(தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு – கம்பஹா மாவட்டம் – 2024.02.25)
இங்கு குழுமியுள்ள பெண்கள் பொருளாதாரச் சீரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களாவர். நாட்டின் குற்றச்செயல்களை தாங்கிக்கொண்டு தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். தமது நகைநட்டுகளை அடகுவைத்து பிள்ளைகளுக்கு கல்விபுகட்டி இறுதியில் தம்மைக் கைவிட்டு வெளிநாடு செல்ல எத்தனிக்கையில் கண்ணீர் வடித்துக்கொண்டு பொறுத்திருந்தார்கள். பொறுத்தது போதும். தற்போது எழுச்சிபெறுவது பெண்களின் வெறும் மண்டைகள் மாத்திரமல்ல. பொறுமையின் எல்லையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற திடசங்கற்பத்துடன் ஆயிரக்கணக்கான பெண்கள் எழுச்சியடைந்துள்ளார்கள். இங்கு பங்கேற்றுள்ளவர்கள் வேதனைகளால் பிறந்த உணர்வு, திடசங்கற்பம், நோக்கம் மற்றும் கனவு கலந்த பெண்களாவர். உங்களின் இந்த எழுச்சி நிச்சயமாக எமது நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத்தருவது திண்ணமே. மாத்தறையில் இருந்து தொடங்கிய பெண்களின் சேர்க்கை நிச்சயமாக வெற்றியடைய முடியுமென்பது மீண்டும்மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அசைகின்ற பல்லைப்போன்ற ஒரு அரசாங்கத்தை நாங்கள் கட்டியெழுப்பிவிடலாகாது. மக்களின் கடப்பாடுகளுடனான பலம்பொருந்திய ஆட்சியையே கட்டியெழுப்பவேண்டும். இந்த 07 மாதங்களில் உச்ச அளவிலான அர்ப்பணிப்புடன் செயலாற்றி பலம்பொருந்திய வெற்றியை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்தனகல்ல தலைவியில் தொடங்கி மேலும் பலருக்கு செவிசாய்த்த பெருந்தொகையானவர்களே இங்கு குழுமியுள்ளார்கள். அந்த தலைவர்களும் தலைவிகளும் வெற்றியீட்டிய பின்னர் அவர்களிடம் நிலவிய நலமான பிரார்த்தனைகள் அவர்களின் கண்ணெதிரில் சிதைக்கப்பட்டன. அண்மைக்காலத்தில் மிகவும் அதிகமான நல்ல பிரார்த்தனைகளுடன் கட்டியெழுப்பியது கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியாகும். கோட்டாபய ராஜபக்ஷவுடன் மகிந்த ராஜபக்ஷவிற்குகூட விளையாட்டுக்காட்ட முடியாதென அவர்கள் நம்பினார்கள். அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டதுமே மக்கள் எழுச்சிபெற்று அவரை விரட்டியடித்தார்கள். வெகுவிரைவில் அவர்களின் அனைத்துக் குழுக்களும் ஒரே மேடையில் தோன்றுவார்கள். 94 இல் சனாதிபதியான சந்திரிக்கா, 2005 இல் சனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ, 2015 இல் சனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, 2019 இல் சனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 2022 இல் சனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வெகுவிரைவில் ஒரே மேடைக்கு ஏறுவார்கள். எதிர்வருகின்ற தேர்தலில் அவர்களின் மேடை இலங்கையின் பலவர்ண மேடையாக அமையும். அது நன்மைக்காக அல்ல. புதுவருடப் பிறப்பின்போது வினோதஉடை போட்டியைப்போல் கட்டியெழுப்பப்பட்டு வருகின்ற மக்கள் வெற்றிக்கு எதிராகவே அவர்கள் வருகிறார்கள். சஜித்திற்கும் ரணிலுக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு இல்லாவிட்டால் அவர்கள் இருவரும் ஒரே மேடைக்கு வருவார்கள். எனினும் நாங்கள் ஒன்றை அறிவோம். அவர்கள் ஊழல்மிக்க பிரபுக்கள் பொறியமைப்பாவர். ஊழல்மிக்க பிரபுக்கள் பொறியமைப்பினை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரே மூச்சுடன் ஒன்றுசேர்வதே அவர்களின் நோக்கமாகும். மக்களின் அபிப்பிராயத்தை மாற்றியமைப்பதற்காக ஊடகப் பலத்தை உள்ளிட்ட பலவிதமான சாதனங்கள் அவர்களிடம் உண்டு. தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பது மக்களின் எழுச்சி மாத்திரமேயாகும். சுயாதீனமான நடுநிலை அவதானிப்பாளர்கள் போன்ற எவராலுமே நிலவ முடியாது. ஒன்றில் ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பின் பாதுகாவலர்கள் அல்லது பொதுமக்களின் அவசியப்பாடுகளுக்காக செயலாற்றுபவர்கள்.
