Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“எமது நாட்டைக் கட்டியெழுப்புகின்ற முதலாவது படிமுறையாக அமைவது இந்த அரசியல் அதிகாரத்தை மாற்றியமைப்பதாகும்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

(தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு – கனடாவின் வென்கூவர் – 2024.03.24)

AKD-at-toronto

இலங்கைக்கு தொலைதூரத்தில் பாதுகாப்பான வாழ்க்கையைக் கழிக்கின்ற நீங்கள் இந்த இடத்தில் பங்கேற்பதன் மூலமாக எமது நாடு மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையே வெளிப்படுகின்றது. நாம், நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் பங்கமேற்பட இடமளிக்கமாட்டோமென முதன்முதலாக உங்களுக்கு ஓர் உத்தரவாதமளிக்கிறேன். எமது நாட்டின் எந்தவோரு பிரஜையும் இனிமேலும் ஏமாற்றப்படுதலுக்கோ அல்லது கவலைப்படவோ இடமளிக்க எமக்கு உரிமை கிடையாது. எங்கள் முன்னிலையில் இருக்கின்ற விடயங்கள், உங்கள் முன்னிலையில் அளிக்கின்ற உத்தரவாதங்களை கட்டாயமாக பாதுகாத்திட எமக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. அதனைப் பாதுகாக்க நாங்கள் கடப்பாடு கொண்டுள்ளோம். எமது நாட்டை மாற்றியமைப்பதைப்போலவே எமது நாட்டில் வசிக்கின்ற மக்களுக்கு சிறந்த வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கின்றது. எதிர்காலப் பிள்ளைகளுக்கு சிறந்த வாழ்க்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. அத்தகைய ஒன்றினை உரித்தாக்கிக் கொடுக்கின்ற பொறுப்பின் தொடக்கநிலையாக அமைவது அரசியல் மாற்றமாகும். எமது நாட்டையும் மக்களையும் இந்த தலைவிதிக்கு இழுத்துப்போட்டது எமது நாட்டின் அரசியல் அதிகாரநிலையாகும். எனவே இந்த அரசியல் அதிகாரநிலையை மாற்றியமைப்பதே எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதலாவது படிமுறையாகும். அதற்குப் பதிலாக புதிய மக்கள் நேயமுள்ள அசியல் அதிகாரநிலையை தொடங்குவதுதான் ஆரம்பமாகும்.

இன்று எமது நாட்டு மக்கள் உருவாகியுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருப்பது வருகின்ற தேசிய தேர்தலின்போது பாடம் புகட்டுவோம், தீர்மானமொன்றை மேற்கொள்வோம் என்ற அபிப்பிராயத்துடனேயே இருக்கிறார்கள். தேர்தலை நடாத்த மாட்டேன் என நாளை ரணில் விக்கிரமசிங்க பிரகடனஞ் செய்தால் அடுத்தநாளில் ரணில் வீட்டிலேயே இருக்கவேண்டும். தேசிய தேர்தலொன்று வரும்வரையே மக்கள் இவையனைத்தையும் தாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் நிச்யமாக சனாதிபதி தேர்தல் நடைபெறும். சனாதிபதி தேர்தலை நடத்தாமல் இராணுவ மற்றும் அரசியல் தலைமையின் அதிகாரத்தில் அரசாங்கத்தைப் பேணிவந்தால் அது சூழ்ச்சிகரமான அரசாங்கமாகும். எமது நாட்டில் பொலீஸ், இராணுவம், அரச நிருவாகம் இத்தகைய எந்தவொரு நிறுவனமும் சூழ்ச்சிகரமான அரசாங்கத்திற்கு இடமளிக்க மாட்டாதென்பது உறுதியாகும். அதனால் தேர்தல் நடைபெறும். இப்பொழுது நாங்கள் பேசவேண்டிது தேர்தலின்போது என்ன செய்யவேண்டுமென்பதாகும். வெளிநாட்டில் இருக்கின்ற உங்களுக்கு இலங்கையில் இருக்கின்ற உங்களின் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பாரிய அழுத்தம்கொடுக்க முடியும்.

