(-“மறுமலர்ச்சிக்காக முழுநாடுமே ஒன்றாக”தேசிய மக்கள் சக்தியின் பேருவளை மக்கள் சந்திப்பு – 2024-07-15-)
நீங்கள் இதுவரை வாக்குகளை அளித்ததும் அரசாங்கங்களை அமைத்துக்கொண்டதும் சாதகமான நோக்கத்துடனேயே. அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சாதகமான ஒரு நாட்டை எதிர்பார்த்தே. ஆனால் மக்களின் சாதகமான நோக்கங்கள் இருந்தாலும் அமைத்துக்கொண்டதோ பாதகமான அரசாங்கங்களையே. சட்டத்தை மீறுகின்ற, பொது ஆதனங்களை திருடுகின்ற, விரயம் செய்கின்ற, பொதுச்சொத்துக்களை விற்கின்ற, நாட்டை அபகீர்த்திக்குள்ளாகிய, கடனைச் செலுத்த முடியாத ஒரு நாடு, கல்வி சுகாதாரம் என்பவற்றை சீரழித்த அரசாங்கங்களையே அமைத்துக்கொண்டோம். வாக்களித்து நியமித்துக்கொண்ட அரசாங்கங்கள் பற்றி எவராலும் மகிழ்ச்சியடைய முடியுமா?
உங்களுக்கு ஞாபகமிருக்கும் மைத்திரி – ரணில் அரசாங்கம் பற்றி. அந்த நாலரை வருடகாலத்தில் எமது நாடு 12.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றது. எமது நாடு மிகவும் அதிகமாக கடனை பெற்று கடன் பொறியில் சிக்க வைத்தது. மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்திலாகும். இன்று நாங்கள் செலுத்த வேண்டியுள்ள அனைத்து விதமான சர்வதேச இறையாண்மை முறிகள் கடன் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் பெற்றவையாகும். ரணில் – மைத்திரி அரசாங்கத்தை அமைத்துக் கொண்டு 50 நாட்கள் கழிகையில் மத்திய வங்கிக்கு ஆப்பு வைத்தார்கள். அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றார்கள். படிப்படியாக இனவாதம் வளர்ச்சியடைந்தது. ரணில் விக்கிரமசிங்க அதனை வளர்ச்சியடைய இடமளித்தார். மலட்டு உடைகள் மலட்டுக் கொத்து ரொட்டி, மலட்டு மருத்துவர்கள் பற்றி பேசுகின்றபோது அந்த கருத்தியல்களுக்கு எதிராக ரணிலுடைய அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் என்ன? சஜித் பிரேமதாச அதற்கு எதிராக பேசினாரா? நாட்டின் பாதுகாப்பினை அடிமட்டத்திற்கே வீழ்த்தினார்கள். பாரியளவில் தகவல்கள் கிடைத்திருக்கையில், தாக்குவதாக, தாக்குவது யார், தாக்குவது எப்போது, எந்த இடத்தில், நேரம் அவை அனைத்தும் பற்றிய தகவல்கள் இருக்கையில் நாட்டை பாதுகாத்தார்களா? தாக்குதல் இடம்பெற இடமளித்து இனவாத முரண்பாடொன்றை உருவாக்கினார்கள். சிந்தித்துப் பாருங்கள் ஆட்சியாளர்கள் உங்கள் எதிர்பார்ப்புக்களை ஈடேற்றினார்களா? பலர் 2019 இல் கோட்டாபயவை கொண்டு வர பெரும் எண்ணிக்கையிலான புள்ளடிகளை இட்டார்கள். எனினும் அவர் பொருளாதாரத்தை சிதைத்து வீழ்த்தினார் .கூட்டாளிகளுக்கு சீனி வரி மோசடியை மேற்கொள்ள இடமளித்தார். அரசாங்கம் 1500 கோடியை இழந்தது. தேங்காய் எண்ணெய் வரி மோசடியால் 350 கோடியை அரசாங்கம் இழந்தது. உரத்தை நிறுத்தினார்கள். கமநிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. முழு குடும்பமுமே அமைச்சர் பதவிகளை வகித்தது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்தது.
