Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றுவதே எமது பொறுப்பு” -மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க-

-Colombo, November 13, 2023-

கார்த்திகை வீரர்களை இழந்து கழிந்துசென்ற 34 வருடங்களில் எமது நாடு முழுமையாகவே அயோக்கியத்தனத்திற்கு இரையாக மாறியுள்ளது. பொதுமக்களின் ஆதனங்களை தமது எண்ணப்படி அனுபவிக்க அவசியமான அரசியல் அயோக்கியத்தனம் உருவாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நாசமாகிய சமூகமொன்று உருவாகி இருக்கின்றது. இந்த நிலைமை தற்செயலாக ஏற்பட்டதொன்றல்ல. அரசியல் அயோக்கியத்தனமும் குற்றச்செயல்களும் நிறைந்த சமூகமொன்று உருவாகியமை மற்றும் பொருளாதாரரீதியாக நாடு முற்றாகவே சீரழிந்தமைக்கு ஏதுவாக அமைந்த பலம்பொருந்திய அடியெடுப்பு 1977 இல் அதிகாரத்திற்குவந்த ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினாலேயே தொடங்கப்பட்டது. அதுவரை நிலவிய அனைத்துவிதமான சமூக நிறுவனங்களையும் முற்றாகவே சிதைத்து, சனநாயகத்தை முழுமையாகவே வாரிச்சுருட்டி, இலக்கியவாதிகள்மீது தாக்குதல் நடாத்தி, தொழிற்சங்க இயக்கத்தை முற்றாகவே அடக்கி, தேர்தலை நடத்தாமல், தேர்தல்களை பிற்போடுகின்ற தில்லுமுல்லுகளை கடைப்பிடித்து வந்தார்கள். ஜே.ஆர். ஜயவர்தனவின் மேல்மட்டத்திலான மேற்படி செயற்பாடுகளுடன் அடி மட்டத்திலான ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தையும் அயோக்கியர்களின் கைகளுக்கு எடுத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். பெஸ்டஸ் பெரேரா, அதிகாரி போன்ற காடையர்களால் பாராளுமன்றம் நிரம்பிவழியத் தொடங்கியது. மனிதர்களின் சமூக நன்மதிப்பு, ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த ஈடுபாடுகள் சுக்குநூறாக்கப்பட்டன. மனிதனுக்கு மனிதன் என்றவகையில் இருந்த கௌரவத்தை நாசமாக்கினார்கள். பெரும்பாலானவர்கள் ஜே.ஆர். ஜயவர்தனவின் இந்த வெறித்தனமான ஆட்சிக்கு, ஆயோக்கியத்தனமான தேவைக்கு கட்டுப்பட்டு வாழ ஆரம்பித்தார்கள். அதனை யதார்த்தமாக எற்றுக்கொள்ள பலர் தூண்டப்பட்டார்கள்.

எனினும் இந்த அழிவுமிக்க பயணத்திற்கு எதிராக பொது சமூகத்தின் நன்மதிப்பிற்காக மக்கள் விடுதலை முன்னணி முன்வந்தது. கொடூரத்தை அநியாயத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் அணியும் மறுபுறத்தில் சமூக நன்மதிப்பு, சமூக நீதி, சனநாயகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் விடுதலை முன்னணியும் என்றவகையில் 1980 இன் நடுப்பகுதியளவில் சமூகம் கடுமையான பிளவினை நோக்கி பயணித்து இருந்தது. பொதுமக்கள் மனித மாண்பிற்காக, தமது சுதந்திரத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து வந்தார்கள். இதோ இந்த முரண்பாடு இறுதியில் கருத்தியல்சார்ந்த முரண்பாட்டுக்குப் பதிலாக, மேடைசார்ந்த மோதலுக்குப் பதிலாக, ஆயுதமேந்திய மோதலாக மாறியது. ஜே. ஆர். ஜயவர்தனவின் சர்வாதிகார வெறிக்கு எமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் இரையாக மாறினார்கள். மக்கள் விடுதலை முன்னணி கட்டியெழுப்பிய, பொதுமக்களின் ஆன்மீகத்தை அழைத்து வந்த எமது கட்சியின் சிருஷ்டிகர்த்தா தோழர் றோஹண விஜேவீர உள்ளிட்ட பல போராட்ட சகபாடிகள் 1989 நவெம்பர் 13 ஆந் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். எமது நாட்டையும் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் அந்த பேரவலம் மூலமாக எடுத்துச்சென்ற பயணத்திற்கு எதிராக சமூக நீதி, நியாயம், சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்செய்த எமது சகோதர சகோதரிகளை இன்று நாங்கள் நினைவு கூறுகிறோம்.