AKD-at-toronto

ண்மையில் அரச உளவுச்சேவை அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை வழங்கியது. அந்த அறிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி பற்றி அரண்டு விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முதலாவது விடயம் வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் தேசிய மக்கள் சக்தியை சூழ்ந்து தோன்றிவருகின்ற இந்த புத்துணர்ச்சியை ஓர் ஆபத்தாக கருதுமாறு அரசாங்கத்திற்கு கூறப்பட்டுள்ளது. இரண்டாவது விடயம் இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவினைச் சூழ்ந்து இளைப்பாறிய கடற்படையின், வான் படையின், இராணுவத்தின் உத்தியோகத்தர்களும் சிப்பாய்களும் முண்டியடித்துக்கொண்டு சேர்கின்றமையை அவர்கள் ஓர் ஆபத்தாக காண்கின்றனர். வெளிநாடு சென்றுள்ள இலங்கையரின் எழுச்சியும் இளைப்பாறிய முப்படை அதிகாரிகளின் எழுச்சியும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பாதைக்கு பிரதானமாக வழிசமைக்குமென அரசாங்கத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலின்போது அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற அதிகாரத்தில் நீங்கள் கொண்டுள்ள பலத்தை எம்மைவிட அவர்கள் நன்கறிவார்கள். சிலவேளைகளில் உங்களுக்கு வாக்குப்பலம் இல்லாதிருக்கலாம். எனினும் எங்களின் குரல், உங்களின் விழிப்பு, நீங்கள் தோற்றுகின்றவிதம், பேசுதல் இலங்கையில் பலம்பொருந்திய மக்கள் பலத்தை உருவாக்குகின்றது. நீங்கள் கனடாவில் வசித்து உங்களின் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இந்த செய்தியை கொடுப்பீர்களாயின் சமூக வலைத்தளங்களில் உங்களின் குரல், உங்களின் அபிப்பிராயம் வெளியிடப்படுமாயின் அது தேர்தல் தொடர்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் தேர்தல் காலம் நெருங்கும்போது இலங்கைக்கு வந்து நீங்கள் முனைப்பாக இடையீடுசெய்யத் தயாரெனில் இந்த பிரவாகத்தை தடுக்க எவராலும் இயலாது என்பதை நாங்கள் அறிவோம். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலப்படுத்திக்கொண்டு ஊழல்மிக்க பிரபுக்கள் அமைப்பினை தோற்கடித்து ஏற்பட்டுள்ள இந்த தலைவிதியிலிருந்து எமது நாட்டை விடுவித்துக்கொள்ள ஒன்றுசேருமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பிரயத்தனத்தை ஆரம்பிப்போம். எம்மிடம் கேட்கின்ற முதலாவது கேள்விதான உங்களிடம் இந்த நாட்டைக் கட்டியெழப்புவதற்கான அணியொன்று இருக்கின்றதா? இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அந்தந்த விடயத்துறைகளை நெறிப்படுத்துவதற்காக அந்தந்த விடயத்துறைகள் பற்றிய அனுபவமும் புரிந்துணர்வும்கொண்ட அணியொன்று இருத்தல் வேண்டும். ஒவ்வொரு துறையும் பற்றிய நிபுணத்துவம்கொண்ட இயலுமைகொண்ட அணியொன்று எம்மிடம் இருக்கின்றது. புத்தகங்களில் கற்றுக்கொண்டவர்கள் மாத்திரமல்ல, பல்கலைக்கழகங்களில் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றவர்களும் மாத்திரமன்றி விவசாயமெனில் கமக்காரர்களுடன் முட்டிமோதி அவர்களின் வாழ்க்கை பற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை கட்டியெழுப்பட்ட அந்தந்த விடயத்துறைகள் பற்றிய திறன்கொண்ட, திறமைகள் இருக்கின்றவர்களைக்கொண்ட அமைச்சரவையை நாங்கள் உருவாக்குவோம். அது இலங்கையின் மிகச்சிறந்த அமைச்சரவையாக மாறும். கெபினற் அமைச்சர் கூட்டான செயற்பாட்டில் ஈடுபடுகின்ற முறையியலொன்றை நாங்கள் இமைப்போம். எமது அமைச்சரவையில் எந்தவோர் அமைச்சரும் அறிந்த விடயுங்கள் இருக்கலாம், அறியாத விடங்களும் இருக்கலாம். நாங்கள் மனிதர்கள்.

