(-Colombo, August 12, 2024-)
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் பற்றிய மீளாய்வு செய்த அந்த பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் இலங்கைக்கு உதவி புரிவதற்காக அந்த அமைப்பின் தயார் நிலை பற்றியும் விடயங்களை எடுத்துரைத்தார்கள்.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டிருந்தார்.