Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“கமக்காரர்களுக்கு சமூகப்பெறுமதி கிடைக்கின்ற புதிய விவசாயத்தை உருவாக்குவோம்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் அநுராதபுர கமக்காரர் கூட்டம் – 2024.07.30-)

Govi-Rally-Bulnewa

இலங்கையின் வரலாற்றினை மாற்றியமைக்கின்ற புதிய பாதைக்கு நாட்டைத் திருப்புகின்ற முதலாவது தேர்தல் செப்டெம்பர் 21 ஆந் திகதி வரவுள்ளது. நீங்கள் நீண்டகாலமாக வாக்குகளை அளித்து தலைவர்களைக் கொண்டுவந்தீர்கள். அரசாங்கங்களை அமைத்தீர்கள். நாடு உருப்படியானதா? நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்ததா? எல்லா விதத்திலும் நாடு கீழ்மட்டத்தை அடைந்தது. பல தசாப்தங்களுக்கு முன்னர் நாங்கள் தெற்காசியாவில் முன்னணியில் நிகழ்ந்த நாடு. எனினும் இந்த ஆட்சிக்குழுவிற்கு எமது நாட்டை முன்னேற்றுவதற்கான தேவை இருக்கவில்லை. மக்கள் வறியவர்களாகினால் தோ்தல் காலங்களில் 20 கிலோ அரிசியை கொடுத்து, சில கூரைத்தகடுகளை கொடுத்து, சில் புடவைகளை கொடுத்து, தொழில் ஒன்றை கொடுத்து வாக்குகளை பெறமுடியும். நாட்டு மக்கள் செல்வந்தர்களாகி விட்டால் அவர்களின் அரசியல் முடிந்து விடும். மக்கள் செல்வந்தராகிவிட்டால் அவர்களின் பின்னால் செல்லமாட்டார்கள். நாடு சரிந்தாலும் அவர்களின் குடும்பங்கள் சரியவில்லை. அவர்கள் தனவந்தர்களாகியது தொழில் புரிந்தல்ல; அரசியலில் ஈடுபட்டு; செல்வத்தை குவித்துக்கொண்டே. இந்த நாடு இதுவரைகாலமும் மேலே இருந்தவர்களாலே ஆளப்பட்டது. சேனாநாயக்க போத்தலே வளவு, பண்டாரநாயக்க ஹொரகொல்ல வளவு, ஜே.ஆரும் ரணிலும் கொள்ளுப்பிட்டிய வளவு, ராஜபக்ஷாக்கள் அம்பாந்தோட்டை மெதமூலன வளவு. 76 வருடங்களாக இவர்கள் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். இலங்கையின் ஒட்டுமொத்த அரசியலுமே சில குடும்பங்களின் கைகளிலாகும்.

பாராளுமன்றத்தில் மக்களுக்கு மானியம் வழங்குவது அநியாம் என்று அடிக்கடிக் கூறிவருகிறார்கள். மத்திய வங்கியில் 1100 கோடி, சீனி வரி மோசடி 1500 கோடி, தேங்காய் எண்ணெய் மோசடி 350 கோடி, வீசா மோசடி 104 கோடி டொலர். ஆட்சியாளர்களின் கூட்டாளிகளுக்கு பணத்தை குவித்துக் கொள்ள இடமளிக்கிறார்கள். அர்ஜுன் அலோசியஸ், ஜோன்ஸ்டன், தயா கமகே போன்றவர்களும் அப்படித்தான். பார் லயிஷன், பெற்றோல் ஷெட் லயிஷன் பெறுகிறார்கள். ரணில் 875 கோடியை ஒதுக்கிக்கொள்கிறார். மக்கள் வாக்குகளை அளித்தாலும் அவர்களின் அரசாங்கங்களே அமைத்துக் கொள்ளப்படுகின்றன.