AKD-at-toronto

மனித நாகரிகம் எவ்வாறு முன்நோக்கி நகர்கின்றது? மனித நாகரிகம் இந்த இடத்திற்கு வந்தது தனித்தனி மனிதனின் பாரிய விந்தைகள் காரணமாக அல்ல. மனித நாகரிகம் கட்டியெழுப்பப்படுவது கூட்டுமுயற்சியின் அடிப்படையிலாகும். அவ்வாறான வகையைச்சேர்ந்த ஓர் ஆட்சியையே நாங்கள் அமைப்போம். கமத்தொழில் அமைச்சராயின் அவருக்கு மிகவும் பலம்பொருந்திய மதியுரை சபையொன்று அவசியமாகும். விதையினங்கள் பற்றிய, மண் பற்றிய. புதிய பயிர்கள் பற்றிய, சந்தை பற்றிய ஒவ்வொரு பிரிவும்பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அனுபவம்வாய்ந்த குழுவொன்று இருத்தல் வேண்டும். அப்போதுதான் எடுக்கின்ற தீர்மானங்களை நன்றாக அலசிஆராய்ந்து பொருத்தமானவையாக மேற்கொள்ள முடியும். அத்தகைய கட்டமைப்பொன்றினை நாங்கள் தாபிப்போம். ஒவ்வோர் அமைச்சிற்கும் ஒப்படைக்கப்படுகின்ற விடயத்துறைகள் பற்றிய விரிவான அனுபவங்களும் அறிவும்படைத்த குழுக்களைக்கொண்ட சபையொன்று நிறுவப்படும். இந்த சபைதான் அமைச்சருக்கு தீர்மானம் எடுப்பதற்காக அவசியமான கலந்துரையாடலை மேற்கொள்ளும். அந்த சபைக்குப் புறம்பாக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ள, எந்த ஒருவருக்கும் அந்த தீர்மானம் பற்றிய கருத்துக்களை முன்வைக்க அவசியமான பேரவையொன்றை நாங்கள் நாங்கள் நிர்மாணிக்கவேண்டும். இந்த நாடு நெருக்கடியில் இருந்து கரைசேர வேண்டுமாயின் கூட்டான இடையீடு, கூட்டான செயற்பாடு அவசியமாகும். அது மாத்திரமல்ல. அந்த அனைவரும் நேர்மையான, ஊழலற்ற, இந்த பணியை வெற்றிகரமாக ஈடேற்றிக்கொள்வதற்கான திராணியுள்ள மனிதர்களாக அமைதல் வேண்டும். இடைநடுவில் கைவிட்டுச் செல்கின்ற நழுவிச்செல்கின்ற மனிதர்கள் நியமிக்கப்படுவதில் பலனில்லை. சவாலொன்று நிலவுகின்றது அந்த சவாலை வெற்றிகொள்வதற்கான தேவையும் அர்ப்பணிப்பும் கொண்ட மக்கள் குழுமமொன்று இந்த நாட்டை மாற்றியமைக்க இடையீடு செய்வார்களென நாங்கள் நினைக்கிறோம்.

