Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

“நாங்கள் எமது சுதந்திரத்தை பெற்றுக்கொள்வது எப்படி எனப் பேசும்போது அவர்கள் அவர்களின் சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள்” -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க-

” அதிட்டன” இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவு – மொனறாகல மாவட்ட மாநாடு – 2024 பெப்புருவரி 03

சுதந்திரம் பெற்று எழுபத்தாறு ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுகிறோம். மக்களுக்கு தடைசெய்யப்பட்ட நிலப்பகுதியை நோக்கி இராணுவ அணிவகுப்பினை நடாத்தி விமானக் கரணங்கள் காட்சியை நடாத்தி, பெரசூற் காட்சியை நடாத்தி சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள். எமது நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய செயற்பொறுப்பினை ஆற்றிய முப்படை அங்கத்தவர்களை திரட்டி எவ்வாறு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதை இன்று நாங்கள் மொனறாகலையில் ஆராய்கிறோம். அவர்கள் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டதாக ஆர்ப்பரிக்கிறார்கள். நாங்கள் எப்படி சதந்திரம் பெறுவது என்பத பற்றி அங்கலாய்க்கிறோம்.

எமக்கு ஒருவருடத்திற்கு முன்னர் இந்தியா சுதந்திரம் பெற்றது. சந்திரனைத் தொட்ட ஐந்தாவது நாடாகவே இந்தியா அதன் சுதந்திரத்தைக் கொண்டாடுகின்றது. அதைப்போலவே உலக வரலாற்றில் ஐநூறு வானூர்திகளை ஒரேதடவையில் ஓடர் (அனுப்பாணை) செய்த நாடாகவே. உலக வரலாற்றில் ஒரே தடவையில் சமர்ப்பித்த மிக அதிகமான வானூர்தி ஓடரை இந்தியா முன்வைத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் தேசிய ஒற்றுமையிலும் முன்நோக்கி பயணித்துள்ளது. நாங்கள் கடனை மீளச்செலுத்த முடியாத ஒரு நாடாவோம். இரண்டாயிரத்து முப்பது அளவில் இந்தியாவின் அனைத்துப் புகையிரதங்களையும் மின்சாரப் புகையிரதங்களாக மாற்றத் திட்டமிட்டு ஏற்கெனவே டீசல் எஞ்சின்களை அகற்றி வருகிறார்கள். அந்த எஞ்சின்களை எமக்கு இலவவசமாக வழங்கி வருகிறார்கள். அந்த எஞ்சின்களைக் கொண்டுவருவதைப் பார்வையிடவும் அறுபத்தைந்துபேர் போனார்கள். எம்மைவிட ஒரு வருடத்திற்கு முன்னர் சுதந்திரம்பெற்ற இந்தியா அவ்வாறு இருக்கவும் நாங்கள் இப்படி இருக்கவும் காரணம் என்ன? நாங்கள் அது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும்.