இன்று எமது சமூகம் பாரிய மாற்றமொன்றைக் கோரிநிற்கிறது. அதற்கான தேவை நிலவுகின்ற, நோக்கு இருக்கின்ற, நேர்மையுள்ள, தாக்குப்பிடிக்கும் ஆற்றல் நிறைந்த, பொறுமையுள்ள அமைப்பினால் மாத்திரமே இந்த மாற்றத்தைச் செய்யமுடியும். வெறுமனே ஆட்களை மாற்றுவதால் அல்லது அரசாங்கத்தை மாற்றுவதால் இதனை சாதிக்க இயலாது. இந்த இயக்கத்திற்கு நேர்மை, தெம்பு, புதிய அரசியல் நோக்கு, அவசியமான பொறுமை, சமூக நீதி பற்றிய எண்ணம், மனித மனங்களுக்கு நெருக்கமான ஆன்மீகம் என்பவற்றை இந்த இயக்கத்திற்கு எவ்வாறு அழைத்து வருவது? நூல்களால், இலக்கியத்தால் மாத்திரம் அவ்வாறான இயக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாது. இலங்கையில் மாத்திரமன்றி உலகம் பூராவிலும் சமூக மாற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்த மனிதர்கள் பற்றிய முறையான கற்றாராய்தல் மூலமாக அதனை சாதிக்க முடியும். நான் இவ்வாறு கூறுவது சமூக இயக்கமென்றவகையில் கட்டியழுப்பப்பட்டு வருகையில் 88 – 89 பற்றி ஏன் நினைவுகூறப்படுகின்றது? இந்த சமூக மாற்றத்தை செய்யவேண்டுமாயின் இந்த ஆன்மீகத்தைக்கொண்ட மனிதர்கள் தேவை. இந்த மேடையில் இருக்கின்ற என்னையும் உள்ளிட்ட தொலைக்காட்சியில் காண்கின்ற, அதன் காரணமாகவே சமூகத்தில் அங்கீகாரம் நிலவுகின்ற பலரும் இந்த இயக்கத்தின் பின்னணியில் பெருந்தொகையினராக இருக்கிறார்கள். இன்றும் இந்த மேடையின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கின்ற தோழர்களின் அர்ப்பணிப்பின் பெறுபேறு ஆகும். அர்ப்பணிப்பு தியாகத்தின் ஊடாக சமூகத்தை மாற்றியமைக்கத் தயாராகின்ற மக்கள் கட்டியெழுப்பட்டுள்ளமை தற்செயலானதொன்றல்ல. எமது கட்சியின் சிருஷ்டிகர்த்தாவை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தோழர்கள் எமக்கு அந்த முன்மாதிரியைக் கொடுத்துள்ளார்கள். அந்த கடந்தகாலத்தை மீண்டும்மீண்டும் அசைபோட்டுப்பார்த்து இந்த திட்டவட்டமான சமூக மாற்றத்திற்கு தயாராகி வருகின்ற தருணத்தில் முன்பிருந்ததைவிட அதிகமாக அந்த ஆன்மீகத்தை எமது இயக்கத்தில் கொண்டுவரவேண்டும். அவ்வாறின்றி இடிபாடுகளால் அமைத்துக்கொள்கின்ற அரசாங்கத்தால் அல்லது இயக்கத்தினால் இந்த மாற்றத்தைச் செய்யமுடியாது.