உங்களுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் இல்லையே, வெள்ளைக்காரர்களை உங்களுக்குத் தெரியாதே என்று எங்களிடம் கேட்கிறார்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் என்பது அரசுகளுக்கிடையிலான தொடர்புகளாகும். நட்புக்கு உலகம் கவனிப்பு காட்டமாட்டாது. அண்மைக்காலமாக எமது நாட்டுக்க பலம்பொருந்திய உறவுகள் இருக்கவில்லை. எமது நாட்டின் தலைமைத்துவம் வெளிநாட:டடக் கம்பெனிகளால் விலைக்கு வாங்கப்பட்டது. அவ்வாறு விலைக்கு வாங்கப்படாவிட்டால் அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக மாட்டாது. எமது தேசிய திட்டத்தில் அம்பாந்தோட்டை துறைமுகம் சற்று கீழேயே இருக்கின்றது. தேசிய திட்டத்தில் மேலே இருக்கவேண்டியது எமது எண்ணெய் சுத்திகரிப்பு ஆகும். எமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1969 இலெயே தொடங்கப்பட்டது. இற்றைக்கு 55 வருடங்களுக்கு முன்னர் தொடங்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்தான் நாங்கள் இன்னமும் சுத்திகரிப்பினை மேற்கொண்டு வருகிறோம். அன்று எமது அவசியப்பாட்டுக்கு ஏற்ற கொள்திறன் அங்கு நிலவியது. தற்போது 1969 இல் நிலவிய கொள்திறன் நான்கு மடங்குகளால் அதிகரித்துவிட்டது. எனினும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கொள்திறன் அதிகரிக்கவில்லை. 55 வருடங்கள் கழியும்போது எண்ணெய் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் அதிகரித்துள்ளது. அதிகமாக பிறப்பிக்கப்படுவது நெப்தாவாகும். ஈரானில் இருந்து வருகின்ற ஒயிலைத்தான் எம்மால் சுத்திகரிக்கமுடியும்.

AKD-at-toronto

வலுச்சக்தி எமது நாட்டில் ஒரு பிரதான சிக்கலாகும். எண்ணெய் விலை அதிகரிப்பு, எண்ணெய்க் கொள்வனவு, எண்ணெய்க்காக டொலர் பாய்ந்துசெல்லல் இதற்கிணங்க வலுச்சக்தி ஒரு பிரதான சிக்கலாகும். அதனாலல் எமது பொருளாதாரத் திட்டத்தில் உயர்ந்த இடத்தை வகிக்கவேண்டியது எண்ணெய் சுத்திகரிப்பாகும். 2017 இல் மேற்கொண்ட சாத்தியவள ஆய்வொன்று இருக்கிறது. சுத்திகரிப்பு நிலையத்திற்கான செலவு ஒரு பில்லியன் டொலராகும். அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான செலவு 1.3 பில்லியன் டொலராகும். சுத்திகரிப்பு நிலையம் கீழே இறங்கி துறைமுகம் ஏன் மேலே வருகின்றது? சீனாவின் புவிஅரசியல் தேவைக்காக எமது தலைவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்? பணம். நான் பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ஷவிடம் கூறினேன், உங்களுக்கு சீனக் கம்பெனிகள் காசு கொடுத்த காசோலை இலக்கங்கள் என்னிடம் இருக்கின்றன என்று.” மகிந்த ராஜபக்ஷ “ஹிம்…ஹிம்..” என்றார். எமக்கு பலம்பொருந்திய வெளியுறவுக் கொள்கை இருக்கவில்லை என்றே நான் கூற எத்தனிக்கிறேன். நான் ஒரு விடயத்தை உறுதியாக உங்களிடம் கூறுகிறேன் எம்மை எவராலும் விலைக்கு வாங்க முடியாது. எமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுவது, அது எமது நாட்டுக்கு நன்மை பயக்கின்றதா? இல்லையா எனும் காரணியின் அடிப்படையிலாகும்.

