Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“எல்லாத்துறையிலும் வளமிக்க நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும்” -தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க-

(-தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்தின் மாத்தறை மாவட்ட கருத்தரங்கு – 2024-07-27- மாத்தறை பர்ள் பெலஸ் ஹோட்டல்-)

Bank-And-Finance-Matara

நாங்கள் நீண்ட காலமாக வாக்குகளை அளித்திருக்கிறோம். வாக்குகளை அளிக்கும்போது அரசாங்கமொன்றை அமைக்கும்போது பிரஜைகளிடம் நிலவிய எதிர்பார்ப்புகள் ஈடேறியுள்ளனவா? எமது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியை நோக்கினாலும், அரச மற்றும் ஏனைய ஒவ்வொரு துறையிலும் தோன்றியுள்ள சீர்குலைவுகளை நோக்கினாலும் நிகழ்ந்திருப்பது முன்னேற்றமல்ல. பின்னடைவுதான். நாங்கள் இந்த தலைவிதியிலிருந்து மீட்பு பெறவேண்டும். மீட்பு பெறவேண்டுமானால் முதலில் ஊழல் மிக்க, அழிவுமிக்க, தூரநோக்கற்ற ஆளும் கும்பலை விரட்டியடிக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தது 1970 இல். 54 வருடங்களாக பாராளுமன்றத்தில். ரணில் வந்தது 1977 இல். 47 வருடங்கள் பாராளுமன்றத்தில். தினேஷ் வந்தது 1983 இல். 41 வருடங்கள் பாராளுமன்றத்தில். பாராளுமன்றத்தில் உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி பதவிகளை வகித்தவர்கள். அவர்களை மேலும் பரீட்சித்து பார்க்கவேண்டியதில்லை. நாங்கள் பல தசாப்தங்களாக அந்த மூடைகளை அவிழ்த்துப் பார்த்திருக்கிறோம். நாங்கள் அந்த வழமையான அரசியல் பாசறையிலிருந்து நவீன அரசியல் இயக்கமொன்றின் கையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பு செப்டெம்பர் 21 ஆம் திகதி உருவாகியிருக்கிறது.

நாங்கள் இந்த அழிவுகளை எங்கள் கண்ணெதிரே காண்கிறோம். தென்கொரியாவின் வளர்ச்சிகள், வியட்நாமின் வளர்ச்சிகள், இந்தியாவின் வளர்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் 80 ஆம் தசாப்தத்தில் குடை உற்பத்தியும் சவர்க்கார உற்பத்தியும் இருக்கவில்லை. அப்படி இருந்த இந்தியாவையும் இன்று சந்திரனுக்கு செல்கின்ற இந்தியாவையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த பிராந்தியத்திற்கு மோட்டார் வாகனங்கள், ஔடதங்கள், உணவு, விதையின உற்பத்தியை செய்துவருகின்ற இந்தியாவை இப்போது நாங்கள் காண்கிறோம். இந்த அரசுகள் 20 ஆம் நூற்றாண்டில் உருவாகிய தொழில்நுட்பத்தை நன்றாக உறிஞ்சி எடுத்து திட்டங்களை வகுத்து அமுலாக்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோலவே நாங்கள் அறிந்த காலத்திற்குள் எமது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவுகளை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். அதன் ஆரம்ப படிமுறைதான் இந்த ஜனாதிபதி தோ்தலில் தேசிய மக்கள் சக்தியின் கைக்கு அதிகாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்விதமாக எங்கள் பிள்ளைகள் வாழக்கூடாது. உலகின் முன்னிலையில் அபகீர்த்திக்கு இலக்காகிய நாடாக மாறக்கூடாது. அனைவரும் ஒன்றுசோ்ந்து புதிய அரசியல் பயணமொன்றில் எமது நாட்டை பிரவேசிக்கச் செய்ய வேண்டும்.

