-2014.01.14 – “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” தேசிய மக்கள் சக்தி, அம்பாந்தோட்டை பெண்கள் மாநாடு-
பகிர்ந்தளிக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்து நாட்டை உருப்படியாக்குகின்ற அரசியலை நிலைநாட்டுவோம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
முட்டிமோதுவதற்காக மாத்திரமல்ல ஆட்சியாளர்களைத் தோற்கடித்திடவும் தயார் என்பதையே இங்கு குழுமியுள்ள சகோதரிகள் கூறுகிறார்கள். ஆட்சியாளன் மக்களை வதைத்து, ஏமாற்றி வருகிறான். மறுபுறத்தில் அவர்கள் குடும்பம், குடும்பத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கட்டிவளர்க்கின்ற அரசியலில் ஈடுபட்டார்கள். அதற்கான உதாரணங்கள் இந்த அம்பாந்தோட்டை பெருநிலத்தில் இருக்கின்றன. லுணுகம்வெஹெர, அங்குணுகொலபெலெஸ்ஸ, சூரியவெவவில் அம்மாவும் அப்பாவும் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள்? ஆற நிரல்கள் உள்ள வீதியில் பிள்ளை எலுமிச்சம்பழத்தை, மாங்காயை வைத்துக்கொண்டு துன்பகரமாக வாழும்நிலைக்கு எவ்வாறு மாறியது? இந்த அம்பாந்தோட்டையில் எமது நாட்டையும் மக்களையும் வதைக்கின்ற குழுவின் பிரதிநிதித்துவமும் மறுபுறத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமும் இருக்கின்றது. 2024இன் தீர்வுக்கட்டமான போராட்டம் இந்த இரண்டு பாசறைகளுக்கிடையிலேயே நிலவுகின்றது. நாங்கள் இந்த போராட்டத்தை வெற்றியுடன் நிறைவுசெய்வோம். தேர்தல் காலத்தில் சேலையொன்றை பகிர்ந்தளிக்கின்ற அரசியலே அவர்களிடம் இருந்தது. அந்த பகிர்ந்தளித்தல் புதுமையானது. ஊபாசகைகளுக்கு சீலம் அனுட்டிப்பதற்கான புடவை, அப்பாவுக்கு ஒரு போத்தல் சாராயம் பகிரப்பட்டது. யானை அடையாளத்திற்குப் பதிலாக அமரவீர அடையாளம் பொறித்த தீப்பெட்டிகளும் பகிரப்பட்டன.
எமது நாட்டுக்கு அவசியமாவது ஒரு புதிய அரசியலாகும். பகிர்ந்தளிக்கின்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளிவைத்த நாட்டை உருப்படியாக்குகின்ற அரசியலாகும். இந்த அம்பாந்தோட்டை மாவட்டத்தில் டிக்கிரி கணக்குகள், தையல் மெஷின்கள், பிரித் நூல்கள், மைய வீடு என்றால் அரசி மூடையை அனுப்பிவைக்கின்ற பெரியவர் ஒருவர் இருந்தார். இந்த பகிர்ந்தளிக்கும் அரசியலை நிறுத்தவேண்டும். எமது நாட்டு மக்களை பிச்சையேந்துகின்ற நிலைக்கு உள்ளாக்கி, தமது வாழ்க்கையைக் கொண்டுநடாத்த அவசியமான வருமானமற்ற, வீட்டினை கட்டிக்கொள்ள, பிள்ளைக்கு தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ள, வருமான வழியொன்றை தேடிக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கி, அவர்கள் மேலிடத்தில் இருந்து பகிர்ந்தளிக்கின்ற “கோமகன்களாக” மாறியுள்ளார்கள். அந்த அரசியல் எமது நாட்டில் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இப்போது பகிர்ந்தளிக்க வருகையில் “ஊ” சத்தம் போடுகின்ற நிலைமை உருவாகியுள்ளது. அநுராதபுரத்தில் ஓர் அமைச்சர் ஃபில்டர்களை