பதிலளிக்க முன்னராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சரியான பதிலை அளித்துள்ளமை தொடர்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வடக்கிற்குச்சென்று இனவாதத்தை தூண்டிவிட ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சியை வடக்கு மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற திரு. சுமந்திரனே நிராகரித்துள்ளார், இப்போது ரணில் நீங்கள் மன்னிப்புக் கோருங்கள்.

மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம்.

நாட்டில் மற்றவருக்கு எதிராக இனவாதத்தை விதைத்திட, ஒருவருக்கொருவர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த மேற்கொள்கின்ற முயற்சிகள் இப்போது செல்லுபடியாக மாட்டாது. எனினும் ரணில் விக்கிரமசிங்காக்கள் இப்போதும் பழைய கடையிலேயே சாமான்களை வாங்குகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக பல சந்தர்ப்பங்களில் “எனது நண்பர் அநுர, எனது கூட்டாளி அநுர” எனக் கூறியிருக்கிறார். அது “ஷேப்” ஆக்க வருவதாகும். ரணில் விக்கிரமசிங்க உங்களால் எங்களுடன் ‘ஷேப்” ஆக முடியாது. மத்திய வங்கி மோசடி பற்றிய விசாரணைகளை மேற்கொள்வோம். காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்த விதத்தை விசாரிப்போம். அதைப்போலவே மோசடிக்காரர்கள், ஊழல் பேர்வழிகளை பாதுகாத்த விதம்பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும். அதேவேளையில் மென்மேலும் குறைகூறல்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்தால் 22 ஆம் திகதி கலவரங்கள் இடம்பெறும் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

Crowd At ICEU Summit

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம்.

வெற்றிபெற்றதும் தோல்விகண்டவர்களை துன்புறுத்துகின்ற வரலாறு அவர்களுக்கே இருக்கின்றது. குறிப்பாக 1977 இல் இருந்து ரணில் விக்கிரமசிங்க தொடர்பிலாகும். அன்று தோ்தல் வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்கள் பொலிஸாரை பொலிஸ் நிலையங்களில் முடக்கி வைத்து எதிர்கட்சியினர் மீது தாக்குதல் நடாத்த, வீடுகளை தீக்கிரையாக்க, துப்பாக்கி பிரயோகம் செய்ய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்த பின்னர் வெற்றியை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக்கொடுப்போம். செப்டெம்பர் 23 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு கட்சியையும் சோ்ந்த ஆதரவாளர்களை சந்தித்து மாற்றமடையுமாறு அழைப்பு விடுப்போம். ஆனாலும் மாற்றமடைய விரும்பாவிட்டால் அவர்கள் விரும்பிய அரசியல் இயக்கத்தின் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை இருக்கிறது. அது ஒரு ஜனநாயக உரிமையாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதிவரை கட்சிகளாக பிரிந்து நாங்கள் உழைப்போம். எனினும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எமக்கு வாக்களிக்காதவர்களையும் சோ்த்துக் கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்புவோம். அதனால் வெற்றிக்கு பின்னர் ஏனைய கட்சியைச் சோ்ந்தவர்களுக்கு நகத்தின் நுனியினால் கூட சேதம் விளைவிக்க தேசிய மக்கள் சக்தி இடமளிக்கமாட்டாது.

இந்நாட்டு மக்கள் நேரடியாகவே திசைக்காட்டிக்கு புள்ளடியிட அணிதிரண்டிருக்கிறார்கள்.