முதலில் இந்த நாட்டை நாகரிகமான ஒரு நாடாக மாற்றியமைக்க வேண்டும். மானிட கூர்ப்பின் தொடக்க நிலையில் எங்களுடைய மானுடன் மரத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர் நிர்க்கதியான விலங்காக மாறினான். அந்த நிர்க்கதி நிலைமை எம்மை கூட்டான வாழ்க்கையின் பால் தூண்டியது. ஒரு கூட்டமாகவே வேட்டையாடச் சென்றார்கள். வேட்டையை கூட்டமாகவே அனுபவித்தார்கள். பின்னர் பலம்பொருந்திய ஆள் தலைவனானான். அந்தக் கூட்டத்தில் தலைவனே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தான். நீண்டகாலமாக மனிதனின் போராட்டங்கள் எழுச்சிகள் மூலமாக அவை நிறுவனமென்ற வகையில் கட்டியெழுப்புதல் தொடங்கியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றமும் சட்டத்தை அமுலாக்குவதற்காக நிறைவேற்றுத்துறையை உள்ளிட்ட அமைச்சரவையையும் சட்டம் அமுலாக்கப்படுவது சரியான முறையிலா என்பதை பார்ப்பதற்காக நீதித்துறையும் உருவாகியது. சட்டங்களை வகுப்பதற்காக பாராளுமன்றம் மக்களாலேயே நியமிக்கப்படுகிறது. நீதிமன்ற முறைமைக்கு பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் ஊடாகவே அதிகாரம் கிடைக்கிறது. சமூகம் நாகரிகமடைந்த நிறுவனங்கள் மூலமாக நிறுவகிக்கப்பட ஆரம்பித்தது.

Bank-And-Finance-Matara

எமது நாட்டில் இந்த நிறுவனங்கள் சீர்குலைதலுக்கு இலக்காகின. மக்கள் எதிர்பார்த்த நாகரிகமடைந்த பாராளுமன்றமொன்றாக மாறியுள்ளதா? இன்று இந்த நிறுவனங்கள் அநாகரிகத்தின் பிரதிபிம்பங்களாக மாறியுள்ளன. பாராளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படுகின்ற சட்டம் என்னவென்று அறியாதவர்களாவர். அவை அவர்களுக்கு ஏற்புடையதுமல்ல. ஆனால் அதிகாரம் இருப்பது அந்த இடத்தில் தான். மீண்டும் நாகரிகத்தை அழைப்பித்துவர வேண்டுமானால் இந்த பாராளுமன்றம் மாற்றமடைய வேண்டும். 17 வது திருத்தம் மிகவும் ஜனநாயக ரீதியான புதிய திருத்தமாகும். 17 ஐ முழுமையாக அகற்றி மஹிந்த ராஜபக்ஷ 18 ஐ கொண்டு வந்தார். 17 இற்கு கையை உயர்த்தியவர்கள் 18 இற்கும் கையை உயர்த்தினார்கள். 19,20,21 இந்த அனைத்துவிதமான அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் அவர்கள் கையை உயர்த்தினார்கள். இத்தகைய அநாகரிகமான நிறுவனத்துடன் முன்னோக்கி பயணிக்க முடியுமா? அநாகரிகத்திலிருந்து நாகரிகத்திற்கு கொண்டு வருகின்ற பாராளுமன்றமாக இந்த பாராளுமன்றத்தை மாற்றியமைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்த்த தேவைகள் ஈடேடுகின்ற பாராளுமன்றமொன்றை நியமிக்க வேண்டும். நாங்கள் சட்டவாக்க அதிகாரம் உரியவகையில் பிரதிபலிக்கப்படுகின்ற பாராளுமன்றமாக மாற்றியமைப்போம்.