Govi-Rally-Bulnewa

ரணிலின் பொருளாதாரம் புள்ளிவிபரங்களால் மேலே போயிருக்கிறது. எனினும் மக்களுக்கு உண்ண உணவில்லை; நோய்க்கு மருந்தில்லை; பிள்ளைக்கு கல்வி புகட்ட வழியில்லை. ஒவ்வொரு பிரஜைக்கும் உணவு கொடுக்கின்ற பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மானியம் என்பது தவறானதல்ல. உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளிலும் மானியம் வழங்கப்படுகின்றது. இளைஞர்களுக்கு தொழில்கிடைக்கும்வரை ஒரு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒரு சில நாடுகள் தொழிலை இழந்தால் புதிய தொழில் கிடைக்கும்வரை கொடுப்பனவினை வழங்குகின்றன. சிலநாடுகளில் புதிதாக விவாகம் செய்தவர்களுக்கு வீடு இல்லாவிட்டால் நகர சபை ஒரு வீட்டினை கொடுக்கும். உலகம் அவ்வாறு தான் மனிதர்களை கவனித்துக் கொள்கிறது. ஆனால் எங்களுடைய அரசாங்கங்கள் மக்களை பார்த்துக் கொள்வதில்லை. ஆனால் நாங்கள் மக்களை பார்த்துக் கொள்கின்ற அரசாங்கத்தையே அமைப்போம்.

மக்களுக்கு உண்ண உணவு இல்லாவிட்டால் அரசாங்கத்தை அமைப்பதில் பயனில்லை. பிள்ளைகளுக்கு உணவு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு, பிரஜைகளுக்கு உணவு வழங்குகின்ற அரசாங்கமே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். கல்வியே கிராமிய மக்களை கரைசோ்க்கும் நாங்கள் பிரதேச செயலகமொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று உத்தியோகத்தர்களை நியமித்து ஏழு அல்லது எட்டு பாடசாலைகளை பொறுப்பளிப்போம். ஒரு பிள்ளை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பாடசாலைக்கு வராவிட்டால் அந்த உத்தியோகத்தர் அந்த பிள்ளையின் வீட்டிற்கு சென்று பாடசாலைக்கு வராததற்கான காரணங்களை கண்டறியவேண்டும். நாங்கள் கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

Govi-Rally-Bulnewa

எமது நாட்டில் கமக்காரனுக்கு மதிப்பில்லை. உலக நாடுகளில் “பாமர்” என்றால் பெரிய கௌரவமும் பலமும் உண்டு. உலகின் ஒருசில நாடுகளில் விவசாயப் பண்ணைகள் 25 ஏக்கர்களுக்கு குறைவானதாக அமைதலாகாது. கொரியாவில் தாம் பயிரிடுகின்றவற்றை தாமே கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். விலை அதிகம். அவர்களுக்கு கௌரவம் அளிக்கப்படுகின்றது. எமது கமக்காரர்கள் விளைச்சலைப்பெற்று களத்துமேட்டிலேயே விற்று வட்டி முதலாளிக்கும், கடை முதலாளிக்கும், கிருமிநாசினிக் கடை முதலாளிக்கும் , அடகுக்கடை முதலாளிக்கும் கொடுத்துவிட்டு கையில் எஞ்சுகின்ற சொச்சத்தொகையுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறான். கமக்காரன் தன் பிள்ளையிடம் “மகனே நீயும் கமம் செய்” எனக் கூற முடியாது. “நான் படுகின்ற வேதனைகளை நீயும் அனுபவிக்க இடமளிக்க முடியாது ” என்றல்லவா நினைக்கவேண்டும். விவசாயம் பெறுமதிகொண்ட தொழிலாக மாறவேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயத்தை பெறுமதியான தொழிலாக மாற்றியமைத்திடும். உலகில் எல்லா இடங்களிலும் விவசாயத்திற்கு மானியம் வழங்கப்படுகின்றது. இந்தியாவில் ஒருசில இடங்களில் மின்சாரம், எரிபொருள், கிருமிநாசினிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது. விதையினங்களுக்காக மானியம் வழங்கப்படுகின்றது. இந்திய விவசாயி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரித்துக் கொண்டுள்ளான். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விவசாயத்திற்கு அவசியமான மானியங்களையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.