வரலாற்றுடன் பின்னப்பிணைந்த ஆன்மீக நூலில் இருந்து விடுபட்டு இந்த மாபெரும் சமூக மாற்றத்தைச் செய்துவிட முடியாது. பாய்ந்து வருகின்ற அந்த ஆன்மீகத்தை மென்மேலும் பலப்படுத்தி முன்நோக்கி கொண்டுசெல்வதன் மூலமாக மாத்திரமே சம்பந்தப்பட்ட பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய ஆன்மீகத்தைக்கொண்ட சமூக இயக்கமொன்றையே மக்கள் விடுதலை முன்னணியைச்சேர்ந்த நாங்கள் கட்டியெழுப்புவோம். சமூக மாற்றத்தை ஆழமாக ஏற்படுத்த வேண்டுமாயின் இறந்தகாலத்தின் ஆன்மீகத்தை மூடி துண்டாடுவதன் மூலமாகவன்றியே அதனை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். நாங்கள் அச்சமின்றி கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயார். 88 – 89 இல் இடம்பெற்ற தவறுகளை நாங்கள் பல தடவைகள் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதைப்போலவே ஆயிரக்கணக்கான தடவைகள் அதன் பண்புகளை ஈர்த்துக்கொள்ளத் தயங்காத இயக்கமென்றவகையிலேயே மக்கள் விடுதலை முன்னணி முன்நோக்கி நகரும். கடந்த இரண்டு தசாப்த காலத்திலும் எமது கட்சி கடினமான காலங்களை கடந்து வந்தது. ஒருசில அரசியல் தந்திரோபாங்கள் எமக்கு தோல்வியைத் தந்தன. அந்த தவறுகள் அரசியலில் மாத்திரம் தங்கியிருக்கப் போவதில்லை. கட்சிக்குள்ளேயும் ஊடுருவிச் செல்லும். 2004 இல் ஒருசில அரசியல் தந்திரோபாங்கள் தவறியமை எங்கள் இயக்கத்திற்குள் கசிவடைந்தது. அதனால் இயக்கத்திற்குள் பிளவுகளை தோற்றுவித்தன. மீண்டும் 2012 அளவில் இடம்பெற்ற தோல்விகளை விளங்கிக்கொள்ள முடியாமல், தாக்குப்பிடிக்க முடியாமல், வெற்றிகள் பற்றிய நம்பிக்கையின்றி மேலும் பல பிளவுகள் ஏற்பட்டன. இவ்விதமாக கட்சிக்குள் பலவிதமான நெருக்கடிகளும் முரண்பாடுகளும் உருவாகி இரண்டு தசாப்தங்கள் கழிந்தன. இக்காலத்தில் இருந்த ஒருசில தோழர்கள் தந்திரோபாயங்களில் மாட்டிக்கொண்டு எம்மை குற்றஞ்சுமத்தப்பட்டவர்களாக மாற்றினார்கள். அவர்களும் பங்கேற்று மேற்கொண்ட தீர்மானங்களுக்காக எம்மைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக மாற்றினார்கள். எதிரியால் கட்டியெழுப்பப்பட்ட குறைகூறல்களுக்கு ஒன்றாக பதிலளித்த ஒருசிலர் வெளியில் சென்று எதிரியின் குறைகூறல்களையே எம்மீது சுமத்தினார்கள்.