நிறைவேற்று அதிகாரம் மாற்றப்படவேண்டும். தனியாள் ஒருவரிடம் மட்டற்ற அதிகாரம் குவிந்திருக்கிறது. இருக்கின்ற சட்டத்திற்கு பொருள்கோடல் வழங்கி தண்டனை வழங்குவதே நீதிமன்றத்தின் கடமையாகும். ஊழல், மோசடி, விரயத்தை தடுப்பதற்கான பல சட்டங்களை நாங்கள் கொண்டுவருவோம். பாராளுமன்றத்தையும் நிறைவேற்றுத்துறையையும் நீதித்துறையையும் திட்டவட்டமான சமூக தேவைகளுக்கான பணியாற்றி வருகின்ற நிறுவனமாக மாற்றியமைக்க வேண்டும். தேசபந்து தென்னக்கோன் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தவறானதென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நியமன அதிகாரி ஜனாதிபதியாவார். ஒருவரின் பெயரை ஜனாதிபதி அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கிறார். அரசியலமைப்புச் சபை அதனை அங்கீகரித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறது. ஜனாதிபதி நியமனத்தை செய்கிறார். பாராளுமன்றத்தின் தீர்ப்பின் மீது நீதிமன்றத்தால் கைவைக்க முடியாது என்கின்ற அபிப்பிராயமொன்று இப்போது முன்வைக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபைக்கு அவ்வாறான அதிகாரம் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற செயலாளர் நாயகம், தோ்தல்கள் ஆணைக்குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபர் ஆகிய பல்வேறு முக்கியமான நிறுவனங்களுக்கு அரசியலமைப்புச் சபையினால் பதவிகள் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு பிரஜையும் மேற்படி நியமன முறையியல் முறைப்படி கடைப்பிடிக்கப்படவில்லை என்றுகூறி அடிப்படை உரிமைகள் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கான உரிமையை கொண்டிருக்கிறார்.

அரசியலமைப்பு சபையில் ஒன்பது போ் இருக்கிறார்கள். பொலிஸ் மா அதிபரின் பதவியை அரசியலமைப்புச் சபையின் ஐந்து போ் அங்கீகரிக்க வேண்டும். ஒன்பது பேரில் சபாநாயகரும் ஒருவராவார். அன்று நான்கு போ் பொலிஸ் மா அதிபருக்கு சார்பாக வாக்குகளை அளித்தார்கள். இருவர் அமைதியாக இருந்ததோடு இரண்டு போ் எதிர்த்தார்கள். அரசிலமைப்பு சபைக்கு வாய்ப்பொன்று இருக்கின்றது. வாக்குகள் சமமான எண்ணிக்கைக் கொண்டதாக இருந்தால் அறுதியிடும் வாக்கினை சபாநாயகரால் பாவிக்க முடியும். சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்புகிறார். ‘நான்கு போ் சார்பாக இருக்கிறார்கள். இரண்டு போ் எதிராக இருக்கிறார்கள். மேலும் இரண்டு போ் மௌனமாக இருக்கிறார்கள். மௌனமாக இருக்கின்ற இருவரும் எதிரானவர்கள் என கருதப்படுமாயின் எனது வாக்கினை சார்பாக வழங்குவேன்’ என்று. இதற்கெதிராக சபாநாயகருக்கு ஒரு நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. உயர்நீதிமன்றம் இங்கு ஒரு சிக்கல் இருக்கிறதெனக் கண்டு பொலிஸ் மா அதிபரின் சேவையை இடைநிறுத்துகிறது.

Bank-And-Finance-Matara

தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறுகிறார். “அந்த வழக்குத்தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று. நான் கூறுகிறேன் “தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கூறிய கதையை இயலுமாயின் வெளியில் வந்து கூறுங்கள்” என்று. ஒரு கடிதத்திற்கு பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் கையொப்பத்தை இடுவதற்காக. அந்த நிறுவனங்களின் நாகரிகத்தையும் கௌரவத்தையும் இந்த ஆட்சியாளர்கள் பாதுகாக்கிறார்களா? ஒட்டுமொத்த சமூகமுமே சீர்குலைவிற்கு இலக்காகியுள்ளது. ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு திணைக்களத்தின் பிரதானிக்காக தோற்றுவதன் மூலம் வெளிக்காட்டப்படுவது என்ன? நிறுவனம் தங்கியிருப்பது ஓர் ஆளிடம் என்றால் அந்த நிறுவனத்தின் வழியுரிமை இல்லாதொழிந்துவிடும். அரசாங்கம் ஏன் அப்படி சிந்திக்கிறது? தமக்கு அவசியமான முறையற்ற செயல்களில் ஈடுபடுவதற்காகவே. நாட்டின் பொலிஸ் திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான பணிகளைச் செய்து கொள்ள வேண்டிய தேவையிருக்குமாயின் வேறொரு பொருத்தமான உத்தியோகத்தரை நியமித்துக்கொள்ள முடியும். இந்த அநாகரிகத்தை தோற்கடிக்க வேண்டும். எங்கள் அரசியலில் முதலாவதாக நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற பொறுப்புத்தான் இந்த நிறுவனங்களுக்கு முறைப்படி கையளிக்கப்பட்டுள்ள பணிகளையும் பொறுப்புகளையும் ஈடேற்றுவதற்காக அவசியமான ஒத்துழைப்பினையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்தலாகும்.