பகிர்ந்தளிக்கச் சென்றார். மக்கள் “ஊ” சத்தம்போடத் தொடங்கினார்கள். இங்கும் தென்னம்பிள்ளைகளை பகிர்ந்தளிக்கையில் ஊரின் பிக்கு கூறினாராம் ” பகிர வேண்டுமானால் பன்சலையில் வைத்துவிட்டுப் போங்கள். நான் பகிர்ந்தளிக்கிறேன்” என்று. பகிர்ந்தளிக்கின்ற அரசியல் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ நன்மை பயப்பதாக அமையவில்லை. குடிமக்களை பிச்சைக்காரர்களாக மாற்றி , அவர்கள் கோமான்களாக மாறி அவர்களுக்கு அடிபணிந்து எதையாவது பெற்றுக்கொள்வதற்காக இருகரம் ஏந்திக்கொண்டு இருக்கின்ற அரசியலா இன்று எமக்குத் தேவை? இந்த அரசியலின் பெறுபேறாகவே இறுதியில் எமது நாடும் மக்களும் பாரிய பாதிப்பிற்கு இலக்காகி உள்ளார்கள். கட்டாயமாக 2024 இல் பகிர்ந்தளிக்கின்ற அரசியலை முடிவுக்குக்கொண்டுவந்து நாட்டில் உருப்படியாக்குகின்ற அரசியலை நிலைநாட்டுவோம். அதற்கான மிகப்பெரிய சாத்தியவளம் எமது அக்காமார்கள், தாய்மார்கள், மகள்மார்களிடமே நிலவுகின்றது. அது ஏன்? தற்போது ஊரில் முனைப்பான ஒரு சங்கம் நிலவுமாயின் அது மகளிர் சங்கமாகும். முனைப்பான செயற்பொறுப்பனை ஆற்றுபவர்கள் பெண்களாவர். அவர்களை கிளறிவிட்டால் நிறுத்த முடியாது. அவ்வாறான அரசியலுக்கு மிகச்சிறந்த பாடம் புகட்டுவதற்கான ஆற்றல் நிலவுவதும் இந்நாட்டின் பெண்களிடமே. இந்த அழிவுமிக்க அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆற்றல் உங்களிடமே இருக்கின்றது. பெண்களுக்குள்ளே இருக்கின்ற ஈரம், உணர்வுகள், பாசம், கடமையை ஈடேற்றுவதற்கான பொறுப்பு போன்ற உன்னதமான எண்ணக்கருக்களை அவர்கள் காட்சிப்படுத்தி மேடையில் விற்றார்கள்.
திருவாளர் மகிந்த கட்டுநாயக்கவில் நிலத்தை முத்தமிடுகையில் “நெஞ்சு பதறியது” எனக் கூறினார்கள். இந்த மனிதர் இந்த நாட்டை, தாயகத்தை எவ்வளவு நேசிக்கிறார்? என நினைத்தார்கள். பெண்களிடம் குடிகொண்டுள்ள அந்த உணர்வுகளை அவர்கள் தட்டியெழுப்புகிறார்கள். பிள்ளையைத் தூக்கினால்” பாருங்களே தந்தையின் பாசம் பொங்கி வழிகின்றது, இப்படிப்பட்ட தலைவர்தான் எமக்குத் தேவை” என நினைத்தார்கள். ஒரு புறத்தில் பிள்ளையைத் தூக்கிக்கொண்டிருக்கின்ற அதேவேளையில் மறுபுறத்தில் பிள்ளையின் எதிர்காலத்தை நாசமாக்கினார்கள். பிள்ளைகளின் கல்வி, சுகாதாரத்தை சீரழித்தார்கள். பிள்ளைக்கு தொழில் இல்லாத நாடு, கடனை மீளச்சலுத்த முடியாத நாடு உருவாக்கப்பட்டது. மக்களின் மனதை கவரக்கூடிய வார்த்தையான “அப்பச்சி” எனும் போஸ்டரை ஒட்டினார்கள். இன்று நாங்கள் ஏமாந்தோம். “அப்பச்சி” ஆடிய ஆட்டம் இப்போது தெரிகிறது. அவர் அவருடைய பிள்ளைகளுக்கும் அயோக்கியத்தனமான அரசியலுக்கும் அவரைச் சுற்றியுள்ள ககொள்ளைக்காரக் கும்பலுக்குமே “அப்பச்சியாகத்” திகழ்ந்தார். குடிமக்களுக்கு “அப்பச்சியாக’ அமையவில்லை. இன்று தள்ளாடித்தள்ளாடி மேடையில் ஏறுகிறார். எவருக்காக? மகனுக்காக. பிரசைகளுக்காகவல்ல. 20 மீற்றர் தூரம் கண்ணுக்குப் புலப்படாத அவர் இரவில் அவதானிப்புச் சுற்றுப்பயணம் போகிறார்.