இந்த நிலைமைகள் உள்ளகத்தில் மாத்திரமன்றி சமூக அடுக்கிலும் வெளிப்படத் தொடங்கின. கடந்த தேர்தல் முடிவுகளில் 3% இற்கு குறைவடைந்தமை குறைகூறல்களுக்கும் ஏளனம்செய்தலுக்கும் காரணமாக அமைந்தன. உள்ளேயும் வெளியேயும் ஏற்பட்ட பாரிய அழுத்தங்களை தாங்கிக்கொண்டு கிடைகின்ற சிறிய வாய்ப்பினையேனும் வெற்றியாக மாற்றிக்கொள்ள தெம்பினைக் கொண்டு வந்தவர்கள் யார்? வெற்றி பற்றிய நம்பிக்கையுடன் இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பக் காரணமாக அமைந்தது இந்த இயக்கத்தில் இருக்கின்ற ஆன்மீகமாகும். தனித்தனி ஆட்களின் சிறப்பம்சங்கள் அல்ல, இடையறாமல் பாய்ந்துவர இயக்கத்தின் ஆன்மீகரீதியான பெறுபேறுகளே அதற்கான காரணமாகும். நிகழ்கால தலைமைக்குழுவின் வியத்தகு ஆற்றல் காரணமாக தற்போதுள்ள பெறுபேறு கிடைக்கவில்லை. இடையறாமல் பாய்ந்து வருகின்ற கார்த்திகை வீரர்களின் சமூக நீதி, சமூக நியாயம் பற்றிய பொறுப்புகளை கைவிடாமையின் பெறுபேறு தற்போது உருவாகி இருக்கின்றது. அவை சாதாரண மனிதர்களால் சாதிக்கக்கூடிய விடயங்களல்ல. அத்தகைய இயக்கமொன்றில் உள்ளடங்குகின்ற மனிதர்களால் மாத்திரம் இத்தகையவற்றை சாதிக்க முடியும். சிறியதொரு வெற்றி கிடைக்காதவிடத்து கட்சியை மாற்றுகின்ற, அழுதுபுலம்புகின்ற நாட்டில் பிரத்தியேக தனித்துவங்களைவிட இயக்கத்திற்குள் இருக்கின்ற சாரம் உறுதுணையாக அமைந்துள்ளது. அந்த சாரம் இந்த கட்சி கட்டியெழுப்பப்பட்ட நாளில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சமூக அடுக்கில் தோன்றியுள்ள பாரிய எதிர்பார்ப்புகளால் வசீகரிக்கப்பட்டு சமூக இயக்கமொன்றினால் முன்நோக்கி நகர முடியாது. சமூகத்தின் நம்பிக்கை, கௌரவம் ஒன்று சேரச்சேர மீண்டும்மீண்டும் அதில் பொதிந்துள்ள சாரத்தை உறிஞ்சிக் கொள்ளுமாறு எமக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றது. நாங்கள் அந்த சாரத்தை உறிஞ்சிக் கொள்கிறோம்.

தலைவர்கள் மேல் மட்டத்தில் இருக்கின்ற மற்றும் சமூகத்தை அடிமைத்தனத்திற்கு இலக்காக்கிய நிலைமைக்கிணங்கவே அவர்கள் சமூகத்தை ஒழுங்கமைக்கிறார்கள். அவர்களின் இருப்பு சமூகப் பாதக நிலைமைகளை ஒன்றுதிரட்டுவதாகும். அதற்கு முரணாக சமூக சாதகநிலைமைகளை ஒன்று திரட்டுதல், அனைவரும் ஒன்றுசேர்ந்து கூட்டாக வேலைசெய்கின்ற சமூகமொன்றை ஏற்பாடு செய்வதே எமது பொறுப்பாகும். ஒவ்வொருவரிடமும் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை விளங்கிக்கொண்ட கூட்டாண்மையே தேவை. அவர்கள் இனவாதத்தை கட்டியெழுப்புகிறார்கள். அளவுக்கதிகமாகவே அதன் வேதனைகளை அனுபவித்த ஒரு நாடாக இருந்தபோதிலும் இன்றும் அவர்கள் அதனையே ஒழுங்கமைத்து வருகிறார்கள். அதற்கு எதிராக நாங்கள் தேசிய ஒற்றுமையைக் கட்டிவளர்க்கிறோம். சமூகத்தை சாதகமான பண்புகளைக் கொண்டதாக ஒழுங்கமைப்பதன் மூலமாக நாங்கள் சாதகமான மாற்றமொன்றை செய்துவருகிறோம். அதற்காக ஆக்கமுறையான பண்புகளைக்கொண்ட ஆட்சியொன்றைக் கட்டியெழுப்பவேண்டும். தெற்கின் மக்கள் எம்மீது