-Colombo, January 19, 2024-
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா பீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லால்காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் மேலும் கலந்துரையாடப்பட்டது.