உங்களிடம் இருக்கின்ற ஈரம், உணர்வுகளை நாங்கள் நன்றாகவே அறிவோம். பொதுவாகக் கூறினால் எமது நாடு சீரழிந்து பொருளாதாரம் அழிந்துவிட்டது. பொதுவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக குரல்கொடுக்கப் போகின்றவர்கள் பெண்களே.
கொச்சப்படுத்தப்படுபவர், சிரமங்களை எதிர்நோக்குபவர்கள் பெண்களே. சமைத்த உணவில் எஞ்சுகின்ற சிறுபகுதியை உண்பவள் அவளே. பெண்களே அல்லற்படுகிறார்கள். இந்த ஒவ்வொருவரும் தனது பிள்ளைக்கு கல்விபுகட்ட எவ்வளவு பாடுபடுகிறார்கள்? தமது வாழ்க்கையில் பெரும்பங்கினை பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்காகவே செலிவிடுகிறார்கள். தற்போது பாடசாலை முறைமை சீரழிந்துவிட்டது, பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவுசெய்ய முடியாமல் போயுள்ளது. முன்பு பாடசாலை உணவுவேளையொன்று கிடைத்திருப்பினும் தற்போது அது கிடையாது. சீருடைகளை வாங்க, சப்பாத்துகளை வாங்க முடியாது. பாடசாலை செல்கின்ற பிள்ளைகளில் 54% புத்தகங்கள் வாங்குவதை அல்லது உபகரணங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் கூறகின்றன. ஐந்து நாட்கள் பாடசாலைக்கு அனுப்புகின்ற ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசங்களைச்சேர்ந்த தாய்மார்கள் தமது அனைத்து உறவுகளையும் கைவிட்டு மாத்தறை பிரதேசத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்ட பெரும்பிரயத்தனம் செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதற்காக. வீட்டினை கட்டிக்கொள்வதற்காகவே, வாகனமொன்றை வாங்குவதற்காகவே பெண்கள் வெளிநாடு செல்கிறார்கள். அம்மா தூரவிலகி பிள்ளைகள் தனித்துப்போன இடங்களில் பிள்ளைகளின் கல்வி வெற்றியளிக்கவில்லை. பிள்ளைகளின் கல்வி வெற்றியடையாத இடங்களில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
மகிந்த ராஜபக்ஷ கப்பல்கள் வராத துறைமுகம், மெச் அடிக்காத மைதானம், மாநாடு நடைபெறாத மாநாட்டு மண்டபம் அமைத்தார். சிறைச்சாலை அமைத்தார் சனம் நிரம்பி வழிகின்றது. பொதுப்போக்குவரத்தில் பயணிக்கின்ற 72% பெண்கள் ஏதேனும்விதத்திலான பாலியல் தொல்லைளுக்கு இலக்காகிறார்கள். இந்த பேரிடர்களின் இறுதி இரையாக மாறியிருப்பது நீங்கள்தான். சமூகத்தை மாற்றியமைக்கின்ற பயணத்தில் முனைப்புடன் முன்வரவேண்டியது நீங்கள்தான். இந்த துன்பங்களிலிருந்து விடுபட முதலில் இந்த அரசியலை மாற்றியமைத்திட வேண்டும். அரசியல் மாற்றமே அவசியமாக செய்யப்படவேண்டும். அரசியலை மாற்றியமைத்திட நாங்கள் அதிகாரத்தைப் பெற்றிடவேண்டும்.