எங்களுடைய பொருளாதாரம் சீரழியத் தொடங்கியது. உலகத்திற்கே ஆப்பு வைத்த நாடாக மாறியது. இந்த நாட்டை இந்தளவு அழிவுக்கு கொண்டு வந்து தமது பிள்ளைகளின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டுள்ள வேளையில் தொடர்ந்தும் பழைய தோல்வி கண்ட கட்சிகள் மீது ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்? அவை இரண்டு கட்சிகள் அல்ல. ஒரே கும்பல்தான். அவர்களின் அரசியல் மேடையை பாருங்கள். ரணிலின் மேடையில் மொட்டுத் தலைவர்கள் இருக்கிறார்கள். மொட்டின் மேடையில் யு.என்.பி. தலைவர்கள் இருக்கிறார்கள். சஜித்தின் மேடையில் மொட்டுத்தலைவர்கள் இருக்கிறார்கள். எங்கே இவர்களை ஒவ்வொரு கட்சியையும் சோ்ந்தவர்களென இனங்காண்பது? அவர்கள் இரண்டு கட்சிகளை சோ்ந்தவர்கள் அல்ல. இது ஓர் அரசியல் திரிபு நிலையாகும். பெரும்பாலானவர்கள் ஐ.ம.ச. மொட்டுக்கு ஏறுவதற்கு முன்னர் எம்மைச் சுற்றி வந்தார்கள். “இந்த நாட்டை நாசமாக்குவதில் பங்களித்த, கடந்த காலத்தில் அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜபக்ஷாக்களுக்கு வாழ்த்துப்பாடிய எவரையும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எடுக்கமாட்டோம்” என நாங்கள் கூறினோம். அங்குமிங்கும் தாவுகின்ற அரசியலை நிறுத்த வேண்டாமா? இவர்கள் அங்குமிங்கும் தாவுவது நாடு மீது கொண்டுள்ள நேசம் காரணமாகவா? தெளிவான வேலைத்திட்டமொன்றை கொண்டுள்ள ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும். இன்று எங்களுக்கு தேவை ஒரு கொள்கைப்பிடிப்புள்ள அரசியலாகும்.
இவர்கள் அங்குமிங்கும் தாவினார்கள். அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொண்டார்கள். நாட்டுக்கு என்ன நோ்ந்தது? எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல பைசிக்கிள் ஒன்றை வாங்குவது எப்படி என சிந்திக்கிறார்கள். ரோஹிதவின் பிள்ளைகள் திருமணத்திற்காக ஹெலிகொப்டரில் போகிறார்கள். எமது பிள்ளைகள் சிறிய கார் ஒன்றை வாங்குவது பற்றி சிந்திக்கிறார்கள். ஜனாதிபதியின் பிள்ளைகள் அண்டவெளிக்கு ரொக்கற் ஒன்றை எப்படி அனுப்புவதென சிந்திக்கிறார்கள். பிரஜையொருவர் வைத்தியசாலைக்குச் சென்றால் மருத்து வாங்குவது எப்படியென சிந்திக்கிறார். அவர்கள் சிங்கப்பூருக்கு போய் மருந்து வாங்குகிறார்கள். பிரஜையொருவர் தனது பாஸ்போர்ட்டுக்கு வீசா அடித்துக்கொள்ள சிந்திக்கையில் அவர்கள் அமெரிக்காவில், அவுஸ்ரேலியாவில் பாஸ்போர்ட்டுக்கு உரியவர்களாவர். அவர்கள் தம்மை கட்டி வளர்த்துக் கொண்டார்கள். எம்மவர்கள் அடிமட்டத்திற்கே வீழ்ந்தார்கள். அதனால் நாங்கள் ஒரு தடவை நியாயமான, நோ்மையான, சாதகமான அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் தீர்மானமொன்றை எடுப்போம். எங்கள் பிள்ளைகளை நேசிப்போமேயானால் நாட்டை நேசிப்போமேயானால் இந்த தீர்மானத்தை எடுக்கவேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. இன்று எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர்களா? அப்படியானால் ரோஹித அபேகுணவர்த்தன, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின்கீழ் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே. தற்போது எல்லோரமே சட்டத்தின் முன் சமமானவர்களா? அப்படியானல் ரோஹித அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. சட்டத்தின் முன் அனைவரும் சமமென்றால் ரணில் விக்கிரமசிங்க சனாதிபதியாக பதவிவகிக்க முடியாது. பிரஜாவுரிமையின்றி 04 வருடங்கள் பாராளுமன்றத்தில் இருந்து அமைச்சுப் பதவிகளை வகித்து டயனா வெளியில் இருக்க முடியாது, எமது நாட்டில் வறியவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கு பிறிதொரு சட்டம். நாங்கள் இந்த நாட்டில் பணம் – பலம் என்ற பேதமின்றி, ஏழை – பணக்காரன் என்ற பேதமின்றி அனைவரும் சட்டத்தின்முன் சமமாக மதிக்கப்படுகின்ற ஒரு நாட்டை உருவாக்குவோம். அதைப்போலவே குற்றச்செயல்கள், போதைப்பொருள், பாதாள உலக மோதல்கள் தற்போது இந்த நாட்டில் அதிகரித்துவிட்டது. இவையனைத்திற்குமே அரசியல் பாதுகாப்பு கிடைக்கின்றது, தற்போது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் போதைப்பொருளுக்கு பஞ்சமில்லை. இந்த நாட்டை குற்றச்செயல்களற்ற போதைப்போருட்களற்ற இராச்சியமாக மாற்றவேண்டுமாயின் அந்த வேலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்ளும்.