இருபதாம் நூற்றாண்டில் விவசாயத்திற்கு அவசியமான உள்ளீடு அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய விதையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாயத்துடன் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டது. ஆக்கவிளைவு அதிகரித்தது இருபதாம் நூற்றாண்டிலேயே மக்களின் ஆயுட்காலம் அதிகரிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதயம் பதியம் செய்யப்பட்டது. உறுப்புகள் பதியம் செய்யப்பட்டன. மருந்துவகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. விஞ்ஞானத்தில் பெருவெற்றிகள் பெறப்பட்டன. ஒருசில கொள்ளைநோய்கள் முற்றாகவே ஒழிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் வெற்றியை உறிஞ்சிக்கொண்ட ஆசிய நாடுகள் இன்று முன்னேற்றமடைந்துள்ளன. ஆனால் எமது நாட்டில் அதற்கான தூண்டுதல் அளிக்கப்படவில்லை. பல்தேசியக் கம்பெனிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதையினங்களை உற்பத்தி செய்கின்றன. டுபாய் பறங்கிக்காய் இலைகள்தோறும் விளைச்சல் கிடைக்கின்றது. எங்களுடைய விவசாயப் பண்ணைகள் மூடப்படுகின்றன. அவர்கள் கண்டுபிடித்த விதையினங்களை இங்கே கொண்டுவந்து அதிக விலைக்கு விற்கிறார்கள். நாங்கள் வீழ்ந்தோம். அவர்கள் எழுந்தார்கள். விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆராய்ச்சிகள் அவசியமாகும். புதிய பயிர்ச்செய்கை முறைகள் அவசியமாகும். புதிய விதையினங்கள் அவசியமாகும்.

Govi-Rally-Bulnewa

ஆராய்ச்சிகள் மற்றும் அபிவிருத்தி மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட முடிவுப்பொருட்கள் மூலமாகவே உலக பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியமானவையாகும். அந்த ஆராயச்சிகள்தான் எம்மை முன்நோக்கி நகர்த்தும். உலகம் பூராவிலும் இருக்கின்ற இலங்கை விஞ்ஞானிகளையும் இலங்கையில் இருக்கின்ற விஞ்ஞானிகளையும் ஒன்றுசேர்த்து நாங்கள் ஆராயச்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிரதானி இலங்கையில் பொஸ்பேற் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். அவர்தான் எங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான கொள்கை வகுப்பாளர். எமது மண்ணின் உள்ளடக்கத்தை ஆராய்ந்து பயிர்களையும் மாற்றங்களையும் செய்வதற்கான உள்ளீடுகளை நாங்கள் அறிமுகஞ்செய்வோம்.

நாங்கள் பெறுகின்ற விளைச்சலை நீண்டகாலம் பாதுகாத்து வைப்பதற்கான ஆராய்ச்சிகள் அவசியமாகும். தாய்லாந்திலும் ஜப்பானிலும் அவ்வாறான வழிமுறைகள் இருக்கின்றன. எமது மாம்பழம், பலாப்பழம், அன்னாசி, மறக்கறிவகைகளை அவ்விதமாக பாதுகாப்பதற்கான வழிமுறை இருக்கின்றது. 76 வருடங்களாக இந்த ஆட்சியாளர்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள். தற்போது காய்கறிகளை தம்புல்லைக்கு கொண்டு செல்கிறார்கள்; விற்க முடியாவிட்டால் யானைக்கு போடுகிறார்கள். ஒன்றில் யானை தோட்டத்திற்குள் புகுந்து சாப்பிடுகிறது அல்லது தம்புல்லைக்குப்போய் சாப்பிடுகிறது. இரண்டுமே ஒன்றல்லவா? விவலசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கின்ற, சக்தியை அதிகரிக்கின்ற புதிய விவசாயத்தை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். அவர்களின் அரசாங்கம் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கே. எங்கள் அரசாங்கம் பொதுமக்களுக்கானதே. அதற்காகவே நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