கவனஞ் செலுத்தியுள்ள அளவுக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் சமுதாயத்தின் கவனத்தை வென்றெடுப்பதில் நாங்கள் வெற்றிபெறவில்லை. அதனால் வேகமாக இனவாதத்தை நிராகரிக்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை சமத்துவமான உரிமைகளின் பேரில் ஒழுங்கமைக்கின்ற முதன்மைப் பணியை நாங்கள் ஈடேற்றவேண்டும். அவ்வாறு செய்யாமல் அரசாங்கத்தை அமைப்பதில் பலனில்லை. அவர்கள் சாதிபேதத்தினால் சமூகத்தை ஒழுங்கமைக்கிறார்கள். அதைப்போலவே தொழில்முயற்சி வர்க்கத்தினர் படுமோசமான ஊழல் பேர்வழிகளால் ஒழுங்கமைக்கப்படுகிறார்கள். உண்மையான கைத்தொழிலதிபர்களையும் தொழில்முனைவோரையும் ஒழுங்கமைக்க அவர்கள் முன்வருவதில்லை. உண்மையான கைத்தொழிலதிபர்களையும் தொழில்முனைவோரையும் நாங்கள் ஒழுங்கமைக்க வேண்டும். நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள சமூக மாற்றத்தின் பருப்பொருளாக அமைவது சாதகமான பண்புகளைக்கொண்டதாக சமூகத்தை ஒழுங்கமைப்பதாகும்.

கூட்டான சமூக மாற்றத்தை மேற்கொள்வதற்கான பண்புகளை கார்த்திகை வீரர்களின் பண்புகளிலிருந்தே சேர்த்துக்கொள்ள முடியும். அந்த வீரர்களின் முன்மாதிரிகள் எமது ஆன்மீகத்திற்குள்ளே இருக்கின்ற அடையாளமாகும். இந்த அடையாளத்தை மறப்பதென்பது வெறுமனே ஐக்கிய தேசிய கட்சியாகவோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவோ அமைவதாகும். முன்பிருந்ததைவிட அதிகமாக அந்த ஆன்மீகம் எமக்குத் தேவைப்படுகின்றது. அதிகாரத்தை நெருங்கநெருங்க மிகவும் சாதகமான ஆன்மீகங்களை ஈர்த்தெடுத்த ஆட்களாகவும் இயக்கமாகவும் மாறவேண்டும். இந்த கார்த்திகை வீரர் ஞாபகார்த்தம் முன்னையவற்றைவிட முக்கியமானதாக அமையக் காரணம் அடுத்த கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தை எமது ஆட்சியில் நடாத்த எதிர்பார்த்துள்ளதாலாகும். பொதுவான ஆட்சியொன்றின்கீழ் இந்த பண்புகளை சமூகத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். இந்த சமூகம் பல தசாப்தங்களாக அரசாங்கங்களை நிறுவி சாதகமான சமூக மாற்றத்தை எதிர்பார்த்தது. எனினும் அந்த பல தசாப்தங்களாக ஏமாற்றப்படுதலுக்கு இலக்காகி நிர்க்கதிநிலைக்கு வீழ்ந்துள்ளது. ஏமாற்றத்தின் அடிமட்டத்திற்கே தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான மக்களை மீண்டும் ஏமாற்ற எமக்கு உரிமை கிடையாது. அந்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற ஆட்சியொன்றை உருவாக்கிட வேண்டுமாயின் கார்த்திகை வீரர்களின் ஆன்மீகம் எமக்குத் தேவை. அந்த மக்களை நாங்கள் நேர்மையாகவே நேசிக்கவேண்டும். அவர்களின் எதிர்பார்ப்புகளை அடைவதற்காக நாங்கள் இதயசுத்தியுடன் செயலாற்றுதல் வேண்டும். அதனை விடுத்து வெறுமனே வாக்குகளை பெற்றுக்கொள்கின்ற நோக்கம் மாத்திரம் எமக்கு கிடையாது. இதயத்தின் அடிமட்டத்தில் இருந்து உருப்பெறுகின்ற நேர்மையால் நாங்கள் கட்டிவளர்க்கப்பட வேண்டும்.

