Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவிற்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு

(-Colombo, April 23, 2024-)

China-NPP

நேற்று (23) முற்பகல் மவிமு தலைமை அலுவலகத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரை உள்ளிட்ட தூதுக்குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள்.

சீனத் தூதுக்குழுவினர் சார்பில் இந்த சந்திப்பில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதி அமைச்சரும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் Lin Tao, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் கவுன்சலர் Chen Xiangyuan, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் Li Jinyan, பிரதிப் பணிப்பாளர் Wen Jun , பிரதி அமைச்சரின் செயலாளர் Jin Yan, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் Jin Enze, மொழிபெயர்ப்பாளர் Zhang Guyu ஆகியோர் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம்செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய, பேராசிரியர் அனில் ஜயந்த பர்னாந்து, சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் நிலைமை, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மற்றும் வளர்ந்துவரக்கூடிய அரசியல் நிலைமைகள் பற்றி குறிப்பாக இருதரப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை, அதன்பொருட்டு கடைப்பிடிக்க எதிர்பார்த்துள்ள வழிமுறைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றியும் தோன்றியுள்ள நெருக்கடியான நிலைமையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முதலில் அரசியல் உறுதிநிலையை நாட்டில் உருவாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசியல் துறையில் வேகமாக வளர்ந்துவந்து மக்கள் மத்தியில் பிரபல்யத்யத்தையும் கவர்ச்சியையும் அடைகையில் கடைப்பிடித்த வழிமுறைகள் மற்றும் அமைப்பாண்மைப் கட்டமைப்புகள் தொடர்பிலும் சீனத் தூதுக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பல்வேறு மக்கள் குழுக்கள், சமூக அடுக்குகள் மற்றும் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களுடன் நிலவுகின்ற உறவுகள், நாட்டைக் கட்டியெழுப்புகையில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள், கட்சிக் கட்டமைப்புகள் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இவ்வேளையில் சீனத் தூதுக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கை, சமூக கலாசார உறவுகள் மற்றும் ராஜதந்திர உறவுகளை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் மேலும் வளர்த்துக்கொள்வது மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்கையில் மேற்படி உறவுகளைப் பிரயோகிக்கக்கூடிய விதங்கள் பற்றியும் இருதரப்பினருக்கும் இடையில் மேலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP
China-NPP