மோசடியும் ஊழலுமற்ற அரசியல், சட்டம் அனைவருக்கும் அமுலாக்கப்படுகின்ற அரசியல், தேசிய வளங்களை விற்றுத்தீர்ப்பதற்கு எதிரான அரசியல் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயலாற்றுகின்ற அரசியல் பொதுமக்களின் அவசியப்பாடாக நிலவியது. மே 09 ஆந் திகதி கோல்பேஸ் போராட்டம்மீது தாக்குதல் நடாத்தியவேளையில் துறைமுகத்தில், தேசிய வைத்தியசாலையில் மற்றும் வேறு இடங்களிலிருந்து மக்கள் ஓரேயடியாக கோல்பேஸ் நோக்கி ஓடினார்கள். தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காக அணிதிரண்டார்கள். அதனால் பொதுமக்களின் தேவையும் ஊழல்மிக்க பிரபுக்கள் தலைமுறையின் தேவையும் தெளிவான பிரிகைக்கோடு மூலமாக பிரிக்கப்படுகின்ற தருணத்தில் நடுநிலையாக எவராலுமே இருக்க முடியாது. கம்பஹா மாவட்டத்தின் பல்லாயிரக்கணக்கான பெண்கள் ஒன்றுசேர்வதன் மூலமாக சுட்டிக்காட்டுவது அதனையே. 76 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் இருண்டதெல்லாம் பேய் என்ற பயத்துடனேயே இருக்கிறார்கள். பசில் ராஜபக்ஷ அமைச்சர் பதவியில் நீங்கியதும் ஊடக சந்திப்பில் வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறினார்கள். கோட்டாபய ராஜபக்ஷ சனாதிபதியானதும் உடனடியாக சனாதிபதிக்கு எதிராக வழக்கு விசாரணை மேற்கொள்ள இயலாதென்பதால் எல்லாவற்றையும் வாபஸ் பெற்றுக்கொண்டார்கள். இவ்விதமாக எல்லாவற்றினாலும் பாதிக்கப்பட்ட மக்களே இருக்கிறார்கள். அதனால் எம்மை எவ்வாறு நம்புவதென எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கிறோம். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாகக் கூறுகிறோம். வரலாற்றில் அவர்களின் தேவைகள் – மக்களின் தேவைகள் என இருவிதமான தேவைகள் நிலவின. இலங்கையில் முதல்த்தடவையாக நாங்கள் ஒன்றுசேர்ந்து ஆளுகையின் தேவைகள் மற்றும் மக்களின் தேவைகள் சமச்சீராக அமையத்தக்க அரசாங்கமொன்றை அமைத்திடுவோம்.
