(-மாற்றுத்திறனாளிகள் (வலதுகுறைந்த ஆட்கள்) பற்றிய தேசிய மக்கள் சக்தியின் தேசிய கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வெளியிடுதல் – கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி – 2025.08.03-)
பல்வேறு துறைகளில் உடலியலாமை நிலையுற்றவர்கள் தம்மை பாதித்துள்ள நிலைமைகள் பற்றிய விபரங்களை பலவிதமாக எம்மிடம் முன்வைத்தார்கள். அதைப்போலவே தமது திறன்களையும் ஆற்றல்களையும் இந்த மேடையில் வெளிக்காட்டினார்கள். அவற்றைப் பார்க்கும்போது நாங்கள் எந்தளவுக்கு இரக்கமற்ற சமூகமொன்றில் எவ்வளவு நியாயமற்ற சுற்றுச்சூழலில் வாழ்கிறோம் என்பதே ஞாபகத்திற்கு வருகின்றது. நான் ஒரு உத்தரவாதத்தைக் கொடுக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோம். எமது நாடு பாரிய சீர்குலைவினை எதிர்நோக்கியதால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருப்பது நீங்கள்தான். நாடு எவ்வளவுதாள் சீர்குலைவிற்கு இலக்காகியிருப்பினும் அது தொடர்பில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இங்கு குழுமியுள்ள உங்கள் மீது முன்வைக்கப்படவில்லை. கண்கள் தெரிகின்ற , காதுகள் கேட்கின்ற, சரியான அசைவுகளைக் கொண்டுள்ளவர்கள்தான் நீண்டகாலமாக எங்கள் நாட்டை ஆட்சிசெய்தார்கள். அதன் பாதகவிளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆரத்தழுவி உள்ளன. உங்களைப் பார்க்கும்போது, உங்களின் பேச்சுகளை செவிமடுக்கும்போது, உங்கள் திறமைகள் வெளிப்படுத்தப்படுகையில் நாங்கள் ஏன் இவ்வளவு தாமதித்திருக்கிறோம் என்ற உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. இந்த இருளை இறந்தகாலத்திடம் ஒப்படைத்துவிட்டு எமது நாட்டுக்கு வளமான விடியலை உருவாக்கிட முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.
எம்மோடு பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற சகோதரர்கள், பழகிய குழுவினர் இங்கே இருக்கிறார்கள். இடைக்கிடையே சந்தித்திருக்கிறோம். சந்தித்த எல்லாச் சந்தர்ப்பங்களையும்விட இன்று எம்மனைவரதும் கண்கள் அகலத்திறந்துவிட்டன என நினைக்கிறோம். எம்மனைவருக்காகவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வோமென அழைப்பு விடுக்கிறோம். நாம் எதிர்நோக்குகின்ற சிக்கல்களை கடவுளின் விருப்பம் அல்லது பூர்வஜென்மபலன் என நினைத்து மனதை தேற்றிக்கொண்டோம். உலகம் முன்நோக்கி நகர்ந்து கைத்தொழில் புரட்சி இடம்பெறுகையில் அந்த கைத்தொழில் புரட்சியால் உறிஞ்சிக்கொள்ள முடியாமல் போன பிரிவினரை வலதுகுறைந்த ஆட்கள் என அழைத்தோம். அவர்களை தனிமைப்படுத்தினோம். எனினும் சமூகத்தின் மற்றுமொரு படிமுறையில் அவர்களை கவனித்துக்கொள்வது இரக்கசிந்தை அல்லது புண்ணிய கருமம் எனவும் பிறர்மீது பரிவிரக்கம் காட்டுதல் போன்ற உணர்விற்கு கட்டுப்படுத்தி நலனோம்பலை வழங்கினோம். எனினும் ஐக்கிய நாடுகள் அங்கீகரித்தக்கொண்ட பிரேரணைக்கிணங்க இந்த மக்களின் உரிமைகள் என்றவகையிலான அடிப்படை விடயங்கள் அறிமுகஞ்செய்யப்பட்டு நீண்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருசில அரசுகள் இந்த சமுதாயத்திற்கு சமத்துவமான உரிமைகளை வழங்கியுள்ளன.
பொலிஸில்சென்று ஒருவரிடம் கேள்விகேட்கும்போது “ஊமைபோல் இருக்காமல் பேசு” எனக் கூறுவார்கள். அந்த இடத்தில் இருப்பது பேசாதித்தல் பற்றிய பிரச்சினையல்ல. அவமதிப்பிற்கு உள்ளாக்குதலும் அச்சுறுத்தலுமாகும். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் “செவிடன்போல் இருக்கவேண்டாம்” என்பார்கள். மற்றவரை நோகடித்திட, பிறரை அவமதிக்க மற்றவர்களின் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாமனைவரும் தவப்புதல்வர்களல்ல. ஒருசில பண்புகளால் ஒருசில பரிபூரணமின்மை நிலவுகின்றது. நீங்களும் மற்றவர்களைப்போல் சமத்துவமான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை வகுப்பதும் அமுலாக்குவதுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியமான குறிக்கோளாகும். தேர்தலின்போது முன்வைக்கப்படுகின்ற கொள்கை வெளியீட்டினை பாரதூரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டாமென தொலைக்காட்சி உரையாடலின்போது ஆட்சியாளர்கள் கூறியது எமக்கு ஞாபகமிருக்கிறது. எனினும் கொள்கை வெளியீடு என்பது ஏதேனுமோர் அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக ஏற்படுத்திக்கொள்கின்ற இணக்கப்பாடாகும். அதனால் கொள்கை வெளியீடுதான் வாக்காளர்களுக்கும் ஆட்சியாளனுக்கும் இடையில் கட்டியெழுப்பப்படுகின்ற உடன்பாடு. இந்த உடன்பாட்டினை சிதைக்க, ஒருபுறம் ஒதுக்கிவைக்க, பொருட்படுத்தாமல்விட எமக்கு உரிமையில்லை. நாங்கள் இந்த உடன்பாட்டினை அமுலாக்குவதற்காக கடப்பாடு கொண்டுள்ளோம்.