சுதந்திரம் கொண்டாடப்படுகையில் எவ்வளவு தேசிய அபிமானத்தை உணரவேண்டும்? 1505 இல் இருந்து அண்ணளவாக நானூற்றி ஐம்பது வருடங்கள் ஏதேனுமொரு மேலைத்தேய நாட்டின் அழுத்தங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டிருந்தோம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற மேலைத்தேயர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்து 1796 இல் தீர்வுக்கட்டமானவகையில் ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக மாறுதல் தொடங்கியது. 1815 இல் எமது தாய்நாடு முற்றாகவே ஆங்கிலேயர்களின் குடியேற்ற நாடாக மாறியதோடு 133 வருடங்கள் நேரடியாக குடியேற்நாடாக விளங்கியது. அதன் பின்னர் சுதந்திரம் பெறுகின்ற தினத்தில் எமக்கு எவ்வளவு தேசிய அபிமானம், பெருமிதம், புதிய தேசிய எழுச்சி தோன்றிட வேண்டும்? எனினும் அந்த தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடவேண்டுமென்ற உணர்வு எவருடைய மனதிலாவது தோன்றுகிறதா? சுற்றுநிருபம் காரணமாக அரசாங்க அலுவலகங்களில் கொடியேற்றப்படுகின்றது. சுதந்திரம் பற்றி சுயாபிமானம், தேசிய உணர்வு சுற்றுநிருபம் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கெஹெலிய ரம்புக்வெல்லவை கொண்டுசெல்கின்ற சிறைச்சாலை பேருந்தில் சுற்றுநிருபம் காரணமாக தேசிய கொடி போடப்பட்டிருந்தது. பேருந்தில் தேசிய கொடியொன்றைப் போட்டுக்கொண்டு உள்ளே திருடித்தின்ற அமைச்சர் பயணிக்கிறார். தேசிய சுதந்திரம் பற்றிய பெருமிதம், அபிமானம், தேசிய எழுச்சி ஏன் எமது இதயங்களால் உணரப்படவில்லை? கடந்த எழுபத்தாறு வருடங்களாக எமது தேசிய அபிலாஷைகளையும் நோக்கங்களையும் அடைவதில் வெற்றிபெறவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளை உள்ளிட்ட ஆதிக்கம் வகிக்கின்ற நாடுகள் எமக்கு கொடுத்துள்ள பொருளாதார மற்றும் அரசியல் பட்டோலையில் இருந்து உண்மையாகவே சுதந்திரம்பெற இன்னமும் முடியாதுள்ளது.

எமது நாட்டை ஆட்சிசெய்வதற்காக பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் பிரித்தாளுகின்ற ஆட்சிமுறையையே மிகவும் சூட்சமமான முறையில் பயன்படுத்தினார்கள். அவர்கள் அரசுக் கழகத்திற்கு சிங்களவர், தமிழர், முஸ்லீம், பறங்கியர், மலாயர் போன்ற பிரிகையிடல் மூலமாகவே தெரிவுசெய்தார்கள். இலங்கையர் என்ற வகையில் தெரிவுசெய்வதில்லை. மேலும் மலைநாட்டுச் சிங்களவர், கரையோரச் சிங்களவர், யாழ்ப்பாணத் தமிழர், தோட்டப்பகுதித் தமிழர் என்ற வகையில் பிரித்து ஒதுக்கினார்கள். பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் பிரயோகித்த இந்த பி்ரிகையிடல் சுதந்திரத்திற்குப் பின்னர் மீளத் திருப்பவேண்டி இருந்தது. இந்தியா அதனைச் செய்தது. பிரதேச பிரிவிடல்கள், சமயரீதியான பிரிவிடல்கள், சாதிப் பி்ரிவினைகள் பல நிலவிய இந்தியாவை ஒரே கொடியின்கீழ் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஐக்கியத்தின் பேரிலேயே சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி அப்துல் கலாமிற்கு இந்தியாவின் சனாதிபதியாக இயலுமாயிற்று. அதைப்போலவே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவரென கூறப்பட்ட ஒரு பெண் சனாதிபதியானர். தேசியரீதியான ஏகோபித்த தன்மை, தேசிய ஒருமைப்பாட்டினை முதன்மைத்தானத்தில் எடுத்து பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் விடுத்திருந்த சாபக்கேட்டில் இருந்து அவர்கள் விடுதலை பெற்றார்கள். இந்திய இனத்தவர்களை கட்டியழுப்பியதே இந்திய வெற்றியின் அத்திவாரமாகும். நாங்கள் 1948 இல் சுதந்திரம்பெற்று குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்து பெருந்தோட்டத் தமிழர்களின் பிரசாவுரிமையை ஒழித்துக்கட்டினோம். 1947 தேர்தலில் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவம்செய்த தொகுதிகளைப்போன்றே அந்த மக்களின் ஒத்துழைப்பினால் கிடைத்த தொகுதிகளிலும் இடதுசாரி இயக்கங்கள் வெற்றிபெற்றன. இதனால் 1947 இல் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம்செய்த ஐக்கிய தேசிய கட்சி தோல்வியுற்ற அனைத்து ஆசனங்களிலும் 1952 தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். சுதந்திரத்தின் பின்னர் இனரீதியாக பிரிப்பதன் மூலமாகவே ஆரம்பித்தார்கள். அதனால்த்தான் திருவாளர் செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி கட்சியெழுப்பப்பட்டது. 1956 இல் மொழிப் பிரச்சினையும் , 1958 இல் தமிழ் – சிங்கள கலவரமும், “ஸ்ரீ” எழுத்து தொடர்பான கலவரமும் தொடங்கி 1970 நடுப்பகுதியளவில் வடக்கில் ஆயுத இயக்கமொன்று தொடங்கி 2009 இல் இது முற்றுப்பெற்றது. 2015 இல் முஸ்லீம் எதிர்ப்பு இயக்கமொன்று தொடங்கி 2019 இல் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகள் எமது அழிவுக்காக விரித்த பிரித்தாள்கின்ற வலையிலிருந்து இன்னமும் எம்மால் விடுபட முடியாதுள்ளது. நாங்கள் எதிர்நோக்கியுள்ள அனர்த்தத்தின் ஓரிடம் அதுவாகும்.