எமக்கு புதிய தேசிய எழுச்சி, ஒருமைப்பாடு அவசியம். உலகநாடுகள் வெற்றிபெற்று எழுச்சியடைந்துள்ளன. இந்தியா 1948 இல் போராடி, ஆர்ப்பாட்டம்செய்து, உண்ணாவிரதமிருந்து வெள்ளையர்களை விரட்டியடித்தது. அந்த வெற்றியால் எழுச்சிபெற்றது. பல்வேறு கலாசார பிரிவினைகள், பலவிதமான மொழி வேறுபாடுகள், பலவிதமான சாதி பேதங்கள், பல்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற இந்தியா ஒரு பாரிய நாடு. அனைவருமே ஒன்றுசேர்ந்து வெள்ளையர்களை விரட்டியடித்தார்கள். சுபாஷ் சந்திரபோஸ், பட்டேல், காந்தியின் தலைமையில் ஒரு தேசமென்றவகையில் மக்களை ஒன்றிணைத்தார்கள். அந்த வெற்றியின் இறுதிப்பெறுபேறாக அவர்கள் தற்போது சந்திரனுக்குச் செல்கிறார்கள். எனினும் ஆறுமணிக்குப் பின்னர் எம்மால் சூரியவெவவிற்குப் போகமுடியாது.
ஒருசில நாடுகள் தோல்விக்குப் பின்னர் எழுச்சிபெற்றன. ஜப்பான் இரண்டாம் உலகமகா யுத்தத்தின்போது ஜேர்மனியின் பக்கமே இருந்தது. ஜேர்மனி தோல்வியடைந்தது. ஜப்பான் தோல்வியின் விளிம்பில் இருந்தது. அமெரிக்காவினால் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாக்கி மீது அணுக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மனித நாகரிகத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான பேரவலம் அதுவாகும். இன்றும் அதன் திரிபடைந்த பெறுபேற்றினை அனுபவித்து வருகிறார்கள். ஜப்பான் தோல்வி கண்டது. எனினும் அந்த தோல்வியை அவர்கள் வெற்றியின் பாதையாக மாற்றிக்கொண்டார்கள். ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற அந்நாட்டின் தலைவர்களால் இயலுமாயிற்று.
எமக்கு அத்தகைய வெற்றிகரமான வரலாறு கிடையாது. 1818 இல் ஊவா வெல்லஸ்ஸ எழுச்சி, 1848 மாத்தளை எழுச்சி இடம்பெற்றது. மாத்தளை எழுச்சியின்போது புரன்அப்புவிற்கு பாதுகாப்பு வழங்கியது பன்சலவாகும். உணவு வழங்கியவர்கள் குடிமக்களே. வெற்றியை அடையமுடியவில்லை. இந்த எழுச்சியில் முன்னணி வகித்தவர்கள் நிலச்சுவாந்தர்களே. அதிகாரம் முதலிகளுக்கே கைமாறியது. கொழும்பு நகரத்தில் வீதிகளையும் கட்டிடங்களையும் நிர்மாணிக்கையில் அவற்றுக்கான மூலப்பொருட்களை வழங்கியதால் முன்னேற்றமடைந்தவர்களே முதலிமார். இந்த முதலிகளிடம் ஒரு நோக்கு இருக்கவில்லை. அதனால் எமக்கு புதிய தேசிய எழுச்சியொன்று இருக்கவில்லை. 1505 தொடக்கம் 1948 வரையான காலப்பபகுதிக்குள் எமது நாடு ஏதேனுமொரு மேலைத்தேய நாட்டுக்கு அடிமைப்பட்டிருந்தது. 1796 இல் இருந்து ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்ட நாடாக விளங்கியது. 1815 இல் இருந்து இங்கிலாந்திற்கு நேரடியாகவே கட்டுப்பட்ட நாடாக விளங்கியது. 