சமூக மாற்றத்தை செய்வதற்குப் பொருத்தமான இயக்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்பி இருக்கிறோமென்ற நம்பிக்கை எம்மிடம் இருக்கவேண்டும். சமூகத்திற்கு நாங்கள் வெறுமனே கனவுகளை, வார்த்தைகளைக் கொடுக்கக்கூடாது. “ஆசியாவின் அதிசயம்” போன்றவற்றை அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறுவது மாத்திரமே: நாங்கள் கூறுவதை செய்வோம். எனவே முன்னரைவிட தற்போது இந்த இயக்கத்திற்கு கூட்டுமனப்பான்மை அவசியமாகின்றது. அரசியல் வெற்றிக்குள் எமது பங்கினை கைப்பற்றிக்கொள்வதற்காக கட்டியெழுப்பக்கூடிய மனநிலையை இப்போதே கைவிடவேண்டும். வெற்றியில் எங்கேயாவது தமது தனிப்பட்ட பங்கு கிடையாது. அங்கு எல்லா இடத்திலும் இருப்பது எமது கூட்டான பங்காகும். நாங்கள் எமது தனிப்பட்ட எல்லையைக் குறித்துக்கொள்வதன் மூலமாகவன்றி மாபெரும் மனித சமூகத்திற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய ஆற்றல்களும் திறமைகளும் இருக்கின்ற பகுதிகளை உறிஞ்சிக்கொள்வதன் மூலமாகவே வெற்றியை அடைய முடியும்.

நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்திலேயே கார்த்திகை வீரர் ஞாபகார்த்தத்தை நடாத்துகிறோம். சமூக மாற்றமொன்றிற்கான பெருங்குரல் நாட்டுக்குள்ளே மாத்திரமன்றி ஐக்கிய அமெரிக்காவில் இருக்கின்ற இலங்கையர் மத்தியிலும்கூட நிலவுகின்ற தருணமாகும். அந்த இலங்கையர்கள் மிகவும் உயர்வான வாழ்க்கையைக் கழித்தாலும் எம்மீது பாரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளார்கள். அந்த எதிர்பார்ப்புடன் சூதாட, அவற்றை அதிகார சூதாட்டத்திற்கு எதிரீடு செய்வதற்கான உரிமை எங்களுக்கு இருக்கின்றதா? அந்த எதிர்பார்ப்புகள், அதிகார சூதாட்டத்துடன் பேரம்பேசுகின்ற இடத்திற்கு கொண்டுவர எமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. எமது பொறுப்பு அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக மாற்றுவதாகும். இயக்கத்தை சரிவர கட்டியெழுப்பினால் மாத்திரமே அதனை யதார்த்தமாக மாற்றமுடியுமென நான் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல இயக்கமொன்று எம்மிடம் இருக்கின்றதென்பதை நாமறிவோம். அந்த தெம்புடன் எதிரியின் முன்னால் இந்திரகீலம்போல் நிலைதளராமல் இருக்க இயக்கத்தின் பலத்தினாலேயே முடியும். இதுதான் உயிர். அதைனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தேசிய மக்கள் சக்தி என்றவகையில் பொதுமக்களை ஒழுங்கமைக்க நாங்கள் பாரிய பணியை மேற்கொண்டுவருகிறோம். அந்த இயக்கத்திற்கு ஆன்மீகத்தை அழைப்பிப்பதற்கான அதிகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும். அதற்காக கார்த்திகை வீரர்களை முன்னொருபொதும் இருந்திராதவகையில் எங்கள் இதயத்திற்குள் சேர்த்துக்கொள்வோம். முன்னொருபோதும் இருந்திராத வகையில் அவர்களின் சாரத்தை நாங்கள் எமது ஆன்மீகத்துடன் சேர்த்துக்கோள்வோம்.