உலகம் மாறியுள்ளது. 90 இற்கு மேற்பட்ட உலகம் இரண்டாக பிளக்கப்பட்ட உலகமாகும். 90 இற்கு பிறகு சோசலிஸ பாசறை வீழச்சியடைந்தபின்னர் அமெரிக்காவை முதன்மையாகக்கொண்ட ஒற்றைத்துருவ உலகமொன்று உருவாகத் தொடங்கியது. 2000 முடிவடைகையில் உலகில் மேலும் பல அதிகார மையங்கள் உருவாகத் தொடங்கின. இந்தியா, சீனா, ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல கேந்திரங்களைக்கொண்ட உலகமே தற்பொது இருக்கின்றது. நிகழ்கால உலக அதிகாரச் சமநிலையில் எமது நாடு அமைந்துள்ள இடம் மிகவும் முக்கியமானது. அதனால்த்தான் எல்லா யுகங்களிலும் பலமடைந்து வருகின்ற அரசுகள் எமது நாட்டை ஆக்கிரமித்தன. இந்த இடஅமைவினை சரியான திட்டத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். எமக்க மிகவம் பலம்பொருந்திய வெளியுறவுக் கொள்கையொன்று அவசியமாகும். உலகில் தோன்றியுள்ள அதிகார மோதல்களில் அகப்படாத, இலங்கை மண் யுத்தகளமாக மாறாத, வெளியுறவுக் கொள்கையொன்று எமக்கு அவசியமாகும். எளிமையாக எடுத்துக்கொண்டால் சீன – இந்திய மோதலின் மையநிலையமாக இலங்கை மாறிவிடலாகாது. எமது நாட்டில் வெளியுறவுத் தொடர்புகள் பற்றிய அறிவுபடைத்த ராஜதந்திர துறையில் பணியாற்றிய மிகவும் திறமையான உத்தியோகத்தர்கள் விருப்பத்துடன் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளார்கள்.

AKD-at-toronto

புதிய பொருளாதார திசையைநோக்கி நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கின்ற பொருளாதாரப் பாதையிலிருந்து புதிய பொருளாதாரப் பாதையில் வழிப்படுத்துவதற்காக புதிய திட்டமொன்றுடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமொன்று எம்மிடம் இருக்கின்றது. அதிகாரத்தை நெறிப்படுத்துவது யாரென்ற திட்டமொன்று இருக்கின்றது, நெறிப்படுத்தி என்ன செய்வதென்ற திட்டமொன்றும் இருக்கின்றது. நாங்கள் மல்லுக்கட்டி அயராது உழைப்போம். நாங்கள் வாழ்க்கையில் பலவிதமான சவால்களை முகங்கொடுத்து வசதியீனங்களை எதிர்கொண்டு இருக்கிறோம். ஊக்கத்துடன் வெற்றிபெற்று இருக்கிறோம். நீங்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே இந்த வாழ்க்கையை பெற்றுள்ளீர்கள். நீங்கள் இந்த வாழ்க்கையை பாரிய சவால்களுக்கு மத்தியிலே முன்னெடுத்து வந்துள்ளீர்கள். அதற்காக காலம், உழைப்பினை கொட்டி வேலைசெய்துள்ளீர்கள். இந்த ஆறு ஏழு மாதங்கள் கழிந்து அதே தெம்புடன் எமது நாட்டை மாற்றியமைப்பதற்காக இடையீடு செய்யுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

AKD-at-toronto

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியாயத்தை கோருதல் பற்றிய கெள்விக்கான பதிலளிக்கையில் ….

