Logo of NPP
Contact
Contact Us 0112785612
Message
Message Us [email protected]
X

நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இந்திய-இலங்கை ஜனாதிபதிகளுக்கிடையில் கலந்துரையாடல்

(-Colombo, December 16, 2024-)

President Anura Kumara Dissanayake Welcomed By President Of India

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, ​​இந்திய-இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

Sri Lankan President With Indian President