Govi-Rally-Bulnewa

நாங்கள் சனாதிபதி பதவியை நெற்றியில் குத்திக்கொண்டு வந்தவர்கள் அல்ல. நாங்கள் மக்களுடன் அரசியல் புரிந்து, மக்களுடன் வசித்து, மக்களின் துன்பங்களையும் வேதனைகளையும் உணர்ந்து அனுபவித்தவர்கள். இந்த அனைத்து ஆய்வுகளும் தேசிய மக்கள் சக்தி உயர்வான இடத்தில் இருப்பதையே காட்டுகின்றன. இது தான் சரியான நேரம். இந்த தடவையாவது பிழையின்றி தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்குவோம். இது எம்மால் வெற்றிபெறக்கூடிய தோ்தலாகும். செப்டெம்பர் 21 ஆம் திகதிய தோ்தல் நாங்கள் வெற்றிபெற வேண்டிய தோ்தலாகும். எங்களுடைய பங்கினை நாங்கள் ஆற்றுவோம். உங்களின் பணி திசைக்காட்டிக்கு புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களால் வாக்கு பெட்டிகளை நிரப்புவதாகும். இந்த கிராமத்தின் தொழில்பாட்டுக் குழுக்களை மேலும் விஸ்தரிக்கவும் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லுங்கள். உறவினர்களை சந்தியுங்கள். கட்சிபேதங்களை மறந்துவிடுங்கள். அவர்கள் அதிகாரத்திற்காக அமைச்சுப் பதவிக்காக சிறப்புரிமைகளுக்காக அங்குமிங்கும் தாவுகிறார்கள். இந்த நாட்டை நாசமாக்கிய தவறான தீர்மானங்களுக்கு கையை உயர்த்திய பாராளுமன்றத்தில் இருக்கின்ற எவரையும் தேசிய மக்கள் சக்தியின் மேடையில் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம்.

எங்களுக்கு வித்தியாசமான அரசியலே தேவை. திருடர்கள் வேண்டாமல்லவா? எடுக்கவும் மாட்டோம். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சஜித் பிரேமதாஸவுக்கு பொருளாதாரத்தின் பிரதானமான ஒருவர் நாலக்க கொடஹேவா; எம்மை பொருத்தமட்டில் பங்குச் சந்தையில் பணத்தை நாசமாக்கிய தீக்கிரையான கப்பலியிருந்து இலங்கைக்கு கிடைக்க வேண்டிய நட்டஈட்டினை கிடைக்காமல் போகச் செய்வித்தவரே நாலக்க கொடஹேவா. இந்த நாட்டின் அரசியலை புதிய தலைமுறையினரின் கைகளில் புதிய சக்தியிடம் கையளிப்போம். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து நாட்டை கட்டியெழுப்புவோம். யு.என்.பி. ஸ்ரீ லங்கா என்ற கட்சி பேதமின்றி அனைவரையும் ஒன்று சோ்ந்துக் கொள்வோம். இப்போது நாங்கள் அனைவரும் சமமானவர்களே. நாங்கள் அனைவருக்கும் மதிப்பளிக்கவேண்டும். தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். வேலைகளுடன் இணைந்துக் கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை, நாட்டை மாற்றியமைக்கின்ற அரசாங்கத்தை அமைத்துக் கொள்வோம் அதற்காக அனைவரும் இடையீடு செய்வீராக.