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய பதிய விசாரணைகள் இனிமெலம் தேவையில்லை. தாக்கல் தொடர்பாக மேற்கொண்டுள்ள விசாரணைகளில் இருந்து தோன்றியுள்ள பல சிக்கல்கள் இருக்கின்றன. சஹரானின் மதலாவது தாக்குதலாக அமைந்தது பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரை படுகொலைசெய்து சுடுபடைக் கலன்களை அபகரித்துக் கொண்டமையாகும். இது சம்பந்தமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையொன்றை மேற்கொண்டு வருகையில் அதற்கு ஒரு நாளுக்குப் பின்னர் அந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்ட காவலரணுக்கருகில் ஒரு மதகின் கீழ் ஒரு ஜெக்கெற் இருந்தது. பொலீஸ் மோப்ப நாய்களை பொட்டு இந்த ஜெக்கெற்றின் பின்னால் சென்றார்கள். இது ஆனந்தன் எனப்படுகின்ற மாஜி எல்.ரி.ரீ.ஈ. சந்தேகநபரின் வீட்டுக்கருகில் சென்றது. ஒற்றோபர் மாதம் 28 ஆந் திகதியளவில் இடம்பெற்றதால் எல்.ரீ.ரி.ஈ. மேற்கொண்ட ஒரு தாக்குலாக கதை புனையப்பட்டது. அந்த ஜெக்கற்றினைப் போட்டவர் யாரென்று விசாரணைகளிலிருந்து வெளிவரவேண்டும். சஹரானை நோக்கி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்குப் பதிலாக வேறு திசைக்குத் திருப்பியவர் யார்? முதலாவது கேள்வி அதுவாகும்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெடிக்கவைத்துக் கொள்வதற்காக வந்த ஜமீல் என்பவர் அதனை வெடிக்கச் செய்விக்காமல் தெகிவளை பிரதேசத்தின் தங்கமிடம் ஒன்றுக்குச் செல்கிறார். தங்குமிடத்தில் பேக்கினை வைத்துவிட்டு அருகிலுள்ள பள்ளிவாசலுக்குப் போகிறார். இவர் நடந்துகொண்ட விதம் காரணமாக பலர் பதற்றப்படுகிறார்கள். பள்ளிவாசலைக் காவல்காத்த இளைப்பாறிய பொலீஸ் உத்தியோகத்தர் அவரை விசாரிக்கிறார். அடையதள அட்டையைக் காட்டுகிறார். காவல்காரர் ஜமீலின் மனைவிக்கு கோல் பண்ணுகிறார். அவர் தனது கணவரென மனைவி ஏற்றுக்கொள்கிறார். அப்போது அவரை அனுப்பிவிடுகிறார். அவர்போய் தங்குமிடத்தில் வெடிக்கச் செய்விக்கிறார். அதற்கு சற்றுமுன்னர் காவல்காரரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகின்றது. அது ஜமீலின் வீட்டுக்குச்சென்ற உளவுத்துறை உத்தியோகத்தர்களிடமிருந்தாகும். அப்படியானால் வெடிக்கச் செய்விக்க முன்னராகவே உளவுத்துறை உத்ியோகத்தர்கள் அங்கு சென்றுள்ளார்கள். அது இரண்டாவது கேள்வியாகும்.