எமது நாட்டை பொருளாதாரரீதியில் மீட்டெடுக்கவேண்டும். அதற்காக அரசாங்கம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வசதிகளை வழங்கவேண்டும். நீங்கள் உங்களின் தொழில்முயற்சிகளை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். அரசாங்கம் செல்வத்தை ஈட்டுவதில்லை. செல்வத்தை ஈட்டுபவர்கள் தொழில்முயற்சியாளர்களே, கைத்தொழிலதிபர்களே. அவர்கள் ஈட்டுகின்ற செல்வத்திலிருந்து அரசாங்கம் ஒருதொகையை எடுத்துக்கொள்கிறது. தொழில்முயற்சிகளுக்கு நாங்கள் சிறந்த சுற்றுச்சூழலை அமைத்துக்கொடுப்போம். முதலில் நாங்கள் பலம்பொருந்திய அரசாங்க சேவையொன்றினை உருவாக்குவோம். எந்தவொரு பிரஜையும் அரசாங்க நிறுவனமொன்றுக்குச் சென்று தமது அலுவல்களை முறைப்படி செய்துகொள்வதற்கான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இந்த ஆட்சியாளர்கள் பலம்பொருந்தியதாக இருந்த எங்கள் அரசசேவையை சீரழித்தார்கள். அரசியலில் இருந்து மீட்டெடுத்த, டிஜிட்டல்மயப்படுத்திய, ஆற்றல்களாலும் திறமைகளாலும் முன்நோக்கி நகரக்கூடிய பலம்பொருந்திய அரச சேவையை நாங்கள் உருவாக்கிடுவோம். அது தொழில்முயற்சி வளர்ச்சிக்கு அவசியமானதாகும். தொழில்முயற்சியாளர்களுக்குத் தேவையான டார்கட்டை அரசாங்கம் அமைத்துக்கொடுக்க வேண்டும். இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு, சுற்றுலாக் கைத்தொழிலுக்கு அவசியமான டார்கட்டை நாங்கள் அமைத்துக் கொடுப்போம். சுற்றுலாக் கைத்தொழிலை விருத்தி செய்வதற்கு அவசியமான திட்டங்களை நாங்கள் வகுத்துக் கொண்டிருக்கிறோம். தொழில்முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இலக்குகளை காட்டுவோம்.