1948 இல் எமக்கு சுதந்திரம் கிடைத்தது. எனினும் நாட்டில் தேசிய எழுச்சி இடம்பெறவில்லை. வெள்ளைக்காரனின் ஆட்சியிலிருந்து விடுபட்டோம். எனினும் நாட்டை உருப்படியாக்குவதற்கான எழுச்சி ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை. 1949 குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தோட்டத் தமிழ் மக்களை விரட்டியடித்தார்கள். 1956 இல் மொழியைக் குழப்பியடித்துக்கொண்டார்கள். 1958 இல் சிங்கள – முஸ்லீம் கலவரம் தோன்றியது. 1958 இறுதியளவில் ஸ்ரீ எழுத்தில் கறுப்பெண்ணெய் பூசத்தொடங்கினார்கள். 1970 இறுதியளவில் வடக்கில் ஆயுதமேந்திய இயக்கமொன்று உருவாகியது. 2009 வரை வடக்கில் ஆயதமேந்திய இயக்கம் தொடர்ந்தது. 2019 இல் குண்டு வெடித்தது. ஒரு தேசமென்றவகையில் எழுச்சிபெறுவதற்குப் பதிலாக இந்த தாய்நாட்டில் ஒரே இனக்குழுக்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆட்சியாளன் தேசத்தினதும் மதத்தினதும் பாதுகாவலன் ஆகிறான். மக்கள் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். தமிழ் மனிதனையும் முஸ்லீம் மனிதனையும் எமது பகைவனாக்கிக் கொண்டோம். இறுதியில் வடக்கிற்கும் தெற்கிற்கும் தோல்வியே. அதனால் நாங்கள் அடிமைப்பட்ட பெருமிதமற்ற தேசமாக மாறினோம். நாங்கள் அனைத்துப் பிரிவினைகளையும் ஒருபுறம் வைத்திடுவோம். நீங்கள் கட்சி, நிறங்களாகப் பிரிந்து மல்லுக்கட்டிக்கொண்டீர்கள். ஆட்சியாளன் சதாகாலமும் ஒன்றாக விருந்துபசாரங்கைளை நடாத்தினான். சாதி, கட்சி, இனத்தை ஒருபுறம் வைத்திடுவோம். ஊர்களை ஒன்றாக இணைத்திடுவோம். அது எதற்காக? திசைகாட்டியை வெற்றிபெறச் செய்வித்து அரசியல் மாற்றமொன்றை செய்வதற்காகவே.
” உணவில் நஞ்சு கலப்பது நல்லதல்ல” என எமது ஊர்களில் ஓர் அபிப்பிராயம் நிலவுகின்றது. எனினும் சுகாதார அமைச்சர்கள் மருந்தில் நஞ்சு கலக்கிறார்கள். ஒருசில வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள இன்ஜெக்ஷனில் தண்ணீர் உள்ளதென்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. இன்ஜெக்ஷனில் மற்றுமொரு வகையான பங்கசு இருப்பதாக பிறிதொரு ஆராய்ச்சியில் தகவல்கள் வெளிப்பட்டுள்ளது. நாங்கள் வாங்குகின்ற மருந்துகளிலிருந்து நாங்கள் நோய்களை பெற்றுக்கொள்கிறோம். அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் இலங்கையில் எமக்கு கிடைப்பார்களென நீங்கள் நினைத்தீர்களா? மருந்துமாத்திரையில் இருந்தும் திருடுகின்ற ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்களை விரட்டியடித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்வதுடன் நின்றுவிட மாட்டாது. இது மாற்றியமைப்பதற்கான ஆரம்பமே. ஆட்சியாளர்களை விரட்டியடித்து அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ளும் ஆரம்பத்துடனேயே வேலையைத் தொடங்கவேண்டும். இரண்டாவதாக இருப்பது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதாகும்.