எம்மால் எமக்கே உரித்தான பொருளாதார உபாயமார்க்கமொன்றை நிறைவுசெய்துகொள்ள முடியாமல் போயிற்று. பெருமைமிக்க வரலாறு பற்றி கூறிக்கொண்டு எதி்ர்காலம் பற்றிய நோக்கினை முன்வைக்கவில்லை. எமது நாடும், இனமும், அரசியல்வாதியும் வரலாற்றுக்கால பெருமிதத்தில் சிக்குண்டது. புதிய உலகிற்காக எமது நாட்டைத் திறந்துவிட எமது ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள். கடந்தகாலம் பற்றி மார்தட்டிக்கெள்கின்ற ஆளுங் குழுவினரே எமக்கு இருந்தார்கள். 2009 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் முழு உலகிற்குமே கற்றாராயக்கூடிய இராணுவ அக்கடமியொன்றை நிறுவுவதற்கான நவீன நோக்கு எமது ஆட்சியாளர்களிடம் இருக்கவில்லை.
450 வருடங்களாக மேற்குலகிற்கு கட்டுப்பட்டிருந்து 133 வருடங்கள் முழுமையாகவே வெள்ளைக்காரனுக்கு கட்டுப்பட்டிருந்து சுதந்திரம் கிடைக்கையில் எவ்வளவு மட்டற்றமகிழ்ச்சி எமது இதயங்களால் உணரப்பட வேண்டும்? ஆனால் சுதந்திரத்தைக் கொண்டாட பணத்தை விரயம் செய்கிறார்கள் என்று உணர்வே எமக்கு ஏற்படுகின்றது. இந்த திரிபடைந்த களியாட்டம் காரணமாக பெரசூற் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் விழுந்து ஏலாமைநிலையடைகிறார்கள் எனும் உணர்வு எமக்கு ஏற்படுகின்றது. பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட ஒரு பிரதேசத்திலேயே சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அது மக்களுக்குச் சொந்தமான சுதந்திரமல்ல. அவர்களுக்குச் சொந்தமான சுதந்திரமாகும். இன்றும் எமது வரவுசெலவினைத் தயாரிப்பது எமது நிதியமைச்சரோ அல்லது நிதியமைச்சின் செயலாளரோ அல்ல. எமக்கு பொருளாதார சுயாதீனத்தன்மை கிடையாது. எமக்கிருந்த மிகப்பெரிய உயிர்ப் பன்வகைமை மற்றும் விதைப் பன்வகைமையை இல்லாதொழித்துக்கொண்டு தும்பை விதையையும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருகிறோம்.

