Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

தேசிய மக்கள் சக்தி அநுரவிற்காக கட்டுப்பணம் வைப்புச் செய்தது!

(-2024-08-06 – தோ்தல்கள் செயலகம், ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளையில்-)

Electionteam

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக கட்டுப்பணம் வைப்புச்செய்தல் இன்று (06) முற்பகல் இராஜகிரிய தேர்தல்கள் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இத்தருணத்திற்காக பொதுச்செயலாளர் டாக்டர் நிஹால் அபேசிங்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ஹரினி அமரசூரிய, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முனீர் முளப்பர், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் ஹினிதும சுனில் செனெவி, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மஹிந்த ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விறாய் கெலீ பல்தசார், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் எரங்க குணசேகர, சனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்ட குழுவினர் சமுகமளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமர சூரிய, தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் விஜித ஹேரத், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் மௌலவி முனீர் முலபர் மற்றும் சோசியலிச இளைஞர் சங்கத்தின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் சதீஷ் செல்வராஜ் அத்தருணத்தில் கருத்து தெரிவித்தனர்.

ElectionHarini

“நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய”தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு பிறந்துள்ளது”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிரினி அமரசூரிய-

நாங்கள் நீண்டகாலமாக உழைத்ததும் நீண்டகாலமாக காத்திருந்ததும் இந்த தருணம் வரும்வரையே. இலங்கைக்கு சமூக நீதியை ஏற்படுத்துகின்ற, தெளிவான தூரநோக்கினைக் கொண்ட, நாகரிகமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வரும்வரை நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். வரலாற்று ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.

எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வேட்பு மனுக்காக நாங்கள் இன்று கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். இன்னும் 48 நாட்களில் நாட்டு மக்களை உயர்த்தி வைக்கக்கூடிய அந்த தோழரை, அந்த தலைவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு வருகிறது. இன்று இந்த தருணத்தில் அந்த வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தின் பங்காளிகளாக அமையக்கிடைத்ததையிட்டு நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

Election-Vijitha

“நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்-

ஜனாதிபதி தோ்தலுக்காக எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவிற்காக நாம் அனைவரும் வந்து கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம். 15 ஆம் திகதி வேட்பு மனுவை ஒப்படைப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

எமது நாட்டை பொருளாதார ரீதியாக சீரழித்து ஊழல்மிக்க, கீழ்த்தரமான, அசிங்கமான அரசிலை முன்னெடுத்து வந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கொண்ட அரசியலை வெற்றிபெற செய்விக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நாட்டின் பெரும்பான்மை மக்கள் இந்த தினம் வரும்வரை வழிமேல் விழிவைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை அதலபாதாளத்திலிருந்து மீட்டெடுக்கின்ற வேலைத்திட்டத்தை கொண்டுள்ள அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க தயாராக இருக்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களின் வாக்குகளால் அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கத் தயார். இந்த செய்தியை நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுக்கிறோம்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மௌலவி முனீர் முளப்பர்

Election-Muneer

சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் சதீஸ் செல்வராஜ்

Election-Sadeesh