மூன்றாவது கேள்வி இந்த தாக்குதலை முதலில் ஐ.எஸ்.எஸ். பொறுப்பேற்கவில்லை. அவர்கள் உறுதியுரை பகரவேண்டும். அந்த உறுதியுரை பகரவில்லை என்பதால் அவர்கள் பொறுப்பேற்கவில்லை. மாத்தளையில் பொடிசஹரான் என ஒருவர் இருந்தார். அவர் இதனைப் பொறுப்பேற்குமாறு மலேசியாவில் இருந்த ஒருவரிடம் கேட்டுள்ளார். பொறுப்பேற்கவில்லை. அதன்பின்னர் உறுதியுரை பகருகின்ற புகைப்படத்தை அவர்கள் பகிரங்கப்படுத்துகிறார்கள். புகைப்படத்தை பகிரங்கப்படுத்திய பின்னர் அவர்கள் தாக்குதலை தாம் மேற்கொண்டதாக ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பொடிசஹரானுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியிருக்கிறார்கள் இதனை ஒரு ஐ.எஸ்.எஸ். தாக்குதலென ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்கள். அதோ அவ்வாறு கூறியவர் யார்? அது யாரென அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் ஏப்பிறல் 04 அந் திகதி வருகின்றன, ஏப்பிறல் 08 ஆந் திகதி வருகின்றன, ஏப்பிறல் 16 ஆந் திகதி வருகின்றன, தாக்குதல் தேவாலயங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் மேற்கொள்ளப்படுமென ஏப்பிறல் 21 ஆந் திகதி தாக்குதல் தினத்தன்றும் காலையில் தகவல்கள் வருகின்றன. இந்த தகவல்கள் மிகவும் கிட்டிய இடத்தில் இருந்தே வந்துள்ளன. தாக்குதலை தடுப்பதறகு அவசியமான தகவல்கள் வரவில்லை. பத்தரமுல்ல பிரதேசத்தல் ஒரு கடையிலிருந்து சப்பாத்துகளும் பைகளும் கொள்வனவு செய்யப்படுகின்றன, அந்த தகவல் வந்திருந்தால் தாக்குதலுக்கு முன்னராக கைதுசெய்திருக்கலாம். பாணந்துறை பிரதேசத்தில் ஒரு வீடு குத்தகைக்கு எடுக்கப்படுகின்றது. பாணந்துறை பிரதேசத்தின் தங்குமிடமொன்றுக்குச்சென்று தற்கொலை குண்டுகள் தயார்செய்யப்படுகின்றன. அந்த தகவல்கள் வந்திருப்பின் தாக்குதலுக்கு முன்னராக கைதுசெய்திருக்கலாம். வெடிக்கும் பொருட்கள் பாணந்துறை வீட்டிலேயே தயார்செய்யப்படுகின்றன. காலை ஏழுமணிக்கு தாக்குதல் நடாத்துவதாக செய்திகள் வருமாயின் ஏன் அந்த தகவல்கள் வருவதில்லை. விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். தாக்குதலை தடுக்க அவசியமான பலம்பொருந்திய தகவல்களை மறைத்து தாக்குதல் இடம்பெற இடமளித்து தகவல்களை அனுப்பினார்களா? இது நான்காவது கேள்வி. அதனையும் விசாரணைசெய்ய வேண்டும். இந்த தகவல்களைத் தேடிக்கொண்டால் தாக்குதல்தாரிகள் யாரென கண்டுபிடிக்க முடியும்.

தற்போது மைத்திரிபால சிறிசேன கூறுகிறார் யாரென்று அவருக்குத் தெரியுமென. மைத்திரிபால சிறிசேன அத்தருணத்தில் சனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமாவார். அவர் தாக்குதலுக்குப் பின்னர் 17 மாதங்களாக அதிகாரத்தில் இருந்தார். மக்கள் மக்கள்ஆணையொன்றினால் அவருக்கு பாதுகாப்பு பற்றிய பொறுப்பினை வழங்கியிருந்தார்கள். அதனால்த்தான் உயர்நீதிமன்றத்தில் 100 இலட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறு வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பினால் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பினை கைவிடுதல் தொடர்பில் அவர் குற்றவாளியாவார். அவர் இப்போது கூறுகிறார் “எனக்குத் தெரியும்” என. “எனக்கு உயிர் அச்சுறுத்தல் வரும்” அவரது உயிர் மாத்திரமா. உயிர்களால், காயமுற்றவர்களால் மாத்திரமா ஒரு குற்றச்செயலை அளவிட முடியும். அந்த குற்றச்செயலால் சமூகம் இரண்டாக பிளவுபட்டது. முஸ்லீம் மக்களால் வீதியில் இறங்கமுடியாத நிலையேற்பட்டது. அதனால் அதனைக் கேள்விக்குட்படுத்தவும் வேண்டும்.

நீங்கள் எங்களிடம் நியாயத்தைக் கேட்டீர்கள். இது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு சரியான குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன்நிறுத்துவோம் என நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம்.

AKD-at-toronto