76 வருட சுதந்திரத்தை கொண்டாடுகையில் எமது விதைகளின் சுயாதீனத்தன்மையைப் போன்றே நிதிசார் சுயாதீனத்தன்மையையும் இழந்துள்ளோம். தற்போது எமது தேவை வெறுமனே ஆட்சிமாற்றமோ ஆட்களின் மாற்றமோ அல்ல. புதிய இலங்கை தேசத்தை உருவாக்கும் திசைக்கு எமது நாட்டை மாற்றியமைக்கின்ற ஆட்சியொன்றை நிறுவிக்கொள்ள வேண்டும். கள்வர்களைப் பிடித்தல், சட்டத்தை நிலைநாட்டுதல், குற்றச்செயல்களைத் தடுத்தல், போதைப்பொருள் கடத்துதலை நிறுத்துவது பெரிய வேலையல்ல. எமது நாட்டை கொண்டுசெல்கின்ற திசை பற்றிய நோக்கினை அமைத்துக்கொள்வதே பெரிய வேலையாகும். இந்தியா, சீனா, வியட்நாம், ஜப்பான், தென் கொரியா போன்ற ஒவ்வொரு நாடும் இருபதாம் நூற்றாண்டுக்கான தமது நோக்கிற்கிணங்க பாதையைக் கண்டுபிடித்தன. இப்போது இருபத்தோராம் நூற்றாண்டில் வெற்றியை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மேற்குலகிற்கு இருந்த பொருளாதாரப் பலம் ஆசியாவை மையமாகக்கொண்டு, உலகக் கோளம் ஆசியாவை நோக்கி சுழற்றப்பட்டிருக்கிறது. எனினும் நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை இழந்த ஒரு தேசமாவோம். ஏனைய நூற்றாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இருபதாம் நூற்றாண்டு என்பது உலகின் பிரதானமான வெற்றிகள் பெறப்பட்ட நூற்றாண்டாகும். முறையான பொருளாதார நோக்கு, சிந்தனைக்கிணங்க நாட்டை நெறிப்படுத்தாத தவறுக்காக நாங்கள் தற்போது நட்டஈடு செலுத்தி வருகிறோம்.
எமது முன்மொழிவுகள் இந்த நிலைமையிலிருந்து விடுபடுவதற்கானவையாகும். முதற்கட்டத்திலேயே கல்வி, சுகாதாரம், உணவு என்பவற்றை அனைத்துப் பிரசைகளுக்கும் உறுதிப்படுத்துவோம். இந்த அடிப்படையில் நாங்கள் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்கின்ற விதத்தை புதிதாகவே திட்டமிடுகிறோம். தற்போது எமக்கு இருப்பது சுற்றுலாக் கைத்தொழிலல்ல, ஹோட்டல் கைத்தொழிலாகும். எமது நாட்டின் சுற்றுலாத் தொழிற்றுறை அளவீடு செய்யப்படுவது ஹோட்டல்களின் அறைகள் எவ்வளவு நிரம்பியுள்ளன போன்ற தரவுகளிலன்றி சீகிரியாவிற்கு எத்தனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றார்கள் போன்ற தரவுகளிலல்ல. எனவே சுற்றலாக் கைத்தொழில் ஹோட்டல் கைத்தொழிலில் இருந்து சுற்றுலாக் கைத்தொழில்வரை மாற்றியமைக்கப்படல் வேண்டும். இதுபோன்’ற தெரிவுசெய்த முதன்மைத்துறைகளின் பேரில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் ஆரம்பிக்கப்படும். ஆனால் இந்த பயணத்திற்கு எதிரான மக்களின் பணத்தை வாரிச்சுருட்டிக்கொண்ட கொள்ளைக்கார கும்பல் இறுதிவரை பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு பல விடயங்கள் இருப்பதுபோல எமக்குப் பெற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. அதனால் வெற்றிகளை இலக்காகக்கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றிபெற வேண்டும். நாமனைவரும் ஒன்றுசேர்ந்து எமது நாட்டுக்குப் புதிய வெற்றியை மறுமலர்ச்சி யுகமொன்றுக்காக நாட்டை இட்டுச்செல்வோம். அதற்காக இளைப்பாறிய முப்படை அங்கத்தவர்களால் பாரிய செயற்பொறுப்பினை ஆற்றமுடியும். அது சம்பந்தமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்காக அனைவருக்கும் அழைப்புவிடுகிறோம்.