Govi-Rally-Bulnewa

“திசைக்காட்டிக்கு புள்ளடியிட்டு இதுவரை வாழ்க்கையில் தவறவிட்ட இடங்களை சரி செய்து கொள்வோம்”
-நுவரவெவ ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்பின் தலைவர், நிவன்தக்க சேத்திய ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பிரதான அதிகரண சங்கநாயக்க சங்கைக்குரிய ரத்கம சமித்த தேரர்-

நாங்கள் இதுவரை துன்பத்தையே சுமந்து வந்தோம். அதனை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பு அடுத்த மாதம் 21 ஆம் திகதி கிடைத்துள்ளது. இதுவரை காலமும் இரண்டு கட்சிகளுக்கும் மாறிமாறி வாக்களித்து நிர்க்கதியாயிருக்கிறோம். நிர்கதிநிலை எமது மரபுரிமையல்ல. ஒட்டுமொத்த சனத்தொகையில் ஏறக்குறைய எழுபது வீதம் ஈடுபட்டுள்ள கமத்தொழிலில் எமது மூதாதயர்கள் மிகுந்த அன்புடனும் விருப்பத்துடனுமே ஈடுபட்டார்கள். ஆனால் என்றென்றும் கடன்காரர்களாக வாழவேண்டி ஏற்பட்டதால் இளைஞர்கள் கமத்தொழிலில் இருந்து விலகிச் சென்றார்கள்.

இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் மொட்டுக் கட்சிக்கு, யானைக்கு அல்லது டெலிபோனுக்கு புள்ளடியிட்டதாலேயே இந்த பிரதிவிளைவு ஏற்பட்டது. நானும் அப்படிப்பட்ட ஒருவனே. இவ்வளவு காலமும் நாங்கள் பொய்யில் மாட்டிக்கொண்டிருந்ததை உணர்ந்து அதிலிருந்து விடுபடவேண்டுமல்லவா? எங்களை ஏமாற்றி அவர்கள் கொள்ளையடித்தார்கள். அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உண்டு. அதற்காக சங்கைக்குரியவர்கள் பெருந்திரளாக அணிதிரண்டு இருக்கிறார்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி திசைக்காட்டிக்கு புள்ளடியிட்டு இதுவரை செய்த தவறுகளைத் திருத்திக்கொள்வோம். எதிர்காலத்தில் பலம் பொருந்திய கமக்காரர் தலைமுறையை உருவாக்குவோம் என அழைப்பு விடுக்கிறேன்.

Govi-Rally-Bulnewa

அநுர குமார எனும் விதையை நடுகை செய்யுமாறே இந்நாட்களில் கமக்காரர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.”
-கல்நேவ விவசாயிகளின் அமைப்பின் தலைவர் டி.எம். வன்னிநாயக்க-

இன்றளவில் கமக்காரர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலைமையையே எதிர்நோக்கியிருக்கிறார்கள். அந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கான மிகச் சிறந்த வழிமுறை தேசிய மக்கள் சக்தியே என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த கமக்காரர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவே தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கிறார்கள். இலங்கையின் முதலாவது மகாவலி செயற்றிட்டம் “எச்” வலயமாகும். போகப் பயிற் செய்கைக்காக பயிரிடுவதற்கு பதிலாக கமக்காரர்கள் அனைவரும் 365 நாட்களும் வணிகப் பயிர்ச்செய்யையே மேற்கொண்டு வருகிறார்கள். கரட் மற்றும் பீற் மாத்திரமே “எச்” வலயத்தில் சிறப்பாக வளர்வதில்லை.

எங்கள் ஒட்டுமொத்த கமக்காரர் சமுதாயமும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக இறக்குமதி செய்கின்ற விதையினங்களை அதிக விலைக்கு பெறவேண்டியிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி விதையின் சராசரி பெறுமதி ஆறு இலட்சம் ரூபாய். மிகவும் சிறந்த ஒரு கிலோ கறிமிளகாய் விதையின் விலை ஐந்தரை இலட்சமாகிறது. கமத்தொழில் அமைச்சருக்கு விதைகளின் விலை பற்றி தெரியுமோ என்பது எனக்கூறமுடியாது. எமது நாட்டுக்கு விதையினங்களை இறக்குமதி செய்ய இவ்வளவு பெருந்தொகையான பணம் செலவாகின்றதா? என்பதை கண்டறிய வேண்டும். நியாயமான விலைக்கு விதையினங்களை வழங்க வேண்டும். எமது நாட்டில் விதையினங்களை உற்பத்தி செய்யக்கூடிய விஞ்ஞானிகள் தாராளமாக இருக்கிறார்கள். எமது நாட்டின் எதிர்கால தலைமுறையினருக்கு இந்த நிலைமையை எஞ்சவிடாமல் அதிக பணம் செலுத்தி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி அநுர குமார திசாநாயக்க எனும் விதையை விதைத்து எதிர்காலத்தை வெற்றியீட்டச் செய்வோம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