அடுத்ததாக எமது பொருளாதாரத்தில் பாரிய மாற்றமொன்றை அடையவேண்டும். பொருளாதார மாற்றத்திற்காக எமக்கு தொழில்சார் உழைப்பு அவசியமாகும். எங்களுடைய உழைப்புப் படையணியில் 15% மான தொழில்சார் உழைப்புத்தான் இருக்கிறது. 85% பயிற்றப்பட்ட, பயிற்றப்படாத, பகுதியளவில் பயிற்றப்பட்டதாகவே இருக்கின்றது. உதாரணமாக வங்கியை நெறிப்படுத்துவதற்காக அந்தத்துறையின் தோ்ச்சி பெற்ற முகாமையாளர் ஒருவர் இல்லாவிட்டால் சாதாரண ஊழியர்களைக் கொண்டு வங்கியை நடாத்திச் செல்ல முடியாது. தொழில்சார் உழைப்பினால் தான் ஏனையவர்களின் சேவை உறிஞ்சப்படுகிறது. மருத்துவர், பொறியியலாளர் போன்ற தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அதனால் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தொழில்சார் உழைப்பு நாட்டை விட்டுச் செல்வதற்காக அழுத்தம் கொடுக்கப்படுகின்ற காரணிகளை நீக்க வேண்டும். நாட்டை நெறிப்படுத்துவது குற்றச் செயல் புரிபவர்கள் என்றால் தொழில்சார் ஊழியரில் பலனில்லை என்ற உணர்வு தோன்றுகிறது. அதனால் “நாங்கள் இந்த நாட்டுக்கு அவசியமான மனிதன்” என்ற மனோபாவத்தை உருவாக்கவேண்டும். நாட்டை விட்டுச் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதைச் சோ்ந்தவர்களாவர். தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இல்லாமையினாலே அவர்கள் போகிறார்கள். நாங்கள் அவர்களிடம் கூறுவது “உங்களின் பிள்ளைகளுக்கு இந்த நாட்டை நம்பிக்கையான நாடாக மாற்றுவோம்” என்ற நம்பிக்கையை உருவாக்குவோம். மூன்றாவதாக அந்த தொழில்வாண்மையாளர்கள் தமது அறிவையும், பணியையும், முறைப்படி ஈடேற்றிக் கொள்வதற்கான மதிப்பீடு நிலவவேண்டும்.

தொழில்வாண்மையாளர்களின் சம்பளத்திலிருந்து 36% வரியும் எஞ்சிய பணத்தொகைக்காக சாமான்களை வாங்கும்போது மீண்டும் 18% வரியும் விதிக்கப்படுகிறது. மாதத்தின் இறுதியில் வேலை செய்திருப்பது எங்களுக்காக அல்ல என எண்ணத்தோன்றுகிறது. அப்படி எடுத்தால் பரவாயில்லை. ஆனால் அவ்வாறு எடுக்கின்ற பணத்திற்கு என்ன நடக்கிறது? ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வதற்காக வரவு செலவில் ஒதுக்கிக் கொண்ட பணத்தொகை போதாதென மேலும் 2000 இலட்சம் ரூபாவை ஒருக்கிக் கொள்கிறார்கள். இந்த இரண்டு மாதங்களுக்காக குறைநிறப்பு மதிப்பீடொன்றினைக் கொண்டு வந்து தோ்தலுக்காக 875 கோடி ரூபாவை ஒதுக்கிக் கொள்கிறார். இளைஞர் சேவைகள் மன்றத்திடமிருந்து 400 மில்லியன் ரூபாவை அமைச்சரவை கேட்டது. இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தமது சம்பளத்திலிருந்து வெட்டிக்கொள்கின்ற பணத்தை விரயமாக்குகிறார்கள், திருடுகிறார்கள். அமைச்சர்களின் வீடுகளில் லயிற் பில் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவாகும். டீசல் விலை அதிகரித்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் டீசல் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவை அதிகரித்துக்கொண்டார்கள். தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அந்த ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளவில்லை. பிரஜைகள் மீது சுமை வருகின்றது. தமது வரிப்பணத்திற்கு என்ன நடக்கின்றதென்பதை பிரஜைகள் கண் கூடாகவே பார்க்கிறார்கள். தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் அந்த வரித்தொகையை முறைப்படி செலவிடுதல் பற்றிய வெளிப்படைத்தன்மையை பிரஜைகளுக்கு காட்டுவோம். அதைப்போலவே இந்த வரிகளை கட்டாயமாக குறைப்போம்.

எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் கொண்டுள்ள சாத்திய வளங்களை கண்டறிய வேண்டும். எங்களிடம் கனிய வளங்கள் இருக்கின்றன. மூலதனம் இல்லாவிட்டால் நாங்கள் மூலதனத்திற்காக அழைப்பு விடுப்போம். தொழில்நுட்பம் இல்லாவிட்டால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பிக்க தயார். நாங்கள் இயற்கை வளங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தை திட்டமிட வேண்டும். கிராமிய மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக கிராமத்தில் இருக்கின்ற சாத்திய வளங்களை இனங்காண வேண்டும். எமது நாட்டின் இடஅமைவின் பேரில் எங்களுக்கு சிறந்ததொரு பொருளாதாரத்திற்கு செல்வதற்கான இயலுமை நிலவுகின்றது. கப்பற்துறை கைத்தொழில் மற்றும் கப்பற் போக்குவரத்து பற்றி கவனம் செலுத்தியிருக்கிறோம். சுற்றுலாத் தொழிற்றுறையில் பாரிய சாத்தியவளம் நிலவுகிறது. அதைப்போலவே எமது மனித பலத்தை முன்னேற்றக்கூடியதாக இருக்கின்றது. 2030 இல் உலகிற்கு 45 மில்லியன் மென்பொருள் பொறியிலாளர்கள் அவசியமாகின்றனர். அந்த உலகில் கேள்வி உருவாகின்ற 45 மில்லியன் ஒரு சதவீதத்தை நாங்கள் கைப்பற்றிக்கொள்வது என்பதன் அடிப்படையிலேயே இந்த மனித வளத்தை முன்னேற்ற வேண்டியுள்ளது. முன்னேற்றமடைந்த மனித உழைப்புச் சந்தையை கைப்பற்றிக் கொள்வது பற்றி கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கிறோம். உணவு பாதுகாப்பில் விவசாயத்துறை மீது பாரிய கவனம் செலுத்தப்பட முடியும். இந்த பக்கங்கள் பற்றி நன்றாக சிந்தித்து மிகவும் சிறப்பாக முகாமை செய்து நெறிப்படுத்தினால் சிறந்த பொருளாதார நன்மைகளை அடைவதற்கான இயலுமை நிலவுகிறது. எல்லா விதத்திலும் வளம் நிறைந்த நாட்டை, உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டை, சமூக மனோபாவங்களில் வளமான நாட்டை உருவாக்குவது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு. அதற்காக ஒன்றாக மல்லுக்கட்டினால் ஒன்றாக இடையீடு செய்தால் எம்மால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். எமக்கு மிகச் சிறந்த வாய்ப்பொன்று உருவாகியிருக்கிறது. அதற்கான பாதையை திறந்துகொள்ள வேண்டும். பிற்போக்குவாத பாசறையை தோற்கடிக்க வேண்டும். முற்போக்கான பாசறையை வென்றெடுக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசோ்வோம்.

Bank-And-Finance-Matara

“சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவருமே அன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் இருந்தார்கள்.”
-வங்கி மற்றும் நிதியொன்றியத்தின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் தில்ஷான் ஷாமிகர-

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்ததாகக்கூறுகின்ற இயலுமையும் அறிவும் 2015 – 2019 காலத்தில் இருந்திருப்பின் நாடு இந்த நிலமைக்கு வீழ்ந்திருக்க மாட்டாது. வெளிநாட்டுக்கடன் பிணைமுறிகளை பாரியளவில் எடுத்தவர் அவரே. தூரநோக்கற்ற வகையில் செயலாற்றி நாட்டை இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டவரும் அவரே. ராஜபக்ஷாக்களும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்று சோ்ந்து அரச நிறுவனங்கள் அனைத்திலும் உறவினர்களை நிரப்பி நட்டம் அடைகின்ற நிறுவனங்களாக மாற்றியவரும் அவர்களே. ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாசவிடம் இருப்பதாகக்கூறுகின்ற பொருளாதார ஒஸ்தார்கள் அனைவரும் அன்று ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து இந்த நிலைமைக்கு இழுத்துப்போட்டு 2048 இல் நாட்டை அபிவிருத்தி செய்வதாக இப்போது கூறுகிறார்கள்.