முதலில் நாங்கள் குடிமக்களுக்கு அவசியமானவற்றுக்கு உத்தரவாதமளிப்போம். உணவு பானவகைகள், கல்வி, சுகாதார வசதிகளை நாங்கள் கொடுப்போம். நீங்களும் நாங்களும் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். கமக்காரன் வயலுக்குச் செல்வதும் மீனவன் கடலுக்குச் செல்வதும் தமக்கு மாத்திரம் தனிப்பட்டமுறையில் எதையேனும் எதிர்பார்த்தல்ல: நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற நோக்கத்துடனாகும். ஒரு பிள்ளை கல்வி கற்பது தனக்கு மாத்திரம் தனிப்பட்டமுறையில் எதையேனும் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரமல்ல: ஒரு நாடு என்றவகையில் முன்நோக்கி நகரும் நோக்கத்துடனாகும். விளையாட்டு வீரன் கிரிக்கெற் அடிப்பது ஐ.பி.எல். அடிப்பதை மாத்திரம் பார்த்துக்கொண்டல்ல. நாட்டுக்கு புகழையும் பெருமையையும் கொண்டுவருவேன் எனும் நோக்கத்துடனேயே. இளைஞன் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபடுவது தனக்கு புகழ் தேடுவதற்காக மத்திரமல்ல: தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற நோக்கத்துடனேயே. அரசியல்வாதி நாட்டை ஆட்சிசெய்வது தமக்கு எதையேனும் ஈட்டிக்கொள்ளும் நோக்கத்துடனல்ல: இந்த நாட்டைக் கீர்த்திமிக்க நாடாக மாற்றுகின்ற நோக்கத்துடனாகும். நாங்கள் அனைவரும் ஒரே நோக்கத்துடன் மல்லுக்கட்டினால் இந்த நாட்டைக் கட்டியெழுப்பமுடியும். “கடலில் விரிக்கின்ற மீன் வலையைப்போல் ஒரே தெம்புடன் இழுத்து பாரிய அறுவடையை கரைக்கு இழுப்பதைப்போல்” நாமனைவரும் ஒரே மூச்சில் உழைத்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
சனாதிபதிக்கு ஆயிரக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். கிராமத்துப் பொலீஸில் பத்து பொலீஸ்காரர்கள் இல்லை. சனாதிபதியின் பாதுகாப்புச் சேவையைக் கலைத்து கிராமத்தில் இருக்கின்ற பொலீஸுக்க அனுப்பிவையுங்கள். சனாதிபதியை உள்ளிட்ட கொள்ளைக்கார வளையத்திடம் இருப்பது இந்த நாட்டுக்கு கட்டுப்படியாகாத, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு மூன்று கிலோமீற்றர் ஓடுகின்ற வாகனங்களாகும். ரணில் விக்கிரமசிங்க பாவிக்கின்ற வாகனம் 3000 இலட்சமாகும். நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நிர்மாணிப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டவையாக இடம்பெறுவதை நாங்கள் வெளிக்காட்டுவோம். மக்களின் பணம் ஒருசதம்கூட திருடப்படமாட்டாதென்பதை நாங்கள் நிரூபித்துக்காட்டுவோம். மக்கள் வெளிக்காட்டுகின்ற அந்த எடுத்துக்காட்டுடன் வேலைசெய்ய முன்வரவேண்டும். எமது வாழ்க்கைக்கு கொடுத்திருப்பது மூர்க்கத்தனமானதும் அழிவுமிக்கதுமான அனுபவங்களாகும். நாங்கள் இவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வோம். தாய்மார்கள், அக்காமார்கள், தங்கைமார்கள், மகள்மார்கள் ஆகிய உங்களால் இந்த சமூகத்தை உறங்குநிலைக்கு கொண்டுசெல்ல முடியும். இந்த சமூகத்தை தட்டி விழித்தெழச் செய்விக்கவும் முடியும். நாங்கள் திசெம்பரில் பெண்களின் பாரிய மாநாடுகளை நடாத்தத் தொடங்கினோம். அதன் பெறுபேறாக கட்சிக்கும் புதிய வலிமை கொண்டுவரப்பட்டது. சமூகத்திற்கும் புதிய எதிர்பார்ப்பு கொண்டுவரப்பட்டது. அந்த தட்டியெழுப்புவதை செய்தவர்கள் நீங்களே. இந்த நாட்டை விழித்தெழச் செய்விக்கின்ற புதிய மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பத்திற்காக முன்னணிக்கு வருவோம்.