Govi-Rally-Bulnewa

“கமக்காரத் தாயும் தந்தையும் திசைக்காட்டிக்கு புள்ளடியிடுகின்ற யுகப்பணியை ஆற்றுவார்கள் என்பது திண்ணம்”
-ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கற்கைப்பிரிவின் பேராசிரியர் சேன நானாயக்கார-

நாங்கள் அனைவரையும் நேசிக்கின்ற மனிதாபிமானத்தை வெளிக்காட்டவே இந்தக்கூட்டத்திற்கு வந்திருக்கிறோம். நானும் உங்களைப்போன்றே இதே மண்ணில் பிறந்தவன். எங்கள் பெற்றோரின் வாழ்க்கை பற்றி புதிதாக கூறவேண்டியதில்லை. ஐந்தாம் நூற்றாண்டில் மன்னன் தாதுசேனன் கட்டிய நீர்ப்பாசன குளம் இன்னமும் நாட்டுக்கு சேவையாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த மண்ணில் வசிக்கின்ற கமக்காரர்கள் தமது கடமையையும் பொறுப்பையும் உச்ச அளவில் ஈடேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன். செப்டெம்பர் 21 ஆம் திகதி சுபமுகூர்தத்தில் தேசிய மக்கள் சக்திக்கு புள்ளடியிட்டு அந்த யுகப்பணியை ஆற்றுவார்கள் என்பது நிச்சயமே.

கலாவெவ மற்றும் பலலுவெவ இரண்டிலும் நிலவிய உறவுமுறை பற்றி கவிதைகள் கூட எழுதப்பட்டன. மனிதம் நிறைந்த போலித்தனமற்ற அன்பான உணர்வினை பெற்றுக்கொடுக்கின்ற நாட்டார் கதைகள் படைக்கப்பட்டன. இன்று அவ்வாறான சுதந்திரமான படைப்புகளை உருவாக்குவதற்கான சூழ்நிலை இருக்கிறதா? நாம் இழந்த அந்த வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக உங்களின் வாக்குகளை வழங்கி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அடைவதற்கான மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு உங்களின் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Govi-Rally-Bulnewa

“கமக்காரனை தலையிடியாகக் கருதிய ஆட்சியாளர்களின் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

இந்த நாட்டின் அரசியல் மாற்றமடைந்துள்ள விதம் பற்றி கமக்காரர்களாகிய எம்மனைவருக்கும் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது. ரணில் – ராஜபக்ஷ ஒன்று சோ்ந்து 2022 மே மாதத்தின் பின்னர் முன்னெடுத்து வந்த ஆட்சி இப்போது பிளவுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிறார்கள். இன்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பிரமித்த பண்டார தென்னக்கோன் 2022 மே மாதத்தில் கோல்பேஸ் மைதானத்தில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட சூழ்ச்சிக்கு இணையான சூழ்ச்சியொன்றை மொட்டுக்கட்சியை சோ்ந்தவர்கள் 29 ஆம் திகதி செய்ததாக குறிப்பிட்டார். எங்களுடைய நாட்டு மக்கள் இந்த விடயங்களை நன்றாக விளங்கிக் கொண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி மறுமலர்ச்சி யுகத்திற்கு பிள்ளையார்சுழி போட்டு தோழர் அநுர குமாரவை தெரிவு செய்து கொள்வோம். இன்றளவில் களத்துமேட்டில் நிர்க்கதி நிலையுற்றுள்ள கமக்காரனுக்கு அவசியமான விதையினங்கள், உரம், நீரை பெற்றக் கொடுத்து பலப்படுத்துவதற்கான பொறுப்பினை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்கிறது.