2016 இல் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை திவயின செய்திதாளில் பிரதான செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது. 2020 இல் நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் கூறுகின்ற கற்பனை கதைகள் இந்த நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் இனிமேலும் நம்பபோவதில்லை. அவர்களால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பொதுமக்கள் அவர்களை நிராகரித்துவிட்டார்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரமாக முதலீட்டாளர்களை வரவழைத்துக்கொள்ளக்கூடிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள நாங்கள் அனைவரும் அணிதிரண்டு விட்டோம். அது வேறு எவருமல்ல. செப்டெம்பர் 21 ஆம் திகதி நிச்சயமாக அதிகாரத்திற்கு கொண்டு வருகின்ற அநுர திசாநாயக்காவை முதன்மையாக கொண்ட தேசிய மக்கள் சக்தியாகும்.

Bank-And-Finance-Matara

“பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக திசைகாட்டின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முன்னணி வகித்து செயலாற்றும்”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி-

இதுவரை நிலவிய அரசாங்கங்களின் ஒட்டுமொத்த செயற்பாங்கு காரணமாக இன்றளவில் ஏறக்குறைய இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில்முயற்சிகள் மூடப்பட்டுள்ளன. அந்த தொழில் முயற்சியாளர்கள் பற்றிய விரிவான புரிந்துணர்வும் வங்கி மற்றும் நிதித்துறையைச் சோ்ந்த உங்கள் அனைவருக்குமே இருக்கிறன்றது. நீங்கள் இதுவரைகாலமும் தொழில் முயற்சியாளர்கள் போன்றே கிராமப்புற வறிய மக்களுடனும் நிதிசார் துறையில் பெற்ற அனுபவங்கள் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப அத்தியாவசியமானவையாகும். அமைச்சரின் வாயிலிருந்து வெளிப்படுகின்ற வசனத்தை சுற்றறிக்கைகளாக கருதி செயலாற்ற வேண்டிய நிலை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரச வங்கிகளுக்கு ஏற்பட்டது. எனினும் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் அத்தியாவசியமான துறைகளுக்கு முதன்மையான நிதிசார் வசதிகள் வழங்கப்படும். தோழர் லால்காந்த அமைச்சர் என்ற வகையிலும் நான் பிரதியமைச்சர் என்ற வகையிலும் குறுகிய காலத்திற்கு செயலாற்றிய சிறு கைத்தொழில்கள் அமைச்சின் பெருமளவிலான அனுபவங்களை அதற்காக ஈடுபடுத்துவோம். தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குகையில் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை காரணமாக பாரியளவில் உயர்வடைந்த வட்டி வீதம் 2045 வரை நீண்ட கால ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