நூற்றுக்கு மூன்று வீதத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெறுவது எப்படியென முன்னர் கேட்டார்கள். இப்போது சஜித்திற்கு புள்ளடியிட்டு எம்மை தோற்கடிக்க முடியாதென ரணில் கூறுகிறார். ரணிலுக்கு புள்ளடியிட்டு எம்மை தோற்கடிக்க முடியாதென சஜித் கூறுகிறார். இப்போது இந்நாட்டு மக்கள் நேரடியாகவே திசைக்காட்டிக்கு புள்ளடியிட அணிதிரண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஏற்கெனவே எங்கள் வெற்றியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். வென்றாலும் ஆறு மாதங்கள் ஓட்ட முடியாதென புதிதாகக் கூறுகிறார்கள். அவர்களின் பிரச்சாரங்களில் ஆரம்பத்தில் “திசைக்காட்டிக்கு வெற்றிபெற முடியாது.” எனக்கூறினார்கள். அடுத்ததாக “திசைக்காட்டி வெற்றிபெற்றால்…” எனக்கூறினார்கள். “திசைக்காட்டி வெற்றிபெற்றால் ஆறு மாதங்கள் கூட ஓட முடியாது.” என இப்போது கூறுகிறார்கள். இந்த மாற்றம் பற்றி ஆழமாகவும் பாரிய எதிர்பார்ப்புடனும் நாங்கள் நீண்டகாலமாக திடசங்கற்பத்துடன் இருந்து கொண்டு பாரிய சக்திகளை ஒன்று திரட்டியிருக்கிறோம். அதைபோலவே பலம்பொருந்திய வேலைத்திட்டமொன்றை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் இந்த வெற்றியை அடைந்தது ஆறு மாதங்கள் பயணம் செய்யவா? இந்த வெற்றி மூலமாக இலங்கை வரலாற்றில் மிக நீண்ட வெற்றியை உருவாக்குவோம் என்பது உறுதியாகும்.

Lal Kantha-Anura Kumara Dissanayake-Wasantha Samarasinghe At ICEU Summit

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்ற எல்லா இடத்திலும் மிகவும் அமைதியான வகையில் செயலாற்றி வருகின்றதென்பதை மகிழ்ச்சியுடன் கூறவேண்டும்.

இந்த இடத்தில் குழுமியுள்ளவர்கள் இலங்கையின் தனியார் துறையில் பணியாற்றுபவர்களாவர். இலங்கையின் பலம்பொருந்திய தனியார் துறையின் தொழிற்சங்க இயக்கம் கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கமே என்பதை எவரும் அறிவார்கள். தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க இயக்கத்தினால் தனியார் துறையை சீரழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலை செய்கின்ற எல்லா இடத்திலும் மிகவும் அமைதியான வகையில் செயலாற்றி வருகின்றதென்பதை மகிழ்ச்சியுடன் கூறவேண்டும். அதன் விளைவாக தனியார் துறையின் மிக அதிகமான சம்பளம் பெறுகின்ற நிறுவனங்கள் கம்பெனிகளுக்கிடையிலான ஊழியர் சங்கத்தில் உள்ள நிறுவனங்களாகும். அந்த நிறுவனங்களிலிருந்து மிக அதிகமான போனஸ் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதோடு மிக அதிகமான அந்நிய செலாவணி இந்நாட்டுக்கு அந்த நிறுவனங்களாலேயே ஈட்டித்தரப்படுகிறது. தேசிய பொருளாதாரத்திற்கு தனியார்துறையை பலம் பொருந்திய வகையில் பங்களிக்கச் செய்வித்து அவர்கள் பெறுகின்ற வருமானத்திலிருந்து நியாயமான ஒரு பங்கினை அந்த ஊழியர்களுக்கு பெற்றக்கொடுப்பது எங்களுடைய கொள்கையாகும்.

ஒவ்வொருவருக்கும் நியாயமான மனநிறைவுகொண்ட இளைப்பாறிய வாழ்க்கையொன்று அவசியமாகும்.

