(-Colombo, December 17, 2024-)
புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
புதிய சபாநாயகராக பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன பொருத்தமானவர் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்மொழிந்ததோடு , சபாநாயகர் பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார். புதிய சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்மொழியப்படுவதாக முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், புதிய சபாநாயகர் தெரிவின் போது வேறு எந்தப் பெயரும் முன்வைக்கப்படவில்லை.
இதன்படி, புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.