ஒரு யுகத்தில் இருந்த குழப்பமான பிரச்சினைகள் இன்று குழப்பமானவையல்ல. ஏதெனுமொரு இயலாமைநிலை கொண்டுள்ள ஒருவருக்கு சமூகத்தில் ஏனையோர் அனுபவித்து வருகின்ற அனைத்தையும் அனுபவிப்பது சிரமமான கருமமல்ல. பொருட்படுத்தாமல் விடுவதே இடம்பெற்றுள்ளது. இயலாமைநிலையுற்ற எவரும் எந்த மட்டத்தில் இருந்தாலும் செலியுலர் போனை பாவிக்கக்கூடிய நிலைமைக்கு தொழில்நுட்பம் முன்னேற்றமடைந்துள்ளது. தற்போது நிலவுகின்ற பெரும்பாலான சிக்கல்களை மருத்துவவியலில் மற்றும் தொழில்நுட்பத்தில் போன்றே சமூக உளப்பாங்குகளால் தீர்த்துவைக்க முடியும். இந்த 21 ஆம் நூற்றாண்டில் நீங்கள் இனிமேலும் உரையாடலுக்கு ஏற்புடையதாகாத பிரஜைகளாக வாழவேண்டியதில்லை. மனித சமுதாயம் அடைந்துள்ள பெருவெற்றிகளை இலக்குகளைக்கொண்டதாக நெறிப்படுத்தி உங்களை உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேயமிக்க சமூகமொன்றை உருவாக்க முடியும். அதனாலேயே தேசிய மக்கள் சக்தியைச்சேர்ந்த நாங்கள் “ஒன்றாக பிடி தளராது” என்பதை தொனிப்பொருளாக கொண்டுள்ளோம்.
குறிப்பாக கல்வி சம்பந்தமாக இருக்கின்ற தடைகளை நீக்குவதைப்போலவே தொழில்வாய்ப்புகள் சம்பந்தமாக அனைவருக்கும் நியாயமான அணுகலை வழங்குவோம். வலதுகுறைந்த ஒரு பிள்ளை இருக்கின்ற குடும்பத்திலுள்ள அனைவரும் வேதனையுற்று, சிரமங்களை எதிர்நோக்கி, பொருளாதாரத்திற்கு சுமையாகிவிட்ட நிலைமையிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். பொருளாதாரத்திற்கு ஏதேனும் பெறுமதியை பெற்றுக்கொடுப்பதற்காக அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்துவது தேசிய மக்கள் சக்தியின் பிரதானமான ஒரு செயற்பாடாகும். வலதுகுறைந்தவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வழியுரிமை மீது விசேட கவனஞ் செலுத்தப்படவேண்டியுள்ளது. அது பற்றிக் கவனஞ்செலுத்தி அவர்களின் பாதுகாப்பு மற்றும் நீதி தொடர்பிலான அடிப்படைப் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். குறிப்பாக வலதுகுறைந்த பெண் பிள்ளைகள் எதிர்நோக்குகின்ற கவலைக்கிடமான நிலைமைகள் செய்தித்தாள்கள்வாயிலாக வெளிக்கொணரப்பட்டுள்ளன. சீக்கிரமாக மனோபாவரீதியான மாற்றங்கள் ஏற்படவேண்டும். பிறர்மீது ஒத்துணர்வுகொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டியது அவசியமாகும். அதனூடாகவே பாதுகாப்பு கட்டியெழுப்பப்படும். வலதுகுறைந்த ஆட்களை சமூகத்தில் முனைப்பான பங்காளிகளாக மாற்றுவது எமது அடிப்படை நோக்கமாகும். எமது இந்த கொள்கைகளின் உற்பத்தித்திறன் இருப்பது தரவுகளிலல்ல, மனிதத்துவத்திலாகும். தற்போது இருப்பது மனிதத்துவம் மற்றும் நீதி பற்றிய பிரச்சினையாகும். உங்களையும் எங்களையும் உள்ளிட்ட அனைவரையும் முன்நோக்கி நகர்த்துகின்ற வழிமுறைகளை நிச்சயமாக நாங்கள் அமுலாக்குவோம். நாங்கள் ஒன்றாக பிடி தளராது முன்நோக்கிச் செல்வோமென அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.