எங்கள் அன்புக்குரிய பெற்றோர்களின் மூன்று மருத்துவ அறிக்கைகளை எடுத்துப் பார்த்தால் அதில் ஒருவர் கடுமையான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பாரதூரமான பிரச்சினை அநுராதபுரத்தில் இருக்கிறது. குளங்கள் நிறைந்த இராச்சியத்தில் உள்ள மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதை ஆட்சியாளர்கள் தவறவிட்டுள்ளார்கள். 2400 வருடங்களுக்கு மேலாக பண்டுகாபய மன்னன் அமைத்த முதலாவது குளத்தில் தொடங்கிய இலங்கையின் நீர்ப்பாசன நாகரிகம் தொடர்பில் முழு உலகத்தினதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. கமக்காரர்களின் உற்பத்திகளை உலகத்துடன் இணைக்க இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு கமக்காரன் மற்றுமொரு தலையிடி மாத்திரமே. கடந்த தோ்தல் காலத்தில் மழைப்பருவத்தில் பறங்கிக்காய் விதைகளை வீசி எறிந்து விட்டு வருகின்ற சோம்பேறி கமக்காரர்கள் விளைச்சலை அறுவடை செய்கின்ற காலத்தில் வந்து பறங்கிக்காய் விலையேறிவிட்டதாக கூறுவதாக பசில் வந்து கூறினார். அவர்கள் அரசாங்கத்திற்கு சங்கடம் கொடுப்பதாகக்கூறினார். அவர்களுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும். இவர்கள் தான் 76 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க இன்னும் 45 நாட்களே இருக்கின்றன. சேனையில் வயலில் வேலை செய்கின்ற அனைவருமே ஒன்றுசோ்ந்து மறுமலர்ச்சியின் வெற்றிக்கான முதலாவது அடியெடுப்பினை எடுத்து வைப்பதற்காக அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம். அதற்கான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்.

Govi-Rally-Bulnewa

“விவசாயத்தின் திரிபு நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற விஞ்ஞான ரீதியான திட்டத்தை கொண்டுள்ள திசைக்காட்டியுடன் இணையுங்கள்”
-அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன-

நான் இந்த இடத்தில் குறிப்பாக சஜித் பிரேமதாஸவுக்கு ஒரு பதிலை கொடுக்கவேண்டும். அவர் இந்த பிரதேசத்திற்கு வந்து மொரகஹகந்த நீர்தேக்கத்திலுள்ள நீரை பயன்படுத்தி குடிநீர் மற்றும் பயிர்ச்செய்கைக்கான நீர் ஆகிய இரண்டையும் அவருடைய தகப்பனின் சூத்திர விதிப்படி தீர்ப்பதாகக்கூறினார். ஊடகங்களில் பாரிய பிரச்சாரம் வழங்கப்பட்டது. மொரகஹகந்த நீர்தேக்கம் 557 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவு கொண்டது. களுகங்கை கருத்திட்டத்தில் 248 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவு உள்ளது. அதன்படி ஒட்டுமொத்த மொரகஹகந்த கருத்திட்டத்தினதும் நீர்கொள்ளளவு 805 மில்லியன் கனமீற்றராகும். இந்த கருத்திட்டத்திலிருந்து வெற்றிகரமாக நீர்பாசன நீரை வழங்குவதாயின் 1455 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவு நிலவவேண்டும். இந்தக்கருத்திட்டத்திற்கு மேலும் 650 மில்லியன் கனமீற்றர் தேவை. அதனால் இந்த கருத்திட்டம் ஏற்கனவே தோல்வி கண்டுள்ளது. இந்த பிரச்சினைக்கான தீர்வாக உமாஓயாவிலிருந்து நீரைக்கொண்டுவருவதற்கான திட்டமொன்றும் இருக்கிறது. அவை எல்லாமே வெறுமனே முன்மொழிவுகள் மாத்திரமே. சஜித் பிரேமதாச இங்கே வந்து அவருடைய திட்டத்திற்கு இணங்க குடிநீர் மற்றும் நீர்பாசன நீர் பிரச்சினையை தீர்ப்பதாகக்கூறுகிறார். சஜித் அவர்களே நீங்கள் இந்தக் கதையை இங்கு வந்து கூறவேண்டியதில்லை.