எனினும் அந்த நிலைமையிலிருந்து விடுபட்டு தேசிய திட்டமொன்றின்படி தொழில் முயற்சியாளர்களை நெறிப்படுத்துவதற்காக குறைந்த வட்டிக்கு கடன் வழங்குகின்ற அபிவிருத்தி வங்கியொன்றை நாங்கள் நிறுவுவோம். தொழில்முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக தாபிக்கப்பட்டிருந்த தேசிய அபிவிருத்தி வங்கிக்கு என்ன நோ்ந்தது. அந்த வங்கியை அரசியல் தலையீடுகளுக்கு இரையாக்கி முற்றாகவே சீர்குலைத்தார்கள். கோப் குழுவின் தவிசாளர் என்ற வகையில் நான் செயலாற்றிய காலத்தில் அந்த விசாரணைகளுக்காக அழைப்பித்த உத்தியோகத்தர்கள் இந்த இடத்திலும் இருக்கக்கூடும். அமைச்சரின் பிடியில் அகப்பட்ட உத்தியோகத்தர்களின் அழுத்தம் பற்றி எமக்கு தெரியும். எனினும் எங்களுடைய அரசாங்கமொன்றின் கீழ் இந்த நிதி ஒன்றியத்தில் இருக்கின்ற தொழில்வாண்மையாளர்களிடமிருந்து தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். நாட்டின் பொருளாதாரத்தின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியாக தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியம் முதன்மையாக செயலாற்றும். ஏற்கெனவே 21 மாவட்டங்களில் இந்த நிதி ஒன்றியத்தின் கருத்தரங்குகள் நடாத்தப்பட்டிருந்தன. அந்தந்த மாவட்டத்திற்கு அவசியமாகின்ற தொழில் முயற்சிகளுக்கு உயிரளிக்கையில் நிதிசார் வசதிகளை வழங்க உங்களின் கருத்துக்கள் அடிப்படையாக பயன்படுத்திக் கொள்ளப்படும். மக்கள் மீது கூருணர்வு கொண்டதாக செவிசாய்த்து நாட்டை கட்டியெழுப்புகின்ற மறுமலர்ச்சிப் பயணத்திற்காக அனைவரினதும் பங்கேற்பினை எதிர்பார்க்கிறோம்.

Bank-And-Finance-Matara

“நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற மாயாஜால வித்தை அரசியலே என உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள்”
-தேசிய மக்கள் சக்தி பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த-

இன்றளவில் எதிரான குழுக்கள் முன்னெடுத்து வருகின்ற பொய் பிரச்சாரங்கள் மத்தியில் முதன்மையாக அமைவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்று அதிகாரத்திற்கு வந்தால் மக்களின் சேமிப்புக் கணக்குகளிலுள்ள பணத்தை பறிமுதல் செய்யுமென்பதாகும். மாபெரும் மாற்றமொன்றுக்காக மக்களை அணிதிரட்டிக் கொண்டிருக்கும்போது எமக்கெதிராக கட்டியெழுப்பப்படுகின்ற பொய்யான பிரச்சாரங்களுக்கும் குறைகூறல்களுக்கும் பதிலளிக்கவும் வேண்டியுள்ளது. ஒரு கால கட்டத்தில் பேராசிரியர் ஒருவர் கூட ஊழல் மோசடிகளால் ஒரு நாடு அபிவிருத்தியடையுமாயின் பரவாயில்லை எனக்கூறினார். அவர்களின் அந்த வழிகாட்டல்களின் அனுசரணையையும் பெற்றுக்கொண்டு சென்ற பயணத்தில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த பின்னர் ஊழல் மோசடிகள் பற்றிய பாரிய எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்திலே ரணில் விக்கிரமசிங்கவும் அவருடைய குழுவும் புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டி நாட்டை கட்டியெழுப்பியது தாமே எனக்கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னெடுத்து வருகின்ற இந்த வேலைத்திட்டம் தடைப்பட்டால் நாடு மீண்டும் படுகுழிக்குள் விழுவதாக பாரிய ஒரு பயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொருளாதார தரவுகள் என்பது அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அமைச்சர்களின் அவசியப்பாட்டுக்கு அமைவாகவன்றி ஜனநாயக ரீதியாக பொருளாதார துறையில் இடையீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதனூடாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மாயாஜால வித்தை அரசியலே என்பதை உலக வங்கி பிரதிநிதிகள் கூட ஏற்றுக்கொண்டார்கள். இது பற்றி வலியுறுத்திக்கூறுவது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அந்த அலுவல்களை மேற்கொள்வதற்கான இயலுமை நிலவுவது தேசிய மக்கள் சக்திக்கு மாத்திரமே. பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வதில் மேலும் பல காரணிகள் தாக்கம் ஏற்படுத்துவதோடு நிதித்துறை தனித்துவமான முக்கியத்துவத்தை வகிக்கின்றது. பணம் குட்டிப்போடுகின்ற இடங்களில் முதலீடு செய்வதை விட தேசிய அவசியப்பாட்டின் பேரில் உற்பத்தித்துறையில் ஈடுபடுத்துவதை ஒரு கொள்கையாக அமுலாக்க வேண்டும். அது ஒரு அரசியல் தேவையாகும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் தனியார் மற்றும் அரச வங்கிகள் ஒன்று சோ்ந்து ஒத்துழைப்புடன் செயலாற்றும். அரச மற்றும் தனியார் என்ற வகையில் பிரிந்து முரண்பாட்டு நிலைமையுடன் பேணி வரமாட்டாது. நாட்டுக்கு அவசியமான வலிமைமிக்க நிதிசார் தொகுதியொன்றுக்காக பலம்பொருந்திய அரசதுறையின் நிதிசார் முறைமையொன்றின் வழியுரிமை உறுதிப்படுத்தப்படுகின்றது. தொழில் முயற்சியாளர்கள் வசம் உள்ள ஆதனங்களை பிணையாக வைத்துக்கொண்டு அவர்களின் கழுத்தை நெரித்துக்கொண்டு கடன் கொடுப்பதற்கு பதிலாக அரசு இடையீடு செய்து அவசியப்பாட்டிற்கிணங்க நிதி வழங்குதல் மேற்கொள்ளப்படும். நிதிசார் துறை, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்பினர்களும் ஒன்று சோ்ந்து நிதித்துறையின் செயற்பொறுப்பினை மறுமலர்ச்சி யுகமொன்றுவரை அணிதிரட்டும். எதிரி பதற்றமடைந்து மேற்கொண்டு வருகின்ற பிரச்சாரங்களுக்கு ஏமாந்து விடவேண்டாம்.