தொழில்முயற்சிகளை முன்னேற்றுவதுதான் எமது எதிர்பார்ப்பு. தொழில்முயற்சிகளும் கைத்தொழில்களும் முன்னேற்றமடைய வேண்டும். தொழில்முயற்சிகள் முன்னேற்றமடையாமல் ஒரு நாடு முன்னேற மாட்டாது. திறைசேரிக்கு பணம் வரமாட்டாது. இந்த லயிற் பில் அதிகரிப்பு எங்கள் கைத்தொழில்களை பாதித்துள்ளது. எமது இறுதி இலக்கு என்றவகையில் நாங்கள் இரண்டு மூன்று வருடங்களுக்குள் மின்கட்டணத்தை பாரியளவில் குறைக்க எதிர்பார்க்கிறோம். இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சராசரி பெறுமானத்தை 7.5 சதம் டொலருக்கு கொண்டுவர முடியும். 21 ரூபாய் என்ற அளவுக்கு மின்கட்டணத்தை குறைப்பதற்கான இயலுமை நிலவுகின்றது. இந்த மின்சாரக் கட்டணத்துடன் கைத்தொழில்களுக்கு முன்நோக்கி நகர முடியாது. இந்த நாடு தெற்காசியாவில் மிகஅதிகமான மின்சாரக் கட்டணம் அறவிடப்படுகின்ற நாடாகும். மின்சாரக் கட்டணம் இவ்வாறு நிலவுகையில் உலகத்தாருடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட இயலாது. குறைந்த விலையில் பொருட்களை உற்பத்திசெய்ய முடியாது. காற்றாலைகள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மிகச்சிறந்த ஆற்றல்படைத்த ஒரு குழுவினரை நாங்கள் சந்தித்து வந்திருக்கிறோம். ஏற்கெனவே காற்று விசையிலிருந்தும் சூரிய வெப்பத்திலிருந்தும் மின்சாரத்தை உற்பத்திசெய்ய தொடங்கி இருக்கிறார்கள். ஒரு பிரதான கம்பெனி டெண்டர் சமர்ப்பித்துள்ளது, அண்மையில் டெண்டரொன்று திறக்கப்பட்டது, காற்றுவிசையினால் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற மின்நிலையமொன்று திறக்கப்பட்டது. ஒரு அலகு 4.8 சதம் டொலராக அமைகின்றது. எனினும் அரசாங்கம் அதானிக்கு 8.26 சதம் டொலருக்கு வழங்கப்போகின்றது. 40% அதிகமாகும். 20 வருடங்களுக்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்படுகின்றது, அவர்களின் ஒரே தொழில் இருக்கும்வரை வாரிச்சுருட்டிக் கொள்வதாகும். எமது நாட்டின் எதிர்காலம் பற்றி , எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி, எமது தொழில்முயற்சிகளை முன்னேற்றுதல் பற்றி அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. நாட்டை வலுச்சக்தி நெருக்கடி எவ்வாறு பாதித்துள்ளது? ஆட்சியாளர்கள் இவையெதுவும் பற்றி சிந்திப்பதில்லை. நாங்கள் எமது அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். எமது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக நீங்கள் உங்கள் தொழில்முயற்சிகளை சரிவர மேற்கொண்டு வாருங்கள். செல்வத்தை ஈட்டுங்கள். அதிலிருந்து நியாயமான வரித்தொகையொன்றை அரசாங்கத்திற்கு கொடுங்கள்.
எங்கள் பிரஜைகள் வரி செலுத்த விரும்புகிறார்கள். எனினும் செலுத்துகின்ற வரியைத் திருடுகிறார்களெனில் ஏன் வரி செலுத்தவேண்டுமென பிரஜைகள் கேட்கிறார்கள். அரசாங்கத்திற்கு சேரவேண்டிய பணம் வில்மாவின் வீட்டுக்குச் செல்கின்றது. வரி செலுத்துபவர் செயலற்றுப் போகிறார். அதைப்போலவே செலுத்துகின்ற வரியை விரயமாக்குகிறார்கள். ரணில் விக்கிரமசிங்க 875 கோடியை ஒதுக்கிக்கொண்டார். இந்த நாட்டை விருத்திசெய்யும்பொருட்டு செலவிடுவதற்காக அல்ல: தேர்தலுக்கு பங்கிடுவதற்காக எடுத்துக்கொண்டார். ரணில் வெளிநாடு செல்வதற்காக 20 கோடி ரூபாவை ஒதுக்கிக்கொண்டார். இது உங்களின் வரிப் பணம். வெளிநாடு செல்லும்போது ஐ.ம.ச. உறுப்பினர்களை அழைத்துச் செல்கிறார். அது அந்த உறுப்பினர்களை அரசாங்கத்திற்கு எடுப்பதற்காகவே. ரணில் பன்முகப்படுத்திய நிதியிலிருந்து 19 ஐ.ம.ச. உறுப்பினர்களுக்கு 120 கோடியை வழங்கினார். இது உங்களின் வரிப் பணம். சனாதிபதி கோல்பேஸிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருகையில் ஒரு அம்பியுலன்ஸ் பின்னால் வருகின்றது. அவர்கள் நோய்ப் பிண்டங்களா? உங்களின் செல்வத்தை இந்த ஆட்சியாளர்கள் விரும்பியவாறு செலவிடுகிறார்கள். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செலுத்துகின்ற வரியை விரயமாக்குவார்களாயின் எவருமே வரி செலுத்த விரும்பமாட்டார்கள். நாட்டின் வீதிகளை அமைத்திட, வைத்தியசாலைகளில் மருந்துகளைக் கொடுக்க, கல்வியை முன்னேற்றுவதற்காக கொடுக்கின்ற வரியை விரயமாக்குவதாயின் வரியை செலுத்த விரும்ப மாட்டார்கள். நீங்கள் தொழில்முயற்சிகளை மேற்கொள்க, செல்வத்தை ஈட்டுக, அரசாங்கத்திற்கு நியாயமான வரியை செலுத்துக என நாங்கள் கூறுகிறோம். அவ்விதம் அரசாங்கத்திற்கு கொடுக்கின்ற ஒவ்வொரு சதத்தையும் விரயமாக்காமல், திருடாமல் நாட்டுக்காக செலவிடுகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் அமைப்போம்.