தனியார் துறையின் முன்னேற்றம் தொடர்பில் ஏற்கெனவே ஏதேனும் தடைகள் இருப்பின் அந்த சிக்கல்களை தீர்த்து வைக்க தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முன்னுரிமையளிக்கும். எனினும் இலாபத்தில் ஒரு நியாயமான பங்கு உழைக்கும் மக்களுக்கு நன்மைகளாக வழங்கப்படல் வேண்டும். அது தவறா? அந்த நிறுவனங்கள் சீர்குலையுமா? ஒருபோதும் இல்லை. கைத்தொழில் அதிபர்களைப்போன்றே அதன் ஊழியர்கள் ஆகிய இரு தரப்பினரதும் உறுதி நிலையினை பாதுகாக்கின்ற கொள்கையொன்றை அமுலாக்குவோம். ஒன்றரை தசாப்தங்களாக கட்டி வளர்க்கப்பட்டுள்ள “மேன்பவர் ஏஜன்சி” ஊடாக தொழில்களை வழங்குகின்ற முறைமை நவீன அடிமை வியாபாரத்தை ஒத்ததாகும். அந்த மாதிரியை தொடர்ந்தும் பேணிவரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். பொருளாதாரம் உறுதியானதெனில் பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் தளம்பலடைய மாட்டாது. பொருளாதாரத்தில் நிலவுகின்ற உறுதியற்றத்தன்மை நிலையான சம்பளம் பெறுபவர்களுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அதனை பாதுகாப்பதற்கான வழிமுறைகளுக்கு நாங்கள் முன்னுரிமையளிப்போம். மீன்பிடி, விவசாயம், கைத்தொழில்கள், பெருந்தோட்டச் சேவை போன்றே அரசாங்க சேவை ஆகிய அனைத்து பிரிவுகளிலும் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற குழுவினருக்கு வாழ்க்கையின் இறுதிவரை அவ்வண்ணமே தொழில் புரிய முடியாது. ஒரே மாதிரியாக வேலைசெய்ய முடியாது. ஒவ்வொருவருக்கும் நியாயமான மனநிறைவுகொண்ட இளைப்பாறிய வாழ்க்கையொன்று அவசியமாகும். எனினும் எமது நாட்டில் பெரும்பாலானோர் துன்பகரமான, விரக்தியடைந்த, உணவு பெற்றுக்கொள்ள முடியாத, மருந்து பெற்றக்கொள்ள முடியாத கடினமான வாழ்க்கையையே கழித்து வருகிறார்கள். அதனால் அனைவரும் பங்கேற்கக்கூடிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்றை வழங்குவதற்கான முறையொன்று வகுக்கப்படும். அரச பிரிவில் அனைவரும் செய்ய வேண்டிய பங்கினையும் தனியார் துறையின் பங்கினையும் நாங்கள் மிகவும் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளோம். தனியார் துறையின் செயற்பொறுப்பினை வெற்றியீட்டச் செய்விக்கையில் அந்த ஊழியர்கள் மிகப்பெரிய செயற்பொறுப்பினை ஆற்றி வருகிறார்கள். அவர்களை பேணிப்பாதுகாக்கின்ற அவர்கள் மீது கவனிப்பு காட்டுகின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியே தாபிக்கும்.

AKD AT ICEU Summit

உழைக்கும் மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தைக் கொள்ளையடித்த அரசாங்கங்களே இதுவரை நிலவின.

செப்டெம்பர் 21 ஆம் திகதி கட்டியெழுப்பப்படுகின்ற அரசாங்கம் ஏனைய எல்லா அரசாங்கங்களைவிட வித்தியாசப்படுவது அதனலேயே. உழைக்கும் மக்களின் உழைப்பில் கட்டியெழுப்பப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தைக் கொள்ளையடித்த அரசாங்கங்களே இதுவரை நிலவின. சீர்குலைகின்ற கம்பெனிகளில், சீர்குலைகின்ற நிறுவனங்களில் முதலீடுசெய்து பல்லாயிரக்கணக்கான கோடி நட்டம் விளைவித்தார்கள். எனினும் முதலீடுசெய்த டீல்காரர்கள் தமக்கிடையே பெருந்தொகையான பணத்தை பகிர்ந்து கொண்டார்கள். ஊழியர் சேமலாப நிதியத்தை கொள்ளையடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. பெருந்தொகையானோர் காயமுற்று ஏலாமை நிலையை அடைந்தார்கள். அண்மையில் கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கி மிகப்பெரிய சேதத்தை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு விளைவித்தார்கள். ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களை பற்றி சிந்திப்பதற்கு பதிலாக எல்லா நேரத்திலும் அவர்களுக்கு எதிரான தீர்மானங்களையே மேற்கொண்டார்கள். அதற்கு வித்தியாசமாக செயற்படுகின்ற உழைக்கும் மக்கள் பற்றி சிந்தித்து தீர்மானம் மேற்கொள்கின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவோம். இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை உருவாக்குவதை செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிப்போம். இந்த வெற்றியை மென்மேலும் உறுதி செய்வதற்காக அனைவரையும் செயலாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

Wasantha Samarasinghe Addressing The ICEU Summit
Lal Kantha Addressing The ICEU Summit
Anupa Nandima Addressing The ICEU Summit