(-Colombo, August 17, 2024-)
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (17) முற்பகல் வெள்ளவத்தை காலிவீதி மஹா சங்க சபை செயலாளர் அலுவலகத்தில் இலங்கை அமரபுர மஹாக சங்க சபையின் உபத்தலைவர் அதிசங்கைக்குரிய மாகல்லே நாஹித மஹா நாயக்க தேரரை சந்தித்தார்.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமை பற்றி அவரை உள்ளிட்ட மஹா சங்கத்தினருடன் கலந்துரையாடிய தோழர் அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான அவர்களின் நல்லாசியை பெற்றுக்கொண்டார்.
இந்த தருணத்தில் இலங்கை மஹா சங்க சபையின் உதவி பதிவாளர் கலைமுதுமாணி சங்கைக்குரிய அஹங்கம மைத்திரிமூர்த்தி நாயக்க தேரர், அமரபுர சத்தம்மயுத்திக மாத்தறை தரப்பின் தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்க கலைமுதுமாணி சங்கைக்குரிய பெரகம விமலபுத்தி நாயக்க தேரர், இரத்மலான ஸ்ரீ போதிருக்காராமாதிபதி கலைமுதுமாணி சங்கைக்குரிய இரத்மலானை ராஹுல நாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் இணைந்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் சுனில் ஹந்துன்நெத்தி இதன்போது இணைந்துகொண்டிருந்தார்.