எம்மால் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பலம் இன்று எம்மிடம் இருக்கின்றது. சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைப்பதில் பலனில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரதும் நம்பிக்கை, நல்லாசியுடன் எதிர்பார்ப்பினைக் கொண்டதாக திசைகாட்டியின் அரசாங்கமொன்று உருவாக வேண்டும். நாங்கள் இதுவரை காலமும் பிறருக்கு எதிராகவே அரசாங்கங்களை அமைத்தோம். நாமனைவரும் ஒற்றுமையாக அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். நாங்கள் முன்நோக்கி நகரவேண்டுமாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவேண்டும். ஒற்றுமையுடன் அரசாங்கமொன்றை அமைத்தால் எம்மால் கட்டங்கட்டமாக தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும். அனைத்து மதங்களினதும் நியாயமான உரிமைகள், தமது மொழியில் பேச்சு மற்றும் அரசாங்கத்தடன் அலுவல்களை மேற்கொள்வதற்கான உரிமை, தமது கலாச்சாரம் பற்றிய உரிமை, அனைவருக்கும் நியாயமானவகையில் பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான உரிமை இவற்றை உருவாக்கிட ஒற்றுமையாக அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். நாங்கள் அரசாங்கமொன்றை அமைத்திடுவொம். சந்தேகம்கொள்ள வேண்டாம். எனினும் எமக்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வந்து 54 வருடங்களாகின்றன. ரணில் அரசாங்கத்திற்கு வந்து 47 வருடங்களாகின்றன. தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்திற்கு வந்து 41 வருடங்களாகின்றன. இங்கே இருக்கின்ற பெரும்பாலானவர்கள் அதைவிட இளையவர்களாவர். இது போதும். நாட்டை மாற்றியமைத்திட வேண்டும். இவர்கள் பழைய, துருப்பிடித்த தலைவர்கள். இவ்விதமாக ஒரு நாடு முன்நோக்கி நகர முடியாது. ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். பேருவளை வாக்குப்பெட்டியில் அதிக எண்ணிக்கைகொண்ட வாக்குச்சீட்டுகளை திசைகாட்டிக்கு புள்ளடியிட்டு நிரப்புங்கள். அனைவரும் உழையுங்கள், அனைவரும் உரையாடுங்கள். இது நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எற்படுத்தவேண்டிய மாற்றமாகும். நாங்கள் தேர்தலுக்காக ஒன்றைக்கூறி தேர்தலுக்குப் பின்னர் வேறு கதைகளைக் கூறுபவர்களல்ல. நாங்கள் தேர்தலின்போது மக்களுக்கு கொடுக்கின்ற நம்பிக்கையை தேர்தலுக்குப் பின்னரும் பாதுகாப்போம். கடந்த 2020 தேர்தலில் ரோஹித பாராளுமன்றம் சென்றார். நளிந்த பாராளுமன்றம் செல்லவில்லை. இப்போது நளிந்த போயிருந்தால் நல்லதென நினைக்கிறீர்கள் அல்லவா? ரோஹித்தவை ஏன் அனுப்பிவைத்தோம் என நினைக்கிறீர்கள் அல்லவா? தவறிழைத்த இடங்கள், கைநழுவிய இடங்கள் பல இருக்கின்றன. மீண்டும் தவறவிட முடியாது. இதுதான் வெற்றிபெறுவதற்கான, மாற்றியமைப்பதற்கான தருணம். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த மாற்றத்திற்கான இடையீட்டினைச் செய்வோம்.