பொருளாதாரத்தின் வீழ்ச்சி நாட்டையும் மக்களையும் பாதிக்கின்றது. அரசாங்கத்திற்கு செலவுசெய்ய திறைசேரியில் பணம் இல்லாமை நாட்டைப் பாதித்துள்ளது. இந்த வருடத்தில் மதிப்பீடுசெய்யப்பட்ட அரசாங்கத்தின் வருமானம் 4164 பில்லியன் ரூபாவாகும். இந்த தடவை கடன் தவணை செலுத்துதல், வட்டித் தவணை செலுத்துதல் மற்றும் அரசாங்க செலவினங்களுக்காக 11,277 பில்லியன் ரூபா செலவாகின்றது. பொருளாதாரமொன்று வீழ்ச்சியடைந்ததும் உள்நாட்டைப் போன்றே நாட்டுக்கு இறக்குமதி செய்யவேண்டிய பண்டங்களுக்கான டொலர் இல்லாமல் போகின்றது. இன்றளவில் பாடசாலை உபகரணங்களை உள்ளிட்ட கல்விமீதும் வற் வரி விதிக்கப்படு்டுள்ளது. அதைப்போலவே ஓளடத உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பாரிய வரி வலையமைப்பில் மக்களை சிறைப்படுத்தி மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 இலட்சம் பேர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீரழிந்ததும் தொழில்கள் உருவாக மாட்டாது. நாங்கள் கட்டியெழுப்புகின்ற பொருளாதாரத்தில் அத்தியாவசிய பண்டங்களினதும் சேவைகளினதும் விலைகள் குறைவடைகின்ற, உற்பத்தி அதிகரிக்கின்ற, பிள்ளைகளுக்கான தொழில்கள் பிறக்கின்ற புதிய பொருளாதார திட்டமொன்றை அமுலாக்குவோம். மின்சாரத்திற்கான செலவினை இரண்டு வருடங்களில் 2/3 ஆல் குறைக்கமுடியும். அதைப்போலவே சரியான பெறுகை செயற்பாங்கினை கடைப்பிடியாமையால் அரசாங்கம் 30,000 கோடி ரூபாவினை இழக்கின்றது. மறுபுறத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வரிவலையிலிருந்து வெளியேற, வங்கிகளுக்கு பொல்லுவைத்திட இடமளித்துள்ளார்கள். அதனை நிறுத்தி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள சுமையை பாரியளவில் குறைக்க முடியும்.
புதிய தலைமுறையினர் எட்டு மணித்தியால வேலையை செய்வதற்குப் பதிலாக சுதந்திரமாக தொழிலில் ஈடுபட எதிர்பார்க்கிறார்கள். அதற்காக எமது பொருளாதாரத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி வர்க்கமொன்று உருவாகும். ஆபிரிக்க பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்துவருகின்ற சந்தைக்காக இப்போதிருந்தே திட்டங்களை வகுத்திடவேண்டும். சர்வதேசரீதியாக புதிய சந்தையை உருவாக்கிடாமல் அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யாமல் முன்நோக்கி நகரமுடியாது. தேசிய மக்கள் சக்தியால் அதற்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற செயற்பாங்கு ஆரம்பிக்கப்படும். அதைப்போலவே குற்றச்செயல் புரிபவர்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளிவைத்து சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்திடுவோம். கள்ளத்தனமாக உருவாக்கிய ஒரு நாடு உலகில் எங்குமே கிடையாது. பொதுமக்களிடமிருந்து திருடிய செல்வத்தை மீளவும் கையகப்படுத்துகின்ற ஆட்சியொன்றை கட்டியெழுப்புவோம். தற்போது அமுலில் இருப்பது ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற கல்வியாகும். முதலாவது வருடத்தில் சேர்கின்ற ஒவ்வொரு பிள்ளையையும் மருத்துவராக மாற்றுகின்ற நேர்கோட்டுப் பாதையை முன்னெடுத்து வருவதற்குப் பதிலாக பிள்ளைகளின் பரந்துவிரிந்த திறன்களை வளர்த்தெடுக்கின்ற விரிவான பாதையொன்றை அமுலாக்கவேண்டியது அவசியமாகும். சமூகமொன்று நிலவவேண்டுமாயின் சமூக கௌரவத்தைக்கொண்ட தொழில்சார் திறன்களைக்கொண்ட பலவிதமான தொழில்கள் நிலவவேண்டும். எமது கல்வியை அதற்கேற்ற நவீனமயமாக்கிய நிலைமைகளுடன் ஒத்திசைவு செய்யவேண்டும். ஜப்பானின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும் பிரஜைகள் ஆணிமுறிச்சிகளாக மாறியுள்ளார்கள். அத்தகைய ஒரு நிலைமை எமக்கு பயனுறுதியானதல்ல. ஒத்துணர்வுகொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். கலை, இலக்கியத்தை இரசிக்கின்ற, புதிய மனோபாவரீதியான மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும்.
அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக பொலீஸ், இராணுவம் ஈடுபடுத்தப்படவேண்டும். சமூகப் பாதுகாப்பு அவசியமாகும். புதிய எதிர்பார்ப்பினைக்கொண்ட சமூகமொன்றை நாங்கள் உருவாக்குவோம். அதற்காக பெரும்பான்மையான மக்களின் எழுச்சி அவசியமாகும். 1948 இல் வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலைபெற்றவேளையில் பாரிய மகிழ்ச்சியுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். 450 வருடங்களாக பல மேலைத்தேய நாடுகளுக்கு கட்டுப்பட்டு இருந்து 133 வருடங்கள் முற்றாகவே வெள்ளைக்காரனுக்கு கட்டுப்பட்டிருந்து சுதந்திரம் பெற்றது எத்தகைய தேசிய புத்துணர்ச்சியை எற்படுத்தியிருக்க வேண்டும்? இத்தடவை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சுற்றிக்கைகள் மூலமாக அரசாங்க நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. ஆனால் எம்மோடு இணையாக சுதந்திரம்பெற்ற இந்தியாவில் மொழி பேதங்கள், பிரதேச வேறுபாடுகள், சமய வேறுபாடுகள் அனைத்துமே ஒருபுறம் தள்ளிவைக்கப்பட்டு ஒருகொடியின் நிழலில் ஒன்றுதிரண்டது. இறுதியில் அப்துல் கலாம் சனாதிபதியானார். மன்மோகன் சிங் பிரதமரானார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரென அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெண் சனாதிபதியானர். அதற்காக எவ்வளவு முன்னேற்றமடைந்த நோக்கு இருக்கவேண்டும்? எனினும் எமது நாட்டில் 1949 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை ஒழிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் செல்வநாயகம் தமிழ் அரசுக் கட்சியை நிறுவினார். 1956 இல் மொழிப் பிரச்சினை. 1958 இல் தமிழ்- சிங்கள கலவரம். 1965 அளவில் “டட்லியின் வயிற்றில் மசாலை வடை” எனக்கூறி ஊர்வலமாக சென்றார்கள். 1976 அளவில் வடக்கில் ஆயுதமேந்திய போராட்டம் தோன்றியது. 1981 இல் யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. 1983 இல் செட்டியார் தெருவை தீக்கிரையாக்கினார்கள். இறுதியாக 2019 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் 2015 இல் மலட்டுக்கொத்து, மலட்டு உடைகள் வந்து 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எமக்கு எமது நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான திட்டமொன்று இருக்கவில்லை.
உலகம் பாய்ச்சலுடன் முன்நோக்கி நகரும்போது எமது ஆட்சியாளர்கள் எம்மை வரலாற்று மோகத்தில் சிறைவைத்தார்கள். உலகத்தில் மாறிவருகின்ற நவீனத்துவத்தை உறிஞ்சிக்கொள்ள எமக்கு இயலாமல் போயிற்று. உலகில் வேகமாக ஓடுகின்ற தொடர் ஊர்தியை கண்டுபிடிக்கையில் இரவு 10 மணிக்குப் பின்னர் ஊருக்குப்போக எமக்கு பேருந்து கிடையாது. வெள்ளைக்காரனுக்கு இரண்டாம்பட்சமாக அமையாத ஒரு நாட்டை உருவாக்குவதற்கான நோக்கு எம்மிடம் இருக்கவில்லை. தற்போது 76 வருடகால ஊழல்மிக்க அரசியலை தோற்கடித்து அந்த நுகத்தடியில் இருந்து விடுபட்டு நாட்டு மக்கள் புதிய தேசிய உணர்வுடன் முன்நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 76 வருடகால ஊழல்மிக்க ஆட்சியிலிருந்து விடுபட்டமை வெள்ளைக்காரனிடமிருந்து எமது நாடு சுதந்திமடைந்ததைவிட மிகப்பெரிய உணர்வினை எமக்கு உணர்த்தும். எமது வாழ்நாளில் கிடைக்கின்ற மிகப்பெரிய மகிழ்ச்சியை இந்த தேசிய புத்தெழுச்சி, மலர்ச்சி ஊடாக எமது நாட்டுக்கு புதிய பாதையொன்றைத் திறந்துவிடுவதன் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக நாமனைவரும் எழுந்திடுவோம். நாமனைவரும் அதற்காக மல்லுக்கட்டுவோம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோமென உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.