விவசாயிகளை ஏமாற்ற தயாராக வேண்டாம். வாக்குகளை எதிர்பார்த்து பூச்சாண்டி கதைகளை கூறவேண்டாம். மொரகஹகந்த திட்டத்திற்கு ஒதுக்கிய பணத்தை கொள்ளையடித்தார்கள். திருடிய பணத்தை சரியாக பாவித்திருந்தால் இந்த செயற்திட்டத்தை இன்றளவில் நிறைவு செய்திருக்கவேண்டும். ரஜரட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்ற தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைக்கும் நீர் கிடைப்பதில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வுவேண்டும்.

தற்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்டது. எங்களிடம் நீர் உண்டு. அதனை சரியாக முகாமை செய்து அதிகமாகவுள்ள இடத்திலிருந்து குறைவாகவுள்ள இடத்திற்கு நீரை வழங்க வேண்டும். சிறுபோகம் பெரும்போகம் மாத்திரமல்ல இந்த இடைப்பட்ட போகத்திலும் பயிர் செய்கின்ற நிலைக்கு நீண்டகால ரீதியாக வரவேண்டும். இந்த வலயத்தில் நூற்றுக்கு ஐம்பது வீதத்திற்கு கிட்டியவர்கள் பெரும்போகத்தில் மாத்திரம் பயிர்செய்து சிறுபோகத்தை கைவிட்டு விடுகிறார்கள். எங்களுடைய ஆட்சியின் கீழ் நீர்த் தட்டுப்பாட்டினை தீர்ப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நாங்கள் வகுத்திருக்கிறோம். ஒரு தீர்மானகரமான திருப்புமுனைக்கே நாம் அனைவரும் வந்திருக்கிறோம். இதுவரை அணிகளாக பிரிந்து வாக்குகளை அளித்த பெரும்பாலானவர்கள் திசைகாட்டிக்கு வாக்குகளை அளிக்க அணிதிரண்டிருக்கிறார்கள். மிகவும் கஷ்டமான வாழ்க்கையை கழிக்கின்ற கமக்காரர்களை சந்திக்க மதவாச்சிக்கு அப்பால் உள்ள கலென்பிதுனுவெவ எனும் இடத்திற்கு சென்றோம். அந்த ஊருக்கு நடந்தே செல்லவேண்டும். அங்குள்ள மக்கள் எங்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்கள். அவர்களின் விளைநிலங்கள் செழிப்பாக காணப்பட்டன. ஆனாலும் விற்பனை செய்ய முடியாது. நாங்கள் அங்கிருந்து கொண்டே கொழும்பிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒரு கிலோ கத்தரிக்காய் 400 ரூபாவிற்கு கிட்டியதாகும். அந்த விவசாயிகள் விற்கமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த திரிபு நிலையை மாற்றியமைக்க விஞ்ஞான ரீதியான திட்டத்தை கொண்டுள்ள திசைகாட்டியுடன் ஒன்று சோ்கின்ற மனசாட்சி கொண்டவர்கள் எங்களோடு சோ்ந்திருக்கிறார்கள். விவசாயிகளின் இதயத்துடிப்பினை நன்கு அறிந்த அன்பு மிக்க தலைவருக்காக அடுத்த செப்டெம்பர் 21 ஆம் திகதி தமது வாக்குப்பெட்டிகளில் 75 சதவீதத்தை விஞ்சிய வாக்குகளை திசைகாட்டிக்காக புள்ளடியிட்டு நிரப்பி வெற்றியீட்டச் செய்யுங்கள்.