Bank-And-Finance-Matara

“தொழில்வாண்மையாளர்கள் அனைவரினதும் பொறுப்பு அரசியல் மாற்றத்தின் பங்காளிகளாக மாறவேண்டியதே”
-தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் வசந்த சமரசிங்க-

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி ஒன்றியத்திற்கு இந்த நாட்டை கட்டியெழுப்புவதில் பாரிய செயற்பொறுப்பினை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது. அதைபோலவே எதிர்வரும் நாட்களுக்குள் ஜனாதிபதி தோ்தலுக்காக பாரிய செயற்பொறுப்பினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த நாட்டை மறுமலர்ச்சி யுகமொன்றுக்கு எடுத்துச் செல்வதிலான அடிப்படை வெற்றியாக தேசிய மக்கள் சக்தியின் அபேட்சகர் தோழர் அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உங்களை சந்திக்க வருகின்ற வாடிக்கையாளர்களை விழிப்புணர்வூட்டுவதற்கான பொறுப்பு உங்கள் அனைவரிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை உள்ளிட்ட மக்களின் பகைவர்கள் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக் கொண்டு உயர்நீதிமன்றத்தைக்கூட கீழடக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வெளியில் அவர்கள் அந்த கதைகளை கூறினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி நேரிடும் என்பதால் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மறைவிலிருந்து கொண்டு தமது வங்குரோத்து நிலைமையை மறைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். ரணில் அடித்த கேம் எல்லாமே முடிந்து விட்டது. சுயேட்சை வேட்பாளராக முன்வந்து ஏதோ செய்ய முனைகிறார்.

தோ்தலைக் கண்டு அஞ்சி அவர்கள் அடிக்கின்ற இந்த கேம்களை தோ்தல் நெருங்கும்போது மேலும் உயர்ந்த அடுக்கிற்கு கொண்டு வந்து மக்களை குழப்பியடிக்க முயற்சி செய்கிறார்கள். தொழில்வாண்மையாளர் அனைவருக்கும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்பு இந்த அரசியல் மாற்றத்தின் முனைப்பான பங்காளிகள் என்ற வகையில் பங்களிப்புச் செய்வதாகும். உங்கள் சேவை நிலையத்தில் மாத்திரமல்ல ஊரிலும் மக்களை விழிப்புணர்வூட்டி குழப்பநிலையிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக பாரிய பணியை ஆற்றவேண்டியுள்ளது. உண்மையான அரசியல் மாற்றமொன்றின் தொடக்க நிலை அடுத்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற வேண்டியுள்ளது. எங்களுடைய செயற்பொறுப்புப் பற்றி விசேட கவனத்துடன் தொழில்வாண்மையாளர்கள் என்ற வகையில் சமூகத்தில் நிலவுகின்ற அங்கீகரிப்பினையும் எதிர்காